பார்பேட்டா ரோடு

பார்பேட்டா ரோடு (Barpeta Road), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மேற்கு அசாமில் உள்ள பார்பேட்டா மாவட்டத்தில் அமைந்த நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான பார்பேட்டாவுக்கு வடக்கே 21 கிலோ மீட்டரும்; கவுகாத்திக்கு வடகிழக்கில் 132 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பார்பேட்டா ரோடு
நகரம்
பார்பேட்டா ரோடு is located in அசாம்
பார்பேட்டா ரோடு
பார்பேட்டா ரோடு
அசாம் மாநிலத்தில் பார்பேட்டா ரோடு நகரத்தின் அமைவிடம்
பார்பேட்டா ரோடு is located in இந்தியா
பார்பேட்டா ரோடு
பார்பேட்டா ரோடு
பார்பேட்டா ரோடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°30′N 90°58′E / 26.50°N 90.97°E / 26.50; 90.97
நாடுஇந்தியா
கோட்டம்மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாரபேட்டா ரோடு நகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்35,571
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
781315
தொலைபேசி குறியீடு+91 03666
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS 15

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 10 வார்டுகளும், 7,484 வீடுகளும் கொண்ட பார்பேட்டா ரோடு நகரத்தின் மக்கள் தொகை 35,571 ஆகும். அதில் ஆண்கள் 18,489 மற்றும் பெண்கள் 17,082 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,025 மற்றும் 970 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.83%, இசுலாமியர் 8.48%, சமணர்கள் 0.83% மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 27, பார்பேட்டா ரோட்டை கவுகாத்தி நகரத்துடன் இணைக்கிற்து. பார்பேட்ட ரோடு தொடருந்து நிலையம்[2]கவுகாத்தி, கான்பூர், லக்னோ, தில்லி, கொல்கத்தா, புரி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, சென்னை, பெங்களூரு, எர்ணாகுளம் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பேட்டா_ரோடு&oldid=3584430" இலிருந்து மீள்விக்கப்பட்டது