சூன் 13
நாள்
(13 ஜூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 13 (June 13) கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார்.
- 1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது.
- 1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
- 1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார்.
- 1625 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார்.
- 1774 – அடிமைகள் இறக்குமதியை றோட் தீவு தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும்.
- 1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
- 1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிக்கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
- 1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.
- 1917 – முதலாம் உலகப் போர்: இலண்டன் நகர் மீது செருமனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
- 1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
- 1931 – இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
- 1934 – இட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை: செருமானியத் தாங்கிகள் பிரித்தானியப் படைகளைத் தாக்கி 14 பிரித்தானியத் தாங்கிகளை அழித்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி வி-1 பறக்கும் வெடிகுண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.
- 1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
- 1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
- 1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1977 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளி யேம்சு ரே மீண்டும் கைது செய்யப்பட்டான்.
- 1981 – லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளை சுட்டுத் தீர்த்தான்.
- 1982 – சவூதி அரேபியாவின் மன்னராக பாகுத் முடிசூடினார்.
- 1983 – பயனியர் 10 நெப்டியூனின் சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது.
- 2000 – தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லை வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
- 2002 – ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியது.
- 2006 – நியூ ஹரைசன்ஸ் விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் "132524 ஏபிஎல்" என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
- 2007 – திருகோணமலையில் "மேர்சி கோப்ஸ்" என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.
- 2010 – 25143 இத்தொகாவா என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் அயபூசா என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.
- 2012 – ஈராக்கின் பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
தொகு- 40 – அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமை இராணுவத் தளபதி (இ. 93)
- 1773 – தாமசு யங், ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. 1829)
- 1831 – ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1879)
- 1865 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் (இ. 1939)
- 1870 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய உயிரியலாளர் (இ. 1961)
- 1903 – சஞ்சயன், மலையாள எழுத்தாளர் (இ. 1943)
- 1905 – ஜேம்ஸ் இரத்தினம், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், நூலாசிரியர் (இ. 1988)
- 1909 – ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, கேரளத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1998)
- 1911 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
- 1917 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பராகுவை புதின எழுத்தாளர் (இ. 2005)
- 1928 – ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. 2015)
- 1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)
- 1935 – சமாக் சுந்தரவேஜ், தாய்லாந்தின் 25வது பிரதமர் (இ. 2009)
- 1944 – பான் கி மூன், தென்கொரிய அரசியல்வாதி, ஐநாவின் 8வது பொதுச் செயலர்
- 1946 – பவுல் மோட்ரிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியலாளர்
- 1946 – செர் பகதூர் தேவ்பா, நேபாளத்தின் 32-வது பிரதமர்
- 1959 – கிளாசு யோகன்னிசு, உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர்
- 1966 – கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலாளர்
- 1981 – கிறிஸ் எவன்ஸ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
தொகு- 1231 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195)
- 1861 – ஹென்றி கிரே, ஆங்கிலேய உடல்கூறியலாளர், மருத்துவர் (பி. 1827)
- 1931 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர் (பி. 1851)
- 1936 – டி. என். சிவஞானம் பிள்ளை, தமிழக அரசியல்வாதி, அரச நிருவாகி (பி. 1861)
- 1960 – கார்ல் கீனான் சீபெர்ட், அமெரிக்க வானியலாளர் (பி. 1911)
- 1969 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)
- 1969 – பிரகலாத் கேசவ் அத்ரே, இந்திய ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1898)
- 1973 – ராம்நாத் சோப்ரா, இந்திய மருந்தியலாளர் (பி. 1882)
- 1987 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1906)
- 1988 – க. வெள்ளைவாரணனார், தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (பி. 1917)
- 1998 – லூசியோ கோஸ்தா, பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1902)
- 2007 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியலாளர் (பி. 1937)
- 2012 – மெஹ்தி அசன், பாக்கித்தானிய கசல் பாடகர் (பி. 1927)
சிறப்பு நாள்
தொகு- கண்டுபிடிப்பாளர் நாள் (அங்கேரி)
- மாவீரர் நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)