விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு40
தமிழ் சொற்கள் தேவை
தொகுபுரோகாரியோட்டு(Prokaryote), இயூகாரியோட்டு (Eukaryote) என்பவற்றை தமிழில் எப்படிக் குறிப்பிடலாம்? --கலை 09:16, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- Prokaryote என்பது முதல் + கரு என்று பிரிக்கப்பட்டாலும் அதற்கு நிலையான கரு இல்லையென்பதால் நிலைக்கருவிலி என்றும், Eukaryote என்பதை மெய்க்கருவுயிரி என்றும் அழைக்கலாம் எனக் கருதுகிறேன், இதனைப் பற்றி செல்வா அவர்களது பேச்சு இங்கே: பேச்சு:புரோகாரியோட்டு அவரது கூற்றில் இருந்து கருவிலி உயிரி என்பதும் பொருத்தமாக இருக்கிறது. --சி. செந்தி 15:23, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- செந்தியின் தேர்வுகள் அருமையானவை, மிகவும் பொருத்தமானவை. அவற்றை அப்படியே ஏற்கலாம் என்பது என் கருத்து. eu என்பதற்கு உண்மையான, மெய்யான என்னும் பொருள் உண்டு (நல்ல் என்பது பிறிதொரு பொருள்). ஆகவே
- Prokaryote = நிலைக்கருவிலி
- Eukaryote = மெய்க்கருவுயிரி
- நன்றி செந்தி. --செல்வா 20:30, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- நல்ல விளக்கங்களுடன் கூடிய அழகான தமிழ்ச் சொற்கள். செல்வா, செந்தி இருவருக்கும் நன்றிகள்.--கலை 20:50, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- Prokaryote = நிலைக்கருவிலி
அவசரம்: கூகுள் கட்டுரைகள் மதிப்பீடு - கருத்து வேண்டல்
தொகுகூகுள் கட்டுரைகள் மதிப்பீடு பற்றி அனைவரது கருத்துகளையும் உடனடியாகத் தெரிவித்தால் மிகவும் உதவும். நமது முடிவை எதிர்பார்த்து, பல தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களும் காத்திருப்பதால், செப்டம்பர் 1 க்குள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுத்து தெரிவிப்பது நன்று. --இரவி 08:31, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
Report an error
தொகுThis may interest you, en:Wikipedia:Village_pump_(proposals)#.22Report_an_error.22_feature. Can tawiki have this feature? Regards, Ganeshk 03:15, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
- நல்ல யோசனையாக இருக்கிறதே.த.விக்கியில் இருந்தால் உபயோகமாக இருக்கும்--சோடாபாட்டில் 04:00, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
மொழிக்கும் சிந்தைக்குமான தொடர்புகள்
தொகுஉங்கள் மொழிக்கும் சிந்தைக்கும் தொடர்பு உள்ளதா? - சுந்தர் \பேச்சு 15:58, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
- நல்ல சிந்தனையைத் தூண்டும் சுவையான கட்டுரை. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை படித்தேன். அதில் ஒரு பண்பாட்டினரின் உலகப்பார்வை எவ்வாறு அவர்களது மொழியில் வெளிப்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டிருந்தது. அதிலும் இது போலத்தான் வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தோர் தத்தமது மொழிகளில் ஒரு விடயத்தை எவ்வாறு வேறுபட்ட முறைகளில் கையாள்கிறார்கள் என்பது காட்டப்பட்டிருந்தது. இணைப்புக்கு நன்றி சுந்தர். -- மயூரநாதன் 18:23, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
- மயூரநாதன் குறிப்பிட்டது போன்று இந்தக் கட்டுரை உள்ளது. (ஆனால் அண்மையில் வெளிவந்த கட்டுரை)--சோடாபாட்டில் 18:41, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்பு
தொகுநீண்ட உரையாடலுக்குப் பின்னர் கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வாக்குப்பதிவு இங்கே நடைபெற்று வருகிறது. உரையாடலில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென்பதால், நாம் எடுக்க வேண்டிய முடிவினை வாக்குப்பதிவாக இட்டிருக்கிறேன். செப்டம்பர் 1 க்குள் நமது முடிவினை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனவே தங்கள் பொன்னான வாக்குகளையும் கருத்துகளையும் அங்கே இடும்படி வேண்டிக் கொள்கிறேன்.--சோடாபாட்டில் 12:43, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆலமரத்தடியினருக்கு ஒரு விண்ணப்பம்:
திருவாளர்கள் ரவி, kanags , குறும்பன், சோடாபாட்டில், செல்வா, Natkeeran , மணியன், மயூரநாதன், கார்த்திக், சுந்தர், ஜெ.மயூரேசன், அராபத், சுந்தர், அவர்களுக்கு:
மகேஸ்வரி அவர்கள் கீழே கொடுத்துள்ள திருத்திய கட்டுரைகளை அவரே மீண்டும் திருத்தியுள்ளார்.
- World_population உலக மக்கள் தொகை
- Katrina_Kaif கேட்ரீனா கய்ஃப்
- Rahul_Bose ராகுல் போஸ்
- Jammu ஜம்மு
- Vidya_balan வித்யா பாலன்
- Tachometer சுழற்சி அளவி
- Mohanlal மோகன்லால்
- Vaishnava Devi வைஷ்ணவ தேவி
- Arjun Rampal அர்ஜூன் ராம்பால்
- Aryabhatta ஆரியபட்டா
- Yoghurt தயிர்
- UMTele_System உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு
- Madhuri Dixit மாதுரி தீட்சித்
- Kareena kapoor கரீனா கபூர்
கீழே கொடுக்கப்பட்டவை ஆலமரத்தடி 25 இல் இடம் பெற்றுள்ளதும் அல்லது முக்கியமான ஆங்கில மொழி கட்டுரைகளை சார்ந்ததுமாகும்:
- Cancer : புற்று நோய்
- Romania : உருமேனியா
- Noise Pollution : ஒலி மாசு
- Greenhouse Effect : பைங்குடில் விளைவு
- Rabindharnath Tagore :இரவீந்திரநாத் தாகூர்
- WTO :உலக வணிக அமைப்பு
தயவு செய்து இவை அனைத்தையும் ஒரு முறை பார்க்குமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்:
Tamil09 :20 -09 -2010
- நன்றி, தமிழ்09. அனைவரும் பார்க்கிறோம். -- சுந்தர் \பேச்சு 03:23, 21 செப்டெம்பர் 2010 (UTC)
நாட்டாரியல், நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல்
தொகுஎந்த சொல் பொருத்தமானது ? --Natkeeran 00:58, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
- நாட்டுப்புறவியல் என்பதே பரவலாக வழங்கப்படுகிறது. இதுவே சரி என நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 04:11, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
புது உலக மொழிகளின் விக்கிப்பீடியாக்கள்
தொகுபுது உலக மொழிகளின் விக்கிப்பீடியாக்கள் --Natkeeran 04:45, 2 செப்டெம்பர் 2010 (UTC)
விக்கிசெய்திகளில் நிருவாக அணுக்கம்
தொகுவிக்கிசெய்திகளில் மாஹிர் நிருவாகியாவதற்கு ஒப்புதல் தந்துள்ளார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு உங்கள் பெருத்த ஆதரவை எதிர்பார்க்கிறேன். உங்கள் வாக்குகளை இங்கே அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முன்கூட்டியே நன்றி.--Kanags \உரையாடுக 23:21, 3 செப்டெம்பர் 2010 (UTC)
முதற்பக்கத்தை இற்றைப்படுத்துதல்
தொகுவிக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தை தினமும் இற்றைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.--Wwwsenthilathiban 14:35, 4 செப்டெம்பர் 2010 (UTC)
- விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தை தினமும் இற்றைப்படுத்துதல் என்பது கடினமானது. தமிழ் விக்கிப்பீடியாவிற்குள் தினமும் அனைவரும் (தொடர்ந்து பங்களித்து வரும் பயனர்கள், நிர்வாகிகள் கூட) வந்து செல்வது என்பது நடைமுறைக்குச் சாத்தியமானது அல்ல. மேலும் முதற்பக்கக் கட்டுரைகள் வாரம் ஒருமுறை வெளியிடப்படுவதால் சிறப்பான கட்டுரைகள் (ஓரளவிற்காவது) இடம் பெற்று வருகின்றன. தினமும் என்று வரும் போது முதற்பக்கக் கட்டுரைகள் பற்றாக்குறை ஏற்பட்டு பல குறுங்கட்டுரைகள் முதற்பக்கத்தில் இடம் பெறும் தவறான நிலையும் ஏற்படும். முதற்பக்கத்தில் தரம் குறைவான மற்றும் முழுமையில்லாத கட்டுரைகள் இடம் பெற்றால் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்திலும் நம்பிக்கையின்மை ஏற்படக் கூடும். முதற்பக்கத்தில் செய்திகள் பகுதியை மட்டும் தினமும் இடம் பெறச் செய்யலாம். அதற்கும் செய்திப் பற்றாக்குறை உள்ளது.
