புரோட்டான் சாகா

புரோட்டான் சாகா (Proton Saga) என்பது மலேசியாவின் புரோட்டோன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் தானுந்து வாகனங்கள் ஆகும். இவை ஜப்பானில் தயாரிக்கப்படும் மிட்சுபிசி லான்சர் (Mitsubishi Lancer Fiore) ரகத்தைச் சார்ந்தவை. முதல் புரோட்டான் சாகா வாகனம் 1985 ஜூலை 9 இல் வெளியானது.[1] முதல் தலைமுறை புரோட்டான் சாகா வாகனங்கள் 1985-லிருந்து 2005-ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டன.

புரோட்டோன் சாகா
உற்பத்தியாளர்புரோட்டோன்
வேறு பெயர்மலிவு வாகனம்
உற்பத்தி1985–தற்போது வரை
பொருத்துதல்ஷா ஆலாம், சிலாங்கூர், மலேசியா
வகுப்புதானுந்து
உடல் வடிவம்4-கதவு ஒரு-பெட்டி
திட்ட அமைப்புFF அமைப்பு
இயந்திரம்
  • 1.3L 4G13 I4
  • 1.5L 4G15 I4
  • 2.0L 4G63 I4
செலுத்தும் சாதனம்MT/AT
சில்லு அடிப்பாகம்2,600 mm (102.4 அங்)
நீளம்4,278 mm (168.4 அங்)
அகலம்1,680 mm (66.1 அங்)
உயரம்1,520 mm (59.8 அங்)
குறட்டுக்கல் எடை1,025 kg (2,260 lb)–635 kg (1,400 lb)
Relatedபுரோட்டான் சாகா

இரண்டாம் தலைமுறை வாகனங்கள் 2008 ஜனவரி 18 இல் இருந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.[2] சாகா (Adenanthera Pavonina, மலாய்: Saga) என்றால், குண்டுமணி என்று பொருள். குண்டுமணி மரங்கள் மலேசியாவில் சாதாரணமாகக் காணப்படுபவை. மலேசியாவின் முதல் வாகனம் வெளிவருவதற்கு முன்னர், அதற்கு பெயர் வைக்கும் போட்டி நடத்தப்பட்டது. இஸ்மாயில் ஜாபார் என்பவர் சாகா என்று பெயர் வைத்தார்.[3] அவருக்கு ஒரு சிகப்பு நிறக் கார் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.[4]

புரோட்டான் சாகா கார் மலேசியாவின் தேசிய சின்னமாகக் கருதப்படுகிறது. புரோட்டான் சாகா வாகனம் தயாரிக்கப்பட்டதும், முதல் வாகனம் மலேசிய தேசிய அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இரண்டாவது வாகனம், சாகா என்று பெயர் சூட்டிய இஸ்மாயில் ஜாபாருக்கு வழங்கப்பட்டது.

புரோட்டான் சாகாவின் ஓர் இலட்சத்தாவது வாகனம் ஜனவரி 1989 இல் வெளியானது. 1996 இல் பத்து இலட்சத்தாவது வாகனம் வெளிவந்தது.[5] இதுவரையில், 12 இலட்சம் புரோட்டான் சாகா முதல் தலைமுறை வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் இரண்டாம் தலைமுறை வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

2012 ஆம் ஆண்டு வரையில் மலேசியாவில் மட்டும் 35 இலட்சம் புரோட்டான் சாகா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் 3.10,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.[6]

வரலாறு

தொகு
 
முதன்முதலாக வெளிவந்த புரோட்டோன் சாகா. 1985 லிருந்து 2008 வரை 12 இலட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளன.

மலேசியாவை ஒரு தொழில்துறை நாடாக மாற்ற வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய வாகனத்தை உருவாக்க வேண்டும் என்பது முன்னாள் மலேசியப் பிரதமர் துன் மகாதீரின் ஓர் இலட்சியக் கனவாகும்.[7] 1979 ஆம் ஆண்டில் அந்த எண்ணம் உருவானது. 1982 ஆம் ஆண்டு தேசிய தானுந்து திட்டத்திற்கு (National Car Project) மலேசிய அமைச்சரவை அனுமதி அளித்தது.[8]

1983 மே 7 இல் புரோட்டோன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. மலேசிய கசானா எனும் தேசியப் பொருளகத்தின் மூலமாக புரோட்டோன் நிறுவனத்தில் மலேசிய அரசாங்கம் முழு உரிமையையும் பெற்று இருந்தது. அந்த நிறுவனத்திற்கு துன் மகாதீர் தலைமை வகித்தார். 1983 - 1984 ஆம் ஆண்டுகளில், முதலாவது மலேசியக் காரை உருவாக்கும் நோக்கத்தில், ஜப்பானிய மிட்சுபிசி நிறுவனத்துடன் புரோட்டோன் நிறுவனம் ஒரு கூட்டு முயற்சித் திட்டத்தில் இறங்கியது.

