அக்டோபர் 24
நாள்
(24 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 24 (October 24) கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.
- 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
- 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
- 1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
- 1851 – யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
- 1857 – உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணி செபீல்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1861 – ஐக்கிய அமெரிக்காவில் கண்டங்களுக்கிடையேயான முதலாவது தந்தித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
- 1871 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 20 வரையான சீனக் குடியேறிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
- 1902 – குவாத்தமாலாவின் சாண்டா மரியா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. இது 20-ஆம் நூற்றாண்டின் மூன்றாவது மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும்.
- 1911 – வட கரொலைனாவில் ரைட் சகோதரர்கள் தமது வானூர்தியில் வானில் 9 நிமிடங்கள் 45 செக்கன்கள் பறந்தார்கள்.
- 1912 – முதலாவது பால்கான் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற உதுமானியப் பேரரசுக்கு எதிரான போரில் செர்பியா வெற்றி பெற்றது.
- 1917 – முதலாம் உலகப் போர்: கப்பரெட்டோ சமரில் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளிடம் இத்தாலி பெரும் தோல்வியடைந்தது.
- 1917 – போல்செவிக் செம்படையினர் உருசியாவில் அரசக் கட்டடங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தனர். அக்டோபர் புரட்சியின் முதல் நிகழ்வுகள் இவையாகும்.
- 1929 – கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.
- 1930 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் வாசிங்டன் லூயிசு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1943 – நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: முசாசி என்ற சப்பானியப் போர்க்கப்பலை அமெரிக்க விமானங்கள் தாக்கி மூழ்கடித்தன.
- 1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
- 1946 – வி-2 இல. 13 என்ற ஏவூர்தியில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் முதன் முதலாக விண்ணில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.
- 1949 – ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1954 – டுவைட் டி. ஐசனாவர் தெற்கு வியட்நாமிற்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவித்தார்.
- 1960 – சோவியத் ஒன்றியத்தின் பைக்கனூர் விண்தளத்தில் ஆர்-16 ஏவுகணை வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1964 – வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
- 1980 – போலந்து அரசு சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது.
- 1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் காமினி திசாநாயக்கா உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 – டீப் ஸ்பேஸ் 1 என்ற வால்வெள்ளி/சிறுகோள் திட்டம் ஆரம்பமானது.
- 2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசி வணிக-நோக்குப் பயணத்தை மேற்கொண்டது.
- 2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- 2008 – இரத்த வெள்ளி அன்று உலகின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டன.
பிறப்புகள்
தொகு- 1632 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723)
- 1775 – பகதூர் சா சஃபார், இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (இ. 1862)
- 1804 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (இ. 1891)
- 1827 – ரிப்பன் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இந்திய வைசிராய் (இ. 1909)
- 1890 – சிசிர் குமார் மித்ரா, இந்திய இயற்பியலாளர் (இ. 1963)
- 1914 – இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இந்தியத் தேசிய இராணுவப் போராளி (இ. 2012)
- 1915 – பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1998)
- 1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)
- 1921 – ஏ. கே. வேலன், தமிழக எழுத்தாளர்
- 1924 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1981)
- 1932 – இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர், கல்வியாளர் (இ. 2012)
- 1940 – கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர்
- 1954 – மால்கம் டேர்ன்புல், ஆத்திரேலியாவின் 29வது பிரதமர்
- 1957 – இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்
- 1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை
- 1980 – லைலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1983 – தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
- 1992 – துளசி தருமலிங்கம், இலங்கை-செருமனிய குத்துச்சண்டை வீரர்
இறப்புகள்
தொகு- 1601 – டைக்கோ பிராகி, டென்மார்க் வானியலாளர் (பி. 1546)
- 1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
- 1869 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1786)
- 1870 – அந்தோனி மரிய கிளாரட், எசுப்பானிய, கத்தோலிக்க மறைபோதகர் (பி. 1807)
- 1953 – மு. கதிரேசச் செட்டியார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1881)
- 1956 – எச். என். ரிட்லி, பிரித்தானியத் தாவரவியலாளர், மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர் (பி. 1885)
- 1981 – எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (பி. 1897)
- 1991 – இசுமத் சுகதாய், இந்திய எழுத்தாளர் (பி. 1915)
- 1994 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
- 2005 – றோசா பாக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1913)
- 2006 – தரம்பால், இந்திய காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் (பி. 1922)
- 2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 1927)
- 2013 – மன்னா தே, இந்தியப் பாடகர் (பி. 1919)
- 2014 – தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்
- 2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1928)
சிறப்பு நாள்
தொகு- அந்தோனி மரிய கிளாரட் திருவிழா
- உலக இளம்பிள்ளை வாத நாள்
- விடுதலை நாள் (சாம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1964)
- ஐக்கிய நாடுகள் நாள்
வெளி இணைப்புகள்
தொகு- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 24 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்