மனசே மௌனமா (Manase mounama) 2007 ஆம் ஆண்டு ஆர். செந்தமிழ் அரசு இயக்கத்தில், புதுமுகங்கள் ரவிகாந்த், எஸ். டி. தமிழரசன், சன்யா மற்றும் ராஜு பிரஷாந்த் நடிப்பில், நாகா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1]

மனசே மௌனமா
இயக்கம்ஆர். செந்தமிழ் அரசு
தயாரிப்புமாதவி மோகன்
கே. ஏ. தேவசி
ஏ. வினோத்
கதைஆர். செந்தமிழ் அரசு
இசைநாகா
நடிப்பு
  • ரவிகாந்த்
  • எஸ். டி. தமிழரசன்
  • சன்யா
  • ராஜு பிரசாந்த்
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகண்ணதாசன்
கலையகம்ராயல் சினி மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 14, 2007 (2007-09-14)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

அருண் (ரவிகாந்த்), தமிழரசன் (ராஜு பிரசாந்த்) மற்றும் கவிதா (சன்யா) ஆகியோர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அருண் நன்றாக படிக்கும் மாணவன். அரசியல்வாதி ஆதியின் (ராசன் பி. தேவ்) மகனான தமிழரசன் மற்ற மாணவர்களுக்கு இடையூறு செய்யும் மோசமான வழக்கமுடையவன். கவிதா அருணிடம் தன் காதலைச் சொல்கிறாள். தனக்கு காதல் மீது நம்பிக்கையில்லை என்று அவள் காதலை ஏற்க மறுக்கிறான் அருண்.

அந்தக் கல்லூரி மாணவர் தலைவனைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக மாணவர் தலைவராக இருந்த தமிழரசனை எதிர்த்து அருண் போட்டியிட்டு வெற்றி பெறுகிறான். எனவே தன் தந்தையிடம் அடியாளாக இருக்கும் தனாவின் (எஸ். டி. தமிழரசன்) மூலம் அருணைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான் தமிழரசன். அருணைக் கொல்லச் செல்லும்போது விபத்தில் சிக்கும் தனாவை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றுகிறான் அருண். அதன்பின் மனம் திருந்தி வாழ முடிவுசெய்கிறான் தனா.

தனா தன்னை விட்டுச்சென்று நல்லவனாக வாழ்வதைப் பொறுக்காமல் ஆதி, தனா செய்யாத கொலைக்காக அவன்மீது குற்றம்சாட்டி சிறையிலடைக்கிறார். அருணின் உதவியால் விடுதலையாகும் தனா அருணின் குடும்பத்தில் ஒருவனாகிறான். கவிதாவின் காதலை ஏற்றுக்கொள்ளும் அருணுக்கும் கவிதாவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அருணுடன் தனாவைக் காணும் கவிதாவின் சகோதரி கௌரி (தேவதர்ஷினி) தன் காதலனைக் கொன்ற தனாவின் நண்பனான அருணுக்கும் தன் தங்கைக்கும் திருமணம் நடப்பதைத் தடுக்கிறார். ஆதி அருண் மற்றும் தனாவைக் கொல்வதற்கு திட்டமிடுகிறார். அதன்பின் நடப்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் நாகா. பாடலாசிரியர்கள் பொன்னடியான், பா. விஜய் மற்றும் கலைக்குமார்.[2][3][4]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 அச்சுத அழகே ஹரிஹரன், சாதனாசர்கம் 4:59
2 கலசு கலசு திப்பு, அனுராதா ஸ்ரீராம் 4:48
3 கண்ணன் என்னும் மது பாலகிருஷ்ணன், சியாமளா கோபாலன், சுவர்ணலதா 5:37
4 பல்லக்கு மாணிக்க விநாயகம் 4:31
5 விண்ணுக்கு பாலம் சங்கர் மகாதேவன் 4:09

மேற்கோள்கள்

தொகு
  1. "மனசே மௌனமா".
  2. "பாடல்கள்". Archived from the original on 2019-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-24.
  3. "பாடல்கள்".
  4. "பாடல்கள்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனசே_மௌனமா&oldid=3691927" இலிருந்து மீள்விக்கப்பட்டது