விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு50


இந்திய வரைபடம் - தமிழில் தொகு

இந்த வரைபடம் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். svg கோப்பை பின்னர் பதிவேற்றுகிறேன். நன்றி -- மாகிர் 07:50, 19 மார்ச் 2011 (UTC)

ஆங்கிலத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்களையும் தமிழாக்கினால் நன்றாக இருக்கும். சில ஊர்களின் பெயரில் சில எழுத்துகள் *, O குறியால் மறைக்கப்பட்டுள்ளது அதை கவனிக்கவும். எகா (சோத்பூர், பணஜி, செய்ப்பூர், சில்வா?, பொள்ளாச்சி, பாலக்காடு, ...) --குறும்பன் 23:51, 20 மார்ச் 2011 (UTC)
இது நடைமுறையில் உள்ள இந்திய ஆட்சிப்பகுதியைக் குறித்தாலும், இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத வரைபடம். இக்காரணங்களால் மைக்ரோசாஃப்ட்டு என்கார்ட்டா இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்திய அரசின் இணைய தணிக்கையில் தமிழ் விக்கிப்பீடியா பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.--மணியன் 10:49, 21 மார்ச் 2011 (UTC)
தகவலுக்கு நன்றி மணியன். ஆங்கில விக்கியில் இதுபற்றிய உரையாடல் காணக்கிடைத்தால் அறிய உதவுங்களேன். குறும்பன், உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன். -- மாகிர் 17:56, 23 மார்ச் 2011 (UTC)

யாழ்ப்பாணத்தில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் தொகு

நிகழ்வுக்கென தனிப் பக்கம் உருவாக்கி இங்கிருந்த உரையாடலகளை அங்கு நகர்த்தியுள்ளேன்:

விக்கிப்பீடியா:மார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

--சோடாபாட்டில்உரையாடுக 05:24, 20 மார்ச் 2011 (UTC)

பயனர் கடவுச்சொல்லு தொகு

எனது பயனர் கடவுச்சொல்லை, விக்கி செய்திகள் (தமிழ்), விக்கி பொது போன்ற இடங்களில் மறந்து விட்டேன். மின்னஞல் அவற்றுக்கு தராதால், மீட்க முடியவில்லை. பப்பட் என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனாலே பொதுவில் சேர்க்க தற்போது முடியவில்லை. --Natkeeran 19:24, 20 மார்ச் 2011 (UTC)

இரு கணக்குகளின் பயனர் பக்கங்களிலும் என்னுடையது என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டால் legitimate alternate account என்ற பயன்பாட்டின் கீழ் அவை வந்துவிடும். கைப்பாவை /சாக்பப்பட் விதிகளுக்கு இப்பயன்பாடு ஒரு விதிவிலக்கு. எனவே இரண்டாவது கணக்கைக் கொண்டு அத்திட்டங்களில் செயல்படுங்கள். (இங்கிருந்து unified login உருவாக்க முயன்று பாருங்களேன், அனைத்தும் ஒன்றிணைகிறதா என்று தெரிந்துவிடும்)--சோடாபாட்டில்உரையாடுக 19:32, 20 மார்ச் 2011 (UTC)
முயன்று பார்த்தாகிவிட்டது. அனைத்தும் ஒன்றிணையவில்லை. வெவ்வேறு காலங்களில் உருவாக்கிய படியால் வெவ்வேறு கடவுச்சொற்கள். இதற்கு என்ன செயலாக்கம் (process) என்று பார்க்கவேண்டும். --Natkeeran 19:34, 20 மார்ச் 2011 (UTC)

தரமான சான்றுகளுக்குச் சிறப்பு அணுக்கம் தொகு

பல்லாயிரக்கணக்கான ஆய்வு நூல்களின் மின்பதிப்பைக் கொண்டிருக்கும் கிரெடோ என்ற நிறுவனத்தார் 400 விக்கிப்பீடியர்களுக்கு இலவச அணுக்கம் தர முன்வந்துள்ளனர். விரைந்து விருப்பம் தெரிவிப்பவர்களில் தகுதி அடிப்படையில் இவ் அணுக்கம் தரப்படுகிறது. மார்ச்சு 23-ம் நாள் இதற்கான விருப்பத்தைப் பதிவு செய்யத் தொடங்கலாம். நம்மில் சான்றுகளைச் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இதைக் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பார்க்க: en:WP:CREDO -- சுந்தர் \பேச்சு 06:46, 21 மார்ச் 2011 (UTC)

