ஃபெடோரா

(பெடோரா லினக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெடோரா என முன்னர் அறியப்பட்ட பெடோரா RPM சார்ந்த ஒரு லினக்ஸ் வழங்கலாகும். இது ரெட் ஹட்டினால் ஆதரவளித்து சமூகத்தினால் ஆதரிவளிக்கப்பட்டு வந்ததே பெடோரா கோர் திட்டமாகும். ரெட் ஹட்டினால் நேரடியாக ஆதரவழிக்க முன்னரே பெடோரோ திட்டமானது தன்னார்வலர்களால் ரெட் ஹட்டிற்கு மேலதிக மென்பொருட்களை உருவாக்குவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். பெடோராவின் இலட்சியம் ஆனது துரிதகதியில் இலவச மற்றும் திறந்த நிரல் மென்பொருட்களை விருத்தி செய்வதாகும்.[1][2][3]

பெடோரா

குனோம் பணிச்சூழலில் இயங்கும் பெடோரா 19
விருத்தியாளர் பெடோராத் திட்டம்
இயங்குதளக்
குடும்பம்
லினக்ஸ்
மூலநிரல் வடிவம் திறந்த நிரல்
பிந்தைய நிலையான பதிப்பு 23 / 03 நவம்பர், 2015
மேம்பாட்டு முறை DNF (PackageKit)
தொகுப்பு மேலாளர் RPM Package Manager
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
x86, x86-64, PowerPC
கருனி வகை Monolithic kernel, Linux
இயல்பிருப்பு இடைமுகம் குனோம்
அனுமதி பல்வேறுபட்ட (Various)
தற்போதைய நிலை தற்போதைய (Current)
வலைத்தளம் fedoraproject.org

பெடோரா முழுமையான பொதுவான தேவைகளைப் பூர்திசெய்யக் கூடிய வகையில் முற்றுமுழுதாக இலவசமானதும் திறந்த மூலநிரலிலும் ஆக்கப்பட்டதாகும். பெடோராவானது முற்றுமுழுதாக வரைகலை இடைமுகமூடான நிறுவல்களும் சிஸ்டங்களை. இது குனூ முறையில் கிரப் முறையிலான பூட் லோடர் (Boot Loader) என்கின்ற கணினியை ஆரம்பிக்கின்ற மென்பொருளை நிறுவி மாற்று இயங்குதளங்களை நிறுவிப் பாவிக்கக்கூடியதாக் இருந்தது. மென்பொருட்களை யும் என்கின்ற யுட்டிலிட்டியூடாக பதிவிறக்கம் செய்து நிறுவ உதவுகின்றது. புதிய பெடோரா பதிப்புக்கள் 6 தொடக்கம் 8 மாதம் வரையிலான காலப்பகுதியில் புதிய பதிப்புக்களை வெளியிடப்பட்டது. பெடோரா குனோம் மற்றும் கேடியி இடைமுகங்களை வழங்கி வருகின்றது. இது 5 இறுவட்டு மூலமாகவோ(முதல் இரண்டு இறுவட்டுக்களே தேவையானவை) டிவிடியூடாக விநியோகிக்கப் படுகின்றது. வலையமைப்பூடான நிறுவல்களுக்கு 6 மெகாபைட் அளவிலான ஓர் கோப்புத் தேவைப்படுகின்றது. நிறுவல்களான Http, ftp மற்றும் NFS மற்றும் மாய வலையமைப்பூடான நிறுவல்களை ஆதரிக்கின்றது.

பெடோரா கோர் திட்டத்திற்கான மேலதிக பெடோரா எக்ஸ்டாஸ் திட்டமானது மேலதிக மென்பொருட்களை பெடோரா திட்டத்திற்கு வழங்குவதற்கானதாகும்.

