ரெட் இசுடார் ஓஎஸ்

ரெட் இசுடார் ஓஎஸ் (Red Star OS, Chosŏn'gŭl붉은별; MRPulgŭnbyŏl) என்பது ஒரு வட கொரிய லினக்சு வழங்கலாகும், இதன் மேம்பாடு முதலில் கொரியக் கணினி மையத்தில் 1998 இல் தொடங்கியது. இதன் வெளியீட்டிற்கு முன், வட கொரியாவில் உள்ள கணினிகளில் பொதுவாக ரெட் ஹட் லினக்சு பயன்படுத்தப்பட்டன,[6] பின்னர் வட கொரிய மொழித் தொகுப்புகளுடன் நிறுவப்பட்ட மைக்ரோசாப்ட் விண்டோசின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளுக்கு மாறியது. [7]

ரெட் இசுடார் ஓஎஸ்
붉은별 사용자용체계

ரெட் இசுடார் ஓஎஸ் 3.0
விருத்தியாளர் கொரியக் கணினி மையம், வட கொரியா
இயங்குதளக்
குடும்பம்
லினக்சு (பணிமேடை மற்றும் சேவையகம்),
ஆண்ட்ராய்டு (on Woolim, Arirang, Samjiyon, Manbang, Jindallae and Ryonghung)[1][2][3]
மூலநிரல் வடிவம்
பிந்தைய நிலையான பதிப்பு 4.0 / {{{latest_release_date}}}
சந்தைப்படுத்தும் இலக்கு தனி மேசைக் கணினிகள்
கிடைக்கும் மொழிகள் கொரியம்
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
IA-32, x86-64 (server only), ARM (mobile and tablet only)
கருனி வகை Monolithic forked from (Linux kernel)
தாக்கம் செலுத்தியோர் Fedora Linux (desktop), CentOS (Server), Android (mobile and tablet)[4]
இயல்பிருப்பு இடைமுகம் KDE[5]
அனுமதி GPL (Linux kernel and other GNU software only), Proprietary
தற்போதைய நிலை நடப்பு

பதிப்பு 3.0 2013 கோடையில் வெளியிடப்பட்டது, ஆனால் 2014 இலும் பதிப்பு 1.0 இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [மெய்யறிதல் தேவை] இது கொரிய மொழியில் மட்டுமே கிடைக்கும், வடகொரிய மொழி நடையில் உள்ளூர்மயமாக்கப்பட்டுள்ளது. [8]

விவரக்குறிப்புகள்

தொகு

ரெட் இசுடார் ஓஎஸ் ஆனது நேனரா (மொ.'எமது நாடு') எனப்படும் பயர் பாக்சு அடிப்படையாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்ட உலாவியைக் கொண்டுள்ளது, இது குவாங்மியோங் எனப்படும் வட கொரியத் தேசிய அக இணையத்தில் நேனரா இணையவாசலை உலாவ பயன்படுகிறது. நேனரா இரண்டு தேடுபொறிகளுடன் வருகிறது. உரைத்தொகுப்பி, அலுவலகக் கூட்டுத் தொகுப்பு, மின்னஞ்சல் சேவை, ஊடக இயக்கி, கோப்பு பகிர்வி, நிகழ்பட விளையாட்டுகள் ஆகியவையும் உள்ளது. [9] [10] [11] பதிப்பு 3, இதன் முன்னோடிகளைப் போலவே, வைனைப் பயன்படுத்துகிறது, இது விண்டோசு நிரல்களை லினக்சில் இயக்க அனுமதிக்கும் ஒரு மென்பொருள். [12]

இயக்க முறைமை கே டீ ஈ மென்பொருள் தொகுப்பின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்துகிறது. முந்தைய பதிப்புகள் கே டீ ஈ 3 அடிப்படையிலான மேசைக் கணினிகளைக் கொண்டிருந்தன. பதிப்பு 3.0 ஆனது ஆப்பிள் மேக் ஓஎஸ் ஒத்திருக்கிறது, முந்தைய பதிப்புகள் விண்டோசு எக்சுபியை மிகவும் நெருக்கமாக ஒத்திருந்தன;[13][14] தற்போதைய வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் 2013 ஆம் ஆண்டு படத்தில் தனது மேசையில் ஐமேக் உடன் காணப்பட்டார், ஆதலால் இது மறுவடிவமைப்புக்கான சாத்தியமான தொடர்பைக் குறிக்கிறது. [15][16][17]

