மேற்கு ஐரோப்பிய நேரம்
மேற்கு ஐரோப்பிய நேரம் (மே.ஐ.நே) (ஆங்கில மொழி: Western European Time - WET, ஒ.ச.நே±00:00) என்பது மேற்கு ஐரோப்பாவில் புழக்கத்தில் உள்ள நேர வலயம் ஆகும். இது கிரீன்விச் இடைநிலை நேரம் எனவும் அழைக்கப்படுகிறது.[1][2] ஐரோப்பிய ஒன்றியத்தில் புழக்கத்தில் உள்ள மூன்று நேர வலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனையவை: மத்திய ஐரோப்பிய நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம் ஆகியவை ஆகும்.[2][3]
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
குளிர்கால நேரம்
தொகுபின்வரும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பிராந்தியங்களும் ஒசநே±00:00 நேரவலயத்தை குளிர்கால மாதங்களில் பயன்படுத்துகின்றன:
- போர்த்துகல், 1912 முதல் (அசோரசு தவிர்த்து, ஒ.ச.நே - 01:00)[4]
- ஐக்கிய இராச்சியம், (1847 முதல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, வேல்ஸ், கால்வாய் தீவுகள், மாண் தீவு), (1916 முதல் வட அயர்லாந்து[5][6][7]
- அயர்லாந்து, 1916 முதல்,[8] (1968 முதல் 1971 வரை தவிர்த்து)[9][10]
- கேனரி தீவுகள், 1946 முதல் (எசுப்பானியாவின் ஏனைய பகுதிகளில் மஐநே, ஒசநே+01:00)[11]
- பரோயே தீவுகள், 1908 முதல்[12]
- மதீரா தீவுகள், 1912 முதல்[4]
- வடகிழக்கு கிறீன்லாந்து[13]
- ஐசுலாந்து, 1968 முதல் (ஆண்டு முழுவதும்)[14]
கோடை நேரம்
தொகுஐசுலாந்து தவிர்ந்த மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும்[15] கோடைகாலத்தில் பகலொளி சேமிப்பு நேரத்தைக் கடைப்பிடிக்கின்றன. மார்ச் மாதத்தின் இறுதி ஞாயிறு முதல் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இந்நாடுகளில் நேரம் மேற்கு ஐரோப்பிய நேரத்தில் இருந்து 1 மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படுகின்றன. இது மேற்கு ஐரோப்பிய கோடை நேரம் (WEST, ஒசநே+01:00) என அழைக்கப்படுகின்றது.[16] ஐக்கிய இராச்சியத்தில் இது பிரித்தானிய கோடை நேரம் எனவும், அயர்லாந்தில் ஐரிய சீர் நேரம் எனவும் அழைக்கப்படுகிரது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "EU summer-time arrangements under Directive 2000/84/EC" (PDF). ஐரோப்பிய நாடாளுமன்றம். 2017.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 2.0 2.1 "Reasoned opinion on subsidiarity" (PDF). Committee on Legal Affairs –ஐரோப்பிய நாடாளுமன்றம். 2019.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Seasonal clock change in the EU". ஐரோப்பிய ஆணையம் (in ஆங்கிலம்). 2016-09-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-18.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 4.0 4.1 "Time Zones of Portugal". Statoids. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
- ↑ "Lighter nights would keep youngsters fitter and safer, say doctors". Western Mail (Cardiff). 27 June 2005. https://www.questia.com/read/1G1-133575619.
- ↑ David Ennals "British Standard Times Bill [Lords]", Hansard, House of Commons Debate, 23 January 1968, vol 757 cc290-366, 290–92
- ↑ "British Standard Time", Hansard (HC), 2 December 1970, vol 807 cc1331-422
- ↑ "Time Zone & Clock Changes 1900-1924 in Dublin, Ireland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Time Zone & Clock Changes 1960-1969 in Dublin, Ireland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Time Zone & Clock Changes 1960-1969 in Dublin, Ireland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Time Zone & Clock Changes 1925-1949 in Las Palmas, Canary Islands, Spain". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Time Zone & Clock Changes 1900-1924 in Tórshavn, Faroe Islands". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Time Zone & Clock Changes in Danmarkshavn, Greenland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Time Zone & Clock Changes in Reykjavik, Iceland". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "Countries that do not observe DST | GreenwichMeanTime.com". greenwichmeantime.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-29.
- ↑ "What Countries Do Daylight Savings?" (in en). WorldAtlas. https://www.worldatlas.com/articles/what-countries-do-daylight-savings.html.