விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 1
சனவரி 1: புத்தாண்டு நாள்; விடுதலை நாள்: புருணை, எயிட்டி, சமோவா, சூடான்
- 1804 – எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.
- 1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
- 1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா (படம்) தில்லியில் அறிவிக்கப்பட்டார்.
- 1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
- 1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாசுமேனியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன.
- 1949 – ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
சி. வை. தாமோதரம்பிள்ளை (இ. 1901) · வே. அகிலேசபிள்ளை (இ. 1910) · வி. எஸ். ராகவன் (பி. 1925)
அண்மைய நாட்கள்: திசம்பர் 31 – சனவரி 2 – சனவரி 3