வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மார்ச் 2009
- மார்ச் 27: வன்னியில் எறிகணைத் தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிசு உட்பட 61 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 164 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- மார்ச் 26:
- தென்னிலங்கையின் மாத்தறை கம்புறுபிட்டிய நகரத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று பெண்கள் உட்பட 7 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். (தமிழ்வின்)
- இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உண்டு என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார். (தமிழ்வின்)
- வன்னியில் எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- மார்ச் 25: வன்னியில் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் அடங்கலாக 112 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் அடங்கலாக 210 பொதுமக்கள் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- மார்ச் 24:
- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் கொழும்பில் கடத்தப்பட்டார். (தமிழ்வின்)
- வன்னியில் படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில், கைக்குழந்தைகள், சிறுவர்கள் அடங்கலாக 101 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 125-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- மார்ச் 22: இலங்கையில் 2009] ஆம் ஆண்டில் ஜனவரி 20 முதல் மார்ச் 7 வரை 2683 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. (தமிழ்வின்)
- மார்ச் 21:
- வன்னியில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 9 சிறுவர்கள் உட்பட 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் போருட் நிறுவனத்தின் பணியாளர் உட்பட 46 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். (தமிழ்வின்)
- ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமான் முன்பிணையில் வர மறுப்புத் தெரிவித்ததை அடுத்து அவருக்கு மேலும் 15 நாள் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. (தமிழ்வின்)
- மார்ச் 20:
- வன்னியில் படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 49 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளனர். (தமிழ்வின்)
- மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கருணா குழுவின் இலங்கை சுதந்திரக் கட்சி முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். (தமிழ்வின்)
- முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இருந்து காயமடைந்த பொதுமக்களில் 483 பேர் திருகோணமலை புல்மோட்டைக்கு கப்பலில் அழைத்து வரப்பட்டனர். (தமிழ்வின்)
- மார்ச் 19:
- வன்னியில் படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு கைக்குழந்தைகளும் 12 சிறுவர்களும் உட்பட 38 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- திருகோணமலையில் வர்சா என்ற சிறுமியைக் கடத்தி கொலை செய்த நிகழ்வு தொடர்பிலான 6 பிரதான சந்தேக நபர்களில் மற்றுமொருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். (தமிழ்வின்)
- மார்ச் 18: புதுக்குடியிருப்பு பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (தமிழ்வின்)
- மார்ச் 13:
- அமெரிக்க அரசுச் செயலாளர் இலறி கிளிண்டன் தொலைபேசி ஊடாக மகிந்த ராஜபக்சவுடன் இலங்கை விவகாரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க அரசு
- திருகோணமலையில் புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 6 வயது தமிழ் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். (தமிழ்வின்)
- வன்னியில் மோதல்களின்போது போர் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், தொடர்புடைய தரப்பினர் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். (பிபிசி)
- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- மார்ச் 12: வன்னி மோதல்களில் பொதுமக்களைப் பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. (யூபிஐ)
- மார்ச் 11:
- பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் வணங்கா மண் கப்பல் அத்தியாவசிய பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. (தமிழ்வின்)
- இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். (தமிழ்வின்)
- மார்ச் 10:
- மாத்தறை அக்குறச பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு நிகழ்வில் 14 பேர் வரை கொல்லப்பட்டு அமைச்சர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். (பிபிசி)
- வன்னியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு நாட்களில் 25 சிறுவர்கள் அடங்கலாக 74 தமிழர்கள் கொல்லப்பட்டு 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- இலங்கைத் தமிழர் நிலவரம் தொடர்பில் அமெரிக்காவின் அரசுச் செயலாளர் இலறி கிளிண்டனும் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனும் பேச்சுவார்த்தை நடத்தினர். (தமிழ்வின்)
- இலங்கைப் படைகள் வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் நோக்கி மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் 129 பேர் படுகொலை செய்யப்பட்டனர். (தமிழ்வின்)
- மார்ச் 9:
- விசுவமடுவில் படையினரின் பீரங்கித் தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியழித்ததில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டு பெருமளவிலானோர் காயமடைந்தனர். 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் சாவடைந்தனர். (தமிழ்வின்)
- விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார். (தமிழ்வின்)
- இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை அதிமுக ஆதரிக்கின்றது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்ட மேடையில் அறிவித்தார். (புதினம்)
- மார்ச் 8: புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் மும்முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதில் 450 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,272 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (தமிழ்வின்)
- மார்ச் 7:
- முல்லைத்தீவில் கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 208 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- தியாகி முருகதாசனின் இறுதிவணக்க நிகழ்வுகள் லண்டனில் நடைபெற்றது. (தமிழ்வின்)
- இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சென்னை தாம்பரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக மேடை ஏறியபோது கைது செய்யப்பட்டார். (தமிழ்வின்)
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக தம்மிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்தது. (தமிழ்வின்)
- மார்ச் 6:
- மட்டக்களப்பில் 14 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் சிறுமியும் அவரது தாயாரும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை அடையாளம் காட்டினர். (தமிழ்வின்)
- தமிழீழ மக்களுக்கு தார்மீக உரிமைக்குரலெழுப்பி, மொறீசியசில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் எழுச்சிப் பேரணியை நிகழ்த்தினர். (தமிழ்வின்)
- இலங்கையின் வடக்கில் நிலவுகின்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஐநா அவை தலையிடுவதற்கு பிரித்தானியா வலியுறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மன் டூட்டு கடிதம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். (தமிழ்வின்)
- பொதுமக்கள் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியது மோதல்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரின் முதன்மைக் கடமை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். (தமிழ்வின்)
- மார்ச் 5:
- கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் சிறிதரசிங் ஆனந்த விகடன் சஞ்சிகை விற்பனை செய்த குற்றஞ்சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். (தமிழ்வின்)
- இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிறீதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். (தமிழ்வின்)
- மார்ச் 1: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, மாத்தளன் பகுதிகளில் படையினர் நடத்திய தொடர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 37 தமிழர்கள் கொல்லப்பட்டு 65 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)