ஜப்பான், சப்பான், நிப்பான்

தொகு

ஜப்பான் என்னும் நாடு அவர்கள் மொழியில் நிப்பான் அல்லது நிஃகோன் என்று ஒலிப்பதால் நிப்பான் என்று எல்லா இடங்களிலும் குறிக்கலாம். நிப்பானில் வசிக்கும் டெரன்சு இது பற்றி கருத்து தெரிவிக்கலாம். ஆங்கில விக்கியில் Japan "日本 Nihon or Nippon?, officially 日本国 Nippon-koku?·i or Nihon-koku" என்று கொடுத்துள்ளார்கள். 'டாய்ட்ச்சிலும், எசுப்பானிய மொழியிலும் யாப்பான் அல்லது ஹாப்பொன் என்பது போல ஒலிப்பார்கள் சப்பான் என்ரு தமிழில் எழுதுவதைவிட நிப்பான் என்று எழுதுவது நல்லதாகப் படுகின்றது. --செல்வா 23:50, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply

ஆங்கில விக்கியில் இருந்து

தொகு

The English word for Japan came to the West from early trade routes. The early Mandarin Chinese or possibly Wu Chinese word for Japan was recorded by Marco Polo as Cipangu. The modern Shanghainese (a Wu Chinese dialect 呉語) pronunciation of characters 日本 (Japan) is still Zeppen [zəʔpən] (in Wu language, 日 has two pronunciations informal(白讀):niʔ or formal(文讀):zəʔ, in some regions in South Wu, it is pronounced as niʔpən, similar to that of Japanese). --செல்வா 23:54, 1 செப்டெம்பர் 2008 (UTC)Reply

கிட்டிய ஒலிப்பு நிஒன் என்பதாக இருக்க வேண்டும். இப்படி ஒகரம் சொல்லின் இடையில் வரக்கூடாது என நினைக்கிறேன். நிப்பான் என்பது பிழையான பலுக்கல் நிப்பொன் என்பதாக இருக்க வேண்டும். --Terrance \பேச்சு 01:58, 2 செப்டெம்பர் 2008 (UTC)Reply

ஜ வுக்கு இணையாக ய எப்படி வரும்

தொகு

ஃப் என்பதற்கு நெருங்கிய ஒலிப்பு வ் என்பதை அறிந்து கொண்டேன். ஆனால், ஜ என்பதற்கு ய எப்படி நெருங்கிய ஒலியாக வரும்? புரியவில்லை. விளக்கிக் கூறுமாறு வேண்டுகிறேன். நன்றி! -49.137.176.3 12:32, 25 ஆகத்து 2012 (UTC)Reply

