விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு55

N.Y./Region: City of Endangered Languages

தொகு

--Natkeeran 03:50, 17 மே 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்கத்தில் இணைப்பு எங்கே?

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி ஆகியவற்றில் முதற்பக்கம் எனும் தத்தலில் மீஇணைப்பு உடைந்துள்ளது. இதனைச் சரிபார்க்கவும்.

 

நீங்கள் முதற்பக்கம் என்பதன் அருகில் சுட்டியைக் கொண்டுசெல்லும் போதே இதனை உணரலாம். (உரையாடல் பக்கத்தில் இணைப்பு உள்ளதைச் சுட்டியைக் கொண்டு சென்று வைத்து அறியவும்...)

இதனைப் பற்றி ஏற்கனவே சோடாபாட்டிலிடம் மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டேன். அவரும் தன்னால் இயன்றவரை முயன்றார். இது translatewiki.net இல் முதற்_பக்கம் என்பதை முகப்பு என்று மாற்றப்பட்டதால் உடைந்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் எங்கள் இருவரது கருத்தும் இருந்தது. ஆனால், அதனை மீளமைத்த பிறகும் இவ்வழு தொடர்கிறது.

எனவே இதனைப் பற்றி யாருக்கேனும் ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் இங்கு கருத்து கூறவும். அது இவ்வழுவைத் தீர்க்க உதவியாக இருக்கும்.

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:56, 17 மே 2011 (UTC)[பதிலளி]
இந்தி,தெலுங்கு விக்கிப்பீடியாக்களிலும் இந்த வழு உள்ளது. மலையாளம்,வங்காள விக்கிப்பீடியாக்களில் இது இல்லை. நம்மிடம் எதோ ஒர் பழைய கொப்பு / நிரல் உள்ளதென நினைக்கிறேன். விரைவில் கண்டறிகிறேன் / யாரேனும் விக்கியூடகத்திடம் வழு பதியுங்கள். நன்றி ஸ்ரீகாந்த் 17:58, 17 மே 2011 (UTC)[பதிலளி]
வழு இங்கு பதியப்பட்டது. ஸ்ரீகாந்த் 18:56, 21 மே 2011 (UTC)[பதிலளி]

வழுவினை சரி செய்துள்ளேன். ஃபயர்ஃபாக்சிலும் குரொமிலும் நானும் ஸ்ரீகாந்தும் சோதித்துப் பார்த்து விட்டோம். என் கணினியில் உள்ள இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில் முதல் பக்க பேச்சுப் பக்கத்தில் ஏதோ வழு தெரிகிறது. எக்ஸ்புளோரர் பயன்படுத்துவோ ctrl+r அடித்து கேஷைக் காலி செய்துவிட்டு முதற் பக்கத்தையும் அதன் பேச்சுப் பக்கத்தையும் சற்று சோதித்து ஏதேனும் முறிந்துள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 20:30, 21 மே 2011 (UTC)[பதிலளி]

IE இலும் இப்போது தெரிகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 21:35, 21 மே 2011 (UTC)[பதிலளி]

I am missing tamil keyboard tool now !--மணியன் 03:01, 22 மே 2011 (UTC)[பதிலளி]

மணியன் சரி செய்துள்ளேன். மீடியாவிக்கி நிரலாளர் krinkle மேலும் சில முன்னேற்றங்களை நமது common.js இல் செய்ததால் நமது தட்டச்சுக் கருவி முறிந்து போனது. நமது common.js வெகு நாட்களாக (ஆகஸ்ட் 2009ல் கடைசியாக சுந்தரால் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது) இற்றைப் படுத்தப்படாமல் உள்ளதால், நிறைய நிரல்கள் மீடியாவிக்கி தளத்துடன் out of sync ஆகியுள்ளன. krinkle செய்தது போல இற்றைப்படுத்த முயற்சித்தால், வேறு எங்கோ ஏதாவது ஒரு விசயம் முறிகிறது. இதை ஒரு பெரிய திட்டமாக எடுத்து கவனமாக செய்ய வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 04:29, 22 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி, சோடாபாட்டில், சிறீகாந்து. காமன்.சாசி நிரலை நேரடியாக மாற்றாமல், நமது கருவிகளை தனிசையாக (modular) வெவ்வேறு நிரல் கோப்புகளில் எழுத வேண்டும். இது தொடர்பாக மீடியாவிக்கியில் ஏதும் சிறு கட்டமைப்பு மாற்றம் தேவையென்றால் சந்தோசு தொட்டிங்கள் போன்ற மீடியாவிக்கி மொழிகள் குழுவினரை அனுகலாம். மாகிர் மீடியாவிக்கி கருவித்தருவி அணுக்கத்துக்கு விண்ணப்பித்திருந்தார். மேலும் பலரும் அங்கு இணைந்தால் நமது தேவைகளை மீடியாவிக்கிக் கட்டமைப்புக்குள்ளேயே எளிதாகக் கொண்டு வர முடியும். -- சுந்தர் \பேச்சு 04:57, 22 மே 2011 (UTC)[பதிலளி]
நல்ல யோசனை சுந்தர்.(ஆனால் பாருங்க இப்பொழுது தான் இன்னோரு சாசி ஏழுதி முடித்தேன் :( - பார்க்க அடுத்த தலைப்பு) சோடாபாட்டில் கூறியது போல பல நிரல்களை இற்றைப்படுத்த வேண்டும்.கூடிய விரைவில் நான் இதனை மேற்கொள்கிறேன். ஸ்ரீகாந்த் 06:19, 22 மே 2011 (UTC)[பதிலளி]
சரி செய்ததற்கு நன்றி சோடாபாட்டில். நிரல்கள் இற்றைப்படுத்தல்கள் மிகத் தேவையான ஒன்று;இருப்பினும் நீங்கள் உரையாடியவை எல்லாம் எனது தொழில்நுட்ப அறிவிற்கு அப்பாற்பட்டது. சுந்தர்,ஸ்ரீகாந்த், மாஹிர் போன்ற மென்பொருளாளர்கள் வேண்டியன செய்ய வேண்டும். இந்த தமிழ் தட்டச்சுக்கருவி எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது; அலுவலக கணினி மற்றும் உறவினர் மடிக்கணினிகளிலும் பயன்படுத்த இலகுவாக உள்ளது. --மணியன் 06:32, 22 மே 2011 (UTC)[பதிலளி]
வழுவைச் சரி செய்தமைக்கு நன்றி. :)
--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:11, 23 மே 2011 (UTC)[பதிலளி]
இணைப்பு மீண்டும் அறுந்துள்ளது.--Kanags \உரையாடுக 04:55, 29 மே 2011 (UTC)[பதிலளி]
என் வழுதிருத்ததை மீளமைத்து விட்டேன். ஐ. ஈ. 6.0, 7.0 ஆகியவற்றில் இத்திருத்ததினால் தட்டச்சுக் கருவி முறிகிறது. முழுமையாக common.js நிரலை இற்றைப்படுத்தும் போது இத்திருத்தம் மீண்டும் சேர்க்கப்படும். (சற்று கவனமாகத் திட்டமிட்டு, வரும் மாதங்களில் இதனை செய்வோம்.)--சோடாபாட்டில்உரையாடுக 05:01, 29 மே 2011 (UTC)[பதிலளி]