புரோட்டான் சாகாவின் பிரதான தொழிற்சாலை

தொகு

அந்தக் கூட்டு முயற்சித் திட்டத்தின் மூலமாக 1985 ஜூலை 9 இல் மலேசியாவின் முதல் கார் வெள்ளோட்டம் கண்டது. புரோட்டான் சாகா மலேசிய வாகன உற்பத்தியின் ஒரு சின்னமாகக் கருதப்பட்டது. அதனால் முதல் வாகனம் மலேசிய தேசிய அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. புரோட்டான் சாகாவின் பிரதான தொழிற்சாலை சிலாங்கூர் ஷா ஆலாம் நகரில் இருக்கிறது.

1986 இல் உற்பத்தியைவிட தேவை அதிகமாக இருந்தது. மலேசியக் காரை வாங்குவதில் மலேசியர்கள் தீவிரம் காட்டினர். மலேசியக் காரை வைத்து இருப்பது பெருமை என்றும் மலேசியர்கள் கருதினர். 1987 ஆம் ஆண்டு உள்ளூர்ச் சந்தையில் 64 விழுக்காடு விற்பனை புரோட்டான் சாகா வாகனமாக இருந்தது. 1989 ஆம் ஆண்டு, புரோட்டான் சாகா கார்கள் இங்கிலாந்திலும் விற்பனைக்கு போயின.[8]

1987 அக்டோபர் மாதம், புரோட்டான் சாகா ஏரோபேக் ரக கார்கள் சந்தைக்கு வந்தன. அவை 1.5L Mitsubishi 4G15 இயந்திரங்களைக் கொண்டவை. பழைய ரக கார்களைவிட இந்த ரகக் கார்கள் சற்றுக் கூடுதலான ஆற்றல் படைத்தவை. இருப்பினும் 1980 களின் இறுதி வாக்கில் புரோட்டான் சாகாவின் விற்பனை சரிவு நிலையைக் கண்டது.

1988 இல் ஜப்பானிய மிட்சுபிசியின் முன்னாள் தலைவர் கெஞ்சி இவாபுச்சி என்பவர் புரோட்டான் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[9] இவர் தலைவராக வந்த பின்னர், புரோட்டான் சாகாவின் விற்பனை உயரத் தொடங்கியது.[8] உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகமான கார்கள் விற்பனையாயின.

புரோட்டான் சாகா ஈஸ்வரா

தொகு

1992 ஆகஸ்டு 15 இல், புரோட்டான் சாகா ஈஸ்வரா ரகக் கார்கள் வெளிவந்தன. இந்தப் புரோட்டான் சாகா ஈஸ்வரா ரகக் கார்களுக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் காணப்படும் பெரும் பச்சை வண்ணத்துப்பூச்சியின் பெயர் (Papilio Iswara) வைக்கப்பட்டது. இந்த வகைக் கார்கள் 1990 - 2000 ஆம் ஆண்டுகளில் டாக்சி வாடகைக் கார்களாகப் பெரிதும் விரும்பிப் பயன்படுத்தப்பட்டன.

அந்தக் கார்கள் இன்றும் சில இடங்களில், சேவைப் பயன்பாட்டில் உள்ளன. சில ஆண்டுகளுக்குப் பின்னர், புரோட்டான் சாகா பெசோனா ரகக் கார்கள் வந்ததும், புரோட்டான் சாகா ஈஸ்வரா ரகக் கார்களின் மவுசு குறைந்து போனது. பயன்பாடும் குன்றி வருகிறது.

புரோட்டான் தயாரித்த கார்களின் பட்டியல்

தொகு
வகை தயாரிப்பு விவரங்கள்
 
புரோட்டான்
சாகா
1985–2008 புரோட்டான் சாகா கார்களில் முதல் வகை. 1985 செப்டம்பர் மாதம் ஷா ஆலாம் தொழிற்சாலையில் இருந்து வெளியானது. 1989 இல் ஓர் இல்ட்சத்தாவது எண்ணிக்கையைத் தாண்டியது.
 