ஜகரமும் ப (B) ஒலிப்பும்

தொகு

தமிழிற் கலந்துவிட்ட ஏராளமான பிறமொழிச் சொற்கள் பண்டைக் காலந்தொட்டே நல்ல முறையிற் தமிழ்ப்படுத்தப்பட்டு வந்திருப்பது மரபு. இவற்றில் ஜகரமும் ப (b) ஒலிப்பும் விக்கிப்பீடியாவிற் பயன்படுத்தப்படும் முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன. இதற்கு முன்னொரு தடவை நடந்த உரையாடலில் ஜகரம் என்பது சகரமாக மாத்திரமே தமிழ்ப்படுத்தப்பட வேண்டுமென ஒரு சாரார் கருத்துத் தெரிவித்தனர். எனினும் அதனை (யன்னல், யப்பான், யனவரி என்பன போன்று) யகரமாகத் தமிழ்ப்படுத்தும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வருவதே. இதே வழக்கத்தைச் சிலப்பதிகாரமும் மேற்கொண்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தின் வரந்தரு காதையில் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் என்று இலங்கை மன்னனான கஜபாகு (Gajabahu) என்பவனது பெயர் கயவாகு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஜகரம் யகரமாகத் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே, மகர மெய்யை அடுத்து வரும் பகரம் தவிர்த்த ஏனைய இடங்களில் பகரத்துக்கு B ஒலிப்பு இல்லை. இதனாற்றான் கஜபாகு (Gajabahu) என்பதிலுள்ள பகரம் தமிழில் வகரமாகத் திரிபடைந்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றியே அரபுச் சொல்லான பாபா (baba - بابا) என்பது வாப்பா என்றும், ஆங்கிலத்திலுள்ள பாட்டா (Bata) என்ற சொல் மட்டக்களப்புப் பகுதியில் வாட்டா என்றும் பங்குளா மொழியை வங்காளி என்றும் பங்களாதேஷ் என்பதை வங்காளதேசம் என்றும் குறிக்கப்படும் நடைமுறை ஏற்பட்டுள்ளது. மொழிக்கு இடையில் வரும் பகரம் B ஒலிப்புக் கொண்டதாயின், ஒன்றில் வகரமாகத் திரிய வேண்டும் அல்லது ஆங்கிலத்தைப் போன்று F ஒலிப்பிற் குறிக்கப்படும் நடைமுறை இலங்கையில் உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக ஒரு விதியை உருவாக்க முன்னர் ஏற்கனவே உள்ளவற்றை ஏற்றுக்கொள்ளும் உளப்பக்குவம் வர வேண்டும். பெருங்காப்பியங்களுள் ஒன்றெனத் தமிழுலகமே ஏற்றுக்கொள்ளும் சிலப்பதிகாரம் கொண்டுள்ள நடைமுறையை விக்கிப்பீடியாவில் எதிர்க்கும் உளப்பாங்கு உள்ளதைக் கவலையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜகரம் சகரமாக மட்டுமல்ல, யகரமாகவும் தமிழ்ப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஜப்பான் என்பதைக் குறிப்பதற்கு ஏற்கனவே யப்பான் என்ற சொல் வழக்கத்தில் இருக்கும்போது புதிதாக ஒரு சப்பானை ஏன் உருவாக்க வேண்டும்? யனவரி என்ற ஒரு சொல் தமிழுலகில் வழக்கத்திலிருக்கும்போது ஏன் ஒரு சனவரியை உருவாக்க வேண்டும்? B ஒலிப்பை வகரமாகக் குறிக்கும் வழக்கம் இருக்கும்போது அதைத் தவிர்த்துவிட்டு F ஒலிப்பை ஏன் வகரமாகக் குறிக்க முனைய வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 06:48, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பாஹிம், ஜகரத்துக்குப் பதிலீடாக யகரத்தை இட்டு வழங்குவது பற்றிய உங்கள் எடுத்துக் காட்டுகள் சரியே. ஆனால், எல்லா இடங்களிலும் இவ்வாறுதான் வரும் என்றில்லை. "ஜகம்" என்பதை "சகம்" என்றும், "பூஜை" என்பதை "பூசை" என்றும், "ஜோடி" என்பதை "சோடி" என்றும் எழுதுவது வழக்கம், "யகம்", "பூயை", "யோடி" என்று எழுதுவதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆங்கில எழுத்தை ஒரே தமிழ் எழுத்தால்தான் மாற்றீடு செய்யவேண்டும் என்பதில்லை. இடத்துக்குத் தகுந்தபடி எது பொருந்துகிறதோ அதன்படி யகரத்தையோ, சகரத்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது எனது கருத்து. ஆனாலும், அவரவர் தமக்கு நினைத்தாவாறு எழுதாமல் ஒரு தரமுறையைக் கைக்கொள்வது நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 11:02, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply
யப்பான், யனவரி என எழுதுவது இலக்கணச்சுத்தமாக இருக்குமா? ய-வில் சொற்கள் தொடங்குமா? மதனுக்குத் தெரிந்திருக்கும்.--Kanags \உரையாடுக 11:11, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தொல்காப்பியம் "யா" மட்டுமே சொல்லுக்கு முதலில் வரலாம் என்கிறது. சகரங்களிலும், ச, சை, சௌ என்பன முதல் எழுத்தாக வரா என்கிறது தொல்காப்பியம். எனினும் தற்காலத்தில் பெரிதும் பின்பற்றப்படும் தமிழ் இலக்கண நூலான நன்னூல் பன்னீருயிரும் க ச த ந ப ம வ ய ஞ ங என்னும் ஈரைந்து உயிர் மெய்யும் மொழி முதல் என்கிறது. இதன் படி "ய" முதல் எழுத்தாக வரலாம். அத்துடன் இதே நூல் யகரத்துக்கான சிறப்புவிதிகளைக் கூறும்போது, "அ ஆ உ ஊ ஓ ஔயம் முதல்" என்கிறது. இதன்படி ய யா யு யூ யோ யௌ என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதல் எழுத்தாக வரலாம். நன்னூலின்படி எல்லாச் சகர உயிர்மெய்களும் சொல் முதலாக வரலாம். --- மயூரநாதன் (பேச்சு) 11:58, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

