மைக்கல் வோகன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

மைக்கல் வோகன் (Michael Vaughan, பிறப்பு: அக்டோபர் 29 1974 , இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார்.. இவர் 82 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 86 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 268 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 282 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 265 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

மைக்கல் வோகன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மைக்கல் வெகைன்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 600)நவம்பர் 25 1999 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசூலை 30 2008 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 161)மார்ச்சு 23 2001 எ. இலங்கை
கடைசி ஒநாபஏப்ரல் 21 2007 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்99
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 82 86 268 282
ஓட்டங்கள் 5,719 1,982 16,295 7,238
மட்டையாட்ட சராசரி 41.44 27.15 36.95 29.18
100கள்/50கள் 18/18 0/16 42/68 3/46
அதியுயர் ஓட்டம் 197 90* 197 125*
வீசிய பந்துகள் 978 796 9,342 3,381
வீழ்த்தல்கள் 6 16 114 78
பந்துவீச்சு சராசரி 93.50 40.56 46.00 33.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/71 4/22 4/39 4/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
44/– 25/– 117/– 88/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 4 2009

வாகன் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.அதில் 26 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதில் ஒரு போட்டியில் உலக சாதனை படைத்தது. 2004 ஆம் ஆண்டில் உள் நாட்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் தலைமையிலான அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 2–1 என்ற வெற்றியைப் பெற்றது. இது 1986/87 ஆம் ஆண்டிற்குப் பிறகான இங்கிலாந்தின் முதல் ஆஷஸ் வெற்றியாகும்.தொடர்ச்சியான முழங்கால் காயம், மற்ற தொடக்க வீரர்களுக்கு ( ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் அலெஸ்டர் குக் ) இடமளிக்கும் இவரது முடிவும்,தலைவர் பதவியின் அழுத்தங்களும் இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் வாகனின் மட்டையாட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தலைவராக இருந்த சமயத்தில் இவரது மட்டையாட்ட சராசரி 36.02 ஆகவும் தலைவராக இல்லாத சமயத்தில் 50.95 ஆகவும் இருந்தது.வாகன் 30 ஜூன் 2009 அன்று முதல் தர துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

மைக்கேல் பால் வாகன் , கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள எக்லெசில் பிறந்தார் [2] கிரஹாம் மற்றும் டீ வாகனின் இளைய மகனும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் லங்காஷயர் மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களான எர்னஸ்ட் மற்றும் ஜானி டைல்டெஸ்லி ஆகியோரின் மருமகனும் ஆவார். [3] இவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது இவரது குடும்பம் செபீல்டிற்கு குடிபெயர்ந்தது. இவரது தந்தை, ஒரு பொறியியலாளர், வோர்ஸ்லி மூன்றாவது லெவன் அணியின் தலைவராக இருந்தார். "எனக்கு 10 வயதாக இருந்தபோது மான்செஸ்டர் அசோசியேஷன் லீக்கில் என் அப்பா வோர்ஸ்லிக்காக விளையாடும்போது எல்லைக் கோட்டில் பந்துகளை அடித்ததே துடுப்பட்டத்தைப் பற்றிய எனது முதல் நினைவு" என இவர் கூறினார். [4]இவரது மூத்த சகோதரரான டேவிட் இவரை துடுப்பாட்டம் விளையாட ஊக்குவித்தார். இவர் சில்வர்டேல் பள்ளியில் பயின்றார், பின்னர் கால்பந்தில் ஆர்வத்துடன் இருந்தார். "எனக்கு போதுமான வாய்ப்பு இருந்திருந்தால் நான் ஒரு கால்பந்து வீரராக இருக்க விரும்புவேன். ஆனால் என் முழங்கால்கள் ஒருபோதும் எனக்கு ஒத்துழைக்கவில்லை" எனத் தெரிவித்தார். [5]

சொந்த வாழ்க்கை தொகு

வாகன், நிக்கோலா ஷானனை ( வடக்கு அயர்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்) செப்டம்பர் 27, 2003 அன்று மணந்தார். இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். [6]இவரது இரண்டாவது உறவினர் ஈவா பிரைசாக நடித்த முன்னாள் நடிகை கேத்தரின் டைல்டெஸ்லி ஆவார். [7]2005 ஆம் ஆண்டில் இவர்கள் செபீடு, தோரேவில் இருந்து டெர்பிசயரில் உள்ள பாஸ்லோவிற்கு குடிபெயர்ந்தனர்.

துடுப்பாட்ட வாழ்க்கை தொகு

முதன்மையாக மட்டையாளராகவும் அவ்வப்போது சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்த வாகன் 17 வயதில் தொழில்முறை துடுப்பட்டப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார், மேலும் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட அணியின் தலைவராக 1993/94 இல் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும், 1994 இல் இந்தியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற போட்டியிலும் தலைவராக இருந்தார். 1999 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

சான்றுகள் தொகு

  1. "Vaughan calls time on career". Telegraph and Argus (Bradford). 28 June 2009. http://www.thetelegraphandargus.co.uk/sport/4463230.Vaughan_calls_time_on_career. பார்த்த நாள்: 31 July 2010. 
  2. "Michael Vaughan". IMDb. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.
  3. Holburn, Graham (25 July 2001). Ernest Tyldesley: illuminated the golden age of cricket. ESPN Cricinfo.
  4. Viner, Brian (17 May 2007). "Peter Moores and I are singing from exactly the same hymn sheet. Which is refreshing ..." பரணிடப்பட்டது 27 செப்தெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், The Independent. retrieved 30 May 2007.
  5. Empire, Kitty (1 June 2003). "Stand and deliver", The Observer. retrieved 30 May 2007.
  6. "Skiing La Plagne: Michael Vaughan chases runs of a different kind". Telegraph. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012.
  7. catherine-tyldesley/


"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_வோகன்&oldid=3007166" இலிருந்து மீள்விக்கப்பட்டது