மனோரதங்கள்

இணையத் தொடர்

மனோரதங்கள் (Manorathangal) என்பது 2024 ஆண்டு வெளியான இந்திய மலையாள கதைக்கோவை தொலைக்காட்சித் தொடராகும்.[2][3] எம். டி. வாசுதேவன் நாயரின் ஒன்பது சிறுகதைகள்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்பது பகுதிகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.[4][5] எம். டி. வாசுதேவன் நாயரின் மகள் அஸ்வதி வி நாயர் இந்த படத்தின் படைப்பு இயக்குநர் ஆவார். இதில் ஓலவும் தீரவும், கடுகன்னவா; ஒரு யாத்ரா குறிப்பு, ஷெர்லாக், ஷிலாலிகிதம், வில்பனா, கடல்காற்று, காழ்ச்சா, அபயம் தேடி வீண்டும், ஸ்வர்கம் துறக்குன்ன சமயம் ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன.[6][7]

மனோரதங்கள்
வகைநாடகம்
கதைக்கோவை
மூலம்எம். டி. வாசுதேவன் நாயரின் சிறுகதைகள்
எழுத்துஎம். டி. வாசுதேவன் நாயர்
இயக்கம்
நடிப்பு
பின்னணி இசைஎம். ஜெயசந்திரன்
ஔசெப்பச்சன்
பிஜிபால்
இரமேசு நாராயணன்
ராஜேஷ் முருகேசன்
ராகுல் ராஜ்
ஜேக்ஸ் பெஜாய்
அன்சுமான் முகர்ஜி
சயீத் அப்பாஸ்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்9
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ரோஹந்தீப் சிங்
ஓட்டம்402 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சரிகம
ஜம்பிங் டமேட்டோ ஸ்டுடியோஸ்
நியூவேல்யு புரோடக்சன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ5
ஒளிபரப்பான காலம்ஆகத்து 15, 2024 (2024-08-15)[1]

இந்த கதைக்கோவையின் ஒவ்வொரு கதைக்கு முன் கருத்தமைவுகளோடு கமல் ஹாசன் உரையாற்றுகிறார். இதில் மோகன்லால், மம்மூட்டி, பகத் பாசில், பிஜூ மேனன், நெடுமுடி வேணு, சித்திக், இந்திரஜித் சுகுமாரன், ஆசிப் அலி, மாமுக்கோயா, வினீத், இந்திரன்ஸ், அபர்ணா பாலமுரளி, பார்வதி திருவோத்து, சுரபி லெட்சுமி, ஆன் அகஸ்டின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.[8][9] இந்தக் கதைக்கோவை 15 ஆகத்து 2024 அன்று ZEE5 இல் வெளியானது.

நடிகர்கள்

தொகு
  • கமல்ஹாசன் அனைத்து பகுதிகளையும் தொகுப்புரையாற்றி வழங்கியுள்ளார்.

ஓலவும் தீரவும்

தொகு

கடுகன்னவா, ஒரு யாத்ரா குறிப்பு

தொகு

காழ்ச்சா

தொகு

ஷிலாலிகிதம்

தொகு
  • கோபாலன்குட்டியாக பிஜூ மேனன்
  • சரளாவாக சிவாதா
  • மாலுவின் தாயாக சாந்தி கிருஷ்ணா
  • ராகவன் மாமாவாக ஜாய் மேத்யூ
  • பரமேஸ்வரனாக டி. ஜி. ரவி
  • குமரன் மாசாக மணிகண்டன் பட்டாம்பி
  • ரேணுவாக நிலா பாரதி
  • குரும்பாவாக கீதி சங்கீதா
  • ஈரோமனாக நந்து போடுவாள்
  • நாராயணியாக கார்த்திகா பிரதீப்
  • உசுத்துர வாரியராக ஹரீஷ் பெங்கன்

வில்பனா

தொகு
  • தாசாக ஆசிப் அலி சுனில்
  • கீதா பரேக்காக மதுபாலா
  • புரோக்கர் பாலுவாக ஸ்ரீஜித் ரவி
  • பார்வையாளராக சித்ரா ஐயர்
  • பரேக்காக உஜ்வால் சோப்ரா