இது ஆங்கில விக்கிப்பீடியா பயனர்களுக்கு மட்டுமா? இல்லை அனைவருக்கும் பொதுவா? --சூர்ய பிரகாசு.ச.அ. 09:47, 21 மார்ச் 2011 (UTC)

credo வில் கொடுத்திருக்கும் தகுதிகளைப் பார்த்தால் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டும் பொருந்துவன பல இருக்கின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 10:00, 21 மார்ச் 2011 (UTC)
ஆங்கிலம் தவிர பிற விக்கிக்களிலும் சான்றுகளைச் சேரத்து வருபவர்கள், சிறப்புக் கட்டுரைகளை நியமித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் தங்கள் பணிகளை இணைப்புகள் வழியாகக் காட்ட வேண்டும். நான் இப்போதுதான் கோரியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 03:29, 24 மார்ச் 2011 (UTC)


ஆழமாக கட்டுரைகள் எழுதுபுவர்களுக்கு ஆங்கிலம்/தமிழ் இரண்டிலும் குறிப்புகள் தேவைப்படின் என்னால் தந்துதவ முடியும். என்னிடம் தமிழில் அறிவியல், வாழ்வியல், இந்திய தத்துவம் கலைக்களஞ்சியங்கள் மற்றும் பிற நூல்கள் உள்ளன. ஆங்கில வளங்கள் சிலவற்றுக்கும் அணுக்கங்கள் உள்ளன. --Natkeeran 03:35, 24 மார்ச் 2011 (UTC)
நன்றி நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 02:41, 25 மார்ச் 2011 (UTC)
ஆங்கிலத்திலுள்ள ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றுகும், பல மின் நூல்களுக்கும் எனக்கும் என் பல்கலைக்கழகம் வழியாக அணுகி தரவுகள் தர இயலும். அச்சு நூல்களாயினும் பெற்றுத் தரமுடியும். நற்கீரனிடமும் என்னிடமும் தஞ்சை பல்கலைக்கழகத்தின் வெளியீடாகிய 34 தொகுதிகள் அடங்கிய அறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள் உள்ளன (19 அறிவியல் தொகுதிகளும் ஒரு வாழ்வியல் தொகுதியும் மட்டுமே இப்பொழுது என்னிடம் உள்ளன, பிற பின்னர் வர உள்ளன). பல துறைசார்ந்த கலைக்களஞ்சியங்களுக்கும் (மின்வடிவு) அணுக்கம் உண்டு. எனவே நானும் உதவமுடியும்.--செல்வா 03:57, 25 மார்ச் 2011 (UTC)

இவ்விடயத்தில் போதிய தரவுகளின்மையால் அவதிப்படுவோர் ஏராளம். அவர்களுக்கு நல்ல முறையில் உதவ முன்வரும் நற்கீரனுக்கும் செல்வாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.--பாஹிம் 02:42, 26 மார்ச் 2011 (UTC)

புதுப்பயனர் உரையாடல்களில் கூடுதல் கனிவு தேவை தொகு

இன்று ஒரு புதுப்பயனரின் உரையாடல் பக்கத்தைக் கவனித்த போது, பலவாறான விக்கி விதிகளை வலியுறுத்தி சற்று கடுமையாகவும் / நட்புத் தொனி இல்லாமலும் மற்ற விக்கி நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளது போல் இருந்தது :( ஒரு அறிமுகமும் இல்லாமல் விக்கிப்பீடியாவுக்கு வரும் புதுப்பயனர்கள் மிரளுமாறு சோர்வு அடையாமாறோ ஆகிவிடாமல், இன்னும் நட்புடனும் கனிவுடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி--இரவி 09:47, 22 மார்ச் 2011 (UTC)

எந்தப் புதுப்பயனரைச் சொல்கிறீர்கள் என்று ஒருவாறு கணிக்க முடிகிறது. அண்மையில் மூன்று பேர் புதியவர் ஒருவருடன் சற்று வலியுறித்திப் பேச வேண்டி வந்தது. நீங்கள் குறிப்பிடும் நபர் அவர் தானென்று நினைக்கிறேன் (அண்மையில் வேறு யாரையும் கூடிக் கும்மியது போல நினைவில்லை :-). அவர் ஐபியாக இருந்த போது நட்புடன் மூன்று முறை எடுத்து விளக்கியபின்னரே இந்த தோனியில் பேச வேண்டியதாயிற்று. நான் சொன்ன பிற விசயங்களை கவனித்து தான் வந்தார். ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது பேச்சுப்பக்கத்தில் உள்ள உரையாடலுக்கு முன் (ஐபிகள் பேச்சுப் பக்கங்களில்) மூன்று அல்லது நான்கு முறை வழக்கமான கனிவுடன் சொல்லிக் கேட்காத பின்னரே, விதிகளை அறிந்து வேண்டுமென்று புறக்கணிக்கிறார் என்பதை உணர்ந்த பின்னரே பிறரைத் துணைக்கழைத்து வலியுறுத்தினேன். மூன்று பேர் சொன்னபின் அவர் தன் செயல்களை மாற்றிக் கொண்டுவிட்டார். (எனினும் நீங்கள் சொல்வதை மனதில் கொள்கிறேன்) --சோடாபாட்டில்உரையாடுக 10:04, 22 மார்ச் 2011 (UTC)