ஊடக கவனம்

தொகு
 
ரெட் இசுடார் ஓஎஸ் 2.0 இல் உள்ளமைக்கப்பட்ட விளையாட்டுகள்

யப்பானைத் தளமாகக் கொண்ட வட கொரியாவுடன் இணைந்த செய்தித்தாள் சோசன் சின்போ சூன் 2006 இல் ரெட் இசுடார் ஓஎஸ் நிரலர்களைப் பேட்டி கண்டது. [6] என்கெஜட் மற்றும் ஓஎஸ்நியூஸ் உள்ளிட்ட ஆங்கில மொழி தொழில்நுட்ப வலைப்பதிவுகளும், தென் கொரிய செய்தி நிறுவனம் யோன்ஹாப் போன்றவையும் உள்ளடக்கத்தை மறுபதிவு செய்தன. [8] [18] [19] 2013 இன் பிற்பகுதியில், பியாங்யாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்குச் சென்ற வில் இசுகாட், தெற்கு பியாங்யாங்கில் உள்ள கொரியக் கணினி மைய சில்லறை விற்பனையாளரிடமிருந்து பதிப்பு 3 இன் நகலை வாங்கி, திரைப்பிடிப்பு செய்து இணையத்தில் பதிவிட்டார். [12]

2015 இல், கேயாஸ் கம்யூனிகேசன் காங்கிரசில் பேசிய இரண்டு ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் இயங்குதளத்தின் உள் செயல்பாட்டை விவரித்தனர். [20] வட கொரிய அரசாங்கம் வெளிநாட்டு திரைப்படங்கள், இசை மற்றும் எழுத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவைக் கண்காணிக்க விரும்புகிறது, [21] எனவே கணினியுடன் இணைக்கப்பட்ட கையடக்க ஊடகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் கணினி நீர்வரிக் குறி செய்கிறது. [22]

வரலாறு

தொகு

பதிப்பு 1.0/பீட்டா

தொகு
 
ரெட் இசுடார் 1.0 இயக்கத் திரை
 
ரெட் இசுடார் 1.0 இல் முன்னிருப்பு கோப்பு மேலாளர்

முதல் பதிப்பு 2008 இல் தோன்றியது. இது விண்டோசு எக்சுபி இயங்குதளத்தை மிகவும் ஒத்ததாக உள்ளது.

இது மொசிலா பயர் பாக்சு அடிப்படையிலான "நேனரா" என்ற இணைய உலாவியும், "உரி 2.0" எனப்படும் ஓப்பன் ஆபிசு அடிப்படையிலான அலுவலகத் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்தது. வைனும் உள்ளது.

இப்பதிப்பின் இயங்குதளத்தின் ஒரு நகல் இணையத்தில் கசிந்தது. இயக்க முறைமையின் திரைப்பிடிப்புகள் கொரிய மத்திய செய்தி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, தென் கொரிய செய்தி தளங்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[11]

பதிப்பு 2.0

தொகு
 
ரெட் இசுடார் 2.0 மேசை

பதிப்பு 2.0 இன் வளர்ச்சி மார்ச் 2008 இல் தொடங்கியது, சூன் 3, 2009 இல் நிறைவடைந்தது. இதன் முன்னோடியைப் போலவே, இதன் தோற்றமும் விண்டோசு எக்சுபியை ஒத்திருக்கிறது, இதன் விலை 2000 வட கொரிய வோன் (தோராயமாக US$15) ஆகும்.

இந்த பதிப்பில் "நேனாரா" இணைய உலாவியும் சேர்க்கப்பட்டுள்ளது. இயக்கு தளத்தில் ஒரு பகுதியாக 6 ஆகத்து 2009 அன்று உலாவி வெளியிடப்பட்டது, இதன் விலை 4000 வட கொரிய வோன் (தோராயமாக US$28) ஆகும்.

இப்பதிப்பு தென் கொரிய நிலையான விசைப்பலகை தளவமைப்பு அமைப்பிலிருந்து பெரிதும் வேறுபடும் சிறப்பு விசைப்பலகை தளவமைப்பைப் பயன்படுத்துகிறது.[சான்று தேவை]

பதிப்பு 3.0

தொகு
 
ரெட் இசுடார் ஓஎஸ் 3 இல் ரூட் சலுகைகளைப் பெறுவதற்கான பயன்பாடு
 
ரெட் இசுடார் ஓஎஸ் 3 இல் சொக்வாங் ஆபிசு (தனிப்பயனாக்கப்பட்ட ஓப்பன் ஆபிசு).