முதற்பக்கத்தில் விக்சனரியிலிருந்து தினமும் பத்து சொற்களும் அதற்கான விளக்கச் சொற்களூம் இடம் பெறச் செய்யலாம் அதற்காக விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கலாம்.இதன் மூலம் விக்சனரிக்கும் பயனர்கள் எண்ணிக்கையும் பங்களிப்பும் அதிகமாகலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 17:37, 4 செப்டெம்பர் 2010 (UTC)
- தேனி எம். சுப்பிரமணி சொல்வது போல் கட்டுரைகளை இற்றைப்படுத்தாமல், தினமும் பத்து சொற்கள், உங்களுக்குத் தெரியுமா, விக்கிப்பீடியா அறிமுகம், சிறப்புப் படம் போன்ற பகுதிகளை இற்றைப்படுத்தலாம்.--Wwwsenthilathiban 01:25, 5 செப்டெம்பர் 2010 (UTC)
- நல்ல திட்டம், தேனி. சுப்பிரமணி. இதற்கென ஒரு வடிவமைப்பை உருவாக்கி மற்ற பயனர்களின் கருத்தையும் அறியலாம். -- சுந்தர் \பேச்சு 17:17, 5 செப்டெம்பர் 2010 (UTC)
- பத்து சொற்கள் என்னும் கணக்கு மிகவும் அதிகமானது. ஒரு நாளைக்கு 3 சொற்கள் இடலாம் (முதலில்). அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு பொருள்கள் தந்து சரியான பொருளைச் சொடுக்கச் சொல்லலாம். வந்து முயல்வோரின் புள்ளிக் குறிப்புகளையும் சேகரிக்கலாம். அந்த மூன்று சொற்களோடு தொடர்புடைய சொற்களைச் சுட்டலாம். பொதுவாக இது விக்சனரிக்கு உகந்த திட்டம். ஆனாலும், விக்கிச் செய்திகளில் விரிவாகவும், இன்றைய நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் சுருக்கமாகவும் இருப்பது போல, இதனையும் ஒருவகையான ஒருங்கிணைப்புப் பணியாகவும் கருதலாம். அறிவியல், கணிதப் புதிர்களையும் தரலாம். இம்முயற்சிகள் அதற்கேற்ற கட்டுரையை ஆக்க ஒரு தூண்டுகோலாகவும் அமையலாம். காலப்போக்கில், சிறந்த தொகுப்புகளில் ஒன்றாகவும் இது/இவை அமையக்கூடும். புதிய வருநர்களை ஈர்க்கவும், அவர்கள் பங்குபற்றவும் உதவக் கூடும், கற்ற கல்வி பரவலாக்கப்படுதலும் நிகழும். ஆகவே பயனுடையது. அவ்வப்போது என்னால் இயன்ற உதவிகளையும் செய்கின்றேன். இலக்கணக் கேள்விகளையும் கேட்கலாம். நம் ஒவ்வொருவருக்கும் இரண்டாயிரம் கைகளும் ஆயிரம் தலைகளும் இருந்தால் விரைந்தாற்றலாம் :) (அதாவது அத்தனை பங்களிப்பாளர்கள் வர வேண்டும் என்கிறேன். யாரும் உடனே தவம் இருக்கத் தொடங்கிவிடாதீர்கள் :) )--செல்வா 19:37, 5 செப்டெம்பர் 2010 (UTC)
தாய்மொழி, தமிழ் கலந்தாய்வு, பேர்கன், நோர்வே
தொகுநோர்வேயிலுள்ள, பேர்கன் நகரில் செப்டம்பர் 24, 25 ஆம் திகதிகளில் தாய்மொழி, தமிழ் கலந்தாய்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதில் நோர்வே, சுவீடன் நாட்டிலிருந்து தமிழ் கற்பிற்கும் ஆசிரியர்கள், உதவியாளர்கள் பங்குகொள்ள இருக்கின்றனர். அத்துடன் வேறு நாடுகளிலிருந்தும் துறைசார் ஆர்வலர்கள் பங்கெடுக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் முன்பு செய்ததுபோன்று, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் ஒன்றை செய்யும்படி கலந்தாய்வுக்கான அமைப்பாளர் கேட்டிருக்கிறார். எனவே 24 ஆம் திகதி அப்படி ஒரு அறிமுகம் ஒன்றை 15-20 நிமிடங்களுக்கு செய்வதாக இருக்கிறேன். இதில் ஏதாவது குறிப்பிடும்படியான விடயங்களை சொல்லலாம் எனத் தோன்றினால், உங்கள் கருத்துக்களை அறியத் தாருங்கள்.--கலை 12:54, 6 செப்டெம்பர் 2010 (UTC)
- அருமையான வாய்ப்புக் கலை. நேரடியாக பங்களிக்க முடியும் என்பதை, விக்சனரியில் நோர்வேஜியன் மற்றும் பிற மொழி பெயர்ப்புகளைச் சேக்கலாம் என்பது பற்றியும் கோடிட்டு குறிப்பிடவும். உங்களைப் போன்றே சுவீடனில் இருந்து பயனர்கள் வந்து பங்களிப்புச் செய்கையில் அந்த நாடு, அதன் பண்பாடு, அங்கு தமிழர்களின் வாழ்வியல் போன்ற பல தகவல்களைப் பகிர முடியும் என்பதைக் குறிப்பிடலாம். அவர்களின் தமிழ் கல்விக்கு விக்கித் திட்டங்களும், நூலகம், வலைப்பதிவு போன்றவையும் சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதை குறிப்பிடலாம். உங்களின் தொடர்ச்சியான முயற்சிக்கும் செயற்பாடுகளுக்கும் மிக்க நன்றிகள். --Natkeeran 23:20, 9 செப்டெம்பர் 2010 (UTC)
- உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நக்கீரன். நிச்சயம் நீங்கள் கூறியவற்றையும் எடுத்து கூறுவேன்.--கலை 00:07, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- கலை, வெளிநாடுகளில் தமிழ் கல்வி தொடர்பானவர்களது கலந்துரையாடல் என்பதால் இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும். தற்போதைய நிலையில், வெளிநாட்டுகளில் இருந்தே தமிழர்கள் கூடிய அளவு தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பிற விக்கித்திட்டங்களுக்கும் பங்களிப்புச் செய்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுங்கள். இதனை வலுப்படுத்தவேண்டிய தேவையையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியோடு தொடர்புடையவர்களாக இருப்பதற்கும் விக்கித்திட்டங்கள் உதவும் என்பதையும். அவர்களது தேவைகளுக்குத் தக்கவாறு விக்கிப்பீடியா போன்றவற்றை வளர்த்து எடுக்க கலந்துரையாடல்களில் பங்குபற்றவுள்ள ஆசிரியர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன என்பதையும் எடுத்துக்காட்டுங்கள். தமிழ் மொழி மூலமான அறிவு வளர்ச்சியில் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயங்குவதற்கும், இது ஒரு முக்கியமான மேடை என்பதையும் தெரிவியுங்கள். -- மயூரநாதன் 10:40, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- மேலதிகமான கருத்துக்களைத் தந்தமைக்கு நன்றி மயூரநாதன். --கலை 11:46, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- அருமையான வாய்ப்புக் கலை. நேரடியாக பங்களிக்க முடியும் என்பதை, விக்சனரியில் நோர்வேஜியன் மற்றும் பிற மொழி பெயர்ப்புகளைச் சேக்கலாம் என்பது பற்றியும் கோடிட்டு குறிப்பிடவும். உங்களைப் போன்றே சுவீடனில் இருந்து பயனர்கள் வந்து பங்களிப்புச் செய்கையில் அந்த நாடு, அதன் பண்பாடு, அங்கு தமிழர்களின் வாழ்வியல் போன்ற பல தகவல்களைப் பகிர முடியும் என்பதைக் குறிப்பிடலாம். அவர்களின் தமிழ் கல்விக்கு விக்கித் திட்டங்களும், நூலகம், வலைப்பதிவு போன்றவையும் சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதை குறிப்பிடலாம். உங்களின் தொடர்ச்சியான முயற்சிக்கும் செயற்பாடுகளுக்கும் மிக்க நன்றிகள். --Natkeeran 23:20, 9 செப்டெம்பர் 2010 (UTC)
நோர்வே, பேர்கனில் தமிழ் - தாய்மொழி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகத்திற்கு வழங்கப்பட்ட நேரம் போதாது என்றாலும் அதனை அங்கே செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியே. படங்கள் உள்ளன. பின்னர் இணைக்கிறேன்.--கலை 23:54, 3 அக்டோபர் 2010 (UTC)
நிர்வாகிகளின் கவனத்திற்கு
தொகுவிரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பகுப்பில் 26 பக்கங்கள் சேர்ந்துள்ளன. அவற்றுள் பல விக்கிபீடியாவிற்கு ஏற்றவை அல்ல. இதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில் 20:14, 6 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி, இவற்றில் ஒரு சில விக்கியாக்கம் செய்ய வேண்டும். கவனிக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:10, 8 செப்டெம்பர் 2010 (UTC)
புதிய பயனர் கணக்குகள்
தொகுடாக்டர் வா. சே குழந்தைசாமியின் பெயரில் புதிதாக இரண்டு பயனர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. த. விக்கியில் பயனர் பெயர் கொள்கை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆ.விக்கியில் இத்தகைய பெயர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, அப்படி தொடங்கினாலும், அது அவர் தான் என்று உறுதிபடுத்திய பின்னரே தொடர அனுமதிக்கின்றனர். ஒரு வேளை யாரேனும் விசமி/விசிறி இக்கணக்குகளைத் தொடங்கியிருக்கக் கூடும். யாரேனும் நிர்வாகிகள்/அதிகாரிகள் இதைக் கொஞ்சம் பாருங்களேன்.--சோடாபாட்டில் 14:34, 8 செப்டெம்பர் 2010 (UTC)
- எனக்கு அவரைத் தெரியும். அவரிடமே கேட்டுப் பார்க்கின்றேன். சுட்டியமைக்கு நன்றி.--செல்வா 18:10, 8 செப்டெம்பர் 2010 (UTC)
- பயனர்:Vckulandaiswamy என்ற கணக்கில் இருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. அதைக் கீழே இட்டுள்ளேன்.
“ | முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு என்ற கட்டுரையை அவரது அனுமதியுடன் சேர்க்க முயன்றேன் ஆனால் முடியவில்லை இந்தக் கட்டுரையை சேர்க்க அனுமதியளிக்கவும்.