விளக்கத்துக்கு நன்றி, சோடாபாட்டில். பொதுவாக, புதிய பயனர்களை விக்கியில் உள்வாங்குவதில் சிக்கல் உள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, நாம் இன்னும் கூடுதல் கனிவுடன் இருக்கலாமே என்ற நோக்கில் தெரிவித்தேன். அதே நேரத்தில், வேண்டுமென்றே தவறு இழைப்பவர்களையும் தகுந்த விதத்தில் அணுக வேண்டும். பயனரின் உரையாடல்களை மின்மடல் / மின்னரட்டையில் தொடராமல் பேச்சுப் பக்கத்திலேயே தொடர வலியுறுத்துவதன் மூலமும் முழுமையான சூழலைப் புரிந்து கொள்ள முடியும். சில வேளை நாம் ஆங்கிலத்தில் இயல்பாக கூறுவதை தமிழிலும் அப்படியே கூறினால் கூட மொட்டையாக, நட்பு குறைவாக இருக்கும். மிகவும் அறிந்தவர்களிடம், நண்பர்களிடம் பேசும் போது கூட இதனை உணர்ந்திருக்கிறேன். எனவே, கொஞ்சம் தமிழ் மரபுப்படி நீட்டி முழக்கியும் சொல்லலாம் :) நன்றி--இரவி 18:10, 22 மார்ச் 2011 (UTC)

கவனத்தில் கொள்கிறேன் ரவி.
பயனரின் உரையாடல்களை மின்மடல் / மின்னரட்டையில் தொடராமல் பேச்சுப் பக்கத்திலேயே தொடர வலியுறுத்துவதன் மூலமும் முழுமையான சூழலைப் புரிந்து கொள்ள முடியும்
இதை ஒன்றும் செய்ய இயலவில்லை. சில புதியவர்களுக்கு பேச்சுப்பக்கத்தில் பதில் சொல்லலாம் என்று தெரிவதில்லை. சிலர் பொதுவில் பேச விரும்பவில்லை (மின்னஞ்சல் கூட மாட்டேன், சாட்டில் பேசுவேன் என்று அடம்பிடிப்பவர்களும் உண்டு)--சோடாபாட்டில்உரையாடுக 18:36, 22 மார்ச் 2011 (UTC)

Google Summer of Code 2011 - Students can Apply தொகு

Not just for MediaWiki, so many other projects: http://www.mediawiki.org/wiki/Summer_of_Code_2011

குறுந்தொடுப்புகள் தொகு

சில நாட்கள் முன்னர் லாஜிக் இங்கு அறிவித்திருந்த குறுந்தொடுப்பு (short url) வசதியை தமிழ் விக்கியில் சேர்த்துள்ளேன். cache ஐக் காலி செய்து விட்டு (shift+reload or ctrl+f5) பாருங்கள். மேல் மெனுவில் நமது பயனர் பெயர் வரும் இடத்துக்குக் கீழே ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு குறுந்தொடுப்பு தெரியும். கட்டுரைகளுக்கும், பேச்சு பக்கங்களுக்கு மட்டும் வரும். வரலாற்றுப் பக்கங்களுக்கு வராது.

இதனால் த.விக்கி பக்கங்களுக்கான தொடுப்புகளை படியெடுத்து மின்ஞன்சல் மூலமாக அனுப்பும் போதோ, பிற தளங்களில் இடும் போது நீண்ட தொடர் வருவதைத் தவிர்க்கலாம். எ.கா. ஆலமரத்தடி பக்கத்துக்கு பின்வரும் தொடுப்பினை கொடுக்க வேண்டும்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF

இதற்கு பதில் குறுந்தொடுப்பாக http://tawp.in/r/262

மட்டும் கொடுத்தால் போதும். இதை உலாவி முகவரிப் பட்டையில் இட்டாலே த.விக்கி ஆலமரத்தடிக்கு வந்துவிடும். ஆங்கில விக்கியிலும் பிற விக்கிகளிலும் இவ்வசதி சில வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. ஒருங்குறி எழுத்துதொடர்கள் வரும் தமிழ் போன்ற மொழிகளின் தொடுப்புகளை சுருக்க இது உதவியாக உள்ளது. இதை சென்னை கல்லூரி மாணவரும் திறமூல ஆர்வலருமான யுவராஜ் பாண்டியன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். tawp.in என்ற தளம் தற்போது பயனர் லாஜிக்கினால் நிருவகிக்கப்படுகிறது.

