மகிபதிவர்மன்

மகிபதிவர்மன் அல்லது மகிபதிவன் (ஆங்கிலம்: Mahipativarman அல்லது Mahipativam; கெமர்: ព្រះអង្គម្ចាស់ មហិទ្ធិវរ្ម័ន; தாய் மொழி: มหิปติวรมัน) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) அரசர் ஆவார். சென்லா இராச்சியம் தற்போது கம்போடியாவில் ஒரு பகுதியாக உள்ளது.[1]

மகிபதிவர்மன்
Mahipativarman
ព្រះអង្គម្ចាស់ មហិទ្ធិវរ្ម័ន
King Mahipativarman
கம்போடியாவின் முடியாட்சி
ஆட்சிக்காலம்கி.பி. 790 - 802
முன்னையவர்முதலாம் இராசேந்திரவர்மன்
(Rajendravarman I)
பின்னையவர்இரண்டாம் செயவர்மன்
பிறப்புஅனிந்திதபுரம்
(Aninditapura)
இறப்புகி.பி. 802
அனிந்திதபுரம்
துணைவர்இராசேந்திரதேவி
குழந்தைகளின்
பெயர்கள்
இந்திராதேவி
மரபுபாலாதித்யபுரம்
(Baladityapura)
அரசமரபுவர்மன்
தந்தைமுதலாம் இராசேந்திரவர்மன்
தாய்நிருபத்தேந்திரதேவி
மதம்இந்து சமயம்

மகிபதிவர்மன் மன்னன், வியாதபுரம் (Vyathapura) எனும் அரச குடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். மகிபதிவர்மனின் தந்தையார் பெயர் முதலாம் இராசேந்திரவர்மன் (Rajendravarman I). தாயாரின் பெயர் நிருபத்தேந்திரதேவி (Nrpendradevi of Sambhupura).

முதலாம் யசோவர்மன்

தொகு
 
மகிபதிவர்மனின் பேரன் முதலாம் யசோவர்மன்

மகிபதிவர்மனின் மனைவியின் பெயர் இராசேந்திரதேவி (Rajendra Devi). இவர்களின் மகளின் பெயர் இந்திராதேவி (Indra Devi).

இந்திராதேவி; முதலாம் இந்திரவர்மன் எனும் கம்போடிய மன்னனைத் திருமணம் செய்து கொண்டார். இந்திராதேவி - முதலாம் இந்திரவர்மன் இணையருக்குப் பிறந்த மகன் முதலாம் யசோவர்மன் (Yasovarman I). அந்த வகையில் இந்திராதேவி; வியாதபுரம் (Vyathapura); சம்புபுரம் (Shambhupura) ஆகிய அரச குடும்பங்களின் வழித்தோன்றல் ஆகும்.

சென்லா உள்நாட்டுக் குழப்பங்கள்

தொகு

8-ஆம் நூற்றாண்டில் பற்பல உள்நாட்டுப் போர்களினால் சென்லா இராச்சியம் அரசியல் ரீதியாக நிலையற்றதாக இருந்தது. இந்தப் போர்ப் பிரச்சனைகளும் மோதல்களும்; சென்லாவின் சில சிறிய பகுதிகளையும்; சில மாநிலங்களையும் தடுமாறச் செய்து பலகீனப்படுத்தின.

இந்தக் கட்டத்தில் ஜாவாவில் இருந்து சைலேந்திர ஜாவானியர்கள் (Sailendra Javanese) சென்லா மீது படையெடுத்தனர். 787-ஆம் ஆண்டில் சைலேந்திரர்கள் மத்திய கம்போடியாவின் திரலாச்சு (Tralach Island) தீவைக் கைப்பற்றினர். அத்துடன் அன்னாம் (Annam) மற்றும் சம்பா கடற்கரைகளை ஆக்கிரமித்தனர்.

சம்புபுரம் சூறையாடல்

தொகு

பின்னர் அவர்கள் சம்புபுரம் (Shamphoupur) நகரத்தின் மீது படையெடுத்தனர். அவர்கள் சம்புபுரம் நகரத்தை கொள்ளையடித்து எரித்து அழித்தார்கள். அவர்கள் விரும்பியபடி மக்களைக் கொன்றார்கள்.

இந்த நேரத்தில் சைலேந்திர ஜாவானியர்கள் சிலரைப் பிடித்து அவர்களின் தலைகளைக் கொய்தனர். இவர்களை எதிர்த்துப் போராடும் போது மகிபதிவர்மன் பிடிபட்டு அவரின் தலை துண்டிக்கப்பட்டது. அத்துடன் அவரின் தலை ஜாவாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், சைலேந்திரர்கள் கம்போடியாவின் சென்லா பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கி.பி. 802-ஆம் ஆண்டில் கெமர் மன்னர் இரண்டாம் செயவர்மன் சென்லாவை விடுவித்தார்.

சான்றுகள்

தொகு

நூல்கள்

தொகு
  • Pierre Dupont, “The dislocation of Tchen-la and the formation of Angkorian Cambodia (7th–9th century)”, in Bulletin de l’École française d’Extrême-Orient, volume 43, 1943, p. 17-55.
  • Higham, Charles. The Civilization of Angkor (англ.). — University of California Press, 2004. — P. 192.
  • Peter Truhart, Regents of Nations, K. G. Saur Münich, 1984-1988 (ISBN 359810491X), art. « Kampuchea », p. 1729.

மேலும் படிக்க

தொகு
  • Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
  • Jacobsen, Trudy. Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History (англ.). — NIAS Press, 2008. — P. 358. — (Gendering Asia). — ISBN 978-87-7694-001-0.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் சென்லா அரசர்
790-802
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிபதிவர்மன்&oldid=3850505" இலிருந்து மீள்விக்கப்பட்டது