புரோட்டோன்
வீரா
1993–2007 புரோட்டோன் வீரா இன்னும் மலேசியாவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. 1.3GLi A/M, 1.5GLi A/M, 1.6XLi A/M, 1.8XLi A/M, 2.0D M. ரகங்களில் தயாரிக்கப்பட்டன. 1.8XLi Auto வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
 
புரோட்டோன்
சத்திரியா
1995–2006 புரோட்டோன் சத்திரியா ரகக் கார்கள் மூன்று கதவுகளைக் கொண்டது. புரோட்டோன் சத்திரியா கார்களில் Proton Satria GTi, Proton Satria R3, Proton Satria SE என மூன்று துணை ரகங்கள் உள்ளன.
 
புரோட்டோன்
புத்ரா
1995–2000 புரோட்டோன் புத்ரா, இரு கதவுகளைக் கொண்ட பந்தயக் கார். இங்கிலாந்தில் Proton Coupe எனும் பெயரிலும், ஆஸ்திரேலியாவில் Proton M21 எனும் பெயரிலும் விற்பனைக்கு வந்தன.
 
புரோட்டோன்
பிரதானா
1995–1998 புரோட்டோன் பிரதானா, சற்று அதிகமான விலை கொண்ட கார். ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Mitsubishi Eterna வகையைச் சேர்ந்தது.
 
புரோட்டோன்
தியாரா
1996–2000 புரோட்டோன் தியாரா ஐந்து கதவுகளைக் கொண்டது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த Citroën AX வகையைச் சேர்ந்தது. 1.1L இயந்திரத்தைக் கொண்டது.
 
புரோட்டோன்
பிரதானாV6
1999–2010 புரோட்டோன் பிரதானாV6 ரகத்தைச் சேர்ந்த கார். புரோட்டோன் பிரதானா கார்களில் இருந்து மறுவடிவம் பெற்றவை. Alfa-Romeo ரகக் கார்களின் தோற்றம் கொண்டது.
 
புரோட்டோன்
ஜுவாரா
2001–2003 புரோட்டோன் ஜுவாரா வாகனம் ஒரு கூண்டுந்து வகையைச் சேர்ந்தது. ஜப்பானில் பயன்படுத்தப்படும் Mitsubishi Town Box Wide ரக கூண்டுந்துகளைப் போன்றது. மலேசியாவில் பிரபலம் அடையவில்லை. குறைவான எரிபொருள் தேவை. இருப்பினும், பார்ப்பதற்கு துணி துவைக்கும் இயந்திரம் போல் இருந்ததால், மக்கள் அதை அதிகமாக விரும்பவில்லை.
 
புரோட்டோன்
வாஜா
2000–2011 புரோட்டோன் வாஜா ரகக் கார்கள் ஐரோப்பாவில் Proton Impian என்று அழைக்கப்பட்டன. Renault இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மலேசியர்கள் பெரிதும் விரும்பிய கார். அகலமான இடவசதி கொண்டது. நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பைக் கொண்டது. கனப் பரிமாணமும் அதிகம். இந்தக் கார் வெளிவந்த போது, பலர் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினார்கள். இப்போது சாலைகளில் மிக அரிதாகத்தான் பார்க்க முடிகின்றது. 2005 ஆம் ஆண்டில் இந்தக் கார் மாற்று வடிவம் கொண்டு Proton Waja R3 MME Edition எனும் பெயரில் சந்தைக்கு வந்தது. விலை சற்று அதிகம்.
 
புரோட்டோன்
அரேனா
2002–2011 புரோட்டோன் அரேனா கார்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் Proton Jumbuck என்று அழைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் மட்டும், வெளியான முதலாம் ஆண்டில் 1200 கார்கள் விற்கப்பட்டன. மூன்று வகையான தோற்ற அமைப்புகளில் வெளியீடுகள் செய்யப்பட்டன.
 
புரோட்டோன்
ஜென்.2
2004–2011 புரோட்டோன் ஜென்.2 கார்கள் அசல் மலேசியத் தயாரிப்பு. வெளிநாடுகளின் உதவிகள் இல்லாமல் தயாரிக்கப்பட்டது. புரோட்டோன் வாஜா கார்களை வாங்கியவர்கள் எல்லாம் அதை விற்றுவிட்டு புரோட்டோன் ஜென்.2 கார்களுக்கு மாறினார்கள். இருப்பினும், தரம் மலிந்த உபரிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகப் புகார்கள். மக்களின் நம்பிக்கை குறைந்து போனது. புரோட்டோன் ஜென்.2 மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டதால், மறுபடியும் பலர் புரோட்டோன் வாஜா கார்களுக்கே திரும்பிச் சென்றார்கள். 2007 ஆம் ஆண்டில் தாய்லாந்து, பாங்காக்கில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது இந்த புரோட்டோன் ஜென்.2 என்பது குறிப்பிடத்தக்கது.[10]

புரோட்டோன் ஜென்.2 கார்களில் மூன்று வகை வெளியீடு கண்டன.

