மலாய் உலகில் தமிழ் கல்வெட்டுகள்

தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவில் முதன்மையாக சுமத்ரா மற்றும் தீபகற்ப தாய்லாந்தில் இடைக்காலத்தைச் சேர்ந்த பல தமிழ்க் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்லெழுத்துகள் தென்னிந்தியாவிற்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவின் சில பகுதிகளுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்புகளினால் நேரடியாக எழுந்தன. இந்த வெளிநாட்டு தமிழ் கல்வெட்டுகளில் பல நன்கு அறியப்பட்ட இடைக்கால தென்னிந்திய வணிகக்குழுக்களைக் குறிப்பிடுகின்றன. [1]

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் கல்வெட்டுகளும், தென்னிந்தியாவில் இருந்து வந்த இந்து மற்றும் பௌத்த சின்னங்களும் தென்கிழக்கு ஆசியாவில் (மற்றும் தென் சீனாவின் சில பகுதிகளில் கூட) கண்டறியப்பட்டுள்ளன.[சான்று தேவை]

மலாய் தீபகற்பத்தில், தெற்கு தாய்லாந்தில் உள்ள காவோ ஃபிரா நாராய் வைணவச் சிலைகளுக்கு வெகு தொலைவில் உள்ள தகுபா நகரில் வாட் நா மியாங் என்ற கோயிலில் தமிழ் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணிகிராமத்தார் ( கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியின் கூற்றுப்படி வணிகக்குழு) என்ற குழுவைச் சேர்ந்த நாங்கூர் உடையானால் அங்கு திருமாள் குளம் ஒன்று தோண்டப்பட்டது.

மணிக்கிராமத்தாருக்கு பாதுகாப்பாக சேனாமுகம் தமிழர் படை துணையாக இருந்தது. மணிகிராமத்தார் அந்தக் குளத்துக்கு ஆவணி நாராயணம் என்ற பெயர் வைத்தனர். இதை அந்த சிறிய கல்வெட்டு குறிக்கிறது. அது நாங்கூரில் படைத்துறை நிலமாணியத்தை வைத்திருந்த ஒரு நபரின் பெயராகும். அவர் போர்வீரனாகப் புகழ்பெற்றார். அவனி நாராயணன் என்பது 826 முதல் 849 வரை ஆண்ட பல்லவ மூன்றாம் நந்திவர்மனின் பட்டப்பெயர் என்பதால், இந்தக் கல்வெட்டின் தோராயமான தேதியை நாம் அறியலாம். [2] :107

தப்ராலிங்கத்தின் தலைநகரில் ஒரு வழிபாட்டிடம் உள்ளது. அதில் பிள்ளையாரின் வெண்கலப் படிமம் நவீன எழுத்துக்களில் மஜாபிசேதேசா என்ற தமிழ் கல்வெட்டுடன் உள்ளது. [3]

நியூசு கல்வெட்டு

தொகு

சற்றுப் பிற்காலத்திய தமிழ்க் கல்வெட்டு அண்மையில் நியூசு அச்சே, அச்சே என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டின் தேதி தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மண்டபம் என்ற தனிச்சொல்லைத் தவிர, கல்வெட்டின் முழு முன்பகுதியும் தெளிவாகத் தெரியவில்லை. இது ஒரு கோயில் அடித்தளம் அல்லது கொடையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பின்புறத்தில் உள்ள கலவெட்டு தெளிவாக உள்ளது.

இந்த கல்வெட்டின் தோராய மொழிபெயர்பானது பொருட்களின் இழப்புகள், வட்டி வசூல் தள்ளுபடி மற்றும் அரச சுங்கக் கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக விதிமுறைகளைக் கையாள்வதாகக் கூறுகிறது. உரையின் தெளிவான பகுதி எந்த வணிகக் குழுவின் பெயரையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் "மக்கள்" என்ற குறிப்பு வணிகக்குழு குறித்ததாக இருக்கலாம். தென்னிந்தியாவில் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் வணிகக்குழுக்களை - குறிப்பாக ஐந்நூற்றுவர் போன்றோரை குறிக்கின்றன [4]

கெடா கல்வெட்டு

தொகு

பண்டைய கெடாவில் ஒரு முக்கியமான மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத இந்துக் குடியேற்றம் இருந்துள்ளது, இது கர்னல் லோவின் கண்டுபிடிப்புகள் மூலம் அறியப்படுகிறது. மேலும் அண்மையில் டாக்டர் குவாரிட்ச் வேல்ஸின் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. டாக்டர் வேல்ஸ் கெடாவைச் சுற்றி ஏறக்குறைய முப்பது இடங்களை ஆய்வு செய்தார். பல நூற்றாண்டுகளாக பௌத்த மற்றும் இந்துக்களின் வலுவான தென்னிந்திய செல்வாக்கின் கீழ் வந்த மக்களால் இந்த தளம் தொடர்ச்சியான குடியிருப்பா இருந்ததை அதன் முடிவுகள் காட்டுகின்றன. [5]

செவ்வக வடிவிலான கல் பட்டையில், கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் தமிழ் வட்டெழுத்துக்களில் [6] யே-தர்ம சூத்திரத்தைத் தாங்கி நிற்கிறது, இதனால் ஃபைன்ட்-ஸ்பாட் (தளம் I) க்கு அருகில் உள்ள சன்னதியின் பௌத்த தன்மையை அறிவிக்கிறது, அதில் அடித்தளம் மட்டுமே உள்ளது. இது பல்லவ எழுத்துக்களில் அல்லது வட்டெழுத்தில் கி.பி 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து, ஒருவேளை அதற்கு முந்தையதாகவும் இருக்கலாம்..

