ரவூப் ஹக்கீம்

அப்துல் ரவூப் ஹக்கீம் (Abdul Rauff Hakeem, பிறப்பு: ஏப்ரல் 13, 1960), இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முசுலிம் அரசியல்வாதியும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் 1994, 2000, 2001, 2004 தேர்தல்களிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[1] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3] [4]

ரவூப் ஹக்கீம்
Rauff Hakeem
நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சனவரி 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
நீதி அமைச்சர்
பதவியில்
22 நவம்பர் 2010 – 28 டிசம்பர் 2014
முன்னையவர்அத்தாவுட செனிவிரத்தின
தபால், தொலைத்தொடர்பு அமைச்சர்
பதவியில்
2005–2010
இலங்கை நாடாளுமன்றம்
கண்டி மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 13, 1960 (1960-04-13) (அகவை 64)
நாவலப்பிட்டி
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
துணைவர்சானாசு அக்கீம்
வாழிடம்(s)263, காலி வீதி, Colombo 03
முன்னாள் கல்லூரிகொழும்பு றோயல் கல்லூரி
வேலைவழக்கறிஞர்
தொழில்LLB, LLM

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

தொகு

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் இறந்ததை அடுத்து இவர் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து அமைச்சரானார். 2014 டிசம்பர் 28 அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் இருந்து விலகி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் கூட்டு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்தது. ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. ரவூப் ஹக்கீம்
  2. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  5. SLMC pledges support to MS பரணிடப்பட்டது 2015-04-04 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்டு, டிசம்பர் 29, 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவூப்_ஹக்கீம்&oldid=3569486" இலிருந்து மீள்விக்கப்பட்டது