ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அன்ரூ ஸ்ட்ராஸ் (Andrew Strauss, பிறப்பு: மார்ச்சு 2 1977) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 83 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 124 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 211 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 254 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 - 2011 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

அன்றூ ஸ்ரோஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அன்றூ ஸ்ரோஸ்
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 624)மே 20 2004 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 3 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 180)நவம்பர் 18 2003 எ. இலங்கை
கடைசி ஒநாபமார்ச்சு 26 2011 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்14
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 83 124 211 254
ஓட்டங்கள் 6,104 4,151 15,022 7,631
மட்டையாட்ட சராசரி 42.98 36.09 42.55 32.75
100கள்/50கள் 19/24 6/27 40/67 10/49
அதியுயர் ஓட்டம் 177 158 177 163
வீசிய பந்துகள் - 6 126 6
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 46.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/16 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
98/– 56/– 191/– 90/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 2 2011

வலது கை துவக்க மட்டையாளராக இவர் விளையாடினார்.சிறப்பாக களத் தடுப்பாடியதற்காகவும் இவர் பரவலாக அறியப்பட்டார். பீட்டர் மூர்ஸை பதவி நீக்கம் செய்வதற்கு முன்பாக 2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட வாரியத்தின் (ஈசிபி) துடுப்பாட்ட இயக்குனரானார். [1]

ஸ்ட்ராஸ் 1998 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2003 ல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மைக்கேல் வாகனுக்கு காயம் ஏற்பட்டதனால் அவருக்குப் பதிலாக இவர் தேர்வானார்.[2] அந்தத் தொடரில் 112 மற்றும் 83 ( ஓட்ட வீழ்த்தல் ) ஓட்டங்களை எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.இதன்மூலம் இலார்ட்சு மைதானத்தில் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்களை எடுத்த நான்காவது வீரர் மற்றும் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.மேலும் முதல் போட்டியில் இரு ஆட்டப் பகுதிகளிலும் நூறு ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார். [3] [4] 2004 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு நூறுகளை எடுத்தார். அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வானார். [5] 2007 ஆம் ஆண்டில் இவரின் மட்டையாடும் திறன் சற்று வீழ்ச்சியினைச் சந்தித்தது.இதன் விளைவாக இவர் இங்கிலாந்தின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இருந்து விலக்கப்பட்டார், மேலும் இவர் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். [6] 2008 ஆம் ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஸ்ட்ராஸ் திரும்ப அழைக்கப்பட்டார், பின்னர் அந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 177 ஓட்டங்களை எடுத்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் மார்ச் 2, 1977 இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் பிறந்தார். [7] ஸ்ட்ராஸ்க்கு ஆறு வயதாக இருக்கும் போது இவர்களின் குடும்பம் இங்கிலாந்து சென்றனர். [8] இவர்பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள சிறுவர்களின் தனியார் பள்ளியான கால்டிகாட் பள்ளியில் கல்வி பயின்றார், [9] பின்னர் ஆக்ஸ்போர்டுஷையரில் சிறுவர்களுக்கான பொது உறைவிடப் பள்ளியான ராட்லி கல்லூரியிலும் பயின்றார் . [10]

இவர் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பிரிவில் பட்டம் பயின்றார். மேலும் சூப்பர்மாடூலர் விளையாட்டுகளில் தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பல்கலைக்கழகத் துடுப்பாட்ட அணிக்காக போட்டியிடுவதோடு மட்டுமல்லாமல், இவர் ஹாட்ஃபீல்ட் கல்லூரி துடுப்பாட்ட அணியினையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு இவரது சக வீரர், துடுப்பாட்ட புள்ளிவிவர நிபுணர் பெனடிக்ட் பெர்மங்கே இருந்தார் . [11] ஸ்ட்ராஸ் பல்கலைக்கழக ரக்பி கிளப்பிற்காக போட்டியிட்டார், ஆனால் இவரது இறுதி ஆண்டில் இந்த விளையாட்டை கைவிட்டு துடுப்பாட்டத்தில் அதிக நேரம் கவனம் செலுத்தினார். [12] இவர் 1998 இல் உயர் இரண்டாம் வகுப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். [13]

சான்றுகள்

தொகு
  1. Andrew Strauss appointed to steer England cricket’s strategy, Peter Moores sacked. AFP. 9 May 2015.
  2. England – News – ECB பரணிடப்பட்டது 7 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்
  3. "Cricinfo – Players and Officials – Andrew Strauss". Content-uk.cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.
  4. "New Zealand in England Test Series – 1st Test England v New Zealand". CricInfo. 24 May 2004. Archived from the original on 25 June 2009. பார்க்கப்பட்ட நாள் 22 June 2009.
  5. "1st Test: South Africa v England at Port Elizabeth, 17–21 December 2004". Uk.cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.
  6. Strauss plans break from cricket BBC News retrieved 22 October 2007
  7. "Born in one country, played for another". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  8. . 
  9. "Caldicott School Academic Results 1989–1990". Caldicott School. Archived from the original on 21 May 2010. பார்க்கப்பட்ட நாள் 29 August 2009.
  10. . 
  11. "The Cricketing Top Scorer from Sky who has never been Stumped". Jewish Chronicle. பார்க்கப்பட்ட நாள் 7 March 2018.
  12. . 
  13. "Cricinfo – Players and Officials – Andrew Strauss". Content-uk.cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரூ_ஸ்ட்ராவுஸ்&oldid=2880452" இலிருந்து மீள்விக்கப்பட்டது