பூனை இறைச்சி

பூனை இறைச்சி (Cat meat) என்பது வீட்டுப் பூனைகளிலிருந்து மனித நுகர்வுக்காகத் தயாரிக்கப்பட்ட இறைச்சியினைக் குறிக்கும். சில நாடுகள் பூனை இறைச்சியை வழக்கமான உணவாக உண்ணுகின்றனர். மற்றவர்கள் போர்க்காலம் அல்லது வறுமையின் போது விரக்தியில் உணவில்லாத போது பூனை இறைச்சியை உட்கொள்கின்றன.

வியட்நாமில் பூனை இறைச்சி உணவு.

ஆப்பிரிக்கா தொகு

வரலாற்றுக்கு முந்தைய ஆய்வுகளில் மனித மலத்தில் ஆப்பிரிக்காவின் காட்டுப் பூனையின் எலும்புகளைக் கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதால் மனிதன் பூனைக் கறியினை உண்டது அறியப்படுகிறது.[1]

 
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் சமைக்கப்படும் பூனை கறி அடிப்படையிலான உணவு.

கேமரூனின் சில மக்கள், நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கருதி பூனை உண்ணும் சிறப்பு விழாவினைக் கொண்டாடுகின்றனர்.[2]

ஆசியா தொகு

சீனா தொகு

மனித பன்னாட்டுச் சமூகம் எனும் அமைப்பு,[3] ஏஜென்ஸ் பிரான்சு-பதிப்பகம்,[4] மற்றும் பிபிசி,[5] கருத்தின்படி சீனாவில் பூனை இறைச்சி பரவலாக உண்ணப்படுவதில்லை. ஆனால் தென்கிழக்கு சீனாவில் உள்ள குவாங்டொங் மற்றும் குவாங்சி மாகாணங்களில், சிலர்-குறிப்பாக வயதானவர்கள்-குளிர்கால மாதங்களில் பூனை இறைச்சியை உடல் வெப்பத்திற்கான உணவாகக் கருதி உட்கொள்கின்றனர்.[6] அசோசியேட்டட் பிரெசு 2008-ல் தெற்கு சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் (113 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை) ஒரு நாளைக்கு 10,000 பூனைகளைச் சாப்பிட்டதாக அறிவித்தது.[7]

குவாங்டொங்கில், பூனை இறைச்சியானது பாரம்பரிய உணவாவன "டிராகன், புலி, பீனிக்ஸ்" (பாம்பு, பூனை, பறவை) ஆகியவற்றின் முக்கிய மூலப்பொருளாகும். இது உடலைப் பலப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.[8]

அன்ஹுய் மற்றும் சியாங்சு மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட பூனை சேகரிப்பாளர்கள் தெற்கு உணவகங்களுக்கு பெரும்பாலும் பூனையினை வழங்குகிறார்கள்.[8] சனவரி 26, 2010 அன்று, சீனா தனது முதல் வரைவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நாட்டின் விலங்குகளைத் துன்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பூனை அல்லது நாய் இறைச்சியை உண்பவர்களுக்கு 15 நாட்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கின்றது.[9]

சீனாவில் செல்லப்பிராணிகளாகப் பூனைகள் அதிகரித்து வருவதால், உணவுக்காகப் பூனைகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. சூன் 2006-ல், சென்செனில் உள்ள பாங்ஜி கேட் மீட்பால் உணவகத்தை ஏறத்தாழ 40 ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். இதை மூடுமாறு கட்டாயப்படுத்தினர்.[10] 40க்கும் மேற்பட்ட உறுப்பினர் சங்கங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட, சீன விலங்கு பாதுகாப்பு வலையமைப்பு சனவரி 2006-ல் நாய் மற்றும் பூனை நுகர்வுக்கு எதிராக நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட போராட்டங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கியது, குவாங்செளவில் தொடங்கி, பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் "பொது மக்களிடமிருந்து மிகவும் உகந்த பங்களிப்புடன்" செயல்படுத்தப்பட்டது.[11] பெய்ஜிங் செய்தி 2014 மற்றும் 2015-ல் பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் அதிகாரிகள் காட்டுப் பூனைகளை, பூனை இறைச்சி வர்த்தகத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தனர். இது பல சீன இணைய வாசிகளிடமிருந்து சீற்றத்தை ஈர்த்தது.[5] 2015ஆம் ஆண்டு விலங்குகள் ஆசியா கணக்கெடுப்பில் பதிலளித்த 70-80% சீனர்கள் நாய்கள் மற்றும் பூனைகளை உணவாக உண்பது படுகொலை அல்லது துஷ்பிரயோகம் அல்லது சித்திரவதை செய்யப்பட்டிருந்தால் அவற்றைச் சாப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஒப்புக்கொண்டனர்.[12]

யப்பான் தொகு

எடோ காலத்தின் இறுதி வரை யப்பானில், பூனைகள் சில நேரங்களில் உண்ணப்பட்டன.[13] ஒகினாவாவில், இது காஸ்டோகாண்ட்ரிடிஸ், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் நோய் மற்றும் மூல நோய்க்கு எதிராகப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்பட்டது. மேலும் மாயா நோ உஷிரோ போன்ற சூப் வடிவில் சாப்பிடப்பட்டது.[14]

