மந்திரீக உபநிடதம்

இந்து சமய உரை


மந்திரீக உபநிடதம் (Mantrika Upanishad) ( சமக்கிருதம்: मन्त्रिक उपनिषत् ) என்பது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்து சமயத்தின் ஒரு சிறிய உபநிடதம் ஆகும். சாமன்ய உபநிடதங்களில் ஒன்றான இது இந்துத் தத்துவ இலக்கியத்தின் வேதாந்தம் மற்றும் யோகப் பள்ளிகளின் ஒரு பகுதியாகும். மேலும் இது யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்ட 19 உபநிடதங்களில் ஒன்றாகும்.[1][2] இரமானால் அனுமனுக்குக் கூறப்பட்ட முக்திகா நியதியில், இது 108 உபநிடதங்களின் தொகுப்பில் 32 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[3]

மந்திரீக உபநிடதம்
Culika Upanishad
Mantrika Upanishad is one of the earliest theistic yoga texts
தேவநாகரிमन्त्रिक
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புMāntrika
உபநிடத வகைSamanya
தொடர்பான வேதம்சுக்ல யசுர் வேதம்
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கை21
அடிப்படைத் தத்துவம்சாங்கியம், யோகக் கலை, வேதாந்தம், பக்தி நெறி

உபநிடதம், 21 வசனங்களைக் கொண்டது. இது சாங்கியம், யோகக் கலை, வேதாந்தம் மற்றும் பக்தி நெறி ஆகியவற்றிலிருந்து ஒரு ஒத்திசைவான ஆனால் முறையற்ற யோசனைகளை உருவாக்க முயற்சிக்கிறது.[2][4] எனவே இது ஒரு எனவே இது ஒரு இறையியல் யோக நூலாகக் கருதப்படுகிறது.[2][4] ஜெர்மானிய இந்தியவியலாளர் பால் டியூசனின் விளக்கத்தின்படி, பிரபஞ்சம் , புருசனும் பிரகிருதியும் சேர்ந்து உருவாக்கப்பட்டது என்றும், செயலற்ற ஈஸ்வர ஆன்மாவிலிருந்து (கடவுள்) பல்வேறு செயலில் உள்ள ஆன்மா-குழந்தைகள் இதை ஒரு வேள்வியாகக் கருதுகின்றனர் என்றும் கோட்பாட்டை பரிந்துரைக்கிறது.[4] வரலாற்றாளர் தலால் இந்த உரையை பிரம்மம் (மாறாத யதார்த்தம்) மற்றும் மாயை (உண்மையை மாற்றுவது, மனோதத்துவ மாயை) பற்றிய விளக்கமாக விளக்குகிறார்.[5] "பிரம்மம் உடலில் ஆன்மாவாக வாழ்கிறது. மேலும் இந்த ஆன்மா கடவுளாக ஆயிரக்கணக்கான காலங்கள் வசிப்பிடத்தை மாற்றுகிறது".[6]

மந்திரீக உபநிடதம் சூலிகா உபநிஷத் ( சமக்கிருதம்: चूलिका उपनिषत् ) என்றும் அழைக்கப்படுகிறது.[7]

சொற்பிறப்பியல் மற்றும் வகைப்பாடு தொகு

மந்திரீகா என்றால் "மயக்குபவர், மந்திரங்களை ஓதுபவர்" என்றும் 'சூலிகா' என்றால் "முனை, உச்சி, ஒரு நெடுவரிசையின் மேல்" எனவும் பொருள்படும். [8][9] உபநிடதத்தின் தலைப்புக்கான அடிப்படை தெளிவாக இல்லை. ஆனால் "ஒரு தூணின் மேல் முனை" என்ற உரையில் உள்ள சொற்றொடர்கள் மற்றும் அதர்வவேதத்தில் இருந்து மந்திர உருவகங்கள் மற்றும் புதிர் போன்ற சொற்களின் விரிவான பயன்பாடு, மந்திரங்கள் மற்றும் மந்திரம் பற்றிய அதன் மறைவான போதனைகளுக்கு ஓரளவு அறியப்படுகிறது.[4]

இந்து தத்துவத்தின் வெவ்வேறு பள்ளிகள் மந்திரீக உபநிடதத்தின் வகைப்படுத்தலில் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, விசிட்டாத்வைதப் பள்ளியின் 11ஆம் நூற்றாண்டு அறிஞர் இராமானுசர், மந்திரீக உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டினார். [10] ஆனால் மந்திரீகத்தை அதர்வண வேத உபநிடதமாக வகைப்படுத்தினார். [11] எவ்வாறாயினும், முக்திகா உபநிடதங்களிலுள்ள தொகுப்பானது, வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்டதாக பட்டியலிடுகிறது.[11]

காலவரிசை தொகு

இந்தியவியலாளர் மிர்சியா எலியாட் , [[மைத்ராயனிய உபநிடதம்] இயற்றப்பட அதே காலகட்டத்தில் இதுவும் எழுதப்பட்டிருக்கலா என பரிந்துரைக்கிறார். மேலும் அதில் நாம் இறையியல் யோகத்தின் எளிய வடிவத்தைக் காணலாம்" எனவும் கூறுகிறார். [2][12] ஆரம்பகால இறையியல் யோக நூல்களில் ஒன்றாகும். [2] தொடர்புடைய காலவரிசை கிமு 1 ஆம் மில்லினியத்தின் இறுதி நூற்றாண்டுகளில் இருந்திருக்கலாம். இது மகாபாரதத்தின் போதனையான பகுதிகளுடன் சமகாலமாக இருக்கலாம். மேலும் வேதாந்த-சூத்திரங்கள் மற்றும் யோக-சூத்திரங்களுக்கு முந்தையதாகவும் இருக்கலாம். [2][4] உபநிடதம் சாங்கியம், யோகம், வேதாந்தம் மற்றும் பக்தி பக்தி சிந்தனைகளின் தொகுப்பை முயற்சிக்கிற. ஆனால் ஒரு மங்கலான ஒத்திசைவு மற்றும் மோசமான அமைப்புடன், இந்த கருத்துக்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து உரை இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.[2][4]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. Nair 2008, ப. 579.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Mircea Eliade et al. (2009), Yoga: Immortality and Freedom, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-14203-6, page 127
  3. Deussen, Bedekar & Palsule 1997, ப. 556–57.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Deussen, Bedekar & Palsule 1997, ப. 677–678.
  5. Dalal 2014, ப. 1168.
  6. Deussen, Bedekar & Palsule 1997, ப. 681 verses 17–19.
  7. Deussen, Bedekar & Palsule 1997, ப. 677 with footnote 1.
  8. Deussen, Bedekar & Palsule 1997, ப. 677.
  9. Mantrika Sanskrit English Dictionary, Koeln University, Germany (2012)
  10. Hajime Nakamura (1989), A History of Early Vedānta Philosophy, Volume 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0651-1, page 46
  11. 11.0 11.1 Moriz Winternitz and V. Srinivasa Sarma, A History of Indian Literature, Volume 1, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0264-3, page 224
  12. Mircea Eliade et al. (2009), Yoga: Immortality and Freedom, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-14203-6, pages 124–127

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரீக_உபநிடதம்&oldid=3847946" இலிருந்து மீள்விக்கப்பட்டது