தற்போது இது ஒரு சோதனை முயற்சியே. தமிழ் விக்கி சமூகத்தின் கருத்துகளைத் தெரிந்து கொண்டபின் இதைத் தொடருவது குறித்து முடிவெடுக்கலாம். பயனர்கள் இதனை சோதித்துப் பார்த்து தங்கள் கருத்துகளைக் கூற வேண்டுகிறேன். முக்கியமாக ஒரு பக்கத்தில் எந்த இடத்தில் இந்த குறுந்தொடுப்பைக் காட்டுவது என்பது குறித்து கருத்து தேவை. தற்போது புகுபதிகை செய்யாத பயனர்களுக்கு இது தெரிவதில்லை. பயனர்கள் எங்கு இடலாம் என்று கருத்து தெரிவிப்பதைப் பொறுத்து புகு பதிகை செய்யாதவர்கள்/செய்தவர்கள் அனைவருக்கும் பொதுவாக தெரியும் படியான இடத்துக்கு மாற்றலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:19, 23 மார்ச் 2011 (UTC)

திருத்தம் -- இது பயனர்:Mountain செய்த மென்பொருள். இதனை யுவராஜ் பாண்டியன் தன் வழங்கியில் நிறுவி, சிறு மாற்றங்களை செய்தார். ஸ்ரீகாந்த் 17:32, 23 மார்ச் 2011 (UTC)
மிகப் பயனுள்ள கருவி. இதனை நிறுவியவர்களுக்கு எனது பாராட்டுகள். விக்கிசெய்திகளிலும் இதனை நிறுவ முடியுமா?--Kanags \உரையாடுக 01:17, 25 மார்ச் 2011 (UTC)

நல்ல கருவி. புகுபதியாதவர்களுக்கும் காட்டினால் நன்று. கட்டுரைத் தலைப்பு வரும் அதே வரிசையில் வல ஓரத்தில் இருந்நால் கண்ணில் படும். ஆங்கில விக்கியில் இதனைக் காண்பது எப்படி? குறுமுகவரி உருவாக்கும் தளமும் விக்கிமீடியா வழங்கியில் சேர்த்து 2,3 பேர் மேற்பார்வையில் இருக்குமாறு செய்தால் நல்லது. --இரவி 06:43, 25 மார்ச் 2011 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி கனக்சு,ரவி. விக்கிசெய்திகளிக்கு நிறுவ முடியும். ஒர் முகவரியும்(அத்யாவசியம் அல்ல ஆனால்), சில நிரல் மாற்றங்களும் தேவை.விரைவில் உங்களை தொந்தரவு செய்கிறேன். இதனை மீடியாவிக்கி நிரலுள் சேர்த்துவிட்டு, விக்கி நிறுவனமே நடத்தினால் எளிதாக செய்யலாம். ரவி, நீங்கள் கூறியது போல் வல பக்கத்தில் வருமாரு மாற்றம் செய்துள்ளேன். (சிறிது நேரம் பிறகு பார்க்கவும், சோடாபாட்டில் மாற்றுவார்). ஸ்ரீகாந்த் 18:43, 28 மார்ச் 2011 (UTC)

இப்பொது ரவி கூறினார்போல் பக்க தலைப்பின் வல பக்கத்தில் இது வரும்படி செய்யப்பட்டுள்ளது.அயராது சோதனை செய்த அண்ணன் சோடாபாட்டிலுக்கு பல நன்றிகள் ஸ்ரீகாந்த் 18:35, 31 மார்ச் 2011 (UTC)
எடுத்தப் பணியை செவ்வனே முடித்த ஸ்ரீகாந்த்/சோடாபாட்டில் அணிக்கு பாராட்டுக்கள் !! வளர்க நும் மேம்பாடுகள் !!--மணியன் 03:22, 1 ஏப்ரல் 2011 (UTC)

விக்கி கலந்துரையாடல்களில் நகைச்சுவை உணர்வு தொகு

விக்கி கலந்துரையாடல்களில் நகைச்சுவை உணர்வுடன் (பிறரது மனதை புண்படுத்தாமல்) பேசுவதற்கு தடையேதும் உள்ளதா?. சில சமயங்களில் இறுக்கமான சூழ்நிலைகளை தவிர்க்க இவை உதவும். -- மாகிர் 05:48, 24 மார்ச் 2011 (UTC)