இந்தியா தொகு

2016ஆம் ஆண்டு கப்போஸ்ட் மற்றும் ஒரு சில இந்தியச் செய்தி நிறுவனங்களின் கருத்தின் படி, சென்னையின் சில பகுதிகளில் பூனை இறைச்சி உண்ணப்படுகிறது என்றும், நகரத்தில் உள்ள நரிக்குறவர் சமூகத்தால் முக்கியமாக இது உட்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தது.[15] இதே ஆண்டில் பெங்களூரில் சில நரிக்குறவர் இன மக்கள் காட்டுப் பூனைகளையும், தெரு பூனைகளையும் தங்கள் இறைச்சிக்காக வேட்டையாடுவதாக இணையச் செய்திக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.[16]

இந்தோனேசியா தொகு

வடக்கு சுலவேசி நகரமான டொமோஹோனில் உள்ள கடைநிலைச் சந்தையில் பூனை இறைச்சி விற்பனைச் செய்யப்படுகிறது.[17]

கொரியா தொகு

கொரியாவில், பூனை இறைச்சியானது பன்னெடுங்காலமாக நரம்பியல் மற்றும் மூட்டுவலிக்கான நாட்டுப்புற தீர்வாக நீர்மமாகக் காய்ச்சப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. நாய் இறைச்சியுடன் ஒப்பிடுகையில், பூனை இறைச்சியினை உட்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.[18][19] நடுத்தர வயது பெண்கள் சுகாதார பலன்களுக்காகப் பூனை இறைச்சியினை உண்பதாக சூலியன் உடுக்னோய்ல் தனது தி கான்வெர்சேஷன் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.[20] விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்று தென் கொரியாவில் கேட் சோஜு தயாரிப்பதற்காக ஆண்டுக்கு 100,000 பூனைகள் கொல்லப்படுகின்றன எனத் தெரிவிக்கின்றது. நாட்டில் பூனைகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுவதில்லை, எனவே காட்டுப் பூனைகள் மற்றும் தெருவில் சுற்றித் திரியும் பூனைகளையே இவ்வணிகம் உள்ளடக்கியது. மேலும் பெரும்பான்மையான மக்கள் பூனை சாப்பிடுவது நாட்டில் பொதுவானது என்பது கூட தெரியாது. மேலும், பூனை இறைச்சியை உண்பது நாய் இறைச்சியை உண்பது போலல்லாமல், நாடு முழுவதும் மிகவும் பாவமாகக் கருதப்படுகிறது. மேலும் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது. ஆனால் பொதுவான களங்கமாகக் கருதப்படவில்லை.[21]

மலேசியா தொகு

பூவுலக நண்பர்களின் மலேசியக் கிளையின் படி, மலேசியாவில் பூனை இறைச்சி சட்டவிரோதமானது அல்ல. சில வியட்நாமிய மக்கள் நாய் மற்றும் பூனை இறைச்சியை ஓரிரு நகரங்களில் விற்பனை செய்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்தது.[22] இது கோகோனட்சு ஊடகத்தினால் மீண்டும் கூறப்பட்டது.[23] 2012ஆம் ஆண்டின் தி ஸ்டார் கருத்துப்படி, நாட்டில் சில மியான்மர் நாட்டவர்களிடையே பூனை இறைச்சி பிரபலமாக இருந்தது.[24]

தைவான் தொகு

அக்டோபர் 2017-ல், தைவானின் சட்டமியற்றும் யுவான் எனப்படும் தேசிய சட்டமன்றம், நாட்டின் விலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்தது. இது "நாய் மற்றும் பூனை இறைச்சி மற்றும் இந்த விலங்குகளின் இறைச்சி அல்லது பிற பாகங்களைக் கொண்ட எந்த உணவுப் பொருட்களையும் விற்பதையும் நுகர்வதையும் தடை செய்கிறது."[25]

வியட்நாம் தொகு

 
வியட்நாமில் உள்ள பூனை இறைச்சி உணவகத்தில் பூனைகள்

2015ஆம் ஆண்டு நிலவரப்படி, வியட்நாமில் பூனை இறைச்சி உண்ணப்படுகிறது.[26][27][28][29][30][31][32] இது பொதுவாக உணவாக "டையு கோ (tiểu hổ)" காணப்படுகிறது. அதாவது "தித் மியாவ் thịt mèo’ என்பதற்கு "குழந்தை புலி" என்றுப் பொருள்.[33] வடக்கு வியட்நாமில் உள்ள மக்களின் கூற்றுப்படி பூனைக் கறி பாலுணர்வை ஏற்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.[34][35] எவ்வாறாயினும், 2018ஆம் ஆண்டில், ஹனோய் நகர அதிகாரிகள் நாய் மற்றும் பூனை இறைச்சியைச் சாப்பிடுவதை நிறுத்துமாறு குடிமக்களை வலியுறுத்தினர், விலங்குகள் கொல்லப்படும் கொடூரமான முறைகள் மற்றும் இந்த நடைமுறையில் வெறி நாய்க்கடி நோய் மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. இந்த அறிவுரைக்கான முதன்மைக் காரணம், நாய் மற்றும் பூனைகளை உண்ணும் பழக்கம், அவற்றில் பெரும்பாலானவை திருடப்பட்ட வீட்டு செல்லப்பிராணிகள், நகரத்தின் "நாகரிக மற்றும் நவீன தலைநகரம்" என்ற பிம்பத்தைக் கெடுத்துவிடும் என்ற பயம் காரணமாக அமைந்தது. போர் பாவ்சின் சந்தை ஆராய்ச்சி ஆய்வின் தரவுகளின்படி, ஹனோயில் வசிக்கும் 8% மக்கள் பூனை இறைச்சியை உட்கொண்டுள்ளனர்.[36]