ரா.கிரிஷ் தமிழ் இணையக் கல்விக்கழகம் |
” |
- முதல் கட்டமாக, கிரிஷை வேறு பெயரில் கணக்குத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். அடுத்தது, திரு.வா.சே.கு. அவர் தனது கட்டுரையை எந்த அளிப்புரிமையின் கீழ் வெளியிடுகிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அது விக்கிப்பீடியாவுக்குகந்த அளிப்புரிமை என்றால், அதை எவர் வேண்டுமானாலும் திருத்த முடியும் என்பதையும் அவரது பெயரிட்டுக் கட்டுரையை வெளியிட முடியாது என்பதையும் விளக்க வேண்டும். அதை விக்கிமூலத்தில் ஏற்றுவது பொருந்துமா? -- சுந்தர் \பேச்சு 07:20, 9 செப்டெம்பர் 2010 (UTC)
- திருத்தும் அனுமதியளிக்க அவர் விரும்பாத பட்சத்தில் விக்கிமூலத்தில் ஏற்றலாம். ஒரு general release declaration (i release my work into public domain to be used for any purpose without modification) என்ற அஞ்சல் அவரது மின்னஞ்சல் முகவரியிலிருந்து வாங்கிக் கொண்டு விக்கி மூலத்தில் ஏற்றி விடலாம். (மற்றவர் முகவரி - அவர் உதவியாளராக இருந்தாலும் வேண்டாம். எழுத்து சீர்மை கொஞ்சம் சர்ச்சையான விஷயம் என்பதால் கவனத்துடன் இருப்போம்.--சோடாபாட்டில் 07:33, 9 செப்டெம்பர் 2010 (UTC)
மாதங்களின் பெயர்கள்
தொகுஇங்கு ஆலமரத்தடியில் சில கிழமைகளுக்கு முன் கருத்துக் கணிப்பு செய்தவாறு (பார்க்கவும் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு38#தானியங்கியாய் வரும் மாதங்களின் பெயர்கள்) தமிழ் விக்கிப்பீடியாவில் வழங்குமிடங்களில் சில மாதங்களின் பெயர்களை சனவரி, சூன், சூலை, ஆகத்து என மாற்றியுள்ளேன். இப்பொழுதே பக்க வரலாறுகளில் இம் மாற்றங்களை விக்கி காட்டுகின்றது (ஆனால் கையொப்பம் இட்ட இடங்களில் மாற்றங்கள் நிகழவில்லை). வேறு மாதங்களின் பெயர்களை சீராக மாற்ற வேண்டுமெனில் கூறுங்கள் மாற்றலாம். இவை அடிக்கடி மாற்றப்படும் ஒன்றல்ல. நன்றி.--செல்வா 18:15, 8 செப்டெம்பர் 2010 (UTC)
- மாதங்களின் பெயர்களைத் தமிழ் ஒலிப்புக்கும் வடிவத்துக்கும் ஏற்ப (மேலே கூறியதுபோல) தரப்படுத்தி அமைப்பதுதான் நல்லது. --பவுல்-Paul 19:04, 8 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி பவுல். பயனர்களும் நிருவாகிகளும் சரிபார்க்கவும். இப்பொழுது சனவரி, சூன், சூலை, ஆகத்து திசம்பர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மார்ச்சு. ஏப்பிரல் என்றும் மாற்றப்பட வேண்டுமா? மற்ற மாதங்கள் அப்படியே இருக்கலாமா அல்லது அவையும் மாற்றப்பட வேண்டுமா? நன்றி. --செல்வா 15:23, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- இப்பொருள் குறித்த முன்னைய உரையாடல்களைப் பார்க்கும்போது ஒரு பொதுக்கருத்து ஏற்கெனவே உருவானதுபோல் தெரிகிறது. அதன்படி, சனவரி, பெப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் என்றால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். February-ஐச் சிலர் "பிப்ர(ரு)வரி" என்றும் எழுதுவர். ஆனால் "பெப்பிரவரி" என்று அமைவது தமிழ்முறைக்கு அதிக ஏற்புடையாதாகும். "மார்ச்" என்பதைவிட "மார்ச்சு" எனவும், "செப்டம்பர்" என்படதைவிட "செப்டெம்பர்" எனவும் சொன்னால் மூல (இலத்தீன்) மொழி ஒலிக்கும் தமிழ் முறைக்கும் பொருத்தமாயிருக்கும். "ஒக்டோபர்" "நொவம்பர்" என்பாரும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டு வழக்கில் "அக்.." எனவும் "நவ.." எனவும் இருப்பதை அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul 17:00, 10 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி பவுல். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்திருந்து பார்த்து மாற்றங்கள் தேவைப்படின் மாற்றிவிடலாம். இவற்றை அடிக்கடி மாற்றாமல் இருப்பது நல்லது (என்பதால்). --செல்வா 17:14, 10 செப்டெம்பர் 2010 (UTC)
Fundraising time is around the corner!
தொகுHello Wikimedians, my name is Deniz and I am working for the Wikimedia Foundation during the 2010 Fundraiser. My job is to be the liaison between the Tamil community and the Foundation. This year's fundraiser is intended to be a collaborative and global effort, we recognize that banner messages that perform well in the United States don't necessarily translate well, or appeal to international audiences.
I am currently looking for translators who are willing to contribute to this project, helping to translate and localize messages into Tamil and suggesting messages that would appeal to Tamil readers on the Fundraising Meta Page. We've started the setup on meta for both banner submission, statistical analysis, and grouping volunteers together.
Use the talk pages on meta, talk to your local communities, talk to others, talk to us, and add your feedback to the proposed messages as well! I look forward to working with you during this year's fundraiser.
Please translate this message into Tamil if you can and post it below, thanks! --Dgultekin 22:39, 10 செப்டெம்பர் 2010 (UTC)
இணையத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம்
தொகுதமிழ்க் கலைக்களஞ்சியம் தமிழ்க் கலைக்களஞ்சியம் இணையத்தில் இருப்பதை இன்றுதான் கவனித்தேன். உசாவ அவ்வளவு இலகுவாக இல்லை. ஆனால் இணையத்தில் இருப்பது கண்டு மகிழ்ச்சியே. --Natkeeran 03:52, 11 செப்டெம்பர் 2010 (UTC)
- மிகப் பயனுள்ள தகவல், நற்கீரன். நன்றி!--பவுல்-Paul 04:18, 11 செப்டெம்பர் 2010 (UTC)
- த.இ.பவின் இணைய நூலகத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஆனால் இன்றுதான் தமிழ்க் கலைக்களஞ்சியமும் இருப்பதைக் கண்டேன். நன்றி நற்கீரன். த.இ.பவின் இணையத்தில் உள்ள பிறவற்றைப் போலவே இதுவும் பயன்படுத்துவதற்கு இலகுவாக இல்லை. ஒரு விடயத்தைப் பார்ப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. நல்ல தகவல்கள் உள்ளன. இவற்றுட் பல இன்றும் ஏற்புடையவையே. இது பொதுக்களத்தில் (Public Domain) உள்ள நூலா? -- மயூரநாதன் 05:11, 11 செப்டெம்பர் 2010 (UTC)
