மீனாட்சிபுரம், நாகர்கோவில்
மீனாட்சிபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில்[1][2][3][4] பகுதியில், 8°10′57.4″N 77°26′08.6″E / 8.182611°N 77.435722°E (அதாவது, 8.182611°N, 77.435708°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 46 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். நாகர்கோவில், கோட்டாறு, வடிவீஸ்வரம், வடசேரி, இடலாக்குடி, இளங்கடை மற்றும் சுசீந்திரம் ஆகியவை மீனாட்சிபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மீனாட்சிபுரம், நாகர்கோவில்
Meenakshipuram, Nagercoil மீனாட்சிபுரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 8°10′57.4″N 77°26′08.6″E / 8.182611°N 77.435722°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 46 m (151 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629001 |
தொலைபேசி குறியீடு | +914652xxxxxx |
வாகனப் பதிவு | TN 74 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | நாகர்கோவில், கோட்டாறு, வடிவீஸ்வரம், வடசேரி, இடலாக்குடி, இளங்கடை மற்றும் சுசீந்திரம் |
மாநகராட்சி | நாகர்கோவில் மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | விஜய் வசந்த் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | எம். ஆர். காந்தி |
இணையதளம் | www.nagercoilcorporation.in |
மீனாட்சிபுரத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை ஒன்று உள்ளது.[5][6] இதன் அருகிலேயே அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது.[7] பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, கம்பீரமாகக் காட்சியளிக்கும் மணிக்கூண்டு ஒன்று இங்கு நான்கு சாலைகளின் சந்திப்பில் உள்ளது.
மீனாட்சிபுரம் பகுதியில் துணிக்கடைகள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இங்கு வரும் மக்களால், மீனாட்சிபுரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.[8] மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பட்டாசு, காகித, நெகிழி நட்சத்திரங்கள், துணிகள் மற்றும் இதர பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் காலை முதல் இரவு வரை காணப்படுகிறது.[9] டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரி, தன் கிளை ஒன்றை மீனாட்சிபுரத்தில் அமைத்துள்ளது. டைடன் கடிகாரம் விற்பனையகம் டைடன் உலகம் ஒன்றும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
மீனாட்சிபுரம் பகுதியானது, நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் எம். ஆர். காந்தி ஆவார். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக விஜய் வசந்த், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jīvā oru palkalaikkal̲akam. Vijayā Patippakam. 2001.
- ↑ Kirunṣṇanātan̲, Ta (2000). Ayyā Vaikuṇṭarin̲ vāl̲vum cintan̲aiyum. Tiṇai Veḷiyīṭṭakam.
- ↑ Kālaccuvaṭu. Sundara Ramaswamy. 2002.
- ↑ Press in India (in ஆங்கிலம்). Office of the Registrar of Newspapers. 1867.
- ↑ "அரசு விரைவு போக்குவரத்து கழகம பணிமனை இடமாறுகிறது அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கம்-செட்டிக்குளம், ராணித்தோட்டம் டெப்போக்கள் ஆய்வு". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
- ↑ மாலை மலர் (2022-12-06). "நாகர்கோவிலில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மகா சபாவினர் கைது" (in ta). https://www.maalaimalar.com/news/district/kanniyakumari-newshindu-maha-sabha-members-who-tried-to-protest-today-in-nagercoil-were-arrested-545551.
- ↑ மாலை மலர் (2022-12-14). "நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நுழையும் வாகனங்களுக்கு ரூ.500 அபராதம்" (in ta). https://www.maalaimalar.com/news/district/kanniyakumari-news500-fine-for-vehicles-entering-nagercoil-anna-bus-stand-548611.
- ↑ மாலை மலர் (2022-10-16). "நாகர்கோவிலில் இன்று கடை வீதிகளில் குடும்பத்தோடு குவிந்த பொதுமக்கள்" (in ta). https://www.maalaimalar.com/news/district/kanyakumari-newsin-nagercoil-today-people-gathered-with-their-families-in-the-shopping-streets-524983.
- ↑ மாலை மலர் (2022-12-24). "கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்" (in ta). https://www.maalaimalar.com/news/district/kanyakumari-newschristmas-new-year-shopping-streets-are-crowded-with-people-552758.