ஷெர்லாக்

தொகு

ஸ்வர்கம் துறக்குன்ன சமயம்

தொகு

அபயம் தேடி வீண்டும்

தொகு
  • ஒரு மனிதனாக சித்திக்
  • ஒரு பெண்மணியாக இஷித் யாமினி
  • காரியஸ்தனாக நசீர் சங்கராந்தி

கடல்காற்று

தொகு
  • பாரதியாக அபர்ணா பாலமுரளி
  • கேசவாக இந்திரஜித் சுகுமாரன்
  • மார்கரெட்டாக ஆன் அகஸ்டின்
  • வின்சென்ட்டாக சஞ்சு சிவராம்

அத்தியாயங்கள்

தொகு
தலைப்பு இயக்குநர் எழுத்தாளர் (கள்) இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்
ஓலவும் தீரவும்[10] பிரியதர்சன் எம். டி. வாசுதேவன் நாயர் பிஜிபால் சந்தோஷ் சிவன் திருமதி ஐயப்பன் நாயர்
கடுகன்னவா, ஒரு யாத்ரா குறிப்பு[11] இரஞ்சித் எம். டி. வாசுதேவன் நாயர் பிஜிபால் சுஜித் வாசுதேவ், பிரசாந்த் ரவீந்திரன் மனோஜ் கண்ணோத்
காழ்ச்சா[12] சியாமபிரசாத் எம். டி. வாசுதேவன் நாயர் ஔசெப்பச்சன் நிமிஷ் ரவி வினோத் சுகுமாரன்
ஷிலாலிகிதம்[13] பிரியதர்சன் எம். டி. வாசுதேவன் நாயர் ராஜேஷ் முருகேசன் திவாகர் மணி திருமதி ஐயப்பன் நாயர்
வில்பனா[14] அஸ்வதி வி நாயர் எம். டி. வாசுதேவன் நாயர் பிஜிபால் திவாகர் மணி திலீப் தாமோதர்
ஷெர்லாக்[15] மகேஷ் நாராயணன் எம். டி. வாசுதேவன் நாயர் சயீத் அப்பாஸ் மகேஷ் நாராயணன் ராகுல் ராதாகிருஷ்ணன்
ஸ்வர்கம் துறக்குன்ன சமயம்[16] ஜெயராஜ் எம். டி. வாசுதேவன் நாயர் இரமேசு நாராயணன் நிகில் எஸ். பிரவீன் சி. ஆர். ஸ்ரீஜித்
அபயம் தேடி வீண்டும்[17] சந்தோஷ் சிவன் எம். டி. வாசுதேவன் நாயர் ஜேக்ஸ் பெஜாய் சந்தோஷ் சிவன் திலீப் தாமோதர்
கடல்காற்று[18] ரதீஷ் அம்பத்[19] எம். டி. வாசுதேவன் நாயர் ராகுல் ராஜ் லோகநாதன் திலீப் தாமோதர்

தயாரிப்பு

தொகு

இந்தக் கதைக்கோவைத் தொடரில் எம். டி. வாசுதேவன் நாயரின் ஒன்பது சிறுகதைகள் உள்ளன. இது வாசுதேவன் நாயரின் 90 ஆவது பிறந்த நாளை நினைவுகூறும் விதமாக தயாரிக்கும் விதமாக அவரின் மகள் அஸ்வதி வி. நாயருக்கு கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் யோசனை தோன்றியது. முதலில், அவர் 20 கதைகளைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் இறுதியில் அதை 10 ஆகக் குறைத்து, முடிவில் அது ஒன்பதாக ஆனது. பெண் நாயகிப் பாத்திரங்களில் கவனம் செலுத்துவதே அவரது முதல் கட்ட நோக்கமாக இருந்தது என்றாலும், பல அழுதமானக் கதைகளைக் கண்டறிந்த பின்னர் கதாநாயகர்களுக்கான கதைகளையும் அவர் சேர்த்தார். தனது முடிவை விளக்கிய அவர், "நான் பெண்களை கதாநாயகிகளாக்க விரும்பினேன், ஆனால் ஆண் கதாநாயகர்களுக்கான பல அற்புதமான கதைகளைக் கண்டடைந்தேன். இறுதியில், காதல், காமம், பேராசை, பழிவாங்குதல் போன்ற மனித உணர்ச்சிகளைக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்தேன்" என்றார். மேலும் வில்பனா என்ற தலைப்பிலான ஒரு கதையையும் அஸ்வதி இயக்கினார். ஒன்மனோரமாவின், கூற்றின்படி, கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்ட கதைக்கோவை தொடரான ஸ்டோரிஸ் பை ரவீந்திரநாத் தாகூர் (2015), என்ற தொலைக்காட்சித் தொடரே இதற்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது.