- தமிழ் இணைய மாநாட்டின் போது த. இ. ப ஸ்டாலுக்கு போய் ஏன் இப்படி மோசமான இணையதள அமைப்பை வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பல நிறுவனங்களைக் கொண்டு துண்டு துண்டாய் உருவாக்கியதால் இப்படி இருப்பதாகவும், புதிய இணையதளத்துக்கான வேலைகள் நடப்பதாகவும் பதில் சொன்னார்கள். எப்போது வரப்போகுதோ?--சோடாபாட்டில் 06:42, 11 செப்டெம்பர் 2010 (UTC)
- இதே கருத்தை முன்பு அதில் தொடர்புள்ள ஒருவரிடம் கூறி உள்ளேன். அவர்கள் உலகளாவிய தமிழ் மாணவர்களுக்கு ஒரு இணைய வளமாக அமைய இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரு இணையச் சமூகத்தை கட்டமைக்க தவறி விட்டார்கள். அங்கு பயனர் ஊடாடம் இல்லை. உரையாடல்கள் இல்லை. வலை 2.0 அவர்கள் கேள்விப்படவே இல்லை போல் இருக்கிறது. வலை 3.0 ம் வந்து விட்டது. ஒரு பக்க வழங்கலாகவே இருக்கிறது. எனினும் தற்போது இந்த மூலங்கள் திறந்து விடப்பட்டதால், தேடு பொறுகளில் சிக்குகின்றன. ஆனால் பெரும்பான்மையானவை பண்டை இலக்கியங்களாகவே உள்ளன. அறிவியல் தகவல்களோ, தலித்தியல், நாட்டாரியல் தகவல்களோ அரிது. ஆனால் தமிழ்க் கலைக்களஞ்சியம் இணையத்துக்கு வந்தது ஒரு நல்ல தொடக்கம். --Natkeeran 15:04, 11 செப்டெம்பர் 2010 (UTC)
நான் அவர்களுக்கு அறியத் தருகிறேன். இயக்குநராக உள்ள முனைவர் நக்கீரன் அவர்களிடம் கூறுகின்றேன். அவரும் இங்கே பயனராகப் பதிவு செய்து பங்களித்தவர் (பங்களிக்க விரும்புபவர்). இல்லை என்று கூறுவதினும் இப்படிச் செய்யலாம் என்று கூறுவோமே. தமிழ் விக்கிப்பீடியாவுக்கும், தமிழ் விக்சனரிக்கும் பெரும் நல்லூட்டு தருபவர்கள். முன்னாள் தமிழ் இணையப்ப் பல்கலைக்கழகம் என்று இருந்து இப்பொழுது தமிழ் இணையக் கல்விக்கழகமாக உள்ள இந்த நிறுவனம், தமிழ்விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டமான விக்சனரிக்கு 1,32,746 சொற்கள் அடங்கிய ஆறு தொகுதிகளில் உள்ள கலைச்சொற்களைக் கொடையாக அளித்துள்ளனர். நம் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டி உடனுழைப்பவர்கள். இப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் நாம் வளர்முகமாக நம் கருத்துகளை வைப்பது நல்லது என்பது என் கருத்து. அவர்களுக்கு அவர்கள் தலைவர்கள் இடும் ஆணையும், வழிகாட்டுதலும் முதன்மையானது அல்லவா, ஆகவே நிலவரத்தை நன்கு அறியாமல் நாம் கருத்துரைக்க வேண்டாமே. --செல்வா 17:51, 12 செப்டெம்பர் 2010 (UTC)
- செல்வா நீங்கள் சொல்வது சரி. இங்கே முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், தளம் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கத்தில் முன்வைக்கப்பட்டவையே அன்றி த.இ.க.க வைக் குறை சொல்வதற்காக அல்ல. உண்மையில் நான் விக்கியில் பங்களிக்கத்தொடங்கி முதற் சில ஆண்டுகள் நான் கட்டுரைகளை எழுதுவதற்குக கலைச்சொல் வழங்கித் துணை நின்றது த. இ. ப. தளமே. பின்னர் ஒன்று ஒன்றரை ஆண்டுகளாக எனக்குத் தளத்தில் அணுக்கம் கிடைக்காமல் போய் விட்டது. த. இ. ப. வுக்கு எழுதிக் கேட்டேன் தங்களுடைய பக்கத்தில் எல்லாம் சரியாக இருப்பதாகவும் என்னுடைய கணினியில் ஏதாவது பிழை இருக்கலாம் என்றும் பதில் கிடைத்தது. அதனால் சிலகாலம் அதன் பயன் எனக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுது சில மாதங்களாக என்னால் அத் தளத்தைப் பயன்படுத்த முடிகிறது. அண்மையில் தமிழ் இலக்கண நூல்கள் பற்றி நான் தவியில் எழுதிய பல குறுங்கட்டுரைகளுக்கு மூலமாக இருந்தது த. இ. ப. மின்னூகமே (நூல்களின் ஒவ்வொரு பக்கத்தையும் திறப்பதற்கு நீண்ட நேரம் எடுத்தாலும் கூட). தவிர, த. இ. ப வின் பாடநெறிகளுக்கான பாடங்களும் மிகவும் பயனுடையவை. நான் அவற்றையும் ஆர்வமாக வாசிப்பது உண்டு. தமிழியல் பட்டப்படிப்புக்குப் பதிவு செய்வது குறித்தும் சிந்திப்பது உண்டு. ஆனாலும் நேரம் இல்லாததால் செய்யவில்லை. ஆனாலும் எண்ணத்தை முற்றாகக் கைவிடவும் இல்லை. நீங்கள் கூறியபடி முடியுமானால் உரியவர்களிடம் சொல்லித் தளத்தை மேம்படுத்தச் சொல்லுங்கள். தமிழில் ஆர்வமுள்ள எல்லோருக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும். -- மயூரநாதன் 18:32, 12 செப்டெம்பர் 2010 (UTC)
- மிக்க நன்றி மயூரநாதன். நான் நேற்று முனைவர் நக்கீரன் (இயக்குநர்) அவர்களுக்கு எழுதிக் கேட்டபோது, அவர் விடுத்த மடலிலில், "சென்ற வாரம் எங்கள் சேவையகங்களில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகள் காரணமாக இணையதளம் சீர் இல்லாமல் மெதுவாக இயங்கியது. ஆனால், த.இ.க. இணையதளம் எப்பொழுதுமே மெதுவாக இயங்குகிறது என்றால் உரிய மேல் நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம். இதற்கு தங்கள் கூறிய பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்படும். " என்று குறித்திருந்தார். வேண்டிய மாற்றங்கள் செய்வார்கள் என்றே நம்புகிறேன். --செல்வா 18:41, 13 செப்டெம்பர் 2010 (UTC)
- வணக்கம் செல்வா: எமது விமர்சனங்கள் எமது ஆதங்கமே. தாக்குதல் எமது நோக்கம் அல்ல. தமிழ் விரிவுரைகளை, தமிழில் நடைபெறும் விரிவுரைகளை இணையத்துக்கு கொண்டு வரலாமே. இணையத்தை கல்விக்கு ஒரு தளமாகப் பயன்படுத்தலாமே. எ.கா வலைப்பதிவில்/விக்கிப்பீடியாவில் எழுதுதல், வலையொலி, ஆவணப் படம் எடுத்தல் போன்ற செயல் வழிக் கல்விகள். சிங்கப்பூர் மாணவர்களின் பேச்சுக்கள் யூடியூப்பில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழை வழமை போல இராமன் வன வாசம் போனான் என்ற மாதிரி செல்லுத் தருவதில் குறைகள் உண்டு. --Natkeeran 04:08, 14 செப்டெம்பர் 2010 (UTC)
புகைபிடித்தல் / புகை பிடித்தல்
தொகுபுகை பிடித்தல், புகைபிடித்தல் ஆகிய இவ்விரு கட்டுரைகளையும் ஒன்றாக்கக் கூடாதா?--கலை 15:30, 14 செப்டெம்பர் 2010 (UTC)