John, Joseph, Jacob போன்ற பெயர்கள் போத்துக்கேயர் காலத்தில் இருந்தே யோவான், யோசேப்பு, யாக்கோபு எனத் தமிழொலிப்புப் பெற்று வழங்கிவருவதைக் கவனிக்கவும். --- மயூரநாதன் (பேச்சு) 12:05, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

விரிவான விளக்கத்துக்கு நன்றி மயூரநாதன்.--Kanags \உரையாடுக 12:08, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply
கற்பித்தமைக்கு நன்றி.பாகிம்!கசடற கற்பித்தமைக்கு மிக்க நன்றி.மயூரநாதன். -- உழவன் +உரை.. 02:38, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம். வாழ்த்துக்கள் மயூரநாதன். ஏற்றுகொள்ள கூடிய வரவேற்க கூடிய விரும்பத்தக்க அருமையான விளக்கம்.--சிவம் 02:56, 23 செப்டெம்பர் 2012 (UTC)

மேற்படி உரையாடலை ஆலமரத்திலிருந்து இங்கு படியெடுத்துள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 06:39, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மயூரநாதன் அவர்களுக்கு: John, Joseph, Jacob போன்ற பெயர்கள் ஈப்ரு மொழி உச்சரிப்பைப் பின்பற்றியே தமிழ் விவிலியத்தில் பயன்படுத்தியுள்ளனர். தொல்காப்பியம் உருவான காலத்தில் கிரந்த எழுத்துமுறை இல்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. ஆனால் தற்போதைய உலகில் பிறமொழிப் பெயர்களைக் குறிக்க கிரந்த எழுத்துக்கள் அவசியம். ணா, ணு போன்ற எழுத்துக்களைப் பழங்கால முறைப்படி நாம் எழுதுவதில்லை. அதுபோல் கிரந்த எழுத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். GangadharGan26 (பேச்சு) 04:16, 25 செப்டம்பர் 2019 (UTC)

தலைப்பு

தொகு

இந்தக் கட்டுரைத் தலைப்பை யப்பான் என்று மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 07:05, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மீண்டும் ஒரு கிரந்த நீக்கல் உரையாடலை ஆரம்பிக்க எனக்கு விருப்பமில்லை பாஹிம். மேலுள்ள உரையாடல் படி யப்பான் சரியே எனினும் ஜப்பான் அல்லது சப்பான் என்பதே அனைவருக்கும் புரியும் சொல் என எனக்குத் தோன்றுகிறது. நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 09:35, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

jaffna= யாழ்ப்பாணம் என்பது போல japan = யப்பான் என்பது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.--சிவம் 09:49, 23 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், நீங்கள் கொடுத்துள்ள உதாரணம் தவறானது. jaffna யாழ்ப்பாணம் ஆகவில்லை. யாழ்ப்பாணம் தமிழ்ச் சொல். வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் தமக்கு வசதியாக jaffna என்றார்கள்.--Kanags \உரையாடுக 09:57, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இலங்கை அரசின் பெரும்பாலான பாடநூல்களில் யப்பான் என்பதே பயன்படுத்தப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 10:07, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

👍 விருப்பம், எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரை கிடைக்கும் என்பதால் உரையாடலை நீட்டிக்க வேண்டாமென்று வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:22, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

சரி. நன்றி.--சிவம் 10:41, 23 செப்டெம்பர் 2012 (UTC) எனது அனுபவத்தில் யப்பான் என்று குறிப்பிடுவதைத்தான் கண்டு இருக்கின்றேன், --சிவம் 10:44, 23 செப்டெம்பர் 2012 (UTC)