ஏப்ரல் 2020இன் தி இன்டிபென்டன்ட் படி, கோவிட்-19 தீநுண்மிக்கு எதிரான நன்மைகள் உள்ளன என்ற கருத்தின் அடிப்படையில் வியட்நாமில் (மற்றும் கம்போடியா) நாய் மற்றும் பூனை இறைச்சி விற்பனையை அதிகரிக்க வழிவகுத்தது.[37]

ஐரோப்பா தொகு

ஆத்திரியா தொகு

விலங்குகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் பிரிவு 6, பத்தி 2, உணவாக அல்லது பிற பொருட்களுக்காகப் பூனைகள் மற்றும் நாய்களைக் கொல்வதைத் தடை செய்கிறது.[38]

பெல்ஜியம் தொகு

சனவரி 2011-ல், உணவுச் சங்கிலியின் பாதுகாப்பிற்கான பெல்ஜிய குடியரசு அமைப்பு, மக்கள் தங்கள் தோட்டத்தில் உள்ள பூனைகளைக் கொல்ல அனுமதியில்லை என்று கூறியது. ஆனால் "உங்கள் சொந்த செல்லப் பூனையை நீங்கள் சாப்பிட முடியாது என்று சட்டத்தில் எங்கும் கூறவில்லை, நாய், முயல், மீன் அல்லது எதுவாக இருந்தாலும். நீங்கள் அவைகளை விலங்குகளுக்கு ஏற்ற வகையில் கொல்ல வேண்டும்."

டென்மார்க் தொகு

சூன் 2008 இல், டேனிய இதழியல் மற்றும் ஊடகப் பள்ளி மாணவர்கள் மூவர், மாணவர்களுக்கான பத்திரிகையான சிட்டாட்டில் ஒரு பூனையை அறுத்துச் சாப்பிடும் படங்களை வெளியிட்டனர். விலங்குகள் நலன் பற்றிய விவாதத்தை உருவாக்குவதே இவர்களின் குறிக்கோளாக இருந்தது. இந்தப் பூனையானது அதனை வளர்த்த அதன் உரிமையாளரான விவசாயி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டது. விவசாயி பூனையை இடச்சு நாட்டுச் சட்டத்தின் வரம்பிற்குட்பட்டே கொன்றார். இது இடச்சு நாட்டு விலங்குகள் நலக் குழுவான தைரென்சு பெசுகிட்டெல்சியின் கண்டனத்தினையும்[39][40] மற்றும் மாணவர்களால் அச்சுறுத்தலுக்கும் வழிவகுத்தது.[41]

இத்தாலி தொகு

பிப்ரவரி 2010-ல், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி ஒன்றில், இத்தாலிய உணவு எழுத்தாளர் பெப்பே பிகாஸி, இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, டசுக்கனியில் உள்ள வால்டார்னோவில் தனது சொந்தப் பகுதியில் "சதைப்பற்றுள்ள" மற்றும் நன்கு அறியப்பட்ட உணவாக பூனைக்கறி இருந்தது என்று குறிப்பிட்டார். பின்னர் இவர் வாதத்திற்காகக் கேலியாக இதனைக் கூறியதாகச் சொன்னார். ஆனால் வரலாற்று ரீதியாகப் பஞ்ச காலங்களில் பூனைகளை இப்பகுதி மக்கள் சாப்பிடுவதாகத் தெரிவித்தார். இவரது கருத்துகளுக்காக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டார். பின்னர் இவரைத் தொலைக்காட்சி கட்டமைப்பிலிருந்து கைவிடப்பட்டார்.[42]

பூனை நுகர்வு என்பது இத்தாலியின் வைசென்சாவில் உள்ள வின்சென்சான்கள் பொதுவான நடைமுறையாகும்.[43] இவர்களை நகைச்சுவையாக "மகனாதி" என்று அழைக்கின்றனர். இதன் பொருள் உள்ளூர் மொழியில் "பூனைகளை உண்பவர்கள்" என்பதாகும்.

பிரிட்டிஷ் கசாப்புக் கடைக்காரர்களின் பரிந்துரை, கோழி மற்றும் உணவு வியாபாரியின் 1904ஆம் ஆண்டின் கூற்றுப்படி "கிறித்துப் பிறப்பு விழாவிற்கு முன் வடக்கு இத்தாலியில் இளைஞர்கள் குழு சில பூனைகளைக் கொன்று, தோலுரித்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தண்ணீரில் ஊறவைப்பது வழக்கம். இவை கிறித்துபிறப்பு நாளில் மிகுந்த கவனத்துடன் சமைக்கப்பட்டு சுமார் 1:30 மணிக்குச் சூடாகப் பரிமாறப்படுகின்றன. இத்தாலியில் பலர், 'துன்பமில்லாமல்', ஆங்கிலேயர்கள் முயல்களைக் கொல்வது போல் பூனைகளைக் கொல்கின்றனர். பெண்களுக்கான காதுறை பொருளாக, பூனை தோல் பயன்படுகிறது. பூனைகளைப் பாதுகாப்பதற்கான இத்தாலியச் சங்கம் விழிப்புடன் இருப்பதால், விலங்குகளை வாங்குவதில் அசாதாரணமான கவனிப்பு வேண்டும். மேலும் சட்டத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. இத்தாலியில் அபராதம் விதிப்பதில்லை.

