லட்சுமி (2018 திரைப்படம்)
லட்சுமி (Lakshmi) 2018 இல் வெளிவந்த இசை மற்றும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எல். விஜய் இதை எழுதி இயக்கியுள்ளார். தித்யா பாண்டே படத்தின் தலைப்புப் பாத்திரத்தில் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் சல்மான் யூசூப் கான் மற்றும் கருணாகரன் ஆகியோரும் துணைக் கதாப்பாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தனர். பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா மற்றும் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் தயாரித்திந்தனர். இப்படத்தின் இசையமைப்பை சாம் சி. எஸ் மேற்கொள்ள ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டார். 2018 ஆகஸ்ட் 24 அன்று லட்சுமியைக் கொண்டாடும் வரலட்சுமி நோன்பு அன்று வெளியிடப்பட்டது.[1]
லட்சுமி (2018 திரைப்படம்) | |
---|---|
Poster | |
இயக்கம் | ஏ. எல். விஜய் |
தயாரிப்பு | பிரதீக் சக்கரவர்தி சுருதி நல்லப்பா ஆர். ரவீந்திரன் |
கதை | ஏ. எல். விஜய் அஜயன்பாலா சத்யா (தெலுங்கு வசனம்) |
திரைக்கதை | ஏ. எல். விஜய் |
இசை | சாம் சி. எஸ் |
நடிப்பு | பிரபுதேவா தித்யா பாண்டே ஐஸ்வர்யா ராஜேஷ் சல்மான் யூசூப் கான் கருணாகரன் |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | பிரமோத் பிலிம்ஸ் டிரைடென்ட் ஆர்ட்ஸ் |
வெளியீடு | ஆகத்து 24, 2018 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகு10 வயதான லட்சுமி என்ற பெண் நடனத்தையே தனது மூச்சும் வாழ்வுமாகக் கொண்டுள்ளாள். மேலும் தேசிய அளவில் நடனத்தில் முதலிடத்தை அடைய வேண்டுமென கனவுடன் வாழ்கிறாள். இருப்பினும், அவளது தாய் நந்தினி இவளது இசை மற்றும் நடனத்தை வெறுக்கிறார். விரைவில், லட்சுமி தனது பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு விடுதியில் உள்ள மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறாள். கடையில் வாசிக்கும் இசைக்காக லட்சுமி அங்கே அடிக்கடி சென்றாலும், விரைவில் அவள் அங்கே வழக்கமானவளாக மாறிவிடுகிறாள். விஜய் கிருஷ்ணா என்கிற வி. கே அவளது நடன அசைவுகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு அவளை வரவேற்கிறார். லட்சுமி வி. கே. யின் அனுதாபத்தைப் பெறுகிறார். மேலும் வி. கேவை தனது தந்தையாகக் காட்டிக் கொண்டு தனது கனவுகளை அடைய உதவ வேண்டும் என்ற அவளது கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்கிறார். தாய் நந்தினிக்குத் தெரியாமல் போட்டியில் பங்கேற்கும் பொருட்டு சென்னை நடன அகாடமியில் சேருகிறார். லட்சுமி தனது நடனத்தின் மூலம் அகாடமியில் உள்ள அனைவரையும் கவர்ந்திழுக்கிறார், மேலும் நடனக் கலைஞர்களான அர்ஜுன் மற்றும் அர்னால்டு ஆகியோரைக் கவர்ந்திழுக்கிறார். அங்கே லட்சுமி நடனப்போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றாரா? என்பது மீதிக் கதையாகும்.