பதிப்பு 3.0 ஏப்ரல் 15, 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் தோற்றம் பல்வேறு பதிப்புகளின் மேக் ஓஎஸ் இயக்க முறைமைகளை ஒத்திருக்கிறது. [23] புதிய பதிப்பு இ.நெறி ப4 மற்றும் இ.நெறி ப6 ஆகிய இரண்டு முகவரிகளையும் ஆதரிக்கிறது.

இயக்குதளம் இதன் பயனர்களைக் கண்காணிக்கும் பல பயன்பாடுகளுடன் முன்பே நிறுவப்பட்டுள்ளது. ஒரு பயனர் பாதுகாப்பு செயல்பாடுகளை முடக்க முயற்சித்தால், கணினியில் பிழைச் செய்தி தோன்றும், அல்லது இயக்கம் செயலிழந்து மறுயியக்கம் செய்யப்படும். கூடுதலாக, கணினியில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வரிக் குறிக் கருவி அனைத்து ஊடக உள்ளடக்கத்தையும் வன் தட்டு நிலை நினைவக எண்ணுடன் குறிக்கிறது, இது கோப்புகளின் பரவலைக் கண்டறிய வட கொரிய அதிகாரிகளை அனுமதிக்கிறது. வட கொரிய இரகசிய சேவையால் தொலைதூரத்தில் சேமிக்கப்படும் தணிக்கை செய்யப்பட்ட கோப்புகளை அகற்றும் திறன் கொண்ட "நச்சுநிரல் தடுப்பி" மென்பொருள் இந்த அமைப்பில் உள்ளது.

இயக்க முறைமையில் "நிர்வாகி" என்று ஒரு பயனர் குழு உள்ளது. பயனர்கள் முன்னிருப்பாக ரூட் அணுகலைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் "ரூட் அமைப்பு" எனப்படும் உள்ளமைக்கப்பட்ட பயன்பாட்டினை இயக்குவதன் மூலம் ரூட் பயன்படுத்துவதற்கான அவர்களின் சிறப்புரிமைகளை உயர்த்திக்கொள்ள முடியும். இருப்பினும், சில கோப்புகளுக்கான அணுகலை ரூட் பயனர்களுக்கு மறுக்க கர்னலில் தொகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இந்த கோப்புகள் மாற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த இயக்கு நேரத்தில் விரிவான கணினி ஒருமைப்பாடு சோதனைகள் செய்யப்படுகின்றன.[24]

ரெட் இசுடார் ஓஎஸ் 3 ஆனது சொக்வாங் ஆபிசு எனப்படும் ஓப்பன் ஆபிசின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்புடன் வருகிறது.[25]

பதிப்பு 4.0

தொகு

பதிப்பு 4.0 இல் சில தகவல்கள் கிடைக்கின்றன.

ரெட் இசுடார் ஓஎஸ் 4.0 இன் அதிகாரப்பூர்வ பதிப்பு சனவரி 2019 க்குள் முழு வலையமைப்பு ஆதரிக்கிறது மற்றும் சேவை மேலாண்மை கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தி பியோங்யாங் டைம்சு கூறுகிறது. [26]

ரெட் இசுடார் ஓஎஸ் 4.0 கடவுச்சொல் மேலாண்மை பயன்பாட்டைக் கொண்டுள்ளது என்று ஒரு ஆதாரம் தெளிவற்றதாகக் கூறுகிறது, ஆனால் அதைப் பற்றிய அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. [27]

பாதிப்புகள்

தொகு

2016 ஆம் ஆண்டில், கணினி பாதுகாப்பு நிறுவனமான ஏக்கர் அவுசு ஒருங்கிணைக்கப்பட்ட இணைய உலாவி நேனராவில் பாதுகாப்பு பாதிப்பைக் கண்டறிந்தது. இந்த பாதிப்பானது, பயனர் இணைப்பைச் சொடுக்கினால், கணினியில் கட்டளைகளை இயக்குவதை சாத்தியமாக்குகிறது. [28][29]

