இராசா சாண்டோ
பி. கே. ராஜா சாண்டோ (P. K. Raja Sandow, 1894[1] – நவம்பர் 25, 1943) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[2] சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் பெயர் பெற்றார். தமிழ், இந்தி, தெலுங்குத் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவையை இயக்கியும் உள்ளார்.[3] ஆரம்பகால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார்.[4][5][6][7]
ராஜா சாண்டோ | |
---|---|
பிறப்பு | 1894/1895 |
இறப்பு | நவம்பர் 25, 1943 (அகவை 48–49) |
தொழில் | திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் |
நடிப்புக் காலம் | 1923 - 1943 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுராஜா சாண்டோ தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்தார்.[8] தந்தை ஒரு மருத்துவர்.[3] சாண்டோவின் இயற்பெயர் பி. கே. நாகலிங்கம். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பம்பாயில் எஸ். என். பதங்கரின் நேஷனல் பிலிம் கம்பனியில் சண்டை நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.[9] இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக ஜெர்மானிய பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார்.[10] 1922ல் பதங்கரின் பக்த போதனா படத்தில்தான் இவருக்கு முதன்முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்ததற்கு இவருக்குக் கிடைத்த வருமானம் ரூபாய் 101.[11] வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற சலனப்படங்கள் இவருக்கு நல்ல நடிகரெனப் பெயர்வாங்கித் தந்தன.[12] சில சலனப்படங்களில் நடித்த பின்னர் ரஞ்சித் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் இயக்குனராக மாத சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார்.[2] இவர் இயக்கிய முதல் படம் சினேஹ் ஜோதி (1928).[13]
தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர். பத்மநாபனின் அசோசியேட் பிலிம் நிறுவனத்திற்காகப் பல சலனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார்.[2] பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான சலனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன.[14] 1931ல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியவுடன் மறுபடியும் பம்பாய்க்குச் சென்று ஹிந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்தார். பெரும்பாலும் கோஹர், சுலோசனா (ரூபி மையர்ஸ்) போன்ற நடிகைகளுடன் ஜோடியாக நடித்தார்.[2][10] 1932 முதல் 1935 வரை ஷியாம் சுந்தர் (1932), தேவகி (1934), இந்திரா எம்.ஏ (1935) போன்ற பல சமுதாயப் படங்களில் நடித்தார்.
1935ல் தமிழ்த் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்ததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். இவர் இயக்கிய முதல் தமிழ்ப் பேசும்படம் மேனகா. தொடர்ந்து பல தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களை இயக்கி நடித்தார். வசந்தசேனா (1936), சாலக் சோர் (1936), சந்திரகாந்தா (1936), விஷ்ணு லீலா (1938), திருநீலகண்டர் (1939), சூடாமணி (1941) ஆகியவை அக்காலகட்டத்தில் இவர் இயக்கி நடித்த திரைப்படங்களுள் குறிப்பிடத்தக்கவை. இவரது கடைசித் திரைப்படம் சிவகவி (1943). நவம்பர் 25, 1943ல் கோயம்பத்தூரில் மாரடைப்பினால் மரணமடைந்தார்.[15]
தாக்கம்
