பெங்காலான் கெம்பாஸ்
பெங்காலான் கெம்பாஸ் நெகிரி செம்பிலான் மலாய் மொழி: Pongkalan Kompeh; (மலாய்; ஆங்கிலம்: Pengkalan Kempas; சீனம்: 彭卡兰甘巴斯; ஜாவி: ڤڠكالن كمڤاس) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், போர்டிக்சன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். போர்டிக்சன் நகரத்திலிருந்து 34 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த நகரத்தில், மலேசியாவின் புகழ்பெற்ற கலங்கரை விளக்கமான ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.[1]
பெங்காலான் கெம்பாஸ்
Pongkalan Kompeh | |
---|---|
Pengkalan Kempas | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°27′N 102°01′E / 2.450°N 102.017°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | போர்டிக்சன் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71150 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 697 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
பெங்காலான் கெம்பாஸ் வரலாற்று வளாகம் (Pengkalan Kempas Historical Complex) அல்லது கெம்பாஸ் கோட்டை இங்குதான் உள்ளது. இந்தக் கோட்டை கெராமட் ஊஜுங் பாசிர் என்றும் அழைக்கப்படுகிறது.[2]
வரலாறு
தொகுஇந்த இடம் மர்மமான சில கல்லறைகளைக் கொண்ட இடம் என அறியப்படுகிறது. அந்தக் கல்லறைகளில் வாள் மற்றும் கரண்டி வடிவங்களில் பெருங்கற்கால கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்தக் கல்லறைகள் கி.பி 2-ஆம் மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
இந்த பெருங்கற்கால கற்கள் அரபு மொழி மற்றும் சுமத்திரா எழுத்துக்களைச் சார்ந்த செதுக்கல்களைக் கொண்டுள்ளன.[3]
ஆதித்திய வர்மாவின் கல்வெட்டு
தொகு- கல் 1: அரபு எழுத்துக்களுடன் இந்து சமயம் சார்ந்த கல்வெட்டு.
- கல் 2: கி.பி 137-ஆம் ஆண்டு சுமத்திரா ஆதித்திய வர்மாவின் கல்வெட்டு.
பெங்காலான் கெம்பாஸ் கல்வெட்டுகள், பொதுவாக சுமத்திராவின் புவேட் புலோபியூட் (Puet-plohpeut) வளாகத்தில்; பண்டைய அரபு மொழி, சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்களை சார்ந்து இருக்கின்றன.
1457-1477-ஆம் ஆண்டுகளில் மலாக்கா சுல்தானகத்தின் சுல்தான் மன்சூர் ஷா ஆட்சியின் போது அவரை எதிர்த்த சேக் அகமது மஜ்னுன் என்ற மதத் தலைவரின் கல்லறையும் இங்கே உள்ளது. சேக் அகமதுவின் கல்லறை ”கெரமாட் சுங்கை ஊடாங்” என்று அழைக்கப்படுகிறது.
ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம்
தொகு1511-இல் மலாக்காவைக் கைப்பற்றிய பிறகு, போர்த்துகீசியர்கள் அதன் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்க விரும்பினார்கள். தஞ்சோங் துவான் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு கேப் ரச்சாடோ (Cape Rachado) என்று பெயரிடப்பட்டது. [4]
பின்னர், 1528 - 1529ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அதன் பின்னர் மூன்று நாட்டவர்கள்; போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் கவனத்திலும் கண்காணிப்பிலும் இந்தக் கலங்கரை விளக்கம் இருந்து வந்துள்ளது.
- 1529 - 1641-ஆம் ஆண்டுகளில், போர்த்துகீசியர்கள்
- 1641 - 1824-ஆம் ஆண்டுகளில் டச்சுக்காரர்கள்
- 1824 - 1957-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்கள்
இந்த இடம் தற்போது மலேசிய தேசிய பாரம்பரிய சட்டம் 2005-இன் கீழ் தேசிய பாரம்பரிய வளாகம் என மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tanjung Tuan is located within the state of Negeri Sembilan; yet, this cape belongs to the state of Melaka. The cape faces the Straits of Melaka and is only 16km from Port Dickson, Negeri Sembilan (Tanjung Tuan, 2013)". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
- ↑ "The small town of Pengkalan Kempas sits on the banks of the River Linggi on the southern edge of Negeri Sembilan state, close to the border with Melaka, around 35km or so from Port Dickson". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
- ↑ "The Pengkalan Kempas Historical Complex, also known as Fort Kempas, is located in a small village area about 35 km from Port Dickson. Contained within the complex are megalith stones and an ancient tomb belonging to a Syeikh Ahmad Majnun, a Islamic teacher who was slain in battle with the army of Sultan Mansor Shah of Malacca". www.portdickson.info. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
- ↑ A translation into English of the original Dutch account is found in P. Borschberg, ed., Journal, Memorial and Letters of Cornelis Matelieff de Jonge. Security, Diplomacy and Commerce in 17th-Century Southeast Asia Singapore: NUS Press, 2015. https://www.academia.edu/4302783.
- ↑ "The Megalithic site at Pengkalan Kempas has been registered as 'National Heritage' under the National Heritage Act 2005 by the Department of National Heritage, Ministry of Tourism and Culture Malaysia". பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.