வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜனவரி 2009
- ஜனவரி 20: பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றார். (பிபிசி)
- ஜனவரி 19: 22-நாட்கள் காசாவில் இடம்பெற்ற சண்டையில் மொத்தம் 1,300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் 5,400 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. (சிஎனென்)
- ஜனவரி 18: இசுரேல் தனது படைகளை காசாவில் இருந்து வெளியேற்ற ஆரம்பித்தது. (சின்குவா)
- ஜனவரி 17: இசுரேல் காசாவில் ஜனவரி 18 காலை 2:00 மணியில் போர் நிறுத்தத்தை அறிவித்தது. (சிஎனென்)
- ஜனவரி 15:
- அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று 155 பேருடன் நியூயோர்க் நகரில் அட்சன் ஆற்றில் வீழ்ந்தது. அனைவரும் உயிர் தப்பினர். (சீனென்)
- அனைத்துலக வானியல் ஆண்டு ஆரம்ப நிகழ்வுகள் பாரிசில் உள்ள யுனெஸ்கோ கட்டிடத்தில் இடம்பெற்றன. (பிரான்ஸ் 24)
- ஜனவரி 14: சோமாலி கடற்கொள்ளைக்காரர்கள் கிழக்கு ஆபிரிக்காவில் தாம் பிடித்து வைத்திருந்த இரண்டு கப்பல்களை விடுவித்தனர். (சிஎனென்)
- ஜனவரி 12:
- இசுரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் காசா நகரில் நேரடிப் போர் மூண்டது. (ஸ்கை)
- இந்தோனீசியாவில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 230 பேர் கொல்லப்பட்டனர். (எம்எஸ்என்)
- ஜனவரி 11: தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2009க்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. (கோல்டன்குளோப்)
- ஜனவரி 10: பெருவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 33 பேர் கொல்லப்பட்டனர். (நெதர்லாந்து வானொலி)
- ஜனவரி 9:
- கொஸ்டா ரிக்காவில் 6.1-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய இயக்கு தளமான வின்டோஸ் 7 இன் சோதனைப் பதிப்பை வெளியிட்டது. (பிசினஸ்வீக்)
- ஜனவரி 8: இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 1.5 விழுக்காடாகக் குறைத்தது. இது 315 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவானதாகும். (பிபிசி)
- ஜனவரி 6: இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று காசாவில் ஐநா பள்ளி ஒன்றின் மீது வீழ்ந்ததில் பெரும்பாலும் சிறுவர்களடங்கிய 40 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- ஜனவரி 4: இந்தோனீசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜனவரி 3:
- கானாவில் இடம்பெற்ற அதிபர் தேர்தல்களில் ஜோன் அட்டா மில்ஸ் மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். [1]
- இஸ்ரேலிய இராணுவம் காசா கரையினுள் நுழைந்தது. (பிபிசி)
- ஜனவரி 2:
- உலகில் வயதில் கூடிய மனிதர், மரீயா டி ஜீசஸ் என்ற பெண், தனது 115வது அகவையில் போர்த்துக்கலில் காலமானார். (பிபிசி)
- சோமாலியாவில் இரண்டாண்டுகளாக நிலை கொண்டிருந்த எதியோப்பியப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டன. (பிபிசி)
- ஜனவரி 1:
- அசாம் மாநிலத்தில் குவஹாத்தியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர். (சீஎன்என்)
- காசா அகதி முகாம் ஒன்றில் இஸ்ரேல் வான்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் ஹமாஸ் இயக்கத்தின் நிசார் ரயான் என்ற முக்கிய இராணுவத் தலைவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- சிலோவாக்கியா யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்ட 16வது ஐரோப்பிய நாடானது. (ராய்ட்டர்ஸ்)