தனிப்பட்ட முறையில் என்னை என்ன சொன்னாலும் பிரச்சனையில்லை ;-). பொதுவாக தமிழ் எழுத்துமொழியில் (formal language) மிகுந்த மரியாதையான விழிப்புகள் உள்ளனவால் இச்சிக்கல் வருகிறது. நாம் பாட்டுக்கு பேச்சுத் தமிழில் ஏதேனும் சொல்லப் போய், எழுத்துத் தமிழில் பார்த்தால் அது அவமதிப்பு போல ஆகிவிடுகிறது. இதை எதிர்கொள்ள நான் எல்லா உரையாடல்களிலும் ஸ்மைலியினை போட்டு விடுகிறேன் :-). நீங்களும் இதை பயன்படுத்திப் பாருங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 05:58, 24 மார்ச் 2011 (UTC)

பயனருக்கான வார்ப்புருக்கள் தொகு

பயனருக்கான இரண்டு வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இது உங்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை நோக்குவதற்கும், புள்ளிவிவரங்களைப் பார்வையிடுவதற்கும் தொடுப்பை உண்டாக்கித்தரும். வாருப்புருக்கள் {{பங்களிப்புப் புள்ளிவிவரம்‎}} , {{ஆரம்பித்த கட்டுரைகள்}} ஆகும். இதனை உங்களது பயனர் பக்கத்தில் இட்டால் போதும், உங்களது விவரங்களை உரிய தொடுப்பின் மூலம் அணுகலாம்.--சி. செந்தி 12:59, 24 மார்ச் 2011 (UTC)

மேலுலுள்ள "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பை சொடுக்கி அதில் கீழ் வந்தால் பல இணைப்புகள் உள்ளனவே (சோடா உருவாக்கியது). அவையும் இதை தானே செய்கின்றன? வேண்டும் என்றால் அவற்றை பயனர் பேச்சு பக்கம் அல்லது பயனர் பக்கத்தில் இடசொல்லி சோடாவிடம் கேட்போமே? --குறும்பன் 16:51, 24 மார்ச் 2011 (UTC)
நன்றி குறும்பன், அவ்வாறே மொத்தத்தையும் பயனர் பக்கத்தில் இடுவதற்கு ஒரு வார்ப்புரு இருந்தால் இவை தேவையில்லைதான்..சோடாபாட்டில் நேரம் கிடைக்கையில் இதனை செய்வீர்களா? --சி. செந்தி 18:51, 24 மார்ச் 2011 (UTC)
நாளை முயற்சிக்கிறேன். இதற்கான நிரல் இங்கு - மீடியாவிக்கி:Sp-contributions-footer உள்ளது. அப்படியே வெட்டி எடுத்து சிறிது மாற்ற வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 19:36, 24 மார்ச் 2011 (UTC)
முடிந்தது. {{பங்களிப்புப் புள்ளிவிவரம்‎}} என்ற வார்ப்புருவிலேயே இப்போது அனைத்தும் வரும்படி மாற்றியுள்ளேன். சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். (பயனர் பக்கத்தில் இட்டால் மட்டும் வேலை செய்யும், பேச்சுப் பக்கத்தில் வேலை செய்யாது) --சோடாபாட்டில்உரையாடுக 19:52, 24 மார்ச் 2011 (UTC)
நன்றி, வேலை செய்கிறது.--சி. செந்தி 20:05, 24 மார்ச் 2011 (UTC)
  • நன்றாக வேலை செய்கிறது. இந்த வார்ப்புரு. அனைத்து தகவல்களையும் ஒருமித்துப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளன. நன்றி சி. செந்தி, சோடாபாட்டில்--P.M.Puniyameen 09:56, 25 மார்ச் 2011 (UTC)
  • வார்ப்புருவை என் பயனர் பக்கத்தில் இட்டுப் பார்த்தேன். மிகச் சிறப்பாகத் தகவல்கள் தருகிறது. உருவாக்கியோருக்குப் பாராட்டும் நன்றியும் உரித்தாகுக.--பவுல்-Paul 17:15, 25 மார்ச் 2011 (UTC)
  • என்னுடைய பக்கத்திலும் வார்ப்புருவை இட்டேன். நன்றாக உள்ளது. நன்றி.--கலை 01:28, 26 மார்ச் 2011 (UTC)
  • வசதியான வார்ப்புரு. நன்றி செந்தி. -- மயூரநாதன் 04:51, 26 மார்ச் 2011 (UTC)

மகாவம்சம் தொகு

மகாவம்சம் நூலை சுருக்கமாக தொகுப்பதாக உள்ளேன். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் அல்லாமல் விக்கிமூலத்தில் தொகுப்பது பொருத்தமானதாக கருதுவதால் அங்கே தொடங்கியுள்ளேன். [1] ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் குறிப்பிடவும். --HK Arun 08:40, 25 மார்ச் 2011 (UTC)