பெடோராவானது ரெட்ஹட்டின் வழிவந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது பாவனையாளரின் ரெட்ஹட்டை மாற்றீடு செய்து வீட்டுப் பாவனைக்காக உருவாக்கபட்டதாகும். இதற்கான ஆதரவானது பெடோரா சமூகக் குழுக்களிலானது எனினும் நேரடியாக ரெட்ஹட் ஆதரவினை வழங்காதெனினும் இதன் பணியாளர்களும் இத்திட்டத்திற் பணியாற்றுகின்றனர்.

பெடோரா கோரானது பெடோரா லினக்ஸ் மற்றும் பெடோரா கோர் லினக்ஸ் என்றவாறு அழைக்கபட்டாலும் அவை உத்தியோகபூர்வப் பெயர்கள் அல்ல.

வசதிகள்

தொகு
  • பெடோரா குனோம் டெக்ஸ்டாப் சூழலை அளிக்கின்றது.
  • பெடோரா பல வரைகலை இடைமுகங்கள் PyGTK இல் எழுதப்பட்டுள்ளன.
  • பெடோரா மற்றும் பெடோரா மேலதிகம் என்று பொருள்படும் பெடோரா எக்ஸ்ராஸ் 7000 இற்குமேற்பட்ட பொதிகளைக் (Packages) கொண்டுள்ளன.

பதிப்புக்கள்

தொகு
நிறம் (வர்ணம்) அர்த்தம்
சிவப்பு இயங்குதள ஆதரவு இல்லாத பழைய பதிப்பு.
மஞ்சள் இயங்குதள ஆதரவில் இருக்கும் பழைய பதிப்பு.
பச்சை தற்போதைய பதிப்பு
நீலம் வரவிருக்கும் பதிப்பு
திட்டப் பெயர் பதிப்பு குழூகுக் குறி (Code name) வெளியீட்டுத் தேதி (திகதி)
பெடோரா கோர் 1 யரோ 05 நவம்பர் 2003
2 டெட்நாங் (Tettnang) 18 மே 2004
3 {{Webarchive|url=https://web.archive.org/web/20080513142326/http://download.fedora.redhat.com/pub/fedora/linux/core/3/ ஹைடெல்பேர்க் (Heidelberg) 8 நவம்பர் 2004
4 {{Webarchive|url=https://web.archive.org/web/20080522053531/http://download.fedora.redhat.com/pub/fedora/linux/core/4/ ஸ்டென்ஸ் (Stentz) 13 ஜூன் 2005
5 புறோடியகஸ் (Bordeaux) 20 மார்ச் 2006
6 ஸொட் (Zod) 24 அக்டோபர் 2006
பெடோரா 7 மூன்ஷைன் (Moonshine) 31 மே 2007
8 வியர்வூல்ப் (Werewolf) 08 நவம்பர்2007
9 சல்பர் (Sulphur) 13 மே 2008
10 கேம்பிறிட்ஜ் (Cambridge) 25 நவம்பர்2008
11 லியோனிடாஸ்(Leonidas) 6 ஜூன்2009
12 கான்ஸ்டன்டய்ன்(Constantine) 17 நவம்பர்2009
13 கோடார்ட் (Goddard) 25 மே 2010
14 லாஃப்லின் (Laughlin) 2 நவம்பர் 2010

படக் காட்சியகம்

தொகு

சோதனை வெளியீடுகள்

தொகு

பெடோரா கோர் விருத்திச் சக்கரமானது முன்னேறுகையில் பல சோதனை வெளியீடுகள் பயனர்களுக்கு விநியோகிக்கப்படும். இது வரவிருக்கும் மாற்றங்கள், மற்றும் வசதிகளைச் சோதித்தல் மென்பொருள் பற்றிய பின்னூட்டங்கள் போன்றவற்றைப் பெற இவை உதவும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nottingham, Bill (6 November 2003). "Announcing Fedora Core 1". Fedora Project announce (Mailing list). Archived from the original on 19 August 2014. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.
  2. "Fedora Linux 39 is officially here!". Fedora Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 7 November 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  3. "Announcing the release of Fedora 28". Fedora Magazine. 1 May 2018. Archived from the original on 25 July 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெடோரா&oldid=4149512" இலிருந்து மீள்விக்கப்பட்டது