றெக்கை கட்டி பறக்குது மனசு
றெக்கை கட்டி பறக்குது மனசு என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஜூன் 19, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி மார்ச்சு 4, 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் தொடர்.[1] இந்த தொடரை பசீர் என்பவர் இயக்க, சித்தார்த், சமீரா, அஸ்வின் கார்த்திக், வந்தனா, சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இது ஒரு ஜீ மராத்தி தொலைக்காட்சி தொடரான 'துஜித் ஜீவ் ரங்கலா' என்ற தொடரின் மறு தாயாரிப்பாகும். இந்த தொடரை நடிகை சமீரா தயாரிக்கிறார்.[3] இந்த தொடர் 24 மே 2019 ஆம் அன்று 520 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
றெக்கை கட்டி பறக்குது மனசு | |
---|---|
வகை | காதல் குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | ஆரஞ்சு மீடியா புரொடக்சன்ஸ் (வசனம்) |
திரைக்கதை | ஆரஞ்சு மீடியா புரொடக்சன்ஸ் |
இயக்கம் | பசீர் |
நடிப்பு |
|
முகப்பு இசை | விஷால் சந்திரசேகர் (தலைப்பு பாடல்) அருண் (பின்னணி ஸ்கோர்) |
முகப்பிசை | "என் மனசு " |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 520 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சமீரா |
ஒளிப்பதிவு | ஈ.மார்ட்டின் ஜோ.சாந்தோஷ் |
தொகுப்பு |
|
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஆரஞ்சு மீடியா புரொடக்சன்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 19 சூன் 2017 24 மே 2019 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் | |
தயாரிப்பு இணையதளம் |
கதைச்சுருக்கம்
தொகுஆஞ்சநேயர் பக்தனான (சித்தார்த்) தமிழும் பள்ளி ஆசிரியான மலருக்கும் (சமீரா) வரும் காதலை பற்றிய கதை.
நடிகர்கள்
தொகுமுன்னணிக்கதாபாத்திரம்
தொகு- சித்தார்த் - தமிழ்
- சமீரா - மலர் தமிழ் / பிரியங்கா
- சாய் சுவேதா - திவ்யா
- அன்வர் - அருணாச்சலம்
துணைக்கதாபாத்திரம்
தொகு- நிரஞ்சினி அகர்வால் -
- அஸ்வின் கார்த்திக் - சக்தி
- வந்தனா → நிஷா - நந்தினி
- வடிவுக்கரசி → சாந்தி வில்லியம்ஸ் - தாயம்மா
- ஸ்ரீலதா - தனலட்சுமி
- ஜெயராஜ் - குமரேசன்
- ஷீலா
- தீபா - கங்கா
- அறிவு அழகு
- கார்த்தி
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
தொகுஇந்த தொடர் முதல் முதலில் ஜூன் 19, 2017 அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. ஏப்ரல் 20, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகினது. பழைய நேரத்தில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகின்றது. 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018 | 21:30 | 1-219 | |
23 ஏப்ரல் 2018 – 2 மார்ச்சு 2019 | 22:00 | 220-462 | |
4 மார்ச்சு 2019 – 24 மே 2019 | 18:30 | 463-520 |
மறுதயாரிப்பு
தொகுஇந்த தொடர் மலையாளம் மொழியில் 'அளியம்பாள்' என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஜீ கேரளம் தொலைக்காட்சியில் நவம்பர் 26, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுஆண்டு | விருது | பரிந்துரை | பெறுநர் | முடிவு |
---|---|---|---|---|
2018 | கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த நடிகை | சமீரா | பரிந்துரை |
சிறந்த ஜோடி | சித்தார்த் & சமீரா | பரிந்துரை | ||
2018 | 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[4] | விருப்பமான கதாநாயகி | சமீரா | பரிந்துரை |
விருப்பமான கதாநாயகன் | சித்தார்த் | பரிந்துரை | ||
சிறந்த நடிகை | சமீரா | வெற்றி | ||
சிறந்த நடிகர் | சித்தார்த் | பரிந்துரை | ||
சிறந்த ஜோடி | சித்தார்த் & சமீரா | பரிந்துரை | ||
சிறந்த அப்பா | ஜெயராஜ் | பரிந்துரை | ||
சிறந்த துணை நடிகர் | அஸ்வின் கார்த்திக் | பரிந்துரை | ||
அன்வர் | பரிந்துரை | |||
அனைத்து சுற்றிலும் ஜீ தமிழ் | சித்தார்த் | வெற்றி | ||
சிறந்த மருமகள் | சமீரா | வெற்றி | ||
சிறந்த வில்லி | நிஷா | பரிந்துரை |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய காதல் தொடர்". timesofindia.indiatimes.com.
- ↑ "றெக்கை கட்டி பறக்குது மனசு புதிய தொடர்". cinema.dinamalar.com.
- ↑ "சமீரா தயாரிக்கும் புதிய தொடர் றெக்கை கட்டி பறக்குது மனசு". cinema.dinamalar.com.
- ↑ "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece.
வெளி இணைப்புகள்
தொகுஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | றெக்கை கட்டி பறக்குது மனசு (4 மார்ச்சு 2019 – 24 மே 2019) |
அடுத்த நிகழ்ச்சி |
முள்ளும் மலரும் (27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019) |
சத்யா |
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 10 மணிக்கு | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | றெக்கை கட்டி பறக்குது மனசு (23 ஏப்ரல் 2018 – 2 மார்ச்சு 2019) |
அடுத்த நிகழ்ச்சி |
தலையணைப் பூக்கள் (16 அக்டோபர் 2017 - 20 ஏப்ரல் 2018) |
சத்யா |
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | றெக்கை கட்டி பறக்குது மனசு 19 ஜூன் 2017 - 20 ஏப்ரல் 2018 |
அடுத்த நிகழ்ச்சி |
லட்சுமி வந்தாச்சு 2 பிப்ரவரி 2015 - 16 ஜூன் 2017 |
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி |