பெத்தானியாபுரம்

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பெத்தானியாபுரம் (ஆங்கில மொழி: Bethaniapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5] 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை, பெத்தானியாபுரம் பகுதியின் மக்கள் 'மாமதுரை மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா 2023' என்ற பெயரில் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடினார்கள்.[6]

பெத்தானியாபுரம்
Bethaniapuram

பெத்தானியாபுரம்
புறநகர்ப் பகுதி
பெத்தானியாபுரம் Bethaniapuram is located in தமிழ் நாடு
பெத்தானியாபுரம் Bethaniapuram
பெத்தானியாபுரம்
Bethaniapuram
பெத்தானியாபுரம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′10″N 78°05′39″E / 9.936100°N 78.094300°E / 9.936100; 78.094300
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்164 m (538 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்கள்625016
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி, காளவாசல் மற்றும் பழங்காநத்தம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர். எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப.
சட்டமன்ற உறுப்பினர்செல்லூர் கே. ராஜூ
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 164 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெத்தானியாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°56′10″N 78°05′39″E / 9.936100°N 78.094300°E / 9.936100; 78.094300 ஆகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி, காளவாசல் மற்றும் பழங்காநத்தம் ஆகியவை பெத்தானியாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

பெத்தானியாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் அலுமினியப் பாத்திரங்கள் தயாரிக்கும் ஆலைகளின் சுகாதார அபாயக் கழிவுகள் வைகை ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு, பெத்தானியாபுரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மாசுபடுகின்றன.[7]

தமிழக அரசின் முயற்சித் திட்டமான திடக்கழிவு மேலாண்மைக்காக, பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களைப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பெத்தானியாபுரமும் ஒன்று.[8]

பெத்தானியாபுரத்தில் இயங்கும் மாநகராட்சிப் பூங்காவான அம்மா குழந்தைகள் பூங்கா, ஊஞ்சல்கள், சறுக்குகள் போன்ற விளையாட்டு உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ளது.[9]

பெத்தானியாபுரத்தில் இயங்கி வரும் தனியார் மதுபானக் கூடத்தை, அந்த இடத்தில் இருந்து அகற்றக் கோரி ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.[10]

பெத்தானியாபுரம் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[11] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. (in en) Directory of Information: Madurai District. Mother Teresa Women's University, Faculty of Education. 1987. https://books.google.co.in/books?id=F_4pAAAAYAAJ&q=Bethaniapuram&dq=Bethaniapuram&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiJzfDHgor9AhVaSGwGHWi9CpoQ6AF6BAgCEAM#Bethaniapuram. 
  2. (in en) Directory of 13th Lok Sabha and Rajya Sabha Members: Union Council of Ministers, 1999-2000. Delhi Information Bureau. 2000. https://books.google.co.in/books?id=K72KAAAAMAAJ&q=Bethaniapuram&dq=Bethaniapuram&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiJzfDHgor9AhVaSGwGHWi9CpoQ6AF6BAgEEAM#Bethaniapuram. 
  3. India Department of Women and Child Development (2002) (in en). Annual Report. Department of Women and Child Development, Ministry of Human Resource Development, Government of India. https://books.google.co.in/books?id=dHnaAAAAMAAJ&q=Bethaniapuram&dq=Bethaniapuram&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiJzfDHgor9AhVaSGwGHWi9CpoQ6AF6BAgKEAM#Bethaniapuram. 
  4. Lalitha, N. (2002) (in en). Self Help Groups in Rural Development. Dominant Publishers and Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7888-008-2. https://books.google.co.in/books?id=4cuZAAAAIAAJ&q=Bethaniapuram&dq=Bethaniapuram&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiJzfDHgor9AhVaSGwGHWi9CpoQ6AF6BAgGEAM#Bethaniapuram. 
  5. Arulraja, M. R. (2005) (in en). Achieving Rural Development Using Neuro Linguistic Programming: NLP Guide for Planners and People-helpers. M.R. Arulraja. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-902583-0-2. https://books.google.co.in/books?id=teXZAAAAMAAJ&q=Bethaniapuram&dq=Bethaniapuram&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwiJzfDHgor9AhVaSGwGHWi9CpoQ6AF6BAgHEAM#Bethaniapuram. 
  6. (in ta) மதுரை பொத்தானியபுரம் திடலில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.. திறமைகளை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்திய சிறுவர்கள்!. 2023-01-23. https://tamil.news18.com/madurai/samatthu-pongal-celebration-in-bethaniapuram-madurai-877223.html. 
  7. Staff Reporter (2020-03-17). "Aluminium ash mound along the Vaigai causing pollution". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  8. Elets News Network (2019-06-18). "Madurai Corporation deploys 509 battery-operated vehicles for solid waste management" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  9. "Madurai mayor inspects Amma children's park". பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  10. Special Correspondent (2021-11-08). "A private bar at Bethaniyapuram raises the hackles of DMK and its allies". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  11. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தானியாபுரம்&oldid=3654001" இலிருந்து மீள்விக்கப்பட்டது