வாசுகி பாஸ்கர்
வாசுகி பாஸ்கர் ஒரு இந்திய பாணியிலான ஆடை வடிவமைப்பாளராகத் , தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரிகிறார்.[1] அவர் தயாரிப்பாளர் ஆர்.டி பாஸ்கரின் மகளாவார். பாவலர் கிரியேஷன்ஸ் இவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமாகும்.
வாசுகி பாஸ்கர் | |
---|---|
சிம்புவின் லவ் ஆன்தெம் படப்பிடிப்பில், எகானுடன் வாசுகி பாஸ்கர். | |
பிறப்பு | செப்டம்பர் 18 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | ஆடைகலன் வடிவமைப்பாளர், |
பெற்றோர் | ஆர். டி. பாஸ்கர் |
உறவினர்கள் | (சகோதரர்கள்) பரிதி பாஸ்கர் மற்றும் ஹரி பாஸ்கர் (உறவினர்கள்) கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் |
தொழில்
தொகுவாசுகி, புகழ்பெற்ற இசையமைப்பாளரான இளையராஜா வின் சகோதரர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.டி பாஸ்கரின் ஒரே மகளாவார். இவரது சகோதரர்கள் திரைப்பட இயக்குனர் பரிதி பாஸ்கர் மற்றும் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஹரி பாஸ்கர் ஆவார். இவரது சகோதரர் ஹரி பாஸ்கர் "காஞ்சி கவுலுக்கு எதிரே வியூகம் என்ற பெயரில் முடிக்கப்படாத திரைப்படத்தில் நடித்துள்ளார்.[2] கார்த்திக் ராஜா , யுவன் சங்கர் ராஜா , பாடகர் பவதாரிணி , திரைப்பட இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு, நகைச்சுவை நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவர்.
லயோலா கல்லூரியில் வடிவமைப்புத் துறையில் வாசுகி படித்துக்கொண்டிருந்த போது, இயக்குனர் பாரதிராஜா கண்களால் கைது செய் என்கிற படத்திற்கு ஆடைகளை வடிவமைப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கினார்.[3] வெங்கட் பிரபுவின் படங்களில் ஆடைகளை அவர் வடிவமைத்தார், நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.[4] மங்காத்தா திரைப்படத்தில் அஜித் குமாரின் தோற்றத்திற்கேற்ப ஆடை வடிவமைத்துக் கொடுத்தார். இது பற்றி அதிகம் பேசப்பட்டது.[5][6][7] பிரசன்னா மற்றும் சிபிராஜ் நடித்த நாணயம் திரைப்படத்தில் ஆடைகளை வடிவமைத்துப் பணியாற்றியுள்ளார்.[8][9] அவர் இயக்குனர் பிரபு தேவாவுடன் வில்லு மற்றும் பாலாவின் ''அவன் இவன்'' திரைப்படத்தில் பணியாற்றினார். .[10] மேலும், இவர் ஆங்கிலத் திரைப்படமான எனிதிங் ஃபார் யூ வில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார். இப்படம் தோல்வியடைந்தது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Woman power shines in K'wood". பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.indiaglitz.com/tamil-movies-viyugam-gallery-7562.html
- ↑ "Suriya is the most stylish Kannada actress: designer". பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
- ↑ "Chennai 600028 -- a potential blockbuster". பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
- ↑ "‘Mankatha not a remake’". https://bangaloremirror.indiatimes.com/entertainment/south-masala/mankatha-not-a-remake/articleshow/21575357.cms. பார்த்த நாள்: 30 September 2018.
- ↑ "Ajith-starrer Mankatha is original: Venkat" இம் மூலத்தில் இருந்து 2012-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120915014203/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-16/news-interviews/29664660_1_jingle-yuvan-song. பார்த்த நாள்: 23 July 2011.
- ↑ "Ajith's salt & pepper look to go". Archived from the original on 12 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Toss it right". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article779658.ece. பார்த்த நாள்: 23 July 2011.
- ↑ "'Naanayam' joins Pongal race". Archived from the original on 5 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Woman behind Ajith's new look!". பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.
- ↑ "Anything For You film news". பார்க்கப்பட்ட நாள் 23 July 2011.