லாரன்சு வோங்

லாரன்சு வோங் சியுன் த்சாய் (Lawrence Wong Shyun Tsai, பிறப்பு: 18 திசம்பர் 1972) சிங்கப்பூர் அரசியல்வாதியும், பொருளியலாளரும், மே 2024 முதல் சிங்கப்பூரின் பிரதமரும், 2021 முதல் அந்நாட்டின் நிதி அமைச்சரும் ஆவார். இவர் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினராக 2011 முதல் இருந்து வருகிறார்.

லாரன்சு வோங்
Lawrence Wong
黄循财
2023 இல் வோங்
4-ஆவது சிங்கப்பூர் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மே 2024
குடியரசுத் தலைவர்தர்மன் சண்முகரத்தினம்
Deputyகான் கிம் யோங்
கெங் சுவீ கீட்
முன்னையவர்லீ சியன் லூங்
நிதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மே 2021
பிரதமர்லீ சியன் லூங்
இவரே
முன்னையவர்கெங் சுவீ கீட்
அமைச்சுப் பொறுப்புகள் 2012–⁠2024
துணைப் பிரதமர்
பதவியில்
13 சூன் 2022 – 15 மே 2024
Serving with கெங் சுவீ கீட்
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்வெற்றிடம்
பின்னவர்கான் கிம் யோங்
சிங்கப்பூர் நாணய அதிகார சபைத் தலைவர்
பதவியில்
8 சூலை 2023 – 15 மே 2024
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்தர்மன் சண்முகரத்தினம்
பின்னவர்கான் கிம் யோங்
கல்வி அமைச்சர்
பதவியில்
27 சூலை 2020 – 14 மே 2021
நிதித்துறையின் 2-ஆவது அமைச்சர்
பதவியில்
22 ஆகத்து 2016 – 14 மே 2021
Serving with இந்திராணி ராஜா (2018–2021)
பிரதமர்லீ சியன் லூங்
தேசிய அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
1 அக்டோபர் 2015 – 26 சூலை 2020
பிரதமர்லீ சியன் லூங்
தகவல், தொடர்புக்கான 2-ஆவது அமைச்சர்
பதவியில்
1 மே 2014 – 30 செப்டம்பர் 2015
பிரதமர்லீ சியன் லூங்
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர்
பதவியில்
1 மே 2014 – 30 செப்டெம்பர் 2015
பதில்: 1 நவம்பர் 2012 – 30 ஏப்பிரல் 2014
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்சான் சுன் சிங்
பின்னவர்கிரேசு பூ
மார்சிலிங்-யூ டீ தொகுதி
லிம்பாங் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 செப்டம்பர் 2015
முன்னையவர்புதிய தொகுதி
மேற்குக் கரை தொகுதி
பூன் லே பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
7 மே 2011 – 24 ஆகத்து 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
லாரன்சு வோங் சியுன் த்சாய்

18 திசம்பர் 1972 (1972-12-18) (அகவை 51)
சிங்கப்பூர்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி
துணைவர்லூ த்சே லூயி
கல்வி
வேலைகுடிமை அதிகாரி, அரசியல்வாதி
தொழில்பொருளியலாளர்
கையெழுத்து

அரசியலில் நுழைவதற்கு முன்பு, வோங் வணிக, தொழில்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், சுகாதார அமைச்சகம் ஆகியவற்றில் பணியாற்றினார். 2005-2008 காலப்பகுதியில், பிரதம மந்திரி லீ சியன் லூங்கின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். 2009-2011 காலப்பகுதியில் எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை செயல் அலுவராகப் பணியாற்றினார்.[1] வோங் 2011 பொதுத் தேர்தலில் அரசியலிற்குள் நுழைந்தார். ஐந்து பேர் கொண்ட மக்கள் செயல் கட்சி அணியின் ஒரு பகுதியாக மேற்குக் கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வோங் பின்னர் 2015, 2020 பொதுத் தேர்தல்களில் மார்சீலிங்-யூ தொகுதியில் போட்டியிடு, தனது நாடாளுமன்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். வோங் 2012-2015 காலப்பகுதியில் கலாச்சாரம், சமூகம், இளையர்துறைகளுக்கான அமைச்சராகவும், 2014-2015 இல் இரண்டாவது தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சராகவும், 2015-2020 இல் தேசிய அபிவிருத்தி அமைச்சராகவும்,[2] பணியாற்றினார். 2016-2021 காலப்பகுதியில் நிதி அமைச்சராகவும், 2020-2021 இல் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார்.

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதற்கு சனவரி 2020 இல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பல-அமைச்சர் குழுவின் இணைத் தலைவராகவும் வோங் இருந்தார்.[3] நிதி அமைச்சராக இருந்தபோது, லீயின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின் அதிகரிப்பை செயல்படுத்தினார். ஏப்ரல் 2022 இல், அவர் ஆளும் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, லீ-யின் வெளிப்படையான வாரிசு வரிசையில் வைக்கப்பட்டார்.[4] வோங் 2022 சூன் 13 அன்று கெங் சுவீ கீட் உடன் இணைந்து சிங்கப்பூரின் துணைப் பிரதமராகப் பதவி ஏற்றார்.[5] 2022 நவம்பர் 26 அன்று, வோங் புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் செயல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[6]

வோங் 2021 மற்றும் 2023 க்கு இடையில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 2023 சூலை 8 அன்று அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 2024 மே 15 அன்று, சிங்கப்பூரின் பிரதமராக வோங் பதவியேற்றார். இவர் நாட்டின் நான்காவது பிரதமராகவும், 1965 இல் சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு பிறந்த முதலாவது பிரதமராகவும் ஆனார்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "MP | Parliament of Singapore". Archived from the original on 17 July 2020. பார்க்கப்பட்ட நாள் 17 July 2020.
  2. Au-Yong, Rachel (29 September 2015). "Lawrence Wong to lead National Development" (in en). The Straits Times இம் மூலத்தில் இருந்து 16 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170816152707/http://www.straitstimes.com/singapore/housing/lawrence-wong-to-lead-national-development. 
  3. "7 ministries get new ministers in major Cabinet reshuffle". CNA (in ஆங்கிலம்). Archived from the original on 16 May 2021. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
  4. "Finance Minister Lawrence Wong endorsed as leader of 4G team: PM Lee". CNA (in ஆங்கிலம்). Archived from the original on 14 April 2022. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022.
  5. "Changes to Cabinet and Other Appointments (June 2022)". Prime Minister's Office Singapore (in ஆங்கிலம்). 6 June 2022. Archived from the original on 6 June 2022. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
  6. "Lawrence Wong elected PAP deputy secretary-general in newly created role" (in en). 26 November 2022 இம் மூலத்தில் இருந்து 26 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221126232405/https://www.channelnewsasia.com/singapore/lawrence-wong-pap-deputy-secretary-general-new-role-3102626. 
  7. "What we know about Singapore's fourth Prime Minister Lawrence Wong". CNA. 15 April 2024. Archived from the original on 15 April 2024. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  8. "Commentary: With Lawrence Wong set to take over as PM, the clock starts on battle for hearts and minds". CNA (in ஆங்கிலம்). Archived from the original on 17 April 2024. பார்க்கப்பட்ட நாள் 17 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரன்சு_வோங்&oldid=3957006" இலிருந்து மீள்விக்கப்பட்டது