மாகே
மாகே (Mahé) அல்லது மய்யழி (Mayyazhi) என்பது இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியாகும். இது கேரளாவினால் சூழப்பட்டுள்ளது. இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. இதன் பரப்பு 9 சதுர கி.மீ ஆகும். இதன் மூன்று பக்கங்களை கண்ணூர் மாவட்டமும், ஒரு பக்கத்தில் கோழிக்கோடு மாவட்டமும் சூழ்ந்து உள்ளது.
மாகே | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம்: மாகே, புதுச்சேரி
| |||||||
ஆள்கூறு | 11°41′38″N 75°32′13″E / 11.69389°N 75.53694°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பிரதேசம் | புதுச்சேரி | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன்[1] | ||||||
முதலமைச்சர் | வி. நாராயணசாமி, ந. ரங்கசாமி[2] | ||||||
மக்களவைத் தொகுதி | மாகே | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
36,823 (2001[update]) • 4,091/km2 (10,596/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi) • 0 மீட்டர்கள் (0 அடி) | ||||||
குறியீடுகள்
|
முன்னர் பிரெஞ்சு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த மகே இப்போது மகே மாவட்டத்தில் ஒரு நகராட்சியை கொண்டதாக உள்ளது. இது புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். புதுச்சேரி சட்டமன்றத்தில் மகேவுக்கு ஒரு பிரதிநிதி இருக்கிறார்.
இது கோழிக்கோட்டிலிருந்து 58 கி.மீ. தொலைவிலும் கண்ணூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தளிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை 17 இந்நகரின் வழியே செல்கிறது. மய்யழிப்புழா எனப்படும் மாகே ஆற்றின் கழிமுகத்தில் மாகே நகரம் உள்ளது.
பெயர்க்காரணம்
தொகுஅழியூர் என்னும் கிராமத்தின் பகுதியாக இருந்தது மய்யழி. அழி என்றால் கடலும் புழையும் சேரும் இடம் என்று பொருள். மய்யம் என்றால் நடுவில் என்றொரு பொருளும் உண்டு. அழியூருக்கும் மற்றொரு ஊருக்கும் நடுவில் இருப்பதால் "மய்யழி" என்ற பெயரைப் பெற்றது எனவும் கூறுவர். பிரஞ்சுக்காரர் இந்நகரைக் கைப்பற்றியதிலிருந்து இது மாகே என்று அழைக்கப்பெற்றது.
வரலாறு
தொகுஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்திய துணைக்கண்டத்துக்குள் நுழைவதற்கு முன்பு, இந்த பகுதி கோலாட்டு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது, இதில் துளுநாடு, சிரக்கல், கடத்தநாடு ஆகியவை அடங்கும். ஆண்ட்ரே மூலாண்டினுக்கும் வதகராவின் மன்னர் வாழுன்னாவருக்கும் இடையே 1721 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் 1724 ஆம் ஆண்டில் மஹே என்ற இடத்தில் ஒரு கோட்டையைக் கட்டியது. 1741 ஆம் ஆண்டில், மஹாதே டி லா போர்டோனாய்ஸ் மராட்டியர்களின் குறுகிய கால ஆக்கிரமிப்பிற்குப் பிறகு நகரத்தை மீண்டும் கைப்பற்றினார்.
1761 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் மகியைக் கைப்பற்றினர். அவர்கள் மாகியை கடத்தநாடு மன்னரிடம் ஒப்படைத்தனர். 1763 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்கள் மகியை பிரெஞ்சுக்காரர்களிடம் மீண்டும் ஒப்படைத்தனர். இதற்கடுத்து 1779 ஆம் ஆண்டில், ஆங்கிலோ-பிரெஞ்சு போர் வெடித்தது, இதன் விளைவாக பிரெஞ்சு மகேயை மீண்டும் இழந்தது. 1783 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள பிரஞ்சு பகுதிகளை பிரெஞ்சுக்காரர்களிடமே விட்டடுவிட ஒப்புக்கொண்டதால் மறுபடியும் மாகி பிரஞ்சு கைக்கு கி.பி. 1785 ஆம் ஆண்டில் கைமாறியது.[3]
1793 இல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் வெடித்தபோது, ஜேம்ஸ் ஹார்ட்லியின் கீழ் ஒரு பிரித்தானிய படை மகேவைக் கைப்பற்றியது. 1816 ஆம் ஆண்டில் நெப்போலியப் போர்கள் முடிந்தபின்னர், 1814 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்கள் மகேவை பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர்.
