ருவிந்து குணசேகர

துடுப்பாட்ட வீரர்

ருவிந்து குணசேகர (Ruvindu Gunasekera, பிறப்பு: சூலை 20, 1991) இலங்கையில் பிறந்த கனடா துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் கனடா துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய துடுப்பாட்ட வடிவங்களிலும் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் கனடா தேசியத் துடுப்பாட்ட அணி தவிர 19 வயதிற்குட்பட்ட கனடாத் துடுப்பாட்ட அணி சிலா மரியான்ஸ் துடுப்பாட்ட சங்கம் , ஐசிசி அமெரிகாஸ், மூர் துடுப்பாட்ட சங்கம், நுவரா எலியா மாவட்டத் துடுப்பாட்ட அணி, சரசென்ஸ் துடுப்பாட்ட சங்கம் மற்றும் வான்கவர் நைட்ஸ் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். இவர் பெர்முடா துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.

ருவிந்து குணசேகர
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ருவிந்து குணசேகர
பிறப்பு20 சூலை 1991 (1991-07-20) (அகவை 33)
கொழும்பு, இலங்கை
பட்டப்பெயர்ருவிந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர் விலகு
பங்குமட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 57)1 சூலை 2008 எ. பெர்முடா
கடைசி ஒநாப28 சனவரி 2014 எ. நெதர்லாந்து
ஒநாப சட்டை எண்57
இ20ப அறிமுகம் (தொப்பி 30)13 மார்ச் 2012 எ. நெதர்லாந்து
கடைசி இ20ப26 நவம்பர் 2013 எ. கென்யா
இ20ப சட்டை எண்57
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 19 8 21 47
ஓட்டங்கள் 455 202 896 1,184
மட்டையாட்ட சராசரி 23.94 25.25 24.88 25.73
100கள்/50கள் 0/6 0/1 1/6 0/12
அதியுயர் ஓட்டம் 72 65 150 87
வீசிய பந்துகள் 626 161
வீழ்த்தல்கள் 13 9
பந்துவீச்சு சராசரி 29.53 16.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/34 4/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 0/– 13/– 19/–
மூலம்: ESPNcricinfo, 12 பெப்ரவரி 2018

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

குணசேகர இலங்கையின் கொழும்பில் பிறந்தார், அங்கு அவர் சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார், அவரது தந்தையின் செல்வாக்கினால் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அ அணியில் பங்கேற்றார். குணசேகர 2006 இல் கனடாவின் டொராண்டோவில் குடியேறினார். அவர் 2010 இல் டொராண்டோ ஸ்கார்பாரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நிர்வாக பிரிவில் பட்டம் பெற்றார்.[1]

துடுப்பாட்ட வாழ்க்கை

தொகு

இலங்கை

தொகு

குணசேகர நியூசிலாந்தில் நடந்த ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்கான அணியில் உறுப்பினராக இருந்தார்.[2]

மார்ச் 2018 இல், இலங்கையில் நடைபெற்ற 2017–18 எஸ்.எல்.சி இருபது -20 போட்டியில், ஐந்து போட்டிகளில் விளையாடி 272 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த சரசென்ஸ் துடுப்பாட்ட சன்கத்திற்காக அதிக ஓட்டங்கள் எடுத்த பேட்டிங் வீரர்கள் வரிசையில் முன்னணியில் இருந்தார்.[3] அதற்கு அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் இவர் தம்புல்லா துடுப்பாட்ட அணியிலும் இவர் இடம் பெற்றார் .

ஆகஸ்ட் 2018 இல், அவர் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் தம்புல்லா துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார். பிப்ரவரி 2019 இல், இலங்கை துடுப்பாட்ட வாரியம் 2017–18 எஸ்.எல்.சி இருபதுக்கு -20 போட்டியில் சிறந்த மட்டையாளராக இவரை அறிவித்தது.[4]

கனடா

தொகு

ஜனவரி 2018 இல் நடைபெற்ற 2018 ஐசிசி உலக துடுப்பாட்ட லீக் போட்டித் தொடரில் இவர் கனடா அணியில் இடம் பெற்றார்.[5] 3 ஜூன் 2018 அன்று, குளோபல் டி 20 கனடா போட்டியின் தொடக்க பதிப்பிற்கான வீரர்களின் வரைவுப் பட்டியலில் இவர் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.[6][7] ஏப்ரல் 2019 இல், நமீபியாவில் நடைபெற்ற 2019 ஐசிசி உலக கிரிக்கெட் லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் கனடா துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார்.[8]

முதல் தரத் துடுப்பாட்டம்

தொகு

2008 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஆகஸ்டு 7 இல் டப்ளினில் நடைபெற்ற அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் துவக்க வீரராக களம் இறங்கிய இவர் 12 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் மக்கலனால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

குறிப்புகள்

தொகு
  1. http://webapps.utsc.utoronto.ca/ose/ose_new_v/article.php?id=2680&cid=26
  2. Profile பரணிடப்பட்டது 2010-03-16 at the வந்தவழி இயந்திரம் Official website. Retrieved 12 February 2010.
  3. "SLC Twenty-20 Tournament, 2017/18: Most Runs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2018.
  4. "New contracts for domestic players; 2017/18 best performers rewarded". The Papare. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  5. "Canadian squad for World Cricket League Division 2 tournament". Cricket Canada. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  6. "Global T20 Canada: Complete Squads". SportsKeeda. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  7. "Global T20 Canada League – Full Squads announced". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  8. "Cricket Canada announces the Senior National Squad for the ICC WCL Division 2, Namibia". Cricket Canada. Archived from the original on 10 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருவிந்து_குணசேகர&oldid=3569861" இலிருந்து மீள்விக்கப்பட்டது