இதே போன்றுதான் யேர்மனிய மொழி டோய்ச் ஆனால் தமிழ் நாட்டவர்கள் இடைச்சு என்று கூடுகிறார்கள், ஆனால் இடைச்சு என்பது நெதர்லாந்து மொழியாகும். எங்கே இந்த தவறு நடக்கிறது என்று எனக்கும் தெரியவில்லை.--சிவம் 10:51, 23 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் சிவம், யப்பான் இலங்கை வழக்கு. ஜப்பான் இந்திய வழக்கு. (இது போன்ற வழக்கு மாறுபாடுகளில் முதலில் எழுதப்படும் முறையில் வைப்பது தமிழ் விக்கி நடைமுறை) மேலும் தமிழ்நாட்டில் இடைச்சு என்று நான் எதுவும் கேள்விப்பட்டதில்லை, நீங்கள் கூறும் யேர்மானிய மொழியை ஜெர்மானிய மொழி என்றும் நெதர்லாந்தில் பேசப்படும் மொழியை டச்சு மொழி என்று கூறித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதே போல மாற்றங்கள் (கிரந்த நீக்கம், பெயர்ச்சொற்களில் செய்யப்படும் இலக்கணப் பிழை மாற்றங்கள்) நடந்தால் ஒரு காலத்தில் எளிய தமிழ் விக்கி என்றோ, தமிழகத் தமிழ் விக்கி என்றோ ஒரு விக்கி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :(--சண்முகம்ப7 (பேச்சு) 11:10, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply
சிவம், மதனாகரன், ஈழத்தமிழ், தமிழகத் தமிழ் போன்ற பிரச்சினை குறித்து ஏற்கனவே விரிவாக உரையாடி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்டுரையைத் தொடங்குபவர் எந்த வழக்கில் தொடங்குகிறாரோ அந்த வழக்கில் விடுவதே அந்த முடிவு. (சில கட்டுரைகளில் உரையாடல்கள் மூலம் சில முடிவுகளில் இணக்கம் காணப்படுகிறது). இதே போன்ற முடிவு ஆங்கிலேய ஆங்கிலம் / அமெரிக்க ஆங்கிலம் குறித்து ஆங்கில விக்கியிலும் எடுக்கப்பட்டுள்ளது. செருமானிய மொழியை இங்கு தமிழ் விக்கியில் இடாய்ச்சு என (தமிழக மற்றும் தமிழிலக்கண விதிகளையும் கருத்தில் கொண்டு) எழுதப்படுகிறது. சிவம் கூறுவது போன்று டொய்ச்சு என்பதே சரியான ஒலிப்பு.--Kanags \உரையாடுக 11:36, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply
உண்மையில் யேர்மனிய மொழிக்கு டொய்ச்சு என்பதுதான் சரி.--பாஹிம் (பேச்சு) 11:44, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply
கண்டிப்பாக நீங்கக் சொல்வதுதான் சரியான ஒலி வழக்கு.deutsch (deu)=டோய்  இதுதான் இதன் ஒலி.--சிவம் 13:50, 23 செப்டெம்பர் 2012 (UTC)

கண்டிப்பாக மாற்றக் கூடாது

தொகு

தமிழக அரசுப் பாட நூலில் ஜப்பான் என்று தான் இருக்கிறது. தமிழகத்தில் தமிழ் பயிலும், தமிழ் பயிற்று மொழியில் பயிலும் 60 லட்சம் அரசு பள்ளி மாணவர்களும் இப்படித்தான் தெரிந்து வைத்திருக்கின்றனர். இப்படித்தான் வாசிக்கின்றனர். இப்படித்தான் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஆசிய நாடுகளில் ஒன்றின் பெயரை எழுது? என்ற கேள்விக்கு இந்த பதிலை எழுதினாத்தான் மதிப்பெண். தமிழ் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டும் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் படி அழைப்பது தான் சிறந்தது. தனி நபரின் பார்வைக்கு எடுத்து செல்வது தவறு. இது கண்டனத்திற்குரியது. தமிழ் மீடியத்தில் பயில்பவர்கள் வசதி பெற்றவர்கள் அல்ல. ஏழை மாணவர்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் அல்ல. இங்குள்ள பெரும்பான்மை மக்களின் அடிப்படையில் தான் பொது தளம் செயல்படவேண்டும். பெயரை மாற்றவேண்டும் என்றால் அதிகாரப் பூர்வ மேற்கொள்களை கொடுக்க வேண்டும். அரசு ஆவணங்களை கொடுக்க வேண்டும். இல்லையேல் மாற்றப்படவேக் கூடாது. --செல்வம் தமிழ் (பேச்சு) 07:19, 16 மார்ச் 2013 (UTC)

மாவட்டங்களா? மாநிலங்களா?