அஸ்வதி படைப்புத் தயாரிப்பாளராக பணியாற்றினார். இந்தத் தொடரின் தயாரிப்பு 2021 இல் தொடங்கியது. 2022 சனவரி இக்குள், ஷிலாலிகிதம், வில்பனா, கடல்காற்று, காழ்ச்சா, அபயம் தேடி வீண்டும், ஸ்வர்கம் துறக்குன்ன சமயம் ஆகிய ஆறு படங்களின் தயாரிப்புப் பணிகள் முடித்துவிட்டன, அவற்றுள் பிரியதர்சன்- இயக்கிய ஓலவும் தீரவும் 1970 ஆண்டு இதே பெயரில் வெளியான படத்தின் மறு ஆக்கமாகும். இதன் தயாரிப்புப் பணிகள் 2022, யூலை, 10 இல் தொடங்கி,[20] 2022, யூலை, 17 அன்று முடிக்கப்பட்டது.[21] ஷிலாலிகிதம் படத்தையும் பிரியதர்ஷனே இயக்கினார் [13] கடுகன்னாவா ஒரு யத்ரா முதலில் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்குவதாக இருந்தது.[22] ஆனால் அவருக்கு பதிலாக ரஞ்சித் 2022, ஆகத்து, 16 அன்று உருவாக்கத் தொடங்கினார்[23] 2022, ஆகத்து 26 அன்று முடித்தார்.[24] ஓலவும் தீரவும் படத்தின் படப்பிடிப்பு 2022 யூலையில் படப்பிடிப்பு தொடுபுழாவில் முடிந்தது,[25] இது கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்பட்டது.[26] முதலில், இந்தத் தொடர் நெற்ஃபிளிக்சுக்காகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் மோகன்லால், மம்மூட்டி, பகத் பாசில் ஆகியோர் நடித்த புதிய பகுதிகளைச் சேர்த்ததன் காரணமாக தயாரிப்பு செலவு கூடியதால் அந்த தளம் இந்த கதைக்கோவையை நிராகரித்து. பின்னர், ஜீ5 தொடரை வாங்கியது.[27][28]