பாரஸ் கல்வெட்டு

தொகு

இந்தோனேசியாவின் வடக்குச் சுமாத்திரா மாகாணத்தில் உள்ள லோபோ துவாவில் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் கி.பி 1088 தேதியிட்ட தமிழ் கல்வெட்டான லோபோ துவா கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சோழ ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்ற "திசை ஆயிரத்து ஐநூற்றுவர்" என்ற தமிழ் வணிகக்குழுவால் நிறுவப்பட்டது. கல்வெட்டு "வாரோச்சிலுள்ள வேளாபுரத்தில் சந்தித்தோம்" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. [7] "வரோசு" என்பது பாருஸ் ஆகும், இது லோபு துவாவிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஒரு பண்டைய துறைமுகமாகும். இது 9 ஆம் நூற்றாண்டிலிருந்து கற்பூரம் மற்றும் சாம்பிராணி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. இந்த மதிப்புமிக்க பொருட்களுக்கு சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக தேவை இருந்தது. இவை வடக்கு சுமத்ராவின் உள்நாட்டில் உள்ள காடுகளில் இருந்து வந்தன. அங்கிருந்து பாரூஸுக்கு கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. பாரஸுக்கு வந்து கற்பூரத்தையும் சாம்பிராணியையும் உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து வாங்கும் வெளிநாட்டு வணிகர்களில் தமிழரும் இருந்தனர்.

1017 மற்றும் 1025 ஆம் ஆண்டுகளில், சோழ மன்னர்கள் மலாக்கா நீரிணையில் உள்ள ஸ்ரீவிஜயாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களைத் தாக்குவதற்காக கடற்படையை அனுப்பியுள்ளனர். இந்த வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, சோழர்கள் 11 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலப் பகுதியில் இப்பகுதி விசயங்களில் தலையிடும் நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இது சுமத்ராவில் தமிழ் வணிக்க் குழுக்களின் இருப்பை அதிகரிக்க வைத்தது. [8]

தஞ்சை கல்வெட்டு

தொகு

தமிழ்நாட்டின் பண்டைய நகரமான தஞ்சாவூரில் 1030 க்கு முந்தைய கல்வெட்டுகள் உள்ளன. இதில் மலாக்கா நீரிணையில் உள்ள துறைமுகங்கள் இராசேந்திர சோழனால் அனுப்பபட்ட கடற்படையால் தாக்கப்பட்டதன் பட்டியலைக் கொண்டுள்ளது. சுமத்ராவில் உள்ள ஜம்பி மாகாணத்தில் கி.பி. 1064 தேதியிட்ட ஒரு பெரிய கல்லாலான மகரம் கிடைத்தது. இது 11 ஆம் நூற்றாண்டில் ஜாவாவுடன் வலுவான இணைப்புடன் ஜம்பியில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தி மீண்டும் தோன்றியதற்கு சாட்சியாக உள்ளது. [9] இராஜேந்திர சோழன் தாக்கியதாக சொல்லப்படும் இடங்கள் பின்வருமாறு::

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

 

  1. Jan Wisseman Christie, "The Medieval Tamil-language Inscriptions in Southeast Asia and China", Journal of Southeast Asian Studies, Vol. 29, No. 02, September 1998, pp 239-268
  2. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  3. K. A. Nilakanta Sastri (1949). "Takuapa and its Tamil Inscription Part I.". Malayan Branch of the Royal Asiatic Society 22. 
  4. The medieval Tamil-language inscriptions in Southeast Asia and China
  5. Sastri, K.A. Nilakanta (1949). South Indian Influences in the Far East. Bombay: Hind Kitabs Ltd. pp. 82& 84.
  6. Vinodh Rajan (April 2, 2012). "Ye Dhamma - The Verse of Causation". Vinodh's Virtual Cyber Space. Archived from the original on April 13, 2012. பார்க்கப்பட்ட நாள் April 13, 2012. The Pali verse 'Ye Dhamma... ' is a popular verse in Buddhism that explains the heart of Buddhism Philosophy i.e Dependant Origination. The Sanskrit version of the verse is called "Pratityasamutpada Hridaya Dharani" [The Heart Dharani of Dependant Origination] with Om added to the beginning of the Verse, and Svaha added at the end, thus Dharani-fying the entire verse. The Pali version never seems to have had any specific title.
  7. Leonard Y. Andaya, Leaves of the same tree: trade and ethnicity in the Straits of Melaka, p. 151
  8. Pierre-Yves Manguin, “Srivijaya, An Introduction”
  9. Pierre-Yves Manguin, Śrīvijaya, An Introduction, Nalanda-Sriwijaya Centre, 2009
  10. "Philippines- A Tamil Hindu Colony?".

குறிப்புகள்

தொகு