தொகு

ஜப்பான் என்கிற நாடு 47 பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது. prefectureஎன்று ஆங்கிலத்திலும் 都道府県என்று ஜப்பானிய மொழியிலும் குறிப்பிடப்படுகிற பிரிவு இந்தப்பக்கத்தில் மாவட்டம் என்றும் சில இடங்களில் மாநிலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களால் நேரடியாகத்தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளுநரும் அவையும் உள்ளது. இதன் கீழ் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்ற பல பிரிவுகள் உள்ளன. இந்தக்காரணங்களால் இதனை மாவட்டம் என்பதைவிட மாநிலம் என்று தமிழ்படுத்துவதே சரி என்று படுகிறது. நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல். --கோவிந்த் (பேச்சு) 13:24, 15 சூலை 2013 (UTC)Reply

ஜப்பான்

தொகு

விக்கிப் பக்கங்களின் பல்வேறு தலைப்புகளில் கிரந்த எழுத்துக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஜமேக்கா, ஜெர்மனி, ஜோர்தான், ஜகார்த்தா போன்ற பெயர்களைப் போல் ஜப்பான் என்ற தலைப்பு இருப்பதில் என்ன தவறு உள்ளது? இன்று கிரந்த எழுத்துமுறை தமிழ் மக்களிடம் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. எனவே அதை மாற்றுவது மிகக் கடினம். பிறமொழிச் சொற்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பது சரியே. ஆனால் பிறமொழிப் பெயர்களை உச்சரிப்பதற்கு கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும். கங்காதர் (பேச்சு) 05:06, 23 செப்டம்பர் 2019 (UTC)

மேலே இது குறித்து உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் விவாதிப்பதில் அர்த்தமில்லை.--Kanags \உரையாடுக 11:30, 23 செப்டம்பர் 2019 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகாரம் படைத்த நிர்வாகிகள் தங்கள் வசதிக்கேற்ப தலைப்புகளை அமைத்துக் கொள்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அந்நாட்டின் தமிழுக்கும் தமிழ்நாட்டின் தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த நிர்வாகிகள் மற்ற தமிழ்ப் பயனர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதே இல்லை. அப்படியென்றால் நிர்வாகிகள் மட்டும் விக்கிப்பீடியாவை நடத்தாலமே? ஏன் பயனர்களுக்குத் தொகுக்க அனுமதி வழங்குகிறீர்கள்? தமிழ்நாட்டின் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் ஜப்பான் என்ற பெயர் மட்டுமே தெரியும். மேற்கண்ட உரையாடலில் செல்வம் தமிழ் என்ற பயனரின் கருத்தைப் பாருங்கள். அவரது கோரிக்கைக்கு ஏன் யாரும் பதிலளிக்கவில்லை? தங்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற உணர்வில் தானே இவ்வாறு செய்கிறீர்கள்? மிகவும் மனவருத்தத்துடன் விக்கிப்பீடியாவில் இருந்து நிரந்தரமாக விலக முடிவெடுத்துள்ளேன். தாங்கள் என்ன தலைப்பு வைத்துக்கொண்டாலும் சரி. ஆனால் தமிழில் இருந்து கிரந்த எழுத்துக்களை நீக்குவது நடைமுறையில் சாத்தியமற்றது. கங்காதர் (பேச்சு) 12:45, 23 செப்டம்பர் 2019 (UTC)
//தமிழில் இருந்து கிரந்த எழுத்துக்களை நீக்குவது நடைமுறையில் சாத்தியமற்றது.// எதுவும் சாத்தியமற்றதல்ல. ஆரம்பத்தில் எதிர்த்த பலர் (நான் உட்பட) இப்போது ஏற்றுக் கொண்டுள்ளனர். எனது ஆரம்பகாலக் கட்டுரைகளைக் கவனியுங்கள். தமிழ்நாட்டை விட ஈழத்திலேயே வடமொழி ஆதிக்கம் அதிகம்.--Kanags \உரையாடுக 13:02, 23 செப்டம்பர் 2019 (UTC)
யார் ஏற்றுக்கொண்டது? இன்று பெரும்பான்மையான தமிழ்மக்கள் கிரந்த எழுத்துக்களைத் தங்கள் அன்றாட வாழ்வில் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றிற்குத் தடை விதிக்க முடியுமா? தங்கள் பெயர் ஸ்ரீதரன். தங்களது பிறப்புச் சான்றிதழிலும் பிற அரசு ஆவணங்களிலும் அவ்வாறே உள்ளதா? அல்லது சிறீதரன் என்று உள்ளதா? பதில் கூறுங்கள். கிரந்த எழுத்துக்களை நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் வெகுசிலர் மட்டுமே. ஒருவேளை அதற்கு பேராதரவு இருந்திருந்தால் இந்நேரம் கிரந்தம் முழுமையாகத் தடை செய்யப்பட்டு இருக்கும் அல்லவா?

