மரகத வீணை (திரைப்படம்)
மரகத வீணை (Maragatha Veenai) என்பது 1986 இல் கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சுரேஷ், ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 1986 மார்ச்சு 14 அன்று வெளியிடப்பட்டது.[1]
மரகத வீணை Maragatha Veenai | |
---|---|
தலைப்பு அட்டை | |
இயக்கம் | கோகுல கிருஷ்ணன் |
தயாரிப்பு | இராஜமாணிக்கம் |
திரைக்கதை | கோகுல கிருஷ்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுரேஷ் ரேவதி |
ஒளிப்பதிவு | பி. எஸ். பசவராஜ் |
படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் |
கலையகம் | நவீனா பிலிம்சு |
வெளியீடு | மார்ச்சு 14, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுகோகிலா ஒரு அனாதைக் குழந்தையாக கைவிடப்படுகிறார். அவரது இயல்பான பாடும் திறனால் ஈர்க்கப்பட்ட கர்நாடக இசைக்கலைஞரால் அழைத்துச் செல்லப்படுகிறார். அவரும் அவரது மனைவியும் அவளைத் தங்கள் குழந்தையாக வளர்த்தனர். அவரது தந்தை நோய்வாய்ப்பட்டதால், கோகிலா தனது குடும்பத்தில் வருமானம் ஈட்டுபம் ஒரே நபராக மாறுகிறார். வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கோகிலா ஒரு சிறிய கிராமத்திலுள்ள ஒரு பள்ளியில் புதிய இசை ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்குகிறார். அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியர் கண்ணன், கோகிலாவிடம் முதல் சந்திப்பிலிருந்தே முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். ஒரு காயத்திற்கு பின்னர் கோகிலா கண்ணனிடம் மனம் திருந்தி தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்கும் வரை அவர்களின் உறவு இதேபோலிருந்தது. இருவரும் விரைவில் காதலிக்கிறார்கள். கண்ணனின் தாயார் அவர்களின் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார். கோகிலாவை திடீரென்று வீட்டிற்கு அழைத்து, தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் சந்திரசேகருடன் தனது திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். அவளை உள்ளே அழைத்துச் சென்றவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல முடியாமல், அவள் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறாள். மேலும் கண்ணனுடனான உறவை முறித்துக் கொள்கிறாள். கண்ணன் தனது குடும்பத்தினரால் கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளப்படும்போது சந்திரசேகர் உண்மையை அறிந்துகொள்கிறார்.
நடிகர்கள்
தொகு- கண்ணனாக சுரேஷ்
- கோகிலாவாக ரேவதி
- மருத்துவர் சந்திரசேகராக வாகை சந்திரசேகர்
- பள்ளி தலைமை ஆசிரியராக கவுண்டமணி
- அக்னியாக மனோரமா
- பள்ளி எழுத்தராக செந்தில்
- கல்லாப்பெட்டி சிங்காரம் -தமிழ் ஆசிரியர்
- நகர மைனராக சங்கிலி முருகன்
- கண்ணனின் மாமாவாக வினு சக்ரவர்த்தி
- ஜே. வி. சோமயாஜுலு கோகிலாவின் வளர்ப்பு தந்தை
- கோகிலாவைத் தத்தெடுத்த தாயாக வடிவுக்கரசி
- இளம் கோகிலாவாக குழந்தை சோனியா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|
"சீ சீ போங்க" | மனோரமா, மலேசியா வாசுதேவன் | திருப்பத்தூரான் |
"எனை நீ பாடாதே" | எஸ். ஜானகி | வாலி |
"கண்ணா வா கவிதை சொல்வேன்" | வைரமுத்து | |
"இசையின் தெய்வம் அழைத்ததென்ன" | ||
"ஒரு பூவனக்குயில்" | மு. மேத்தா | |
"மரகத வீணை இசைக்கும் இராகம்" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் |
"சுத்த மாதுர்ய" | வெ. தட்சிணாமூர்த்தி, எஸ். ஜானகி | தியாகராஜர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maragatha Veenai (1986)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
- ↑ "Maragatha Veenai". AVDigital. Archived from the original on 12 ஏப்பிரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்பிரல் 2019.
- ↑ "Maragatha Veenai (1986)". Raaga.com. Archived from the original on 8 மார்ச்சு 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.