தொகுராஜா சாண்டோதான் முதன்முறையாக திரைப்படங்களின் பெயரோடு நடிகர்களின் பெயரையும் இணைத்து வெளியிடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அக்காலத்திலேயே திரைப்படங்களில் முத்தக்காட்சிகளும் நடனக் கலைஞர்களின் ஆடைக்குறைப்பும் இவரால் துணிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.[16][17] புரணாக்கதைகளை மட்டுமே திரைப்படமாக்கிக் கொண்டிருந்த நிலையினை மாற்றி சமூகக் கருத்துகளைக் கொண்ட கதைகளையும் திரைப்படங்களாக உருவாக்குவதில் இவர் முன்னோடியாக விளங்கினார்.[18] வை. மு. கோதைநாயகி அம்மாளின் கதையை அதே பெயரில் அனாதைப் பெண் என்ற திரைப்படமாக 1931ல் எடுத்தார். புதினம் ஒன்று திரைப்படமாக எடுக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும்.[15]
“ | நடிகர், இயக்குநர், திரைக்கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராகத் தமிழ்த் திரைப்படத்துறையில் ராஜா சாண்டோவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். 1940 மற்றும் 1950களிலிருந்த பெரும்பாலான நடிக நடிகையர் அவரோடு வேலை செய்திருக்கிறார்கள். நடிகர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இவர் திறமையானவர். தனது படங்களை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் கண்டிப்பானவராக இருந்ததால் விலங்கு சாகசப் பயிற்சியாளரென அழைக்கப்பட்டார். இவரால்தான் திரைப்படங்களில் முக்கியத்துவம் பாடல்களிலிருந்து வசனத்தை நோக்கித் திரும்பியது.[2] | ” |
என திரைப்பட வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் ராஜா சாண்டோவைப் பற்றிக் கூறுகிறார். திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை சாண்டோவின் வேலை வாங்கும் திறமையைப் பற்றி பின் வருமாறு கூறுகிறார்:
“ | ராஜா சாண்டோ மிகவும் கண்டிப்பானவர். தனது தொழிற்கலைஞர்களை (பெண்கள் உட்பட) தேவைப்பட்டால் சத்தம்போட்டுத் திட்டவும் ஏன் அடிக்கவும் கூடத் தயங்க மாட்டார். இந்தக் காலத்தில் அந்த மாதிரி இயக்குநர்கள் இல்லை.[17] | ” |
தமிழக அரசு இவரது நினைவாக திரைப்படத்துறையில் சிறந்த சேவை புரிந்தோர்க்கு ஆண்டு தோறும் ”ராஜா சாண்டோ நினைவு விருது” வழங்கி வருகிறது.[19] திரைப்படத்துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டும் வகையில் 2000ம் ஆண்டு இந்தியாவில் அஞ்சல்தலை ஒன்று வெளியிடப்பட்டது.[20]
திரைப்படங்கள்
தொகுவருடம் | தலைப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1922 | பக்தபோதனா | சலனப்படம் | நடிகர் |
1922 | காமா | சலனப்படம் | நடிகர் |
1922 | சூர்யகுமாரி | சலனப்படம் | நடிகர் |
1923 | வீர் பீம்சேன் | சலனப்படம் | நடிகர் |
1923 | விரத்ரசூர் வதா | சலனப்படம் | நடிகர் |
1924 | ரா மாண்ட்லிக் | சலனப்படம் | நடிகர் |
1924 | பிஸ்மி சதி | சலனப்படம் | நடிகர் |
1924 | ரசியா பேகம் | சலனப்படம் | நடிகர் |
1924 | சத்குனி சுசீலா | சலனப்படம் | நடிகர் |
1924 | சதி சோன் | சலனப்படம் | நடிகர் |
1925 | தேஷ்னா துஷ்மன் (The Divine Punishment) | சலனப்படம் | நடிகர் |
1925 | தேவ தாசி | சலனப்படம் | நடிகர் |
1925 | இந்திரசபா | சலனப்படம் | நடிகர் |
1925 | காலா சோர் (The Black Thief) | சலனப்படம் | நடிகர் |
1925 | காந்தனி கவிஸ் (The Noble Scamp) | சலனப்படம் | நடிகர் |
1925 | மாத்ரி பிரேம்(For Mother's Sake) | சலனப்படம் | நடிகர் |
1925 | மொஜிலி மும்பாய்(Slaves Of Luxury) | சலனப்படம் | நடிகர் |
1925 | பஞ்ச்தண்டா(Five Divine Wands) | சலனப்படம் | நடிகர் |
1925 | ராஜ யோகி | சலனப்படம் | நடிகர் |
1925 | சுவர்ணா | சலனப்படம் | நடிகர் |
1925 | வீர் குணால் | சலனப்படம் | நடிகர் |
1925 | விமலா | சலனப்படம் | நடிகர் |
1926 | மாதவ் காம் குண்டலா | சலனப்படம் | நடிகர் |
1926 | மீனா குமாரி | சலனப்படம் | நடிகர் |
1926 | மும்தாஜ் மஹால் | சலனப்படம் | நடிகர் |
1926 | நீரஜனம் | சலனப்படம் | நடிகர் |