இன்று பேச்சுவழக்கில் பல்வேறு பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். அவற்றிற்கு இணையான தூயத்தமிழ் சொற்கள் இருந்தாலும் அவை எழுத்தளவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. பேச்சுவழக்கில் மாற்றம் கொண்டுவருவது இயலாது. எனவே எழுத்துவடிவில் மட்டுமே தமிழ் தூய்மையுடன் வாழ்ந்து வருகிறது. பேச்சுவழக்கில் தூயத்தமிழ் வழக்கொழிந்து விட்டது. ஆனால் கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பிறமொழிப் பெயர்களை உச்சரிப்பதற்கு அவை அவசியம். பிறமொழிப் பெயர்களைப் பிறமொழி எழுத்துக்களால் குறிப்பதில் என்ன தவறு? தமிழ் எழுத்துக்களைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் உலகத் தொடர்பை துண்டித்துவிட்டு தமிழ்நாடு தனித்து இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஜப்பானிய மொழியில் மெய்யெழுத்துக்கள் இல்லை. எனவே ஆஸ்திரேலியாவை ஓசுட்டரேரியா என்று அழைக்கிறார்கள். அது பழகிவிட்டதால் அவர்களுக்குப் பிறமொழி எழுத்துக்களின் தேவை ஏற்படவில்லை. அங்குப் பிறமொழியினர் வந்து எழுத்துக்களைத் திணிக்கவும் இல்லை. இதுபோல் இன்று உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஆனால் தமிழர்கள் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திப் பழகிவிட்டனர். எனவே இந்த நிலையை மாற்றுவது இயலாத காரியம். கிரந்த எழுத்துக்களைப் பிறமொழியினர் திணித்திருந்தாலும் அதனால் நமக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது. பழந்தமிழர்கள் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. ஆனால் பிற இனத்தவரின் மதங்களை ஏற்றுப் பின்பற்றி வருகிறார்கள் அல்லவா? அதுபோல் கிரந்த எழுத்துக்களையும் ஏற்றுக்கொள்வதே சரியானது.

