ரப்திசாகர் விரைவு இரயில்

ரப்திசாகர் விரைவு இரயில் (Raptisagar Express) இந்தியாவில் ஓடும் ஓர் அதிவிரைவு இரயில் ஆகும். இது திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையம்[1] / எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் இந்தியாவின் கோரக்பூர் / பரவுனி சந்திப்புகளுக்கு இடையே வாராத்திற்கு மூன்று நாட்கள் இயங்குகிறது. கொல்லம், ஆலப்புழை, கொச்சி, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை மத்திய,தொடர் வண்டி நிலையம் சிசயவாடா},கம்மம், வாரங்கல், ராமகுண்டம் , நாக்பூர், போபால், ஜான்சி, கான்பூர், லக்னோ, கோண்டா மற்றும் பாசுட்டி முதலிய நகரங்களின் வழியாக ரப்தி சாகர் இரயில் ஓடுகிறது. இந்திய இரயில்வேயின் வடகிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)}வடகிழக்கு தொடருந்து மண்டலம்]]/கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் ஆகிய இரயில்வே மண்டலங்கள் இந்த அதிவிரைவு இரயிலை இயக்குகின்றன.

பெயர்க் காரணம் தொகு

அரேபிய கடலுக்கு அருகில் அமைந்துள்ள திருவனந்தபுரம் / கொச்சின் நகரங்களையும், ரப்தி நதி ஓடும் இடத்திலிருந்து கோரக்பூர் / பரவு னி ஆகிய நகரங்களையும் இந்த இரயில் இணைக்கிறது என்பதால் இந்த விரைவு இரயிலுக்கு "ரப்தி சாகர்" என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இரயில் பெட்டிகள் விவரம் தொகு

ரப்தி சாகர் விரைவு இரயிலில் மொத்தம் 24 இரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளும் குளிரூட்டப்பட்டு வருகின்றன.

ஓடும் நாட்கள் தொகு

கோரக்பூர் சந்திப்பிலிருந்து 12511 – என்ற எண்கொண்ட ரப்தி சாகர் அதிவிரைவு வண்டி ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் 6.35 மணி நேரத்திற்கு புறப்படுகிறது. திருவனந்தபுரம் மத்திய இரயில்நிலையத்தை மூன்றாவது நாள் 17.20 மணிக்கு சென்று சேர்கிறது.

12512 – என்ற எண்ணுடன் திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரப்தி சாகர் அதி விரைவு இரயில் து ஒவ்வொரு ஞாயிறு., செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு கோரக்பூர் சந்திப்பு இரயில் நிலையத்தை 3 ஆம் நாள் பிற்பகல் 15:20 மணிக்கு வந்தடைகிறது.

சென்னை மத்திய இரயில் நிலையம் வந்தபின் திரும்பி செல்கிறது.

LOCO 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
இயந்திரம் எசு.எல்.ஆர் பொது பொது பொது எசு 1 எசு 2 எசு 3 எசு 4 எசு 5 எசு 6 எசு 7 எசு 8 எசு 9 எசு 10 எசு 11 உணவு பி1 பி2 ஏ1 எச் ஏ1 பொது பொது [பொது எசு.எல்.ஆர்

அட்டவணை தொகு

ரப்தி சாகர் அதிவிரைவு இரயில் 12512 என்ற எண்ணுடன் திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை, புதன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு 3 வது நாள் மாலை 3.10 மணிக்கு கோரக்பூர் சந்திப்பை அடைகிறது. இதேபோல 12522 என்ற எண்ணுடன் வெள்ளிக்கிழமைகளில் எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் ரப்தி சாகர் விரைவு இரயில் மூன்றாவது நாள் இரவு 23.10 மணிக்கு பரவுனி சந்திப்பை அடைகிறது. 12511 என்ற எண்ணுடன் எதிர் வழியில் திரும்பும் இரயில் கோரக்பூர் / பரவுனியில் இருந்து வியாழக்கிழமை, வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு 3 வது நாளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையத்தை அடைகிறது. இதேபோல 12521 என்ற எண்ணுடன் திங்கள் கிழமை இரவு 22.50 மணிக்கு பரவுனி சந்திப்பில் இருந்து புறப்படும் அதிவிரைவு நான்காம் நாள் 13 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடைகிறது. ரப்திசாகர் அதிவிரைவு இரயில் அதன் பயணத்தின் போது மணிக்கு சுமார் 58 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "The Hindu : Netravati and Raptisagar Express trains extended to capital".