1905ஆம் ஆண்டு தி டயட்டெடிக் & ஹைஜீனிக் கெசட்டின் படி, "இத்தாலியினர் பூனையை வீட்டு உபயோகத்திற்காக வளர்க்கின்றனர். ஏனெனில் ஆங்கிலேயர்கள் முயல்களை வளர்க்கிறார்கள். பூனைகள் மீதான கொடுமைகளைத் தடுக்க தடுப்பு சங்கம் விழிப்புடன் உள்ளது. சட்டத்திற்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்குச் சிறைத்தண்டனைகள் உண்டு. இருப்பினும் சந்தைப் பயன்பாட்டிற்காகப் பூனைகள் வளர்க்கப்படுகின்றன. மிகச்சிறந்த கொழுப்பு நிறைந்த பாலினை உண்டு வளரும் பூனைகள் பதினைந்து பவுண்டுகள் எடை வரை விரைவில் அடையும்."[44][45]

பிரான்சு மற்றும் இசுபெயின் தொகு

உரோமானிய மாகாணமான காலியா நார்போனென்சிசு (தெற்கு பிரான்சு), இசுபெயினில் 17ஆம் நூற்றாண்டிலும் முதலாம் உலகப்போரின் போதும் இரண்டாம் உலகப் போரின் போதிலும் பூனைக்கறி உட்கொள்ளப்பட்டதற்கானச் சான்றுகள் உள்ளன.[43]

சுவிட்சர்லாந்து தொகு

உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தின் படி, நாய் அல்லது பூனை இறைச்சி விற்பனைக்கான அனுமதி சுவிட்சர்லாந்தில் இல்லை. ஆனால் மக்கள் தங்கள் சொந்தமாக வளர்க்கும் இத்தகைய விலங்குகளைச் சாப்பிடுவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.[46][47] 1993-ல் நாய்கள் மற்றும் பூனைகளை[48] மனித நுகர்விலிருந்து பாதுகாக்கும் சட்டங்களை மாற்றியதை சுவிஸ் பாராளுமன்றம் நிராகரித்தது. சுவிட்சர்லாந்தில் பூனை இறைச்சியை உண்பதைத் தடைசெய்வதற்காக 2014ஆம் ஆண்டில் விலங்குகள் உரிமைகள் குழு 16,000 கையெழுத்துக்களைச் சேகரித்தது. பாரம்பரிய செயலாகப் பூனையினை உண்பது வழக்கமாக இருந்தாலும் இன்று வழக்கத்திற்கு மாறான நடைமுறையும் உள்ளது.[49]

ஐக்கிய இராச்சியம் தொகு

18ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில், பூனைகள் பொழுதுபோக்காக அல்லது சூதாட்டமாக உண்ணப்பட்ட பதிவுகள் சில உள்ளன. 1788-ல் டியூக் கூட்டமைப்பு, பேரிமோரின் ஏர்ல் 1,000 கினியாக்களுக்குப் பந்தயம் கட்டினார். இவரால் உயிருள்ள பூனையைச் சாப்பிட முடியவில்லை.[50]

பிறப் பகுதிகள் தொகு

கடுமையான குளிர்காலம், மோசமான பஞ்சகாலம் மற்றும் போர்க்காலங்களில் பூனைகள் பஞ்ச உணவாக உண்ணப்பட்டன. முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் நடு ஐரோப்பாவின் கடினமான காலங்களில் பூனை "கூரை முயல்" (டச்சேசு ) எனப் புகழ் பெற்றது.[51]

ஓசியானியா தொகு

ஆத்திரேலியா தொகு

ஆலிசு இசுபிரிங்சு பகுதியில் உள்ள பழங்குடி ஆத்திரேலியர்கள் காட்டுப் பூனைகளைத் தீயில் வறுத்தெடுத்தது உண்பர். அவர்கள் பூனை குண்டுக்கான சமையல் குறிப்புகளையும் உருவாக்கியுள்ளனர். "ஆத்திரேலியாவின் பூர்வீக விலங்கினங்களுக்குப் பூனைகள் கடுமையான அச்சுறுத்தல்" என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்ட இப்பகுதியில் வசிக்கும் வேறு சில மக்களும் இந்த வழக்கத்தை ஏற்றுக்கொண்டனர். காட்டுப் பூனைகளை உண்பதால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுகள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.[52]