  • Proton Gen-2 R3 MME Edition
  • Proton Gen-2 EVE Hybrid
  • Proton Gen-2 Ecologic
 
புரோட்டோன்
சேவி
2005–2010 புரோட்டோன் சேவி (Proton Savvy) கார்களுக்கு பிரான்சு நாட்டின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மிகக் குறைவான எரிபொருள் பயன்படுத்தும் கார் என்று புகழாரம். மலேசிய சாதனைப் புத்தகத்திலும் தடம் பதித்தது. இந்த ரகக் கார்களில் Proton Savvy R3 Zerokit என மற்றும் ஒரு துணை ரகக் காரும் தயாரிக்கப்பட்டது. மலேசிய மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற கார் என்று சொல்லப்படுகிறது.
 
புரோட்டோன்
சத்திரியா நியோ
2006–Present புரோட்டோன் சத்திரியா நியோ கார்கள், முன்பு 1995 இல் வெளியான புரோட்டோன் சத்திரியா கார்களுக்குப் பதிலாக மறுவடிவம் கொடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இவற்றுக்கு Campro இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதிகமான வரவேற்பைப் பெறவில்லை.
 
புரோட்டோன்
பெசோனா
2007–2010 புரோட்டோன் சத்திரியா நியோ கார்கள், புரோட்டோன் ஜென்.2 வகையைச் சேர்ந்தவை. 2007 ஆகஸ்டு 15 இல் வெளியானது.
 
புரோட்டோன்
சாகா
2008 இல் இருந்து இப்போது வரை புரோட்டோன் சாகா, கொரியாவின் LG CNS ரகக் கார்களைச் சார்ந்தவை. சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
புரோட்டோன்
எக்ஸோரா
2009 இல் இருந்து இப்போது வரை புரோட்டோன் எக்ஸோரா 2009 ஏப்ரல் 15 இல் வெளியீடு கண்டது. 1.6L Campro இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 125 குதிரைச் சக்தி கொண்டது. இந்தக் காருக்குப் பெயர் வைக்கும் போட்டி நடைபெற்றது. நோர்சோலிஹான் எனும் பெண்மணி எக்ஸோரா எனும் பெயரை வழங்கி வெற்றி பெற்றார்.[11]
 
புரோட்டோன்
இன்ஸ்பிரா
2010 இல் இருந்து இப்போது வரை புரோட்டோன் இன்ஸ்பிரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சந்தைக்கு வந்தது. மலேசியர்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.[12]

மேற்கோள்

தொகு
  1. "The dream was fulfilled when PROTON was officially incorporated on May 7, 1983. Our very first model, the Proton Saga was commercially launched on July 9, 1985". Archived from the original on மார்ச் 2, 2013. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. This is probably the most anticipated car in the history, it will mark the retirement of the old Proton Saga and mark the beginning of a new saga in the history of Proton.
  3. Staf Sarjan Ismail Jaafar yang bertugas di Markas Tentera Dua Divisyen di Pulau Pinang telah diisytihar pemenang menamakan motokar nasional sebagai Proton Saga. Pelancaran Proton Saga telah dilakukan oleh Y.A.B. Perdana Menteri, Datuk Seri Dr. Mahathir Mohamad pada 1 September 1985.
  4. The dream was fulfilled when PROTON was officially incorporated on May 7, 1983. Our very first model, the Proton Saga was commercially launched on July 9, 1985.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. achievement was buoyed by several significant new model launches including the Proton Tiara, Proton Wira 2.0 Diesel and the two-door Proton Putra.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Malaysia: Full Year prediction upped to record 638,000 units.
  7. PROTON has come a long way as a national automotive maker since the launch of the first PROTON car, the Proton Saga, in 1985.
  8. 8.0 8.1 8.2 "His dream became one step closer to reality when the Cabinet approved the National Car Project in 1982". Archived from the original on 2013-03-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  9. Proton used to have a Japanese managing director back in 1988 – Mr. Kenji Iwabuchi, from Mitsubishi Motor Corp.
  10. "PROTON SETS FOOT IN THAILAND". Archived from the original on 2007-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  11. Proton Exora - the MPV Proton will launch!
  12. "Previously referred to as Proton New Sedan". Archived from the original on 2010-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோட்டான்_சாகா&oldid=4083684" இலிருந்து மீள்விக்கப்பட்டது