- இணைக்க வேண்டும். இதில் சிறந்ததை வைத்துக் கொண்டு மற்றயதை நீக்கலாமா ? --Natkeeran 00:42, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- இரண்டும் ஒரேமூலதததைக் கொண்டு கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்.சிறந்ததை வைத்துக்கொண்டு மற்றயதை நீக்கலாம். --மணியன் 02:49, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- இணைக்க வேண்டும். இதில் சிறந்ததை வைத்துக் கொண்டு மற்றயதை நீக்கலாமா ? --Natkeeran 00:42, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- புகை பிடித்தல் Smoking கட்டுரையிலிருந்தும், புகைபிடித்தல் Tobacco smoking கட்டுரையிலிருந்தும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டிலும் பொதுவான விடயங்களுடன், சில மேலதிக தகவல்களும் இருப்பதாகத் தெரிகிறது. நான் முழுமையாக இன்னமும் பார்க்கவில்லை. நல்ல தகவல்கள் ஒன்றில் இருந்து, இன்னொன்றில் இல்லாவிட்டால், ஒன்றை முற்றாக நீக்கினால், அவற்றை இழந்து விடுவோம் அல்லவா?--கலை 11:18, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- ஆமாம், இரண்டும் வெவ்வேறு பொருளுடையவை. tobacco smoking என்பதை புகையிலை பிடித்தல் எனவும் smoking என்பதை புகைத்தல் அல்லது புகை பிடித்தல் எனவும் மாற்றலாமா?--Kanags \உரையாடுக 11:40, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- புகை பிடித்தல் என்பது, சளியைப் போக்கவோ அல்லது மற்ற வேறு பல நோய்தீர் காரணங்களுக்காகவோ மருந்துகலந்த (நீராவியுடன் கலந்த) ஆவியைப் பிடித்தலுக்கும் கூறுவார்கள். --செல்வா 16:51, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- Kanags கூறியுள்ளபடி செய்யலாம் என நினைக்கிறேன். செல்வா சொல்லியதையும் கருத்தில் கொண்டால், புகை பிடித்தல் என்பதைவிட புகைத்தல் என மாற்றி விடலாம் என்பது எனது கருத்து. --கலை 17:13, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- புகை பிடித்தல் என்பது சிலர் விரும்பிச் செய்யும் செயலைக் குறிக்கும். புகை பிடிப்பவர்கள் வெளி விடும் புகையை பக்கத்திலிருப்பவர்கள் (வேறு வழியில்லாமல்) புகைக்க வேண்டியுள்ளது. இதை புகைத்தல் என்று சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன். இது சரியா? தவறா? என்று எனக்குத் தெரியாது. எனவே சரியானதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:28, 15 செப்டெம்பர் 2010 (UTC)
- Kanags கூறியுள்ளபடியே மாற்றங்களைச் செய்யலாமா?--கலை 10:59, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- புகை பிடித்தல் என்பது சிலர் விரும்பிச் செய்யும் செயலைக் குறிக்கும். புகை பிடிப்பவர்கள் வெளி விடும் புகையை பக்கத்திலிருப்பவர்கள் (வேறு வழியில்லாமல்) புகைக்க வேண்டியுள்ளது. இதை புகைத்தல் என்று சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன். இது சரியா? தவறா? என்று எனக்குத் தெரியாது. எனவே சரியானதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:28, 15 செப்டெம்பர் 2010 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்பு புதிய கட்டுரைகள்
தொகுஇன்று புதிதாய் நான்கு பல கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் உருவாகியுள்ளனவே - இயற்கைப் பேரழிவு, ஐ.எசு.ஓ 9000, ஏஎஸ்பி.நெட் (ASP.NET) மற்றும் ஐதராபாத். நிபந்தனைகளுக்குட்பட்டுதான் புதிய கட்டுரைகள் உருவாக்கவேண்டும் என்றல்லவா முடிவு எடுத்திருந்தோம். இவற்றை என்ன செய்ய? மொழிபெயர்ப்பாளரின் பயனர் வெளிக்கு மாற்றிவிடவா?--சோடாபாட்டில் 05:15, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- (update) மீண்டும் திட்டத்தை தொடங்கிவிட்டார்கள் போலிருக்கிறது. புதிய கட்டுரைகள் பல வந்துள்ளன.--சோடாபாட்டில் 05:55, 16 செப்டெம்பர் 2010 (UTC)
நாம் எழுதிய கடிதத்துக்கு இன்னும் கூகுளிடம் இருந்து பதில் இல்லை. தெளிவான புரிந்துணர்வு வரும் வரை புதிய கட்டுரைகளை ஏற்றுவது சரி இல்லை. புதிய கட்டுரைகளை ஏற்றும் பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் வேண்டுகோள் இடுவோம். இது குறித்து மொழிபெயர்ப்பு நிறுவன தொடர்பாளர்களுக்கும் மின்மடலில் தெரிவித்து விடுகிறேன். தொடர்ந்தும் புதிய கட்டுரைகளை ஏற்றினால் வேண்டிய நடவடிக்கையை எடுப்போம். --இரவி 05:59, 16 செப்டெம்பர் 2010 (UTC)
ஏற்கனவே பதிவேற்றிய கட்டுரைகளில் சில திருத்தப்படாமல் இருந்ததாகவும் அவற்றையே மீளப் பதிவேற்றியுள்ளதாகவும், நம்முடன் விரிவான உரையாடலை மேற்கொண்ட பிறகே திட்டத்தைத் தொடர உள்ளதாகவும் கூகுளில் இருந்து தெரிவித்து உள்ளார்கள்--இரவி 08:22, 16 செப்டெம்பர் 2010 (UTC)
- மேலே குறிப்பிட்ட கட்டுரைகளில், ISO, ASP கட்டுரைகள் ஏற்கனவே கூகுள் காரர்களினால் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் ஓரளவு சீராக்கப்பட்டவை. இப்போது அவற்றை அழித்து விட்டுப் பழைய மொழிபெயர்ப்புகக் கட்டுரையை ஒரே மொழிபெயர்ப்பாளர் சேர்த்திருக்கிறார். இவர்கள் என்ன தானியங்கியாகச் செயல்படுகிறார்களா? ஐதராபாத் நகர் பற்றிய கட்டுரை ஒன்று ஏற்கனவே இருக்க (ஆங்கிலக் கட்டுரையில் தமிழ் கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது) வேறு பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.--Kanags \உரையாடுக 09:02, 16 செப்டெம்பர் 2010 (UTC)
கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி அணுக்கத்தில் ஏதோ கோளாறு என்றும் அதனால் முன்பு பதிவேற்ற முடியாது தேங்கிக் கிடந்த சில கட்டுரைகளை / திருத்தங்களை ஏற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்கள். குறிப்பிட்ட 12 கட்டுரைகளில் மட்டும் பிரச்சினை என்பதால் மேற்கொண்டு இத்தகைய செயல்பாடு இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதனால் இடையில் இருந்த நல்ல மாற்றங்கள் விடுபட்டுப் போனது தவறே. இவற்றை மீள்விக்க வேண்டும்--இரவி 10:08, 16 செப்டெம்பர் 2010 (UTC)