1816 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட காலத்துக்கு மய்யழி ஒரு சிறிய பிரெஞ்சு காலனியாக, பிரித்தானியாவின் இந்தியாவுக்குள் உள்ள ஒரு இடமாக இருந்தது. 1947 ஆகத்து 15 அன்று இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலைப் பெற்ற பிறகும், இங்கு பிரஞ்சு ஆட்சி தொடர்ந்துவந்தது. மாகேவை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கவேண்டும் என்ற போராட்டம் மக்கள் மத்தியில் வலுத்து போராட்டமாக மாறியது. இப்பகுதியில் பிரெஞ்சு ஆட்சியானது 13 சூன் 1954 இல் முடிவுக்கு வந்தது.
பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறிய பிறகு, மகே புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் ஒரு மாவட்டமாக மாறியது. மகேவின் பகுதியானது வடக்கில் மய்யாழி புழா முதல் தெற்கே அழியூர் வரை உள்ளது. மகே என்பது மகே நகரம் மற்றும் நளுதாராவை உள்ளடக்கியது, இதில் பல்லூர், சாலகர, செம்ப்ரா பாண்டக்கல் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. 1760 களில் மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளரான ஹைதர் அலி, ஆங்கிலேயர்களை எதிர்க்க பிரஞ்சுக்காரர்கள் செய்த உதவியைப் பாராட்டும் விதமாக நலுத்தாராவை பிரெஞ்சுக்காரர்களுக்கு பரிசளித்தார்.
அரசியல்
தொகுஇது புதுச்சேரி சட்டமன்றத்துக்கு மாகி சட்டமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியப் பாராளுமன்றத் தேர்தலுக்கு புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[4] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4]
உட்பிரிவுகள்
தொகுஇங்கு ஐந்து வருவாய் கிராமங்கள் உள்ளன.
- மாகே
- சாலக்கரை
- பந்தக்கல்
- பல்லூர்
- செறுகல்லாயி
- செம்பிரை
மாகே நகராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மேலுள்ள ஆறு ஊர்களே 15 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
புனித தெரேசா கத்தோலிக்க கோவில்
தொகுமாகே பிரஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது அங்கு கட்டப்பட்ட கத்தோலிக்க கோவில் அவிலாவின் புனித தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அங்கு கிறித்தவ சமயத்தைப் பரப்ப இத்தாலியிலிருந்து வந்த கார்மேல் சபைத் துறவி அருள்திரு தோமினிக் அக்கோவிலை 1736ஆம் ஆண்டில் கட்டினார்.[5] அக்கோவில் பற்றிய வரலாறு கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது. புனித தெரேசாவின் திருவுருவத்தோடு வந்த ஒரு கப்பல் மாஹே கடலோரம் வந்தபோது திடீரென்று அங்கிருந்து நகர மறுத்துவிட்டதாம். அப்பகுதி மக்கள் புனித தெரேசாவின் திருவுருவத்தைத் தம் நகரில் நிறுவி, அதற்கு ஒரு கோவில் கட்டி எழுப்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாகத் தெரிகிறது என்று கூறினராம். எனவே அத்திருவுருவம் கப்பலிலிருந்து இறக்கப்பட்டது. கப்பலும் நகரத் தொடங்கியது. புதிதாகக் கட்டிய கோவிலில் புனித தெரேசாவின் திருவுருவம் நிறுவப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் புனித தெரேசாவுக்கு விழாக் கொண்டாடப்படுகிறது.
அந்த விழாவில் கத்தோலிக்க கிறித்தவரும் பிற மதத்தினரும் கலந்துகொள்கின்றனர். புனித தெரேசாவின் திருவிழா அக்டோபர் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மாகே நகரில் அத்திருவிழா அக்டோபர் 5ஆம் நாளிலிருந்து 22ஆம் நாள்வரை நிகழ்கின்றது. முக்கிய விழா நாள்கள் அக்டோபர் 14-15 ஆகும்.
மாகே நகரில் அமைந்த புனித தெரேசா கோவில் கேரளத்தின் கண்ணூர் மறைமாவட்டத்தின் பகுதியாக விளங்குகின்றது. அங்கு மலையாளம் பேசும் கத்தோலிக்கரும் தமிழ் பேசும் கத்தோலிக்கரும் உள்ளனர்.
வெளி இணைப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/ltgovernor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "History of Mahé". Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 28 April 2013.
- ↑ 4.0 4.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-28.
- ↑ மாஹே நகரில் உள்ள புனித தெரேசா கோவில்