அமெரிக்கா தொகு

அர்கெந்தீனா தொகு

1996ஆம் ஆண்டு வெவ்வேறு தொலைக்காட்சி வலைப்பின்னலின் இரண்டு தொலைக்காட்சி அறிக்கைகள், டெலிப் நோட்டிசியாசு மற்றும் டோடோ நோட்டிசியாசு, அர்கெந்தீனாவின் சான்டா பே, ரொசாரியோவில் உள்ள ஒரு குடிசை நகரத்தில் உள்ள சில குடிமக்கள், பொருளாதார நெருக்கடியின் போது, அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறி பூனை இறைச்சியினை உண்டுள்ளனர். "பூனையை உண்பது இழிவானதல்ல, குழந்தையின் வயிற்றை நிரம்ப வைக்கும்" என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த அறிக்கைகளின் செல்லுபடியாகும் தன்மைகுறித்துப் பத்திரிகையாளர்கள் கேப்ரியல் ருஸ்ஸோ மற்றும் எட்கார்டோ மில்லர் கேள்வி எழுப்பினர்.[53] இந்த கட்டுரையாளர்கள் எந்த ஆதாரத்தையும் அல்லது மோசடிக்குக் காரணமான ஒருவரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும், நகரின் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காகத் தொலைக்காட்சி கட்டமைப்புகள் ஒரு நாடகத்தை இயற்றியது என்ற வதந்திக்கு அப்போதைய ரொசாரியோ மாநகரத்தந்தை தான் ஆதாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[54] 2013ஆம் ஆண்டில், 1996ஆம் ஆண்டு முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஜோசபா வில்லல்பா, தொலைக்காட்சி அறிக்கைகளில், குழந்தைகளுக்குப் பூனைகளால் உணவளிக்கப்படுவதாக உள்ளூர் நகராட்சி அரசாங்கத்திற்குக் கண்டனம் தெரிவித்ததாகக் கூறினார். ஆனால் நகராட்சி நிர்வாகத் தலைவர்கள் இவரை அமைதிப்படுத்த முயன்றனர்.[55] அர்ஜெண்டினாவின் செய்தித்தாள் லா நாசியனின் ரிக்கார்டோ லுக் என்ற பத்திரிகையாளரின் சமகால அறிக்கை, நகரத்தில் வசிப்பவரின் மேற்கோளை மீண்டும் உருவாக்கியது, "குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்க வந்தால், அவர்களுக்கு எதையும் கொடுப்பதில் அர்த்தமில்லை, எனவே நாங்கள் வெளியே சென்று பூனைகளை வேட்டையாடி, அவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்கின்றோம்” என்பதாகும்.[56]

பெரு தொகு

பெருவில் பூனை இறைச்சி வழக்கமான உணவு உருப்படி அல்ல. ஆனால் நாட்டின் இரண்டு குறிப்பிட்ட தளங்களில் அதிகம் காணப்படும் பிரிகாசி மற்றும் இசுடவ்சு போன்ற உணவுகளில் பூனைக் கறி பயன்படுத்தப்படுகிறது. தெற்கு நகரமான சின்சா அல்டா (இகா பிராந்தியம், ஆப்ரோ-பெருவியன் பெரும்பாலும்) மற்றும் வட-மத்திய ஹுவாரியின் அந்தீசு மலைத்தொடர் நகரம் (அன்காஷ் மாகாணம்). பூனைக்கறி முதன்மையாக ஆப்ரோ- பெருவியர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு செப்டம்பரில் லா கியூப்ராடா நகரத்தில் தூய எபிஜீனியா திருவிழாவின் போது பூனை சமையல் நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன.[57]

அக்டோபர் 2013-ல், ஒரு நீதிபதி ஆண்டுதோறும் நடைபெறும் எல் பெஸ்டிவல் காஸ்ட்ரோனோமிகோ டெல் கேடோவை (பூனையின் காசுட்ரோனமிக் திருவிழா) தடைசெய்தார். இது ஒவ்வொரு செப்டம்பரில் லா கியூப்ரடாவில் நடத்தப்பட்டது, இது பூனைகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்ட குடியேற்றவாசிகளின் வருகையை நினைவுகூரும் வகையில் 100க்கும் மேற்பட்ட பூனைகள் நிகழ்விற்காகக் குறிப்பாக வளர்க்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன. இத்திருவிழாவிற்கா ஒரு வருட காலம் வரை பூனைகள் கூண்டுகளில் அடைத்து வைக்கப்படுகின்றன. இறைச்சியின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் நீதிபதி மேற்கோள் காட்டினார். இதற்கு, பூனை இறைச்சி முயல் அல்லது வாத்துகளை விட மிகவும் அதிக விலையிலானது என்று குடியிருப்பாளர்களிடமிருந்து விமர்சனம் எழுந்தது. மேலும் எந்த தீங்கும் விளைவுகளும் இல்லாமல் நீண்ட காலமாக உலகளவில் உட்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.[58]

அதே மாதம், நீதிபதி மரியா லூயோ, சான் லூயிஸ் என்ற சிறிய நகரத்தில் குரூனோ திருவிழாவைத் தடை செய்தார். பூனைகளை நீரில் மூழ்கடித்து, தோலை உரித்து, பட்டாசு வெடித்து வெடிக்கச் செய்யும் திருவிழா, காலனித்துவ காலத்தில் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிந்த ஆப்பிரிக்க அடிமைகளின் பூனை சாப்பிடும் பழக்கம் இருந்து வந்ததாக உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க-பெருவியன் நாட்டுப்புற துறவியான சாண்டா எபிஜெனியாவின் மதக் கொண்டாட்டங்கள். லுயோ தனது தீர்ப்பில், திருவிழா "விலங்குகளுக்கு எதிரான கொடூரமான செயல்களின் அடிப்படையில் வன்முறையைத் தூண்டுகிறது என்றும், இது கடுமையான சமூக பாதிப்பினையும் பொதுச் சுகாதார சேதத்தினை ஏற்படுத்துகிறது என்றும், இந்நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் சிறார்களுக்கு "உளவியல் ரீதியாகப் பாதிப்பு" ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.[59]