வரலாற்றுப் பக்கத்தில் புள்ளி விவரங்கள்
தொகுஆங்கில விக்கியில் உள்ளபடி ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் traffic statistics தொடுப்பை தர என்ன செய்ய வேண்டும்?. நாமே நிரலெழுத முடியுமா இல்லை விக்கிமீடியா மென்பொருளாளர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டுமா?--சோடாபாட்டில் 18:33, 17 செப்டெம்பர் 2010 (UTC)
மதுரையில் விக்கிப் பயிலரங்கு - உதவி தேவை
தொகுஎதிர்வரும் அக்டோபர் 29செப்டம்பர் 21-ம் நாளன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வைத்து மலையாள விக்கிப்பயிலரங்கு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதனுடன் இணைந்து தமிழ் விக்கிப்பயிலரங்கு ஒன்றையும் நடத்தினால் நன்றாக இருக்கும். மகிழ்நன் மதுரைப் பல்கலைக்கழகத்தில் இருப்பதால் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். மற்ற பங்களிப்பாளர்களும் உதவலாம். -- சுந்தர் \பேச்சு 05:09, 18 செப்டெம்பர் 2010 (UTC)
- சிஜுவுடன் இணையத்தில் தொடர்பில் இருந்தபோது இது குறித்துச் சொன்னார். மதுரையில் இதுவரை எவ்வித அறிமுக நிகழ்வும் நாம் நடத்தவில்லை என எண்ணுகிறேன். எனவே இதில் தமிழ் விக்கி குறித்தும் அறிமுகம் செய்தால் நல்லது. -- மயூரநாதன் 08:13, 18 செப்டெம்பர் 2010 (UTC)
மகிழ்நன், தேனி சுப்பிரமணிக்குத் தெரிவித்து உள்ளோம். தமிழ் விக்கிக்குப் பெரிய அளவில் அறிமுகம் தர இயலாவிட்டாலும், மலையாள விக்கியருடன் நட்பைப் பேணவும், அவர்களின் வழிமுறைகள், சமூக்கத்தை அறியவும் உதவும்.--இரவி 16:16, 18 செப்டெம்பர் 2010 (UTC)
- சுந்தர் தங்களால் எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் செப்டம்பர் 21 ஆம் நாள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மலையாள விக்கிப்பயிலரங்கு நடப்பதாக இருந்தது. ஆனால் இங்கு அக்டோபர் 29 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரியானது? செப்டம்பர் 21 ஆம் நாள் எனக்கு வேறு பணி இருப்பதால் கலந்து கொள்ள இயலாது எனத் தெரிவித்து தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன். அக்டோபர் 29 என்றால் கலந்து கொள்வது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி. 16:52, 18 செப்டெம்பர் 2010 (UTC)
- இப்போதுதான் கவனித்தேன், சுப்பிரமணி. மலையாள விக்கிப் பக்கத்தில் செப்டம்பர் 21 என்றே உள்ளது. சாக்கோபுக்கும் அபீபுக்கும் மடலனுப்பியுள்ளேன். உறுதிப் படுத்திக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 02:37, 19 செப்டெம்பர் 2010 (UTC)
- செப்டம்பர் 21 தான் சரியென உறுதிப்படுத்தியுள்ளார்கள். -- சுந்தர் \பேச்சு 06:01, 19 செப்டெம்பர் 2010 (UTC)
அன்பின் நண்பர்களுக்கு,
பணி நிமித்தாலும் , நண்பரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு சென்றதனால் விக்கி பட்டறைக்கு செல்ல முடியவில்லை. மேலும் விக்கி பட்டறையின் அழைப்பதலில் மதுரை காமராசர் பல்கலை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது , எந்த துறையில், எந்த அரங்கத்தில் என குறிப்பிடவில்லை. இதுவும் நான் செல்ல முடியாமைக்கு ஒரு கரணியம்.
என்னுடைய அலுவலகத்தில் ஏற்பட்ட இணைய பிரச்சினையாலும், வகுப்பு மற்றும் செய்முறை வகுப்புகளினால் என்னால் விக்கிக்கு பங்களிக்க முடியவில்லை. இப்பொழுது இணையம் நன்றாக உள்ளதால் என்னால் முடிந்த அளவு பங்களிக்க விழைகிறேன்.
என்னை நினைவு கூர்ந்து வரவேற்ற அனைவருக்கும் என்னுடைய நன்றி, வாழ்த்துகள்.
நன்றி -- மகிழ்நன் 13:35, 20 செப்டெம்பர் 2010 (UTC)
- பல்கலை மையம் என்று தந்துள்ளனர், மகிழ்நன். தெரிகிறதா பாருங்கள். இயன்றால் சும்மா ஒருமுறை போய் தலையைக் காட்டிவிட்டு விக்கி நண்பர்களுடன் அறிமுகம் செய்து கொள்ளுங்கள். பின்னால் வேறு நிகழ்ச்சியின்போது இணைய வாய்ப்புண்டு. இல்லாவிட்டாலும் தமிழ் விக்கிக்கெனத் தனியாக ஒரு அரங்கை வேண்டுமானால் நடத்தலாம். உங்கள் மின்முகவரியைத் தந்தால் அவர்களுடன் இணைக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 03:33, 21 செப்டெம்பர் 2010 (UTC)
Please note my minnanchal.
makizhventhan@gmail.com or pgp79@yahoo.com -- மகிழ்நன் 05:26, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி, மகிழ்நன். மின்னஞ்சலில் இணைத்துள்ளேன். மேலே உள்ள மின்னஞ்சல் முகவரியை (எரிதச்சிக்கல் பொருட்டு) நீக்க விரும்பினால் நீக்கி விடுங்கள். -- சுந்தர் \பேச்சு 06:02, 21 செப்டெம்பர் 2010 (UTC)
செம்மொழி விருதுக்கான அறிவிப்பு
தொகுஇந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2009-10 மற்றும் 2010-11 ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகளுக்கான முன்மொழிவுகளை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தகுதியுடைய அறிஞர்களைப் பரிந்துரைக்கலாமே...? அறிக்கை (பிடிஎப் வடிவில்)--தேனி.எம்.சுப்பிரமணி. 10:23, 18 செப்டெம்பர் 2010 (UTC)
இந்திய விக்கிமீடியா சந்திப்பு
தொகுசெப்டம்பர் 24, 2010 அன்று பெங்களூரில் இந்திய விக்கிமீடியர்கள் சந்திப்பு நடக்கிறது. விக்கிமீடியா நிறுவன உலக வளர்ச்சி அலுவலர், விக்கிமீடியா அறக்கட்டளையின் உறுப்பினர் ஆகியோர் கலந்து கொள்வதால் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும். ஆர்வமுடைய தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். நான் செல்லலாம் என இருக்கிறேன்.--இரவி 16:16, 18 செப்டெம்பர் 2010 (UTC)
- ஆம், இரவி. இயன்றவர்கள் அனைவரும் கலந்து கொள்வது நலம். இயலாதவர்கள் இணைய வழியாகக் கலந்து கொள்ளவும் ஏற்பாடு இருக்கக் கூடும். நானும் கலந்து கொள்ள இருக்கிறேன். மேலும் ஒரு தகவல்: அதற்கு முதல்நாள் விக்கிமீடியா இந்தியப்பிரிவின் செயற்குழுக் கூட்டத்திலும் விக்கிமீடியா பன்னாட்டு வளர்ச்சி அலுவலருடன் கலந்து கொள்ள இருக்கிறேன் (செயற்குழு உறுப்பினர் என்ற முறையில்). -- சுந்தர் \பேச்சு 16:42, 18 செப்டெம்பர் 2010 (UTC)
எது சரியான தலைப்பு?