வெளியீடு

தொகு

இந்த கதைக்கோவையின் முன்னோட்டம் 15 யூலை 2024 அன்று எம். டி. வாசுதேவன் நாயரின் பிறந்தநாளன்று வெளியானது. இந்தத் தொடரை மேலதிக ஊடக சேவை தளமான ஜீ5 இல் வெளியாவதாக அறிவிக்கபட்டது. இந்த தொடர் முதலில் செப்டம்பர் மாதம் ஓணம் அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் வெளியீடு நாள் 15 ஆகத்து 2024 இக்கு தள்ளிவைக்கபட்டது. மலையாளம், தவிர இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர் வெளியானது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kamal Haasan, Mammootty And Mohanlal's Anthology Series Manorathangal To Release On This Date" (in en). News 18. 17 July 2024 இம் மூலத்தில் இருந்து 17 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240717115300/https://www.news18.com/movies/kamal-haasan-mammootty-and-mohanlals-anthology-series-manorathangal-to-release-on-this-date-8968942.html. 
  2. "MT Vasudevan Nair's Anthology Series Gets A Title, Trailer Release On This Date!". டைம்ஸ் நவ். 14 July 2024. Archived from the original on 14 July 2024. பார்க்கப்பட்ட நாள் 14 July 2024.
  3. "Netflix anthology, starring Mohanlal, Mammootty and Fahadh, wraps up filming, here's all we know". OTTPlay. 28 August 2022 இம் மூலத்தில் இருந்து 15 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240715041656/https://www.ottplay.com/news/netflixs-anthology-starring-mammootty-mohanlal-and-fahadh-wraps-up-filming-heres-all-we-know/8327dd5c55679. 
  4. Ramachandran, Naman (16 July 2024). "Kamal Haasan, Mohanlal, Mammootty, Fahadh Faasil Lead ZEE5 Global Anthology 'Manorathangal'". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 17 July 2024. பார்க்கப்பட்ட நாள் 16 July 2024.
  5. "'Manorathangal' Series Review | A collection of 9 films each different from the rest". Onmanorama. பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  6. "എം.ടിയുടെ 'മനോരഥങ്ങള്‍' പ്രേക്ഷകരിലേക്ക്; മമ്മൂട്ടിയും മോഹന്‍ലാലും അടക്കം പ്രധാന വേഷങ്ങളില്‍". News Malayalam 24X7. 14 July 2024. https://www.newsmalayalam.com/article/movie/manorathangal-written-by-mt-vasudevan-nair-ready-to-release. 
  7. "M.T. Vasudevan Nair and nine shades of life". The Hindu. 14 July 2023. https://www.thehindu.com/entertainment/movies/mt-vasudevan-nair-and-nine-shades-of-life/article67070579.ece. 
  8. "Ann Augustine makes re-entry, teams up with Indrajith for Rathish Ambat's web series". Mathrubhumi. 1 December 2021. Archived from the original on 15 July 2024. பார்க்கப்பட்ட நாள் 15 July 2024.
  9. "Priyadarshan's 'Olavum Theeravum' shot in black and white". Onmanorama. Archived from the original on 8 November 2023. பார்க்கப்பட்ட நாள் 14 July 2024.
  10. "'ഓളവും തീരവും' റീമേക്കിന് മോഹന്‍ലാലും പ്രിയദര്‍ശനും?" (in ml). Asianet News இம் மூலத்தில் இருந்து 15 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240715130051/https://www.asianetnews.com/entertainment-news/mohanlal-and-priyadarshan-to-remake-mt-vasudevan-nair-script-of-olavum-theeravum-r09bma. 
  11. "കടുഗണ്ണാവ ഒരു യാത്രാക്കുറിപ്പ്; എംടിയും രഞ്ജിത്തും മമ്മൂട്ടിയും ഒന്നിക്കുന്നു" (in ml). Mathrubhumi News. https://www.mathrubhumi.com/movies-music/news/kadugannawa-oru-yathrakurippu-mammootty-ranjith-mt-vasudevan-nair-movie-1.7718079. 
  12. "Manorathangal Trailer: Kamal Haasan, Mammootty, Mohanlal, Fahadh Faasil Bring MT Vasudevan Nair's Timeless Stories to Life" (in en). ETV Bharat இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716164416/https://www.etvbharat.com/en/!entertainment/manorathangal-trailer-kamal-haasan-mammootty-mohanlal-fahadh-faasil-bring-mt-vasudevan-nairs-timeless-stories-to-life-enn24071601773. 
  13. 13.0 13.1 "എംടിയുടെ രചനയില്‍ സിനിമയൊരുക്കാന്‍ പ്രിയദര്‍ശന്‍; ബിജു മേനോന്‍ നായകന്‍". Asianet News இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716045752/https://www.asianetnews.com/entertainment-news/priyadarshan-to-direct-a-movie-on-mt-vasudevan-nair-script-lead-role-by-biju-menon-qybzsu. 
  14. "Asif Ali, Madhoo team up for Aswathy Vasudevan Nair's segment Vilpana in Netflix anthology?" (in en). OTTPlay இம் மூலத்தில் இருந்து 26 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211026100839/https://www.ottplay.com/news/asif-ali-madhoo-team-up-for-aswathy-vasudevan-nair-segment-vilpana-in-netflix-anthology/680861e60f181. 
