மிடாப்பாடி

மிடாப்பாடி (MIDAPADI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்)[4][5]. பழனி வருவாய் வட்டத்தில் இரண்டாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:2) ஆகும்.[6]

மிடாப்பாடி
—  கிராமம்  —
மிடாப்பாடி
அமைவிடம்: மிடாப்பாடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°33′34″N 77°23′55″E / 10.559319°N 77.398714°E / 10.559319; 77.398714
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வயலூரிலிருந்து சுமார் 4 கி.மீ.தூரம் வடக்கிலும், மடத்துக்குளத்தில் இருந்து 9 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 535 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 1 (ஒரு) கி.மீ தூரத்தில் மேற்கில் அமராவதி ஆறு ஓடுகிறது.[7]

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிடாப்பாடிகிராமத்தில் 581 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 2141 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.93%. இதில் 1060 பேர் ஆண்கள்; 1081 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 2 மட்டுமே உள்ளது.[8]

முக்கிய பயிர்

தொகு

இங்கு அமராவதி ஆற்றின் படுகைப் பகுதியில் உயர் ரக, ஒட்டுத் தென்னை அதிகம் உள்ளது. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் தோட்டப் பயிர்களான காய்கறிகள் பயிரிடப் படுகிறது.

நிருவாக அமைப்பு

தொகு

கிராமத்தின் தகவல்கள்

தொகு
  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 587 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 1265.95.5 ஹெக்டேர்- (3128.26 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை :


அடிக்குறிப்பு

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0006&tlkname= பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் palani #MAP
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.559319&lon=77.398714&z=16&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிடாப்பாடி&oldid=3567598" இலிருந்து மீள்விக்கப்பட்டது