நல்ல முயற்சி. ஆனாலும், மூலம் பொதுவாகச் சுருக்கப்படாமல் முழுமையாகத் தருவதே நல்லது என நினைக்கிறேன். யார் மொழிபெயர்த்தது போன்ற விபரங்களையும் தாருங்கள். சுருக்கம் என்றால் அதனைப் பற்றியும் அங்கு குறிப்பிடுங்கள். மகாவம்சம் கட்டுரையில் விக்கிமூலத்துக்கான இணைப்பைக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 09:43, 25 மார்ச் 2011 (UTC)

நல்ல முயற்சி, அருண். சுருக்கமாக இடுவது பற்றி விளக்க முடியுமா? வெளிவந்த நூல்களை அப்படியே விக்கிமூலத்தில் இடுவதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, உரையில் நீங்கள் எதனையும் சேர்க்கவோ மாற்றவோ கூடாது. மாற்றங்களுக்கு உட்பட்ட உரை எனில் விக்கி நூல்களில் சேர்க்கலாம்--இரவி 11:06, 25 மார்ச் 2011 (UTC)

நன்றி சிறிதரன், இரவி. Wilhelm Geiger என்பவர் தொகுத்ததை [2] சுருக்கி தமிழில் எழுதலாம் என்றிருந்தேன். இருப்பினும் நீங்கள் கூறுவது போன்று சுருக்காமால் முழுமையாக தமிழில் மொழி பெயர்ப்பது நல்லது என்பதால் அப்படியே செய்துவிடுகிறேன். (அதேவேளை அதனை அப்படியே தொகுத்து ஆய்வுநோக்கில் விளக்கவுரையும், விமர்சனக் கருத்துக்களையும் முன்வைத்து தொகுப்பதற்கும் விருப்பம் உள்ளது.) தொகுப்பதற்கு ஏற்ற இடம் விக்கிமூலாமா, விக்கி நூல்களிலா என்பதை அறியத்தாருங்கள். --HK Arun 21:25, 25 மார்ச் 2011 (UTC)

அருண், இதனை நீங்களே மொழிபெயர்ப்பதானால் விக்கிமூலத்தில் இடுவது நல்லது. மூலத்தை எழுதியவர், மொழிபெயர்த்தவர் பெயர் போன்ற விபரங்களையும் கட்டுரையிலேயே தாருங்கள். சுருக்கி மொழிபெயர்ப்பதானால் விக்கிநூலில் இடலாம். இரண்டையுமே செய்யலாம். விக்கிநூலில் எழுதுபவர் பெயர் குறிப்பிடத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 22:12, 25 மார்ச் 2011 (UTC)
நல்ல முயற்சி அருண்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:14, 25 மார்ச் 2011 (UTC)
ஏற்கனவே மொழிபெயர்ப்புகள் இல்லை என்று உறுதி செய்யது நேரத்தைச் ஒத்துக்குவது நன்று. --Natkeeran 23:21, 25 மார்ச் 2011 (UTC)

மகாவம்சம் ஏற்கனவே தமிழில் சுருக்க மொழிபெயர்ப்பாகக் காணப்படுகிறது. சாந்திப்பிரியா என்பவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அவரது எழுத்து நடையிலிருந்து அவர் இலங்கையரல்ல என்பது தெளிவாகின்றது. எனினும் அவரது மொழிபெயர்ப்பில் ஏராளமான குறைகள் காணப்படுகின்றன. சிங்களப் பெயர்களுடன் அவருக்குப் பரிச்சயமின்மையும் இதற்கு ஒரு காரணம். அம்மொழிபெயர்ப்பு இணையத்தில் .pdf வடிவில் இலவசமாகக் கிடைக்கிறது.--பாஹிம் 02:33, 26 மார்ச் 2011 (UTC)

க. குணராசாவும் (செங்கை ஆழியான்) மகாவம்சத்தின் சில பகுதிகளைத் தமிழில் வெளியிட்டுள்ளார். அது முறையான தமிழாக்கமா அல்லது ஆசிரியரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய நூலா தெரியவில்லை. மகாவம்சத்துக்கு முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று தேவை. -- மயூரநாதன் 04:58, 26 மார்ச் 2011 (UTC)

வில்ஹெம் கெய்கர் என்ற செருமனியரின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழில் இந்தியத் தமிழர் ஒருவர் மொழிபெயர்த்து 1962 இல் சென்னையில் வெளியிடப்பட்ட நூல் நூலகத்தில் உள்ளது. இணைப்பு மகாவம்சம் கட்டுரையில் உள்ளது.--Kanags \உரையாடுக 05:12, 26 மார்ச் 2011 (UTC)