அமெரிக்கா தொகு

திசம்பர் 2018-ல், 2018ஆம் ஆண்டின் நாய் மற்றும் பூனை இறைச்சி வர்த்தகத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி, பூர்வீக அமெரிக்கர்களின் மதச் சடங்குகள் தவிர்த்து, பூனை இறைச்சியை உட்கொள்வது சட்டவிரோதமானது என்றும் $5,000 வரை அபராதம் விதிக்கும் வகையில் கூட்டாட்சி சட்டத்தில் கையொப்பமிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு முன்பு, 44 மாகாணங்களில் பூனை இறைச்சி சாப்பிடுவது சட்டப்பூர்வமாக இருந்தது.[60]

மதம் தொகு

இசுலாம் தொகு

இசுலாமிய உணவு சட்டங்கள், இந்த விடயத்தில் வேறுபடுகின்றன. மரூக் (விரும்பவில்லை) என்று கருதப்பட்டாலும், மாலிகி சட்டப் பள்ளி பொதுவாக இதை அனுமதிக்கிறது. இருப்பினும், மற்ற சட்டப் பள்ளிகள், பூனை இறைச்சியை உண்பதைத் தடை செய்கின்றன. ஏனெனில் இது ஒரு நில இரைகெளவல் ஆகும்.[61]