  15. "മാലിക്കിന് ശേഷം എം.ടിയുടെ ഷെർലക്ക്; മഹേഷ് നാരായണനും ഫഹദും വീണ്ടും ഒന്നിക്കുന്നു" (in ml). India Today இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716164416/https://malayalam.indiatoday.in/cinema/photo/mahesh-narayanan-and-fahad-fazil-sherlock-321629-2021-12-09. 
  16. "Captivated by cinema: Interview with film director Jayaraj" (in en). Onmanorama இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716165228/https://www.onmanorama.com/entertainment/interviews/2022/02/06/interview-film-director-jayaraj.html. 
  17. "'അഭയം തേടി, വീണ്ടും', എംടിയുടെ കഥയ്ക്ക് ദൃശ്യഭാഷ്യമൊരുക്കി സന്തോഷ് ശിവന്‍, കൂട്ടുകെട്ട് 30 വര്‍ഷത്തിന് ശേഷം" (in ml). The Cue இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716164416/https://www.thecue.in/videos/entertainment/film-news/mt-vasudevan-nair-santhosh-sivan-movie-abhayam-thedi-veendum. 
  18. "Ann Augustine to make her comeback through Indrajith, Rathish Ambat's segment Kadalkaattu in Netflix anthology" (in en). OTTPlay இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716164416/https://www.ottplay.com/news/ann-augustine-to-make-her-comeback-through-indrajith-rathish-ambat-s-segment-kadalkaattu-in-netflix-anthology/5f93476a2e265. 
  19. "Rathish Ambat on Manorathangal: Never dreamt I could direct an MT Vasudevan Nair script" (in en). OTTPlay இம் மூலத்தில் இருந்து 8 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240808172356/https://www.ottplay.com/interview/rathish-ambat-on-manorathangal-kadalkkattu-mt-vasudevan-nair-script/d6fcdf3eb6242. 
  20. "Mohanlal Begins Shooting For Priyadarshan's 'Olavum Theeravum' In Thodupuzha". The Times Of India. 10 July 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mohanlal-begins-shooting-for-priyadarshans-olavum-theeravum-in-thodupuzha/articleshow/92779872.cms. 
  21. "It's a wrap for Mohanlal-Priyadarshan's 'Olavum Theeravum'". The Times Of India. 18 July 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/its-a-wrap-for-mohanlal-priyadarshans-olavum-theeravum/articleshow/92946851.cms. 
  22. "MT Vasudevan Nair, Mollywood A-listers come together for Netflix anthology". Onmanorama. 12 January 2022. https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2022/01/12/mt-vasudevan-nair-mammootty-mohanlal-netflix-anthology.html. 
  23. "Mammootty, Ranjith to start shooting for Kadugannawa Oru Yathra next week". Cinema Express. 9 August 2022. https://www.cinemaexpress.com/malayalam/news/2022/Aug/09/mammootty-ranjith-to-start-shooting-forkadugannawa-oru-yathra-next-week-33592.html. 
  24. "Mammootty's 'Kadugannawa Oru Yathra' Wraps Up The Shoot". The Times Of India. 26 August 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mammoottys-kadugannawa-oru-yathra-wraps-up-the-shoot/articleshow/93794186.cms. 
  25. "It's a wrap for Mohanlal-Priyadarshan's 'Olavum Theeravum'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 July 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/its-a-wrap-for-mohanlal-priyadarshans-olavum-theeravum/articleshow/92946851.cms. 
  26. "ആ വ്യത്യസ്‍താനുഭവവുമായി എത്തി ഞെട്ടിച്ചത് മമ്മൂട്ടി; പക്ഷേ ആദ്യം ഷൂട്ട് പൂർത്തിയാക്കിയത് മോഹൻലാൽ". Asianet News. 22 February 2022. https://www.asianetnews.com/entertainment-news/mohanlal-completed-shoot-in-black-and-white-format-in-olavum-theeravum-before-bramayugam-starring-mammootty-nsn-s98uqv. 
  27. "Netflix drops Mohanlal, Mammootty and Fahadh Faasil's MT Vasudevan Nair anthology?". South Live. 2 June 2023. https://www.ottplay.com/news/netflix-drops-mt-vasudevan-nair-anthology-starring-mammootty-mohanlal-fahadh-after-tiff-with-producers/e5268ac3af319. 
  28. "Mammootty-Mohanlal starrer anthology series based on MT Vasudevan Nair's works set for OTT release". Mathrubhumi News. 14 July 2024. https://english.mathrubhumi.com/movies-music/news/mammootty-mohanlal-among-others-manoradhangal-scripted-by-mt-vasudevan-nair-set-for-ott-release-1.9724393. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரதங்கள்&oldid=4166815" இலிருந்து மீள்விக்கப்பட்டது