நடிகர்கள்
தொகுபிரபுதேவா - விஜய் கிருஷ்ணா "வி.கே", லட்சுமிக்கு உதவும் நடன பயிற்றுவிப்பாளராக
தித்யா பாண்டே - லட்சுமியாக
ஐஸ்வர்யா ராஜேஷ் - லட்சுமியின் தாயார் நந்தினியாக
சல்மான் யூசூப் கான்
கருணாகரன் - அழகுவாக
கோவை சரளா - ஏ. சரஸ்வதியாக
சாம்ஸ்
ஆகாஷ் சிங்
ஷோபியா
ஜீத் தாஸ்
தயாரிப்பு
தொகு2017 செப்டம்பர் ஏ. எல். விஜய் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் ஒரு புதிய படத்திற்கான தயாரிப்பு பணிகளைத் தொடங்கினார். இது தேவியின் (2016) தொடர்ச்சியாக இருக்கும் என்ற அறிக்கைகளை மறுத்தனர். 2017 செப்டம்பர் 22 அன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இத்திரைப்படம் தொடங்கப்பட்டது. நீரவ் ஷா ஒளிப்பதிவாளாக ஒப்பந்தமானார். சாம் சி எஸ் இசையமைப்பை மேற்கொள்ள மற்றும் ஆண்டோனி படத்தொகுப்பை மேற்கொண்டார் பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா மற்றும் ஆர். ரவீந்திரன் ஆகியோர் தயாரித்திருந்தனர்.[2][3][4] குழந்தைகளுக்கான நடன ஆதர்சனமான வர்ணிக்கப்படும் பிரபு தேவாவுடன், இந்தி ரியாலிட்டி டான்ஸ் ஷோவின் சூப்பர் டான்சர் வெற்றியாளரான குழந்தை நடனக் கலைஞரான தித்யா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்றினார். அக்ஷத் சிங் மற்றும் ஜீத் தாஸ் உள்ளிட்ட பிற இளம் நடனக் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றினர்.[5][6] 2018 பிப்ரவரி 6 அன்று படத்தின் படபிடிப்பு முடிந்தது. தயாரிப்பாளர்கள் பிரபு தேவாவுக்கு அவருடைய ஒரு பெரிய ஓவியத்தை பரிசளித்தனர்.[7]
வெளியீடு
தொகுபடத்தின் தயாரிப்பு பட்ஜெட் மதிப்பு இந்திய ரூபாயில் 12 கோடியாகும்.[8] 2018 ஆகஸ்ட் 24 அன்று இப்படம் வெளியானது. படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்கப்பட்டன.[9]
ஒலிப்பதிவு
தொகுலட்சுமி திரைப்படப் பாடல்கள் | ||||
---|---|---|---|---|
Soundtrack
| ||||
வெளியீடு | 2018 | |||
இசைப் பாணி | Feature film soundtrack | |||
நீளம் | 24:40 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | Muzik 247 | |||
சாம் சி எஸ் காலவரிசை | ||||
|
இதன் ஒலிப்பதிவை சாம் சி. எஸ் மேற்கொண்டு ஏழு பாடல்களையும் எழுதியுள்ளார்
எண். | பாடல் பெயர் | பாடியோர் | நீளம் |
---|---|---|---|
1. | மொரக்க மாட்ராக்கா | உத்ரா உன்னிகிருஷ்ணன் | 03:05 |
2. | ஆள ஆள | ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி (பாடகி) | 03:12 |
3. | பப்பர பப்பா | பிராந்தி, ரியாஸ், ஸ்ரீவிஷ்ணு, பிரணவ் | 02:46 |
4. | டிரீமி செல்லம்மா | சைந்தவி (பாடகி) | 03:53 |
5. | நில்லாதே நில்லாதே | சத்ய பிரகாஷ் | 03:30 |
6. | இறைவா இறைவா | சாம் சி எஸ் | 04:19 |
7. | த ரிதம் ஆப் டான்ஸ் | ஜெசின் ஜியார்ஜ் | 04:02 |
குறிப்புகள்
தொகு- ↑ "Prabhu Deva on his upcoming film Lakshmi: An emotional dance drama that’ll make audiences laugh and cry- Entertainment News, Firstpost" (in en-US). Firstpost. https://www.firstpost.com/entertainment/prabhu-deva-on-his-upcoming-film-lakshmi-an-emotional-dance-drama-thatll-make-audiences-laugh-and-cry-5018981.html.
- ↑ "Prabhu Deva and director AL Vijay team up once again". Archived from the original on 22 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Director AL Vijay's film with Prabhudheva is not a sequel to 'Devi'". பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ "Dancing has gone to a different level in Kollywood: Prabhudeva — Times of India". பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ "Prabhudeva on directing Dabangg 3, his return to acting and why he enjoys direction more- Entertainment News, Firstpost". பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ "Prabhu Deva's Lakshmi teaser". பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ "Prabhu Deva gets a gift from the producers of his next film 'Lakshmi' on last day of shoot". பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ "Lakshmi budget".
- ↑ "உணர்ச்சி பொங்கும் நடனத்துடன் வருகிறாள் லக்ஷ்மி". 17 December 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2019.