யூத மதம் தொகு

யூத கஷ்ருட் சட்டங்கள் பூனை இறைச்சியை உண்பதைத் தடுக்கின்றன. ஏனெனில் இது ஒரு வேட்டை ஆகும். மேலும் பாலூட்டிகள் வேட்டையாடும் விலங்குகள் அல்ல. யூதர் மரபுப்படி செய்யும் கசாப்பில் பாலூட்டி இரை மெல்லப்பட வேண்டும் மற்றும் பிளவுபட்ட குளம்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.[62][63]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. David Taylor; Daphne Negus; Dave King; Jane Burton (1989). The Ultimate Cat Book. Simon and Schuster. பக். 9–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-671-68649-9. https://books.google.com/books?id=rPdFgZzns30C&pg=PA9. பார்த்த நாள்: December 22, 2016. 
  2. Ngwa-Niba, Francis (March 17, 2003). "The cat eaters of Cameroon". BBC News. http://news.bbc.co.uk/1/hi/uk/2857891.stm. 
  3. "Saving animals from China's dog and cat meat trade" (in en-US). February 21, 2019. https://www.hsi.org/news-media/saving-dogs-from-chinas-dog-meat-trade/. 
  4. "'Don't eat cat and dog meat' - activists to Chinese diners". என்டிடிவி, Agence France-Presse. November 22, 2013. https://food.ndtv.com/food-drinks/dont-eat-cat-and-dog-meat-activists-to-chinese-diners-694336. 
  5. 5.0 5.1 Kerry Allen (October 30, 2015). "Claws out over China cat meat scandal". BBC News. https://www.bbc.com/news/world-asia-china-34682858. 
  6. "Trying to get cat off the menu in China". July 26, 2009. https://www.thestar.com/news/world/2009/07/26/trying_to_get_cat_off_the_menu_in_china.html. 
  7. "China Protesters: Stop 'Cooking Cats Alive' – Fury After Newspaper Says 10,000 Felines Are Eaten Daily in Single Province". NBC News. December 18, 2008. http://www.nbcnews.com/id/28292558. 
  8. 8.0 8.1 Some call it an indelicate trade, others, a delicacy பரணிடப்பட்டது மார்ச் 14, 2017 at the வந்தவழி இயந்திரம், Xinhuanet.com, January 13, 2012 (from China Daily)
  9. "China to jail people for up to 15 days who eat dog". Chinadaily. http://www.chinadaily.com.cn/china/2010-01/26/content_9379689.htm. 
  10. "Animal rights protest shuts restaurant". Reuters இம் மூலத்தில் இருந்து 2006-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060713014909/http://today.reuters.com/News/newsArticle.aspx?type=oddlyEnoughNews. 
  11. "Guangzhou bans eating snakes--ban helps cats". Animal People. March 4, 2008. http://www.animalpeoplenews.org/07/11/guangzhoubanseatingsnakes11_07.html. 
  12. "Survey of public attitudes to dog and cat eating in China". June 2015. p. 7. https://www.animalsasia.org/assets/pdf/2015_FOF_reports-report4_A4-EN-20150609_low.pdf. 
  13. Hanley (1997). Everyday Things in Premodern Japan. https://archive.org/details/everydaythingsin0000hanl. 
  14. 渡口初美 (1979). 沖縄の食養生料理. பக். 12. 
  15. "For Biryani In Chennai, Cats Are Being Boiled Alive, Sold For Rs 100 Per KG". HuffPost. 2016. https://www.huffingtonpost.in/2016/11/01/for-biryani-in-chennai-cats-are-being-boiled-alive_a_21595945/. 
  16. Iyer, Shravan Regret (April 26, 2016). "Fear of cats sold for meat looms large in Bengaluru" (in en). https://www.deccanchronicle.com/nation/current-affairs/260416/fear-of-cats-sold-for-meat-looms-large-in-bengaluru.html. 
  17. Farid M Ibrahim (September 11, 2018). "Dogs and cats blow-torched alive at Indonesia 'extreme' market despite promised ban" (in en-AU). https://www.abc.net.au/news/2018-09-11/dogs-and-cats-burnt-alive-at-extreme-market-in-indonesia/10222240. 
  18. "Dog and Cat Meat Consumption – In Defense of Animals – In Defense of Animals". http://www.idausa.org/campaigns/dogs-cats/dogs-and-cats-of-south-korea/. 
  19. "Ban South Korean dog and cat meat trade". http://our-compass.org/2012/04/09/ban-south-korean-dog-and-cat-meat-trade/. 
  20. Dugnoille, Julien (March 22, 2016). "The truth about cats and dogs (and how they are consumed in South Korea)" (in en). http://theconversation.com/the-truth-about-cats-and-dogs-and-how-they-are-consumed-in-south-korea-56306. 
  21. "Dog Meat" (in en). https://www.idausa.org/campaign/dog-meat/about/. 
  22. Friends of the Earth (May 9, 2019). "The Truth About Malaysia's Dog and Cat Meat Trade" (in en-US). https://animalpeopleforum.org/2019/05/09/truth-malaysias-dog-cat-meat-trade/. 
  23. "Social media users in Malaysia discover groups selling dog and cat meat" (in en-US). April 5, 2018. https://coconuts.co/kl/news/social-media-users-malaysia-discover-groups-selling-dog-cat-meat/. 
  24. "Cat's meat a purr-fect dish among Myanmar folk". October 2012. https://www.thestar.com.my/news/nation/2012/10/02/cats-meat-a-purrfect-dish-among-myanmar-folk. 
  25. Zeldin, Wendy (October 18, 2017). "Taiwan: Animal Protection Law Amended". https://www.loc.gov/law/foreign-news/article/taiwan-animal-protection-law-amended/. 
  26. Việt Báo Thịt mèo பரணிடப்பட்டது மே 26, 2019 at the வந்தவழி இயந்திரம்
  27. "Thành phố thịt mèo". http://tuoitre.vn/Chinh-tri-Xa-hoi/Phong-su-Ky-su/99714/Thanh-pho-thit-meo.html. 
  28. "9 Countries That Eat Cats and Dogs". http://www.thedailymeal.com/9-countries-eat-cats-and-dogs/11414. 
  29. "Cat Meat". http://vietnamcoracle.com/cat-meat/. 
  30. "The Truth About Cats & Dogs In Vietnam - The Dropout Diaries". http://www.thedropoutdiaries.com/2012/11/the-truth-about-cats-dogs-in-vietnam/. 
  31. "Where cat sits happily on the menu". http://www.stuff.co.nz/travel/international/5337677/Where-cat-sits-happily-on-the-menu. 
  32. The Christian Science Monitor. "Why do Vietnamese keep cats on a leash? (Hint: What's for dinner?)". http://www.csmonitor.com/World/Global-News/2010/0722/Why-do-Vietnamese-keep-cats-on-a-leash-Hint-What-s-for-dinner. 
  33. "Cats stolen, drowned, bludgeoned and boiled in secretive Vietnam trade" (in en). August 12, 2020. https://www.independent.co.uk/news/world/asia/cat-meat-vietnam-trade-stolen-drown-boil-four-paws-animal-cruelty-a9665836.html. 
