பொட்டாசியம் புரோமேட்டு
பொட்டாசியம் புரோமேட்டு (Potassium bromate) என்பது KBrO3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியத்தின் புரோமேட்டு உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் படிகங்களாக அல்லது தூளாகக் காணப்படும். வலிமையான ஓர் ஆக்சிசனேற்றும் முகவராக இச்சேர்மம் செயல்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் புரோமேட்டு
| |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
7758-01-2 | |||
ChEBI | CHEBI:38211 | ||
ChEMBL | ChEMBL2311074 | ||
ChemSpider | 22852 | ||
EC number | 231-829-8 | ||
Gmelin Reference
|
15380 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C19295 | ||
பப்கெம் | 23673461 | ||
வே.ந.வி.ப எண் | EF8725000 | ||
| |||
UNII | 04MB35W6ZA | ||
UN number | 1484 | ||
பண்புகள் | |||
KBrO 3 | |||
வாய்ப்பாட்டு எடை | 167.00 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மையான படிகத் தூள் | ||
அடர்த்தி | 3.27 கி/செமீ³ | ||
உருகுநிலை | 350 °C (662 °F; 623 K) | ||
கொதிநிலை | 370 °C (698 °F; 643 K) (சிதைவடையும்) | ||
3.1 கி/100 மிலி (0 °செல்சியசு) 6.91 கி/100 மிலி (20 °செல்சியசு) 13.3 கி/100 மி.லி (40 °செல்சியசு) 49.7 கி/100 மி.லி (100 °செல்சியசு) | |||
கரைதிறன் | Insoluble in அசிட்டோன் | ||
−52.6·வார்ப்புரு:10^ செ.மீ³/மோல் | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | அறுகோணம் | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−342.5 கி.யூல்/மோல் | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | "ICSC 1115". | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H271, H301, H350 | |||
P201, P202, P210, P220, P221, P264, P270, P280, P281, P283, P301+310, P306+360, P308+313, P321 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது. | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
157 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் குளோரேட்டு பொட்டாசியம் அயோடேட்டு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் புரோமேட்டு கால்சியம் புரோமேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுபொட்டாசியம் ஐதராக்சைடின் சூடான கரைசல் வழியாக புரோமின் அனுப்பப்படும்போது பொட்டாசியம் புரோமேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் நிலையற்ற பொட்டாசியம் ஐப்போபுரோமைட்டை உருவாக்குகிறது, இது விரைவாக விகிதவியலுக்கு ஒவ்வா முறையில் புரோமைடு மற்றும் புரோமேட்டாக மாறுகிறது:[2]
- 3 BrO−→ 2 Br− + BrO−3
பொட்டாசியம் புரோமைடு கரைசல்களை மின்னாற்பகுப்பு செய்தும் பொட்டாசியம் புரோமேட்டைத் தயாரிக்கலாம். இரண்டு முறைகளிலும் உள்ள பொட்டாசியம் புரோமைடு அதன் மிகக் குறைந்த கரைதிறன் காரணமாக உடனடியாகப் பிரிக்கப்படுகிறது. பொட்டாசியம் புரோமேட்டு மற்றும் புரோமைடு கொண்ட கரைசல் 0 பாகை செல்சியசு வெப்பநிலைவரை குளிர்விக்கப்படும் போது, கிட்டத்தட்ட அனைத்து புரோமேட்டுகளும் வீழ்படிவாகிவிடும். அதே சமயம் அனைத்து புரோமைடுகளும் கரைசலில் இருக்கும்..[2]
பயன்கள்
தொகுபொட்டாசியம் புரோமேட்டு பொதுவாக அமெரிக்காவில் மாவு மேம்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது (ஐ எண் ஐ924). ரொட்டி தொழிலில் இது மாவை வலுப்படுத்தவும், அதிகமாக மேலெழும்பவும் செயல்படுகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற முகவர் மற்றும் சரியான சூழ்நிலையில் ரொட்டிச் செயல்பாட்டில் புரோமைடாக குறைக்கப்படுகிறது.[3][4] இருப்பினும் இதை அதிகமாகச் சேர்த்தாலோ அல்லது ரொட்டியை நீண்டநேரம் வேகவைத்தாலோ அல்லது போதுமான அளவு குறைந்த வெப்பநிலையில் வேகவைத்தாலோ பொட்டாசியம் புரோமேட்டு எஞ்சியிருக்க நேரிடும். இதை உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும்.[4]
மால்ட் பார்லி உற்பத்தியில் பொட்டாசியம் புரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைமைகளின் கீழ் பயன்படுத்தப்படுகிறது. முடிக்கப்பட்ட தயாரிப்புகள் தரநிலையுடன் அடையாளப்படுத்தப்படுகின்றன.[5]
நெறிப்படுத்தல்
தொகுபொட்டாசியம் ப்ரோமேட்டு ஒரு புற்றுநோய் ஊக்கியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] உணவு, மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் தெலானி விதிக்கு முன்பு வரை உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்த அனுமதித்தது. இவ்விதி புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களைத் தடைசெய்கிறது. 1958 ஆம் ஆண்டு முதல் இவ்விதி நடைமுறைக்கு வந்தது. 1991 ஆம் ஆண்டில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ரொட்டித் தொழிலாளகளை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியது, ஆனால் இத் தடை கட்டாயப்படுத்தப்படவில்லை.