பழங்காலத் தமிழர்களுக்குக் கிரந்த எழுத்துகளின் தேவை ஏற்படவில்லை. ஆனால் தற்போது பிறமொழிப் பெயர்களைக் குறிக்க அவை தேவைப்படுகின்றன. எனவே தேவைக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்வதுதானே இயற்கையின் நியதி? இன்று வெளிநாட்டினரின் பல்வேறு கண்டுபிடிப்புகளால் தான் உலகம் முன்னேறியுள்ளது. அவற்றைத் தமிழர் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது அல்லவா? பிறமொழிச் சொற்களை மட்டுமே எதிர்க்க வேண்டும். கிரந்த எழுத்துக்களை ஏற்றுக்கொள்வதே சரி. நான் கூறியவற்றைப் பொறுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். நீளமான உரைக்கு மன்னிக்கவும். இனியாவது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விக்கிப்பக்கங்களின் தலைப்புகளைத் திருத்துவீர்கள் என நம்புகிறேன். GangadharGan26 (பேச்சு) 14:28, 23 செப்டம்பர் 2019 (UTC)
யப்பான் என்பதால் பிழை இல்லை. கிரந்தம் பற்றி பல உரையாடல்கள் பல இடம்பெற்று தற்போது ஒரு நிலையில் செல்கிறது. ஆகவே மீண்டும் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளைச் செய்ய வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 01:22, 24 செப்டம்பர் 2019 (UTC)
இது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு இல்லை. தமிழ் விக்கிப்பீடியா தமிழர்களுக்கானது. ஒருசில நிர்வாகிகள் மட்டுமே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்டற்ற கலைக்களஞ்சியத்தைக் கட்டுப்படுத்த நினைப்பது தவறு. ஒரு பயனராக மட்டுமின்றி தமிழனாகவும் என் கருத்துக்களைக் கூற எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அதைத் தடுக்க இயலாது. கிரந்தம் குறித்து நான் எடுத்துரைத்த வாதங்களுக்கு சரியான பதிலை எதிர்பார்க்கிறேன். மற்ற பயனர் ஒருவர் வார்ப்புருவை நீக்கிவிட்டால் உடனே தடை எச்சரிக்கை விடுக்கிறீர்கள்? ஆனால் தாங்கள் செய்வது மட்டும் நியாயமா? இன்னும் இந்த உரையாடலில் தீர்வு எட்டப்படவில்லை. அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். GangadharGan26 (பேச்சு) 01:59, 24 செப்டம்பர் 2019 (UTC)
ஒருசில நிர்வாகிகள் மட்டுமே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்டற்ற கலைக்களஞ்சியத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதாக இருந்தால் முறையிடலாம். தேவையற்ற உரையாடல்களுக்கு யாரும் இங்கு நேரம் ஒதுக்கப்போவதில்லை. விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தொடர்பில் பலருக்கும் பல வேலை இருக்கிறது. உரையாடல்களை முடிந்து வைக்க நிர்வாகிகளுக்கு விக்கி இடமளிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --AntanO (பேச்சு) 02:08, 24 செப்டம்பர் 2019 (UTC)
இது தேவையற்ற உரையாடல் என்று தாங்கள் எவ்வாறு முடிவுக்கு வந்தீர்கள்? தமிழ் பேசும் மக்கள் பலருக்கும் புரியாத யப்பான், இசுக்கொட்லாந்து போன்ற தலைப்புகள் இருந்தால் விக்கிப்பீடியா எப்படி வளர்ச்சி பெறும்? ஒருவேளை ஒரு தமிழ் மாணவர் இதைப் பார்த்து தனது பள்ளித்தேர்விலும் இசுக்கொட்லாந்து என்று எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? தமிழ் விக்கிப்பீடியா தமிழர்களுக்கான அறிவுக்களஞ்சியம். எனவே தமிழர் வழக்கில் பொதுவாக அறியப்படும் தலைப்புகளைப் பயன்படுத்துவதே நியாயமானது. GangadharGan26 (பேச்சு) 04:24, 25 செப்டம்பர் 2019 (UTC)

Wikipedia is not a democracy - விக்கியின் கொள்கைப்படியே நிர்வாகிகள் உட்பட்ட பயனர்கள் செயற்பட வேண்டும். இதற்கு மேல் சென்றால் பயனர்களை எச்சரிப்பதும், தடை செய்வதும் தவிர்க்க முடியாது. --AntanO (பேச்சு) 02:12, 24 செப்டம்பர் 2019 (UTC)

தவறுக்கு வருந்துகிறேன். இனி விக்கிப்பீடியா கொள்கைகளைப் பின்பற்றி செயல்படுகிறேன். தாங்களும் பிற பயனர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். நன்றி. GangadharGan26 (பேச்சு) 02:20, 24 செப்டம்பர் 2019 (UTC)

குறிக்கோள்களைப் பின்பற்ற வேண்டும்

தொகு

தலைப்பு குறித்த [குறிக்கோள்கள்]:

  • Recognizability – அனைவரும் அறியக்கூடிய சொல்லாக இருக்க வேண்டும்.
  • Naturalness – தொகுப்பாளர்கள் இயற்கையாகப் பயன்படுத்தும் சொல்லாக இருக்க வேண்டும்.
  • Precision – தலைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி கட்டுரையின் பொருளை மற்ற கட்டுரைப் பொருட்களில் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
  • Conciseness – கட்டுரையின் பொருளைத் துல்லியமாகக் குறிக்கும் தலைப்பாக இருக்க வேண்டும்.
  • Consistency – ஒத்தக் கட்டுரைகளின் தலைப்புகளுடன் ஒத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட முதல் இரு குறிக்கோள்களின் படி ஜப்பான் என்ற தலைப்பே அனைவரும் அறியக்கூடியதாகவும் மற்ற தொகுப்பாளர்கள் இயற்கையாய்ப் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. யப்பான் என்பது தமிழ் பேசும் மக்கள் பலருக்கும் பரிச்சயமற்ற சொல்லாகும். எனவே அது வேறு பொருளில் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது. இது மேற்கண்ட 4வது குறிக்கோள்களுக்கு முரணானது. GangadharGan26 (பேச்சு) 03:59, 25 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யப்பான்&oldid=3883321" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யப்பான்" page.