மேற்கோள்கள்

தொகு
  1. "Domestic Tablet" (in en-US). NK News. https://www.nknews.org/2017/05/north-korean-company-advertising-domestically-made-ipad/. 
  2. "Domestic Tablet" (in en-US). NK News. https://www.techtimes.com/articles/190872/20161231/north-koreas-android-tablet-woolim-is-packed-with-features-automatic-screenshots-non-removable-bloatware-and-more.htm. 
  3. "North Korean Smartphone" (in en-US). Mashable. https://mashable.com/article/north-korean-smartphone. 
  4. "Inside North Korea's Totalitarian Operating System". Motherboard (in அமெரிக்க ஆங்கிலம்). 27 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.
  5. "Red Star OS" (in en-US). ArchiveOS. https://archiveos.org/redstar/. 
  6. 6.0 6.1 Kim, Chi-yong (2006-06-21), "〈민족정보산업의 부흥 -상-〉 《우리식 콤퓨터조작체계(OS) 》의 개발과 도입", Choson Sinbo (in கொரியன்), archived from the original on 2007-12-23
  7. "North Korea's 'paranoid' computer operating system revealed" (in en). The Guardian. 27 December 2015. https://www.theguardian.com/world/2015/dec/27/north-koreas-computer-operating-system-revealed-by-researchers. 
  8. 8.0 8.1 Nam, Hyeon-ho (2010-03-03), Yonhap News (in கொரியன்) http://media.daum.net/digital/view.html?cateid=1068&newsid=20100302174815619&p=yonhap, பார்க்கப்பட்ட நாள் 2013-01-23 {{citation}}: Missing or empty |title= (help)
  9. "Naenara: Exploring a North Korean Computer & Internet". Koryo Tours. November 20, 2019. பார்க்கப்பட்ட நாள் August 14, 2021.
  10. Locker, Theresa (January 7, 2015). "You Can Now Install the Original North Korean Operating System RedStar 3.0". Vice News. https://www.vice.com/en/article/pgaxa9/you-can-now-install-the-north-korean-operating-system-redstar-30. 
  11. 11.0 11.1 Tong-hyung, Kim (5 April 2010). "NK Goes for Linux-Based Operating System". The Korea Times.
  12. 12.0 12.1 Williams, Martyn (January 31, 2014). "North Korea's Red Star OS Goes Mac". North Korea Tech. Martyn Williams. பார்க்கப்பட்ட நாள் July 23, 2014.
  13. "Apple's Mac OSX imitated in latest North Korea system" (in en-GB). BBC News. 2014-02-05. https://www.bbc.com/news/technology-26047439. 
  14. "North Korean computers get 'Apple' makeover" (in en). Telegraph.co.uk. https://www.telegraph.co.uk/technology/apple/10619703/North-Korean-computers-get-Apple-makeover.html. 
  15. "Apple's Mac OS X imitated in latest North Korea system". BBC News. 2014-02-05.
  16. "North Korean computers get 'Apple' makeover". The Daily Telegraph. 5 February 2014. பார்க்கப்பட்ட நாள் 6 February 2014.
  17. "North Korean computers get iMac makeover". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
  18. Holwerda, Thom (2009-03-04), "North Korea Develops Its Own Linux Distribution", OSNews, பார்க்கப்பட்ட நாள் 2013-01-23
  19. Flatley, Joseph L. (2009-03-04), "North Korea's Red Star OS takes the 'open' out of 'open source'", Engadget, பார்க்கப்பட்ட நாள் 2013-01-23
  20. Jeremy Wagstaff and James Pearson (27 December 2015). "Paranoid: North Korea's computer operating system mirrors its political one". Reuters.
  21. James Pearson (27 March 2015). "The $50 device that symbolizes a shift in North Korea". Reuters.
  22. "RedStar OS Watermarking". Insinuator. 16 July 2015.
  23. Williams, Martyn (2014-12-30). "Red Star 3.0 Desktop finally becomes public". North Korea Tech. பார்க்கப்பட்ட நாள் 2017-08-31.
  24. Florian Grunow; Niklaus Schiess (2015-12-28). Lifting the Fog on Red Star OS - A deep dive into the surveillance features of North Korea's operating system. Chaos Communication Congress 32.
  25. Florian Grunow; Niklaus Schiess (2015-12-28). Lifting the Fog on Red Star OS - A deep dive into the surveillance features of North Korea's operating system. Chaos Communication Congress 32.
  26. "The Pyongyang Times" (PDF). Archived from the original (PDF) on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
  27. "붉은별4.0의 비밀번호 관리는 키체인으로?" [Password management in Red Star 4.0 is done by keychain?]. NK경제 (NKEconomy). 2020-07-21.
  28. "RedStar OS 3.0: Remote Arbitrary Command Injection". Archived from the original on December 5, 2016. பார்க்கப்பட்ட நாள் August 31, 2020.
  29. "North Korea's Linux-based Red Star OS can be Hacked Remotely with just a Link". https://thehackernews.com/2016/12/redstar-north-korea.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_இசுடார்_ஓஎஸ்&oldid=4025529" இலிருந்து மீள்விக்கப்பட்டது