மெய்தும் பிரமிடு

மெய்தும் பிரமிடு (Meidum, Maydum or Maidum), பண்டைய வடக்கு எகிப்தில் அமைந்த தொல்லியல் களம் ஆகும். இத்தொல்லியல் களத்தில் மெய்தும் பிரமிடு போன்ற பெரிய பிரமிடுகளும் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட மஸ்தபா எனும் நித்திய வீடுகளும் கொண்டது. இத்தொல்லியல் கட்டிட அமைப்புகள் தற்போது சிதைந்த நிலையில் உள்ளது.[1] மெய்தும் பிரமிடு, கெய்ரோ நகரத்திற்கு தெற்கில் 72 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மெய்தும் பிரமிடு
மெய்தும் பிரமிடின் காட்சி
ஆள்கூறுகள்29°23′17″N 31°09′25″E / 29.38806°N 31.15694°E / 29.38806; 31.15694
வகைபடிக்கட்டு பிரமிடு
உயரம்65 மீட்டர்கள் (213 அடி) (சிதிலமடைந்துள்ளது); 91.65 மீட்டர்கள் (301 அடி) அல்லது 175 முழம்
தளம்144 மீட்டர்கள் (472 அடி) அல்லது 275 முழம்
சரிவு51°50'35"
மெய்தும் பிரமிடு is located in Egypt
மெய்தும் பிரமிடு
வடக்கு எகிப்தில் மெய்தும் பிரமிடின் அமைவிடம்
மெய்தும் பிரமிடின் அமைப்பின் வரைபடம்

பழைய எகிப்திய இராச்சியத்தை 24 ஆண்டுகள் ஆண்ட மூன்றாம் வம்சத்தின் இறுதி மன்னர் ஹுனிக்காக (ஆட்சிக் காலம்: கிமு 2637 - கிமு 2613) மெய்தும் பிரமிடு கட்டத் துவங்கப்பட்டது.[2]மெய்தும் பிரமிடை படிக்கட்டு பிரமிடுவாக நான்காம் வம்சத்தின் முதல் மன்னர் சினெபெரு கட்டி முடித்தார்.[3]

அகழாய்வுகள்

தொகு
 
கீழ் எகிப்தில் மெய்தும் பிரமிடின் அமைவிடத்தின் வரைபடம்

மெய்தும் பிரமிடு தொல்லியல் களத்தை முதன்முதலில் ஜான் சே பெர்ரிங் என்பவர் 1837-இல் அகழாய்வு செய்தார். பின்னர் 1843ல் கார்ல் ரிச்சர்டு லெப்சிஸ் அகழாய்வு செய்தார். பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் பிளிண்டர் பெட்ரீ இத்தொல்லியல் வளாகத்தில் நினைவுக் கோயில் ஒன்றை கண்டுபிடித்தார். 1920-ஆம் ஆண்டில் லூடிங் போர்ச்சர்டு, ஆலன் ரோவ் மற்றும் 1970-இல் அலி எல் கோலி இத்தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தனர்.

மெய்து பிரமிடு கட்டிட அமைப்பு

தொகு

மெய்தும் பிரமிடின் உயரம் 213 அடி அல்லது 65 மீட்டர் அல்லது 175 முழமும், அடித்தளம் 472 அடி அல்லது 144 மீட்டர் அல்லது 275 முழமும் கொண்டது. இப்பிரமிடு படிக்கட்டு பிரமிடு வகையைச் சேர்ந்தது.

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "BBC - History - Ancient History in depth: Development of Pyramids Gallery". www.bbc.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  2. Atalay, Bulent Math and the Mona Lisa (Smithsonian Books/HarperCollins, 2006), p. 64
  3. Mendelssohn, Kurt (1974), The Riddle of the Pyramids, London: Thames & Hudson

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

  பொதுவகத்தில் மெய்தும் பிரமிடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.

சாதனைகள்
முன்னர் பிரமிடு
கிமு 2610 – கிமு 2600
65 மீ
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்தும்_பிரமிடு&oldid=3613117" இலிருந்து மீள்விக்கப்பட்டது