முதன்மை பட்டியைத் திறக்கவும்

மித்திர வெத்தமுனி (Mithra de Silva Wettimuny, மித்திர வெத்திமுனி, 11 சூன் 1951 – 20 சனவரி 2019) இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1][2]

மித்திர வெத்தமுனி
Mithra Wettimuny
මිත්‍ර වෙත්තමුනි
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் மித்திர டி சில்வா வெத்திமுனி
துடுப்பாட்ட நடை வலக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 22) 4 மார்ச், 1983: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு 11 மார்ச், 1983: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 31) 2 மார்ச், 1983: எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாபமுதபஅ
ஆட்டங்கள் 2 1 9 3
ஓட்டங்கள் 28 2 268 49
துடுப்பாட்ட சராசரி 7.00 2.00 17.86 16.33
100கள்/50கள் -/- -/- –/1 –/–
அதிக ஓட்டங்கள் 17 2 55 46
பந்து வீச்சுகள் - - 30
இலக்குகள் - - - -
பந்துவீச்சு சராசரி - - - -
சுற்றில் 5 இலக்குகள் - - -
ஆட்டத்தில் 10 இலக்குகள் - - - -
சிறந்த பந்துவீச்சு - - - -
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- -/- 7/– –/–

24 சனவரி, 2019 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

பன்னாட்டு விளையாட்டுதொகு

வெத்திமுனி ஆரம்பத்தில் 1969/70 ஆம் ஆண்டுப் பகுதியில் பாடசாலைகள் துடுப்பாட்ட அணியின் தலைவராக இந்தியாவில் விளையாடினார். இவ்வணியில் பின்னாளைய இலங்கைத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள் பந்துல வர்ணபுர, துலிப் மென்டிஸ் ஆகியோருடன் இணைந்து விளையாடினார். 1982 இல் இலங்கை தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றதை அடுத்து, வெத்திமுனி தேர்வு அணியில் இணைந்து 1983 இல் விளையாடினார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Mithra, second of illustrious Wettimuny brothers passes away". Daily News. பார்த்த நாள் 21 January 2019.
  2. "Former Test Cricketer Mithra Wettimuny passes away". The Papare. பார்த்த நாள் 21 January 2019.

வெளி இனைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்திர_வெத்தமுனி&oldid=2784378" இருந்து மீள்விக்கப்பட்டது