1926 | பிருதிவி புத்ரா | சலனப்படம் | நடிகர் |
1926 | ரா கவத் | சலனப்படம் | நடிகர் |
1926 | சாம்ராட் ஷிலதித்யா | சலனப்படம் | நடிகர் |
1926 | டெலிபோன் கேர்ல் | சலனப்படம் | நடிகர் |
1926 | டைப்பிஸ்ட் கேர்ல் | சலனப்படம் | நடிகர் |
1927 | பனேலி பாமினி | சலனப்படம் | நடிகர் |
1927 | சதி மாத்ரி | சலனப்படம் | நடிகர் |
1927 | சிந்த் நி சுமரி | சலனப்படம் | நடிகர் |
1927 | தி மிஷன் கேர்ல் | சலனப்படம் | நடிகர் |
1927 | அலாவுதீன் அவுர் ஜாதூயி சிராக்(Aladdin & the Wonderful Lamp) | சலனப்படம் | நடிகர் |
1928 | கிரகலட்சுமி | சலனப்படம் | நடிகர் |
1928 | நாக் பத்மினி | சலனப்படம் | நடிகர் |
1928 | சினேஹ் ஜோதி | சலனப்படம் | நடிகர், இயக்குநர் |
1928 | அப் - டு - டேட் | சலனப்படம் | நடிகர் |
1928 | விஷ்வமோகினி | சலனப்படம் | நடிகர் |
1929 | யங் இந்தியா | சலனப்படம் | நடிகர் |
1930 | பீம்சேன் தி மைட்டி | சலனப்படம் | நடிகர் |
1930 | பேயும் பெண்ணும் | சலனப்படம் | நடிகர், இயக்குநர் |
1930 | ராஜலட்சுமி | சலனப்படம் | நடிகர் |
1930 | நந்தனார் (Elevation of the Downtrodden) | சலனப்படம் | நடிகர், இயக்குநர் |
1930 | ஸ்ரீ வள்ளி திருமணம் | சலனப்படம் | நடிகர், இயக்குநர் |
1930 | அனாதைப் பெண் | சலனப்படம் | நடிகர், இயக்குநர் |
1931 | த்ரன்ஹார் (Pride of Hindustan) | சலனப்படம் | நடிகர், இயக்குநர் |
1931 | சதி உஷா சுந்தரி | சலனப்படம் | இயக்குநர் |
1931 | ராஜேஷ்வரி | சலனப்படம் | இயக்குநர் |
1931 | பக்தவத்சலா (Dhuruvanin Garvabangam) | சலனப்படம் | இயக்குநர் |
1932 | பாரிஜாத புஷ்பஹரணம் | தமிழ் | இயக்குநர் |
1932 | ஷியாம் சுந்தர் | இந்தி | நடிகர் |
1933 | பர்தேசி ப்ரீத்தம் | இந்தி | நடிகர் |
1933 | நூர்-ஈ-இமான் | இந்தி | நடிகர் |
1934 | தேவகி | இந்தி | நடிகர் |
1934 | காஷ்மீரா | இந்தி | நடிகர் |
1934 | தூஃபானி தருனி | இந்தி | நடிகர் |
1934 | இந்திரா எம்.ஏ | இந்தி | நடிகர் |
1935 | தூஃபானி தருனி | இந்தி | நடிகர் |
1935 | ராத்-கி-ராணி | இந்தி | நடிகர், இயக்குநர் |
1935 | பாரிஸ்டர்ஸ் வைஃப் | இந்தி | நடிகர் |
1935 | காலேஜ் கன்யா | இந்தி | நடிகர் |
1935 | தேஷ் தாசி | இந்தி | நடிகர் |
1935 | மேனகா | தமிழ் | இயக்குநர் |
1936 | பிரபு கா பியாரா | இந்தி | நடிகர் |
1936 | வசந்த சேனா | தமிழ் | நடிகர், இயக்குநர் |
1936 | சாலக் சோர் | இந்தி | நடிகர், இயக்குநர் |
1936 | சந்திரகாந்தா | தமிழ் | திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் |
1936 | Dil ka Daku | இந்தி | நடிகர் |
1936 | மத்லபி துனியா | இந்தி | நடிகர் |
1937 | தூஃபானி டார்சான்' | இந்தி | நடிகர் |
1937 | மைனர் ராஜாமணி | தமிழ் | இயக்குநர் |
1938 | நந்த குமார் | தமிழ் | நடிகர் |
1938 | விஷ்ணுலீலா | தமிழ் | நடிகர், இயக்குநர் |
1939 | திருநீலகண்டர் | தமிழ் | நடிகர் |
1941 | சூடாமணி | தெலுங்கு | இயக்குநர் |
1942 | ஆராய்ச்சிமணி | தமிழ் | இயக்குநர் |
1943 | சிவகவி | தமிழ் | இயக்குநர் (பாதியில் மாற்றப்பட்டார்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ தியடோர் பாஸ்கரன் தனது The eye of the serpent நூலில் ராஜா சாண்டோ 1894 இல் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால் ராண்டார் கை அவர் 1895இல் பிறந்ததாகக் கூறுகிறார்.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. p. 194.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 3.0 3.1 தமிழ் பட டைரக்டர்கள், ம. க. த., ஹனுமான் 1939 ஆண்டு மலர், பக் 134
