மறைமலை இலக்குவனார்

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

மறைமலை இலக்குவனார் என்னும் முனைவர் சி. இ. மறைமலை (பிறப்பு:திசம்பர் 14, 1946) தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம் கொண்ட தமிழறிஞர்.

மறைமலை இலக்குவனார்
பிறப்புதிசம்பர் 14, 1946
சிந்துபூந்துறை திருநெல்வேலி மாவட்டம்.
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர், முனைவர்
பணிபேராசிரியர்
பணியகம்சென்னை மாநிலக் கல்லூரி
அறியப்படுவதுசொல்லாக்கம், திறனாய்வு
பெற்றோர்முனைவர் சி. இலக்குவனார், மலர்க்கொடி
வாழ்க்கைத்
துணை
க. சுபத்ரா
பிள்ளைகள்முனைவர் நீலமலர்

பிறப்பு

தொகு

தமிழ்ப் பேராசிரியர் சி. இலக்குவனார் - மலர்க்கொடி இணையர்களின் மகனாக 1946ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 14ஆம் நாள் திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறை என்னுமிடத்தில் பிறந்தார். [1] தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் பெயரை இவருக்கு இவர்தம் பெற்றோர் இட்டனர்.

கல்வி

தொகு

மறைமலை தனது தொடக்கக் கல்வியை தன் தந்தையார் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் பெற்றார். அப்பள்ளிகளின் பட்டியல் வருமாறு: [2]

வ.எண் ஆண்டு பள்ளி ஊர் பயின்ற வகுப்பு
01 ? சத்திரிய நாடார் வித்தியாசாலை விருதுநகர் ?
02 ? ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சோளிங்கர் ?
03 ? குட்லட் பள்ளி அரியமங்கலம் ?
04 ? இசுலாமியர் பள்ளி ஈரோடு ?
05 ? தேசிக விநாயகர் தேவத்தானம் பள்ளி நாகர்கோவில் ?
06 ? சேதுலட்சுமிபாய் பள்ளி நாகர்கோவில் ?
07 ? செளராட்டிரா உயர்நிலைப் பள்ளி மதுரை ?
08 ? தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளி மதுரை ?
09 ? முக்குலத்தோர் முத்துத்தேவர் உயர்நிலைப் பள்ளி திருநகர் ?

பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று 1962-1963ஆம் கல்வி ஆண்டில் புகுமுக வகுப்பில் (Pre University Course) தேறினார். [3] அக்கல்லூரியிலேயே தொடர்ந்து பயின்று 1966ஆம் ஆண்டில் விலங்கியல் சிறப்புப் பாடத்தில் அறிவியல் இளவல்(Bachelor of Science) பட்டம் பெற்றார். [4] மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று 1969ஆம் ஆண்டில் கலைமுதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார்.

வடமொழியில் பயின்று 1977ஆம் ஆண்டில் பட்டயம் (Diploma in Sanskrit) பெற்றார்.

இக்காலத் தமிழில் சொல்லாக்கம் - ஆட்சித்துறைச் சொற்களில் ஒரு சிறப்பாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1984ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (Doctor in Philosophy) பெற்றார்.

எண்மக் காணொளி படைப்பாக்கத்தில் (Diploma in Digital Video Production) 2006ஆம் ஆண்டில் பட்டயம் பெற்றார்.

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி (4 - செப்டம்பர் - 1969ஆம் நாள் முதல் 1971 வரை), கிருட்டிணகிரி அரசு கலைக்கல்லூரி (1971 - 1974) ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சூன் 1974 முதல் 31 - மே - 2005 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

குடும்பம்

தொகு

உடன்பிறந்தோர்

தொகு

திருவேலன், தொல்காப்பியன் என்னும் திருவேங்கடம், திருவள்ளுவன், முனைவர் மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் ஆகிய பதின்மரும் பேராசிரியர் மறைமலைக்கு உடன்பிறந்தவர்கள். [5]

மனைவி

தொகு

பொருளாதாரப் பேராசிரியரான க. சுபத்ரா இவர்தம் வாழ்க்கைத் துணைவர்.

மகள்

தொகு

முனைவர் நீலமலர் செந்தில்குமார் இவர்தம் மகள் ஆவார்.

இதழாசிரியர்

தொகு

பேராசிரியர் சி. இலக்குவனார் நடத்திய குறள்நெறி இதழின் பொறுப்பாசிரியராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தார். தற்பொழுது செம்மொழிச் சுடர் என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார்.

சொற்பொழிவாளர்

தொகு
 
சொற்பொழிவாளர் மறைமலை இலக்குவனார்

உலகத் தமிழ் மாநாடுகள் உட்பட பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைச் சொற்பொழிவாற்றி உள்ளார். தற்பொழுது சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கும் இளம் கிறித்துவ ஆடவர் ஆணையத்தின் (Y.M.C.A) பொறுப்பில் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் இலக்கிய அமைப்பின் வழியாக வாழும் கவிஞர்களின் படைப்புகளைப் பற்றிய திறனாய்வுச் சொற்பொழிவை திங்கள்தோறும் 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.