அருண், சிறீதரன் - ஏற்கனவே வெளிவந்து பொதுக்களத்தில் உள்ள நூல்களை மட்டுமே விக்கிமூலத்தில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். மொழிபெயர்ப்பாகவே இருப்பினும், புதிய நூல்களை இயற்றுவதற்கு விக்கி மூலம் சரியான இடம் அல்ல. விக்கி நூல்களில் இடலாம். ஆனால், அது அனைவராலும் மாற்றுவதற்கு உட்பட்டது. பிறரது மாற்றத்தை விரும்பாவிடில், நூலாக தத்தம் வலைப்பதிவிலோ எழுதுவதே நல்லது. பிறகு அதன் முழு வடிவத்தையும் விக்கி மூலத்தில் இடலாம். ஒரு படைப்பு விக்கி மூலத்தில் இடம் பெறுவதற்கு உரிமம் தவிர வேறு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று தெளிவில்லை. இது குறித்து நாம் வரையறுக்க வேண்டும். --இரவி 12:34, 26 மார்ச் 2011 (UTC)

மயூரநாதன், கலாநிதி க. குணராசா எழுதிய மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் எனும் நூலை 2003ம் ஆண்டு எழுதியுள்ளார். அது மகாவம்சத்தை அப்படியே மொழிப்பெயப்பு செய்ததாக அல்லாமல், ஆய்வு நோக்கில் தனது கருத்துக்களை முன்வைத்து எழுதியுள்ளார். திறம்படவே எழுதியுள்ளார். ஆனால் இலங்கைத் தமிழர் எவராலும் முழுமையாக மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (தேடிப்பார்க்க வேண்டும்) அதேவேளை இந்தியாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள மொழியாக்கங்களில், சிறிதரன் மற்றும் பாஹிம் தந்த இணைப்புகளில் எஸ். சங்கரன் எழுதிய நூல் ஓரளவு தமிழில் வாசித்து புரிந்துக்கொள்ள உதவும் என்றப்போதும், அவற்றை முழுமையான தமிழாக்கமாக கொள்ளமுடியவில்லை. எடுத்துக்காட்டு: முதல் அத்தியாயத்திலேயே "புராதான முனிவர்களால் தொகுக்கப்பட்ட மகாவம்சம்..." என்றே தொடங்குகிறார். அதாவது பௌத்தப்பிக்குகளை அவர் முனிவராகவே பார்த்துள்ளார். அத்துடன் அந்நூல்கள் இலங்கைத் தமிழர் புரிந்துக்கொள்வதற்கு கடினமான வகையில் அதிகமான கிரந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கே வில்ஹெம் கெய்கர் 1912ல் வெளியிட்ட நூல் உள்ளது. அதில் வில்ஹெம் கெய்கரால் கொடுக்கப்பட்டுள்ள நூல் தொடர்பான நீண்ட அறிமுகக் குறிப்பும் பலவிடயங்களை எடுத்துக்காட்டுகின்றது. அதுவும் மொழிப்பெயர்க்கப்பட்ட எந்த நூலிலும் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரவி, நீங்கள் கூறுவது போன்று புதிதாக மொழிப்பெயர்ப்பதை விக்கிமூலத்தில் இடமுடியாது என்பதால், நான் தொகுத்தை அழித்துவிடுங்கள். இலங்கை தமிழர் எவரும் முழுமையாக மொழிப்பெயர்ப்பு செய்யவில்லை என்பதனை உறுதிப்படுத்திக்கொண்டு, விக்கிநூலில் தொகுப்பது பற்றி பயனர்களின் கருத்திற்கமைய முடிவெடுக்கலாம். --HK Arun 07:33, 30 மார்ச் 2011 (UTC)


செல்பேசிகளில் தமிழ் விக்கி தொகு

செல்பேசிகளில் தமிழ் விக்கி பயன்பாடு பற்றி கருத்தறியும் ஆய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய விக்கிமீடியா மடற்குழுமத்தில் வந்த செய்தி. நமது கருத்துகளை இங்கு தொகுத்தால், நம் சார்பில் கலந்து கொள்ளக்கூடியோர் அவற்றைத் தெரிவிக்கலாம். மீடியாவிக்கி, செல்பேசி நுட்பம் அறிந்தோர் கலந்து கொள்வது நன்று. சுந்தர், மாகிர், சிறீகாந்த்? --இரவி 11:04, 25 மார்ச் 2011 (UTC)