சப்பானிய ரொட்டித் தொழிலாளர்கள் 1980 ஆம் ஆண்டில் தாங்களாக முன்வந்து பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். இருப்பினும், யாமாசாகி ரொட்டி நிறுவனத்தினர் 2005 ஆம் ஆண்டில் இதன் பயன்பாட்டை மீண்டும் தொடங்கினர். இறுதி தயாரிப்பில் இருந்த இரசாயனத்தின் அளவைக் குறைக்க புதிய உற்பத்தி முறைகள் இருப்பதாகக் கூறினர்.[7]
ஐரோப்பிய ஒன்றியம், அர்கெந்தீனா, பிரேசில்,[8] கனடா, நைச்சீரியா, தென் கொரியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் பொட்டாசியம் புரோமேட்டு உணவுப் பொருட்களிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இலங்கையிலும், 2005 ஆம் ஆண்டில் சீனாவிலும், [9] மற்றும் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் [10] தடைசெய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் இது அனுமதிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு மே மாத தரவுகளின் படி அமெரிக்காவின் நியூயார்க்கு மாநிலம் பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.[11]
கலிஃபோர்னியாவில், புரோமேட்டேற்ற மாவைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை அடையாளக்குறி தேவைப்படுகிறது.[12] 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கலிபோர்னியா பொட்டாசியம் புரோமேட்டின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது. சட்டம் 2027 இல் அமலுக்கு வருகிறது. பொட்டாசியம் புரோமேட்டை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியாவாகும்.[13][14][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Potassium bromate". chem.sis.nlm.nih.gov. ChemIDplus. U.S. தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா. RN 7758-01-2.
- ↑ 2.0 2.1 Synthesis, separation, and purification of KBr and KBrO (PDF). Pre-Labs (course notes). Advanced Placement Chemistry. Harvard-Westlake School. Archived from the original (PDF) on 16 May 2017. பார்க்கப்பட்ட நாள் 14 September 2016 – via Harvard-Westlake School (hwscience.com).
- ↑ "Volume 13, Series 6, page 3136". Federal Register (compendium). Office of the Federal Register, National Archives and Records Service (in ஆங்கிலம்). Washington, DC: General Services Administration. 1948 – via Google Books.
- ↑ 4.0 4.1 Kurokawa, Y.; Maekawa, A.; Takahashi, M.; Hayashi, Y. (1 July 1990). "Toxicity and carcinogenicity of potassium bromate – a new renal carcinogen". Environmental Health Perspectives 87: 309–335. doi:10.1289/ehp.9087309. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-6765. பப்மெட்:2269236.
- ↑ "Potassium Bromate". Food Additives Permitted for Direct Addition to Food for Human Consumption (laws & regulations). U.S. Code of Federal Regulations. Food and Drug Administration (United States). section 172.730 – via ecfr.gov.
- ↑ Potassium bromate (group 2B) (Report). IARC Summaries & Evaluations. Vol. 73. International Agency for Research on Cancer (IARC). 73-17 – via inchem.org.
- ↑
Kawo, Kuro (c. 1990). "Japan's Yamazaki Baking to use potassium bromate in bread". Cited by
Duvvuri, Shreemathi; Panchagnula, Shobharani (September–October 2016). "Analysis of potassium iodate and potassium bromate in bakery products by electro-analytical techniques". International Journal of Trend in Research and Development 3 (5): 412–413. பன்னாட்டுத் தர தொடர் எண்:2394-9333. http://www.ijtrd.com/papers/IJTRD4278.pdf. - ↑ "Dispõe sobre o uso do bromato de potássio na farinha e nos produtos de panificação" [Regarding the use of potassium bromate in flour and bakery products] (in போர்ச்சுகீஸ்). c. 2001 – via planalto.gov.br.
- ↑ "Importer halts unsafe potato chips from the U.S.". China Daily. 7 December 2007. https://www.chinadaily.com.cn/china/2007-12/07/content_6304490.htm.
- ↑ "India bans use of cancer-causing additive, potassium bromate, in bread, other food". The Times of India. 21 June 2016. http://timesofindia.indiatimes.com/india/India-bans-use-of-cancer-causing-additive-potassium-bromate-in-bread-other-food/articleshow/52836892.cms.
- ↑ Smith, Dana G. (13 April 2023). "Two states have proposed bans on common food additives linked to health concerns". The New York Times. https://www.nytimes.com/2023/04/13/well/eat/food-additive-ban.html.
- ↑ "Bromate meets the criteria for listing". CRNR notices. oehha.ca.gov. Proposition 65. California Office of Environmental Health Hazard Assessment. Archived from the original on 2013-12-03.
- ↑ Cimons, Marlene (2023-10-11). "California isn't banning Skittles, but four additives will be removed". Washington Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-18.
- ↑ "AB-418 The California Food Safety Act" (in ஆங்கிலம்). ca.gov.
- ↑ "California becomes first U.S. state to ban 4 potentially harmful chemicals in food". 10 October 2023. https://www.cnn.com/2023/10/09/health/california-governor-bans-red-dye-no-3-wellness/index.html.