வம்புச்சண்ட

ராஜ்கபூர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வம்புச்சண்டை (Vambu Sandai) என்பது 2008 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் உதய் கிரண், சத்யராஜ், தியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் தெலுங்கில் லட்சுமி புத்ருடு (மொழிபெயர்ப்பு: லட்சுமியின் மகன் ) என்ற பெயரில் சிலபகுதிகள் மீண்டும் படமாக்கபட்டு வெளியிடப்பட்டது.

வம்புச்சண்ட
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புவெங்கடேஷ் ஏ
கதைகே. செல்வபாரதி
இசைடி. இமான்
நடிப்புஉதய் கிரண்
சத்யராஜ்
தியா
ஒளிப்பதிவுசுரேஷ்
கலையகம்ஜெய் மாதாஜி சினி கம்பைன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 29, 2008 (2008-02-29)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடி

நடிப்பு

தொகு

தயாரிப்பு

தொகு

2007 சூலையில் படப்பிடிப்பு தொடங்கியது.[1] படத்தின் காட்சிகள் பிரகதி உல்லாச விடுதி, இராமோஜி திரைப்பட நகர், நெக்லஸ் சாலை, மலேசியா நகரியம், கோல்கொண்டா கோட்டை, ஆகியவற்றில் காட்சிகள் படமாக்கப்பட்டன.[2] 2007 ஆகத்து வரை ஐதராபாத் [3] மற்றும் கேரளத்தைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் படமாக்கப்பட்டது.[4] படமானது 2007 செப்டம்பரில் வெளியாகும் என கூறப்பட்டது.[5] இருப்பினும், செப்டம்பர் இறுதிவரை, படம் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருந்தது.[6]

இசை வெளியீடு

தொகு

இந்த படம் 2008 பெப்ரவரி 29 வரை வெளியிடப்படவில்லை என்றாலும்,[7] திரைப்படத்தின் பாடல் குறுவட்டு 2007 செப்டம்பர் 2இல் வெளியிடப்பட்டது. இது படம் வெளியாவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே ஆகும்.[8] ஐதராபாத்தில் உள்ள ரவி நாராயண ரெட்டி கல்யாணமண்டபத்தில் (ரவி நாராயண ரெட்டி நினைவு அரங்க வளாகம்) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தாமோதர் ரெட்டி, தம்மரெட்டி பரத்வாஜாவிற்கு இசைப் பேழையின் ஒரு படியை வழங்கி அதிகாரப்பூர்வமாக இசையை வெளியிட்டார். பின்னர் பரத்வாஜா அதிகாரப்பூர்வமாக இசை வட்டுக்களை வெளியிட்டார்.[9] ஆபரேஷன் துரியோதனாவின் தயாரிப்பாளர் ஏ. மல்லிகார்ஜுன ராவுக்கு வழங்கினார் முதல் வட்டை வழங்கினார்.[10] இசை வட்டுக்கான விநியோக உரிமைகளை மாநில வர்த்தகக் கழகத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சீனிவாஸ் வாங்கினார்.[11]

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைத்தார். 2007 ஆகத்து 23 அன்று நடத்த இசை வெளியீட்டு விழாவில் சிலம்பரசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.[12]

தமிழ் பதிப்பின் பாடல்கள் [13]
 • "எதற்காக"
 • "ஜீ பூம் பா"
 • "பகை ஒடுங்க"
 • "தால் திறவாய்"
 • "டென்ஷன் மச்சான்"
தெலுங்கு பதிப்பின் பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஏம் சூசி நேனே நுவ்வு"  ஜாசி கிஃப்ட், சைனோரா பிலிப் 04:40
2. "ஜீ பூம் பா"  அச்யுத், நவீன் 03:55
3. "சவாரியா சவாரியா"  ஜோத்ஸ்னா, நரேஷ் ஐயர் 04:58
4. "எக்கடுன்னா டென்சன் மாமா"  ரஞ்சித் 04:09
5. "அடிகடிகோ துபான்"  ராகுல் நம்பியார் 02:40
6. "ஏம் ஸ்மைல் ரா"  சுசித்ரா 04:35

குறிப்புகள்

தொகு
 1. staff (30 July 2007). "'Lakshmi Putrudu' in last schedule". India Glitz இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930154501/http://www.indiaglitz.com/channels/telugu/article/32672.html. 
 2. staff (10 October 2007). "'Lakshmi Putrudu' in re-recording". IndiaGlitz இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071012025117/http://www.indiaglitz.com/channels/telugu/article/34021.html. 
 3. staff (30 August 2007). "'Lakshmi Putrudu' On Location". India Glitz இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930182638/http://www.indiaglitz.com/channels/telugu/gallery/events/12838.html. 
 4. Staff (20 August 2007). "Lakshmi Putrudu shoots in Kerala". ஒன்இந்தியா இம் மூலத்தில் இருந்து 14 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214091511/http://entertainment.oneindia.in/telugu/news/2007/lakshmi-putrudu-udaykiran-200807.html. 
 5. staff (16 July 2007). "'Lakshmi Putrudu' with Udaykiran as hero". India Glitz இம் மூலத்தில் இருந்து 12 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212205846/http://www.indiaglitz.com/channels/telugu/article/32384.html. 
 6. Staff (27 September 2007). "'Lakshmi Putrudu' in final touches". ஒன்இந்தியா இம் மூலத்தில் இருந்து 14 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214091756/http://entertainment.oneindia.in/telugu/news/2007/lakshmi-putrudu-final-touches-270907.html. 
 7. staff (3 March 2008). "Lakshmi Putrudu Review". ஒன்இந்தியா இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210805142850/http://entertainment.oneindia.in/telugu/reviews/2008/lakshmi-putrudu-review-030308.html. 
 8. staff (4 March 2008). "'Lakshmi Putrudu' Success Meet". India Glitz. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/14621.html. 
 9. staff (3 September 2007). "'Lakshmi Putrudu' Audio Launch". India Glitz. http://www.indiaglitz.com/channels/telugu/events/13131.html. 
 10. staff (26 February 2007). "'Operation Duryodhana' Press Meet". India Glitz. http://www.indiaglitz.com/channels/telugu/events/11680.html. 
 11. staff (3 September 2007). "'Lakshmi Putrudu' Audio Release". சிஃபி. http://www.sify.com/movies/lakshmi-putrudu-audio-release-news-telugu-kkfuCjdbiba.html. 
 12. "Audio for Vambu Sandai released". 23 August 2007. Archived from the original on 5 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 13. "Vambuchanda" – via mymazaa.com.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்புச்சண்ட&oldid=3743867" இலிருந்து மீள்விக்கப்பட்டது