தொகுதற்போது நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்கிற தலைப்பில் உள்ள பக்கத்தில் பயனர் நிலையிலிருந்து பயனர் நிர்வாகி நிலைக்கு உயர்த்தப்படுவதற்கான வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தலைப்பு சரியானதுதானா? என்கிற சந்தேகம் எனக்கு திடீரென வந்துள்ளது. இந்தத் தலைப்பு நிர்வாகி தேர்வுக்கான வேண்டுகோள் என்றிருப்பது சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. வாக்கெடுப்பு மட்டும் நடத்தப்படுவதற்கென தனிப்பக்கமாகப் பிரித்து நிர்வாகி தேர்வுக்கான வேண்டுகோள் என்ற தலைப்பில் தனிப்பக்கம் உருவாக்கலாம். மேலும் நிர்வாகி நிலைக்கான தேர்வு விதிமுறைகள் எனும் தனிப்பக்கம் உருவாக்கி அப்பக்கத்தில் விதிமுறைகளை அளிக்கலாம் என நான் கருதுகிறேன். இது குறித்த கருத்தை அறிய விரும்புகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி. 18:34, 18 செப்டெம்பர் 2010 (UTC) நிர்வாகி தேர்வுக்கான வேண்டுகோள் என்பது பொருத்தமான தலைப்பாகவே எனக்கும் தோன்றுகிறது.--கலை 11:28, 19 செப்டெம்பர் 2010 (UTC)
கட்டுரைப்போட்டி 2010 - ஆவணப்படுத்தல்
தொகு2010 கட்டுரைப்போட்டி தொடர்பாக நிகழ்ந்த நடவடிக்கைகளை ஆவணப்படுத்துவதற்கு தனியான ஒரு பக்கத்தை ஆரம்பித்து எழுதலாமா? அங்கே ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த விடயங்களையும், தமது பங்களிப்பையும் குறிப்பிடலாம். அதே நேரம் பேச்சுப் பக்கத்தில் அது தொடர்பாக நிகழ்ந்த தவறுகள், அவை எப்படி எதிர்காலத்தில் தீர்க்கப்படலாம் என்பது பொன்ற விடயங்களையும் உரையாடலாம். இதுபற்றிய கருத்துக்களைத் தந்தால், இப்படியான ஒரு பக்கத்தை ஆரம்பித்து, அங்கேயே இந்த ஆவணப்படுத்தலை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.--கலை 11:27, 19 செப்டெம்பர் 2010 (UTC)
- கலை, விக்கிப்பீடியா:2010 கட்டுரைப்போட்டி போன்ற ஏதாவது ஒரு தலைப்பின்கீழ் எழுதத் தொடங்குங்கள். வேறு பொருத்தமான தலைப்பு கிடைத்தால் பக்கத்தை நகர்த்தி விடலாம். கட்டுரைப்போட்டிக்கென நாம் அமைத்திருந்த வலைவாசலில் இருந்து இணைப்பும் தந்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 13:40, 19 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி சுந்தர். அப்படியே செய்கின்றேன். எனக்கு தெரிந்தளவில் இந்த விக்கிப்பீடியா:2010 கட்டுரைப்போட்டி பக்கத்தை ஒழுங்கு செய்கின்றேன். இதனை திருத்தி மேம்படுத்துவதில் தயவுசெய்து அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --கலை 20:43, 19 செப்டெம்பர் 2010 (UTC)
விக்கிப்பீடியா பேச்சு:2010 கட்டுரைப்போட்டி என்ற கட்டுரையை, ஒரு ஆவணப்படுத்தும் எண்ணத்தில் தொடங்கி, எனக்குத் தெரிந்தவரையில் எழுதி முடித்துள்ளேன். ஆனாலும் அதில் தவறுகள் இருக்கலாம். தயவுசெய்து அவற்றை திருத்துவதுடன், மேலதிகமாக நிறைவு செய்ய வேண்டிய பகுதிகளையும் நிறைவு செய்யும்படி அனைவரையும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். இந்த கட்டுரைப்போட்டி தொடர்பில் பங்குகொண்ட அனைவரும் ஏற்பட்ட பிரச்சனைகள், தவறுகள், தவறுகளை எப்படி திருத்திக் கொள்ளலாம் என்ற விடயங்களை அங்கே குறித்து வைக்கலாம். நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடாதவர்களும் தமது கருத்துக்களை அங்கே இணைக்கலாம்--கலை 12:54, 22 செப்டெம்பர் 2010 (UTC)
மீடியாவிக்கி செய்தியில் எழுத்துப்பிழை
தொகுஒரு பக்கத்தை கவனிப்புபட்டியலில் சேர்க்கும்போது காட்டப்படும் செய்தியில் ஒரு சிறிய எழுத்துப்பிழை உள்ளது.
பக்கம் உங்கள் கவனிப்புப் பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்துக்கு
எதிகாலத்தில்எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்களும், அதனோடிணைந்த பேச்சுப் பக்கமும்
இதை எப்படி சரி செய்வது?--சோடாபாட்டில் 16:25, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- MediaWiki இல் சென்று மொழிபெயர்க்கலாம். குறிப்பாக மேற்குறிப்பிட்ட செய்தி இங்கே உள்ளது. நீங்களே அதனைத் திருத்தலாம்.--Kanags \உரையாடுக 21:03, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி கனகு, அங்கு மொழிபெயர்ப்பாளாராக விண்ணப்பித்துள்ளேன். தொகுக்கும் அனுமதி கிடைத்ததும் மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில் 04:36, 22 செப்டெம்பர் 2010 (UTC)
- இப்போது திருத்தி விட்டேன். அடுத்த ரோலவுட்டில் இங்கு வந்து விடும் என்று நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 10:57, 22 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி சோடாபாட்டில், மீடியாவிக்கியில் நிறைய மொழிபெயர்ப்புகள் செய்ய வேண்டித் தேங்கி நிற்கின்றன. நேரம் கிடைக்கும் போது அவற்றை மொழிபெயர்க்கப்பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:04, 22 செப்டெம்பர் 2010 (UTC)