நவம்பர் 5
நாள்
(05 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 5 (November 5) கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 310 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
- 1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
- 1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.
- 1605 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான்.
- 1688 – இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான்.
- 1757 – ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
- 1795 – இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.[1]
- 1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.[2]
- 1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
- 1862 – அமெரிக்கா, மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 38 பேர் தூக்கிலிடப்பட்டனர்..
- 1872 – அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய சூசன் பிரவுன் அந்தோனி முதல் தடவையாக வாக்களித்தார். இதனால் இவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
- 1895 – தானுந்துக்கான முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.
- 1898 – பிலிப்பீன்சு, நெக்ரோசு தீவில் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, நெக்ரோசு குடியரசை நிறுவினர்.
- 1911 – செப்டம்பர் 29 இல் உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போரை அறிவித்த இத்தாலி திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1912 – ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1914 – முதலாம் உலகப் போர்: பிரான்சும் பிரித்தானியப் பேரரசும் உதுமானியப் பேரரசு ம் ஈது போர் தொடுத்தன.
- 1916 – போலந்து இராச்சியம் செருமனி, மற்றும் ஆத்திரியா-அங்கேரி பேரரசர்களினால் அறிவிக்கப்பட்டது.
- 1916 – வாசிங்டன், எவெரெட் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1917 – விளாதிமிர் லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
- 1917 – அக்டோபர் புரட்சி: எசுத்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார். (பழைய நாட்காட்டியில் அக்டோபர் 27).
- 1925 – சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய சைராணுவ சரக்குக் கப்பல் யார்விசு பே செருமனியின் போர்க்கப்பலால் தாக்கப்பட்டு மூழகடிக்கப்பட்டது.
- 1940 – பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: வத்திக்கான் மீது தாக்குதல் தொடங்கியது.
- 1945 – சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை தில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
- 1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- 1970 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கப் படையினரின் ஒரு வார உயிரிழப்புகள் (24) கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என வியட்நாம் இராணுவ உதவிக் கட்டளையகம் அறிவித்தது.
- 1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
- 1995 – கனடா பிரதமர் சான் சிரேட்டியன் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
- 1996 – பாக்கித்தான் சனாதிபதி பாரூக் லெகாரி பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
- 1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
- 2006 – 148 சியா முசுலிம்களை 1982-இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
- 2007 – ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.
- 2009 – டெக்சசு மாநிலத்தில் அமெரிக்க இராணுவ மேஜர் நைடல் மாலிக் அசனின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 காயமடைந்தனர்.
- 2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.
- 2017 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் கிறித்தவக் கோவில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்க்சி சூட்டில் 26 கொல்லப்பட்டு, மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1790 – இரேனியசு ஐயர், செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (இ. 1838)
- 1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய அரசியல்வாதி (இ. 1925)
- 1885 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1981)
- 1888 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1945)
- 1892 – ஜே. பி. எஸ். ஹால்டேன், ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (இ. 1964)
- 1906 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (இ. 2004)
- 1913 – விவியன் லீ, இந்திய-பிரித்தானிய நடிகை (இ. 1967)
- 1916 – கனக செந்திநாதன், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 1977)
- 1918 – க. வேந்தனார், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1966)
- 1927 – கிர்ரோடுகு அகேய்கே, சப்பானிய புள்ளிவிபரவியலாளர் (இ. 2009)
- 1930 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 2011)
- 1930 – சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை அறிவிப்பாளர் (இ. 2001)
- 1930 – பூ. பழனியப்பன், இந்திய மகப்பேறு மருத்துவர்
- 1948 – பாப் பார், அமெரிக்க அரசியல்வாதி
- 1952 – வந்தனா சிவா, இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர்
- 1955 – கரண் தபார், இந்திய ஊடகவியலாளர்
- 1959 – பிரையன் ஆடம்ஸ், கனடியப் பாடகர், நடிகர்
- 1965 – பாம்கே ஜான்சென், டச்சு நடிகை
- 1968 – வர்ண ராமேஸ்வரன், ஈழத்துக் கருநாடக இசைப் பாடகர், மிருதங்கக் கலைஞர் (இ. 2021)
- 1987 – கெவின் கோனாஸ், கனடிய பாடகர் மற்றும் நடிகர். (ஜோனாஸ் சகோதரர்கள்)
- 1988 – விராட் கோலி, இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1526 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1465)
- 1860 – சைமன் காசிச்செட்டி, இலங்கை தமிழறிஞர், அகராதியியலாளர், அரசியல்வாதி (பி. 1807)
- 1879 – ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1831)
- 1944 – அலெக்சிஸ் காரெல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (பி. 1873)
- 1992 – அர்பத் எலோ, அமெரிக்க இயற்பியலாளர், சதுரங்க ஆட்ட வீரர் (பி. 1903)
- 1992 – ஜான் ஊர்த், இடச்சு வானியலாளர் (பி. 1900)
- 2002 – கு. ப. சேது அம்மாள், தமிழக எழுத்தாளர் (பி. 1908)
- 2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர் (பி. 1942)
- 2011 – பூபேன் அசாரிகா, இந்தியப் பாடகர், இயக்குநர் (பி. 1926)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 11
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 5 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்