சென்றுள்ள நாடுகள்

தொகு
 
மறைமலை இலக்குவனாரின் ஒளிப்படம் தாங்கிய மீண்டும் கவிக்கொண்டல் இதழ்

பேராசிரியர் தமிழ்ப்பணி ஆற்றுவதற்காக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சப்பான், மோரிசியசு, ஆத்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

புகழுரைகள்

தொகு
  • சிந்திக்கும் திறமும் சீர்திருத்தத் திருவும் கொண்டு நுண்ணிய நூல்களை ஆராய்ந்து நுழைபுலத்தோடு தான் எண்ணியவாறு எழுதும் திறர்தேர்திறம் டாக்டர் மறைமலைக்குக் கைவந்த கலையாக அமைகிறது - டாக்டர் ஒளவை து. நடராசன் [6]
  • அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார். – இளவல் [7]

படைப்புகள்

தொகு
வ.எண் ஆண்டு நூலட்டை நூல் பொருள் பதிப்பகம் மதிப்புரை
01 1977 இலக்கியக் கொள்கை திறனாய்வியல் நீலமலர் வெளியீட்டகம், சென்னை -5 மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படும் நூல் – ச. கு. கணபதி
02 1979 இலக்கியத் திறனாய்வு – ஓர் அறிமுகம் திறனாய்வியல் நீலமலர் வெளியீட்டகம், சென்னை -5 தமிழ்ப் பேராசிரியரான சி.இ.மறைமலை அவர்களின் விருப்பு வெறுப்பற்ற மனப்பண்பும் இலக்கிய ஆர்வமும் படிப்பறிவும் திறனாய்வில் அவருக்குள்ள ஈடுபாடும் இந்நூலில் நன்கு புலனாகின்றன – தீபம் நவம்பர் 1979
03 1986   புதுக்கவிதையின் தேக்கநிலை திறனாய்வு திருமகள் நிலையம், சென்னை 17 தமிழ்ப் புதுக்கவிதையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலைக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க இந்த திறனாய்வு முயற்சி செய்கிறது – இந்தியன் எக்சுபிரசு 28.10.1986.
04 1986   புதுக்கவிதை – முப்பெரும் உத்திகள் திறனாய்வு திருமகள் நிலையம், சென்னை 17 மரபில் ஆழங்கால்பட்டுப் புதுமையை ஆய்ந்துள்ள திறம் நன்று – டாக்டர் தி. லீலாவதி
05 1992   இலக்கியமும் சமூகவியலும் திறனாய்வு மணிவாசகர் நூலகம், சென்னை. இலக்கிய மாணவர் மட்டுமன்றி அனைவரும் பயில வேண்டிய நூல் –டாக்டர் அ. அ. மணவாளன்
06 1992   இலக்கியமும் உளவியலும் திறனாய்வு மணிவாசகர் நூலகம், சென்னை நூலாசிரியரின் அணுகுமுறை பாராட்டத்தக்கது – டாக்டர் கோ. இராசமோகன்
07 1992   சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை திறனாய்வு மணிவாசகர் நூலகம், சென்னை. புதிய நோக்கில் புதிய பார்வை – டாக்டர் பொன். கோதண்டராமன்
08 1992   இலக்கியமும் மார்க்சியமும் திறனாய்வு மணிவாசகர் நூலகம், சென்னை. மறைமலை கடுமையாக உழைத்திருப்பது நூலில் தெரிகிறது. – தா. பாண்டியன்
09 1995 பெண்ணியத் திறனாய்வு திறனாய்வு நீலமலர் வெளியீட்டகம், சென்னை 101. புத்தம் புதிய கருத்துகளின் தொகுப்பு – டாக்டர் சுப. திண்ணப்பன்
10 2002 சொல்லாக்கம் மொழியியல் தமிழ்மதி பதிப்பகம், தஞ்சாவூர் சொல்லாக்கவியல் பயன்பாட்டு முன்னோடி முயற்சி – புலவர் இரா. இளங்குமரன்
11 2003   அங்கதத்திற்கொரு தமிழன்பன் திறனாய்வு மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108. குறிப்பிட்ட கவிஞர் ஒருவரின் அங்கதம் குறித்துத் தமிழில் வெளிவரும் முழு முதல் நூல் – டாக்டர் வ. செயதேவன்
12 2004 திறனாய்வுச் சுடர் திறனாய்வு சேகர் பதிப்பகம் சென்னை 78 ஆய்வுத்தரவுகளையும் தகவல்களையும் நட்புணர்வுடனும் இணக்கமாகவும் சொல்லும் வல்லமை பெற்ற பேராசிரியர். – டாக்டர் இரா. மோகன்
10 2006   சி. இலக்குவனார் வாழ்க்கை வரலாறு சாகித்திய அகாதெமி, புதுதில்லி
11 2011 வைரமுத்துவின் வைகறைமேகங்கள் திறனாய்வு
12 2012 உலகப் பேராசான் மு.வ. வாழ்க்கை வரலாறு மணிவாசகர் பதிப்பகம், சென்னை
13 தலைகீழ் கவிதை
14 2006 A cluster of stars கவிதை மொழிபெயர்ப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. மீண்டும் கவிக்கொண்டல் இதழ், நவம்பர் 2011, பக்கம் 20
  2. மறைமலை இலக்குவனார் தனது முகநூல் சுவற்றில் 2013 - 09 - 05 ஆம் நாள் - ஆசிரியர் நாள் - எழுதிய குறிப்பு
  3. http://www.facebook.com/maraimalai.ilakkuvanar/info
  4. பேராசிரியர் மறைமலை 27.02.2013ஆம் நாள் அரிஅரவேலனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்
  5. குன்றக்குடி பெரிய்பெருமாள் எழுதிய முத்தமிழ்ப் போர்வாள் முதுபெரும் புலவர் முனைவர் சி. இலக்குவனார் என்னும் கட்டுரை, தமிழரசி 9.7.1995
  6. சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை நூலின் பின்னட்டை
  7. மீண்டும் கவிக்கொண்டல் இதழ், நவம்பர் 2011, பக்கம் 19

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைமலை_இலக்குவனார்&oldid=3493546" இலிருந்து மீள்விக்கப்பட்டது