  34. Jerry Hopkins (May 15, 2004). Extreme Cuisine: The Weird and Wonderful Foods That People Eat. Tuttle Publishing. பக். 25–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4629-0472-3. https://books.google.com/books?id=4ZPTAgAAQBAJ&pg=PA25. பார்த்த நாள்: December 22, 2016. 
  35. Jerry Hopkins (December 23, 2014). Strange Foods. Tuttle Publishing. பக். 8–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4629-1676-4. https://books.google.com/books?id=WXtzBgAAQBAJ&pg=PA8. பார்த்த நாள்: December 22, 2016. 
  36. "The Dog and Cat Meat Trade in Southeast Asia: A Threat to Animals and People". Four Paws. February 2020. p. 28. https://media.4-paws.org/8/0/0/3/80039a8956751c7b9bf934c35993858592182db3/FOURPAWS_Big_DCMT_Report_GB.pdf. 
  37. Jane Dalton (April 24, 2020). "Coronavirus causes surge in dog and cat meat sales in Vietnam and Cambodia, investigators say". The Independent. https://www.independent.co.uk/news/world/asia/coronavirus-dog-cat-meat-vietnam-cambodia-indonesia-animals-covid19-four-paws-a9464946.html. 
  38. "Federal law that enacts an animal protection law and changes the Federal Constitutional Law, the 1994 Trade Regulations and the 1986 Federal Ministries Act" (in de). https://www.ris.bka.gv.at/Dokumente/BgblAuth/BGBLA_2004_I_118/BGBLA_2004_I_118.html. 
  39. Walsh (June 5, 2008). "Journalistelever spiser kat". BT. http://www.bt.dk/nyheder/journalistelever-spiser-kat. 
  40. Andreassen (June 6, 2008). "Journaliststuderende spiser kat på nettet". Journalisten.dk. http://www.journalisten.dk/journaliststuderende-spiser-kat-pa-nettet. 
  41. Helmer (June 7, 2008). "Århus-studerende spiste kat - nu trues de på livet". Avisen.dk. http://www.avisen.dk/aarhus-studerende-spiste-kat-nu-trues-de-paa-livet_11831.aspx. 
  42. Owen, Richard (February 16, 2010). "Celebrity chef Beppe Bigazzi upsets viewers with his cat casserole". The Times (London). http://www.timesonline.co.uk/tol/life_and_style/food_and_drink/article7029058.ece. 
  43. 43.0 43.1 Ken Albala (2003). Food in Early Modern Europe. Greenwood Publishing Group. பக். 66–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-31962-4. https://books.google.com/books?id=4f-l3-KG0LcC&pg=PA66. பார்த்த நாள்: December 22, 2016. 
  44. The Dietetic & Hygienic Gazette. Gazette Publishing Company. 1905. பக். 99–100. https://books.google.com/books?id=n3w3AQAAMAAJ&pg=PA99. பார்த்த நாள்: December 22, 2016. 
  45. Dietetic and Hygienic Gazette. Gazette Publishing Company. 1905. பக். 99–100. https://books.google.com/books?id=YfEgAQAAMAAJ&pg=PA99. பார்த்த நாள்: December 22, 2016. 
  46. "Stop eating cats and dogs say animal rights campaigners in Switzerland" (in en-GB). November 26, 2014. http://www.bbc.co.uk/newsbeat/article/30205410/stop-eating-cats-and-dogs-say-animal-rights-campaigners-in-switzerland. 
  47. "Swiss 'restaurant' serving cat and dog meat sparks outrage". February 12, 2016. https://www.thelocal.ch/20160212/swiss-restaurant-serving-cat-food-sparks-outrage. 
  48. "Forget chocolate or cheese: Cat and dog meat is Swiss delicacy" (in en). https://www.scotsman.com/news/world/forget-chocolate-or-cheese-cat-and-dog-meat-swiss-delicacy-2469626. 
  49. "Cat and dog meat off the menu in Switzerland?". 26 November 2014. https://www.bbc.com/news/world-europe-30216659. 
  50. "The Cat Eaters". forteantimes.com. http://www.forteantimes.com/features/articles/260/the_cat_eaters.html. 
  51. "Cats - Friend Or Food". Messybeast.com. http://www.messybeast.com/eat-cats.htm. 
  52. Mercer. "Australians cook up wild cat stew". http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6974687.stm. 
  53. "Nunca se comieron gatos en Rosario" (in es). http://tiempo.infonews.com/nota/89339/nunca-se-comieron-los-gatos-en-rosario. 
  54. "El triste recuerdo de los "come gatos" de Rosario". Diario Uno. 2000. https://www.diariouno.com.ar/pais/el-triste-recuerdo-de-los-come-gatos-de-rosario-04092014_BJG1hlWMS7. 
  55. "Ex concejala ratificó la existencia de comegatos en Rosario". Diario Uno. June 26, 2013. https://www.rosario3.com/noticias/Ex-concejala-ratifico-la-existencia-de-comegatos-en-Rosario-20130626-0018.html. 
  56. Ricardo Luque (May 8, 1996). "En una villa comen animales domésticos para sobrevivir". La Nación. https://www.lanacion.com.ar/economia/en-una-villa-comen-animales-domesticos-para-sobrevivir-nid172344/. 
  57. Ryan, Missy (September 28, 2001). "'Cat-eaters' take note — feline feast at Peru festival". http://www.planetark.com/dailynewsstory.cfm/newsid/12575/newsDate/28-Sep-2001/story.htm. 
  58. Golgowksi, Nina (October 15, 2013). "Judge bans Peruvian town's annual cat-eating festival" பரணிடப்பட்டது செப்டம்பர் 25, 2020 at the வந்தவழி இயந்திரம். Daily News (New York).
  59. Collyns, Dan (October 18, 2013). "Claws out as Peruvian judge suspends annual cat race and feast" பரணிடப்பட்டது மே 1, 2016 at the வந்தவழி இயந்திரம். The Guardian.
  60. "President Trump signs the Farm Bill making dog and cat meat illegal in the United States". December 21, 2018. https://www.wrdw.com/content/news/President-Trump-Signs-the-Farm-Bill-Making-Dog-and-Cat-Meat-Illegal-in-the-United-States-503308841.html. 
  61. ஸஹீஹ் முஸ்லிம், 21:4752
  62. Rabbi Louis Jacobs (January 31, 2014). "Kosher Animals". http://www.myjewishlearning.com/article/kosher-animals/. 
  63. "Kashrut: Jewish Dietary Laws". http://www.jewfaq.org/kashrut.htm. 

வெளி இணைப்புகள் தொகு

வார்ப்புரு:Meatவார்ப்புரு:Domestic cat

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனை_இறைச்சி&oldid=3775191" இருந்து மீள்விக்கப்பட்டது