- ↑ "Mylapore and movies, The Hindu 18 October 2001". Archived from the original on 23 மார்ச் 2002. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Trendsetter from www.screenindia.com
- ↑ Velayutham, Selvaraj (2008). Tamil cinema: the cultural politics of India's other film industry (Hardback ed.). New York: Routledge. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-39680-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Blazing new trails, The Hindu 2 May 2004". Archived from the original on 17 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2010.
- ↑ Baliga, B.S (1957). Madras District Gazetteers: Pudukkottai. Chennai: Superintendent, Govt. Press. p. 274.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Cinema vision India, Volume 1 Issue 1. Chennai. 1980. p. 37.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: location missing publisher (link) - ↑ 10.0 10.1 Majumdar, Neepa (2009). Wanted Cultured Ladies Only!: Female Stardom and Cinema in India, 1930s-1950s. University of Illinois Press. pp. 111–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0252076281, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780252076282.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ ராண்டார் கை (20 August 2010). "A man with a vision". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107225723/http://www.hindu.com/fr/2010/08/13/stories/2010081351210800.htm. பார்த்த நாள்: 20 August 2010.
- ↑ Majumdar, Neepa (2009). Wanted Cultured Ladies Only!: Female Stardom and Cinema in India, 1930s-1950s. University of Illinois Press. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0252076281, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780252076282.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Chabria, Suresh (1994). Light of Asia: Indian silent cinema, 1912-1934. Wiley Eastern. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122406807, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122406801.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Baskaran, S Theodore (2004). Em Thamizhar Seidha Padam (in தமிழ்) (Paperback ed.). Chennai: Uyirmmai Padippagam. pp. 46–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88641-29-4.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ 15.0 15.1 Baskaran, S Theodore (2004). Em Thamizhar Seidha Padam (in தமிழ்) (Paperback ed.). Chennai: Uyirmmai Padippagam. pp. 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88641-29-4.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "Blast from the past (Menaka 1935), The Hindu, 4 January 2008". Archived from the original on 5 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 17.0 17.1 From silents to sivaji ganesan
- ↑ Journal of Tamil studies, Issues 8-13. International Institute of Tamil Studies. 1975. p. 41.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "The stamp of honour, The Hindu 10 July 2000". Archived from the original on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Indianstampghar.com". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-11-26.