Hi Everyone,

We're launching a study to observe and understand Wikipedia editors' current reading and editing practices, with an emphasis on mobile devices, but to also include desktop and laptop computers and other devices used in their editing and reading processes. We have commissioned Mosoci [3] to carry out this research project which will include a 3-phased process: a. A short online homework assignment b. A 2 hour F2F interview Wikipedia editors (to be conducted in New Delhi and Bangalore April end - early May) c. Potentially participate in a workshop with the Wikipedia team as well. We are looking for Wikipedia editors in English, Hindi, Malayalam, Kannada, Telugu and Tamil. This list obviously leaves out more languages than it includes, but since it is a qualitative study we had to make some hard decisions to limit the scope of the study. But we will be conducting subsequent quantitative research in India in the summer. As is our policy at Wikipedia, we have discouraged our research agency from offering any monetary incentive for this project - however, in the spirit of Wikipedia, we assure you an interesting journey and conversation. Your participation is extremely valuable to us and we'd like to show our appreciation by giving you some Wikipedia memorabilia like T-shirts, stickers, badges etc. But most importantly, it will be to ensure that we understand the needs of Wikipedia editors in India and provide a platform that enables the editing process. In addition to Wikipedia editors, we will be also speaking with Wikipedia readers in India to understand the experience of reading Wikipedia primarily on the mobile phone in India. This research is critical for meeting our strategic objectives of increasing participation and reach in India. The research in India is the first phase of the global user experience study that we are embarking upon. We will be conducting similar studies in Brazil and US in the summer. If you'd like to participate and help us grow, do let us know by March 31 by replying to this thread or writing directly to me at mpande@wikimedia.org or to Dina Mehta from Moscoi at dina@moscoi.com. Thanks in advance Mani

Mani Pande, PhD Head of Global Development Research Wikimedia Foundation Twitter: manipande Skype: manipande


ஆங்கில விக்கிப்பீடியாவை நான் அதிகமுறை பயன்படுத்தியது செல்பேசியின் மூலம் தான் தான்!

எனது இணைய இணைப்பு பிரச்சினைக்குள்ளாகும் போது த.வி.யில் என்ன நடக்கிறது என்று செல்பேசி மூலம் தான் பார்த்துக் கொள்வேன். ஆனால் பெரும்பாலான செல்பேசிகளில் தமிழ் யூனிகோடு இல்லை. இப்படிப்பட்ட செல்பேசிகளில் opera mini மூலம் த.வி.யைப் பார்க்கலாம். opera:config என்று முகவரிப்பட்டையில் இட்டு use bitmab images for complex fonts எனும் விருப்பத்தைத் தெரிவு செய்தால் த.வி.யைப் படிக்க முடியும். ஆனாலும் ஆலமரத்தடி போன்ற நீளமான பக்கங்கள் load ஆவதில்லை. செல்பேசி மூலம் ஆங்கில விக்கியில் தொகுக்க முயன்றால் i.p. range பிரச்சினை காரணமாக தொகுத்தல் அனுமதி தருவதில்லை. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 12:38, 25 மார்ச் 2011 (UTC)

விக்கி நூல்கள் தொகு

விக்கி நூல்கள் திட்டத்தில் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சேர்க்கலாமா? தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? ;வின்சு 05:09, 28 மார்ச் 2011 (UTC)

நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களை முழுமையாக மாற்றம் இல்லாமல் விக்கிமூலத்தில் இடலாம். விக்கிநூல்கள் திட்டத்தில் உள்ளவை பயனர்களால் உருவாக்கப்பட்ட நூல்களே. விக்கிப்பீடியா போல் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படுவது. அனேகமாக பாட நூல்கள் இதில் இடம்பெறுவது தகுந்தது.--Kanags \உரையாடுக 07:29, 28 மார்ச் 2011 (UTC)

பெரியார் திராவிட கழகம் தந்தை பெரியார் நடத்திய குடியரசு நாளிதளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதை எல்லாரும் பயன்படுத்தும் வண்ணம் மின்நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அது pdf ஆக உள்ளது. அதன் இணைப்பு http://ooyaathaalaigal.wordpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/. இதை எவ்வாறு விக்கி மூலத்தில் சேர்க்கலாம். :வின்சு 15:39, 28 மார்ச் 2011 (UTC)

விக்கி மூலத்தில் ”குடியரசு இதழ் தொகுப்பு” என்ற பெயரில் ஒரு முகப்பு பக்கத்தை உருவாக்குங்கள். பின் ஒவ்வொரு இதழுக்குகும் ”குடியரசு இதழ் தொகுப்பு/1925” என்பது போல உள்பக்கங்களை உருவாக்குங்கள். முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு உள்பக்கத்துக்கு இணைப்பு கொடுத்து பட்டியலை உருவாக்கி விடுங்கள்.--−முன்நிற்கும் கருத்து Sodabottle (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஆனாலும் pdf கோப்புகளை விக்கி மூலத்தில் இணைக்க முடியுமா என்பது தெரியவில்லை. அறிந்து சொல்கிறேன்.--Kanags \உரையாடுக 07:41, 29 மார்ச் 2011 (UTC)

உதவியதற்கு நன்றி சோடாபாட்டில் மற்றும் கனக்சு. :வின்சு 09:58, 29 மார்ச் 2011 (UTC)