தொகுத்தல் சுருக்கம் உதவியான்

தொகு

பல நேரங்களில் தொகுத்தல் சுருக்கம் எழுத நாம் அனைவரும்(சரி நான் மட்டுமாவது) சோம்பேறித்தனப் படுவேன். இதற்கு உதவி செய்யும் வகையில் ஒரு உதவியான்பயனர் சாசி எழுதியுள்ளேன்.

 

. உரிய சுருக்கத்தை சொடுக்கினால் போதும். இதனை பயன்படுத்தினால் பலர் தொகுத்தல் சுருக்கம் தருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இதனை வைத்து ஆய்வும் செய்யலாம்(மே மாதத்தில் 25% உரைதிருத்தம் போன்றவை). உங்கள் கருத்துகளுக்கு காத்திருக்கிறேன். ஸ்ரீகாந்த் 06:36, 22 மே 2011 (UTC)[பதிலளி]

பயனுள்ள கருவி, சிரீகாந்து. இது போல நமக்கு நாமே திட்டங்கள் நிறைய வர வேண்டும். :) -- சுந்தர் \பேச்சு 10:47, 22 மே 2011 (UTC)[பதிலளி]
மிகவும் தேவையானது, எப்படிப்பயன்படுத்துவது என்பதை விரிவாக விளக்கினால் நன்று. எனது பயனர்வெளியில் இட்டேன், ஆனால் தோன்றவில்லை. (இன்னமும் செயற்பாட்டில் இல்லையா?)--செந்தி//உரையாடுக// 18:35, 22 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர், செந்தி. செந்தி, நீங்கள் உங்கள் vector.js யில் இதனை சேர்க்க வேண்டும். பார்க்க பயனர்:Logicwiki/vector.js. ஸ்ரீகாந்த் 19:17, 22 மே 2011 (UTC) நன்றி ஸ்ரீகாந்த், இப்பொழுது வேலை செய்கிறது.:)--செந்தி//உரையாடுக// 19:44, 22 மே 2011 (UTC)[பதிலளி]

மிகவும் பயனுள்ளது..சோம்பேறித்தனத்தை வளர்க்க :) ஆனால் இவை விக்கிமீடியா மென்பொருளிலேயே கொடுக்கப்பட்டால் புதுப்பயனரும் பயனடைவர். ஓரிரண்டு ஆண்டுகள் பழகிய எனக்கே பயனர் சாசிகள் அமைத்துக்கொள்வது கடினமாக உள்ளது..இன்னமும் மாஹிரின் நிரல்கள் எனக்கு வேலை செய்வதில்லை. இது குறித்த ஓர் எளிய அறிமுகத்தை விக்கிப்பீடியா:உதவிகளில் இடலாம்.--மணியன் 04:32, 23 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி. பயனுள்ளது.--கலை 09:53, 23 மே 2011 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா அறக்கட்டளை பகுதி நேர வேலைவாய்ப்பு

தொகு

We're looking to fill 4 or 5 "production" roles for the fundraiser this year. Please help spread the word.

This job is perfect for Wikipedians with a little bit of HTML and Javascript experience. Production Coordinators are the people who make the banners and landing pages that drive the fundraiser. The ideal candidate is detail oriented, hard working, and good at taking feedback and corrections. They must be able to work remotely and follow written instructions carefully.

Please send potential applicants here to apply: http://survey.wikimedia.org/index.php?sid=62616&lang=en

Zack

கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் நிறுத்தம்

தொகு

கூகுள் விக்கிப்பீடியா இந்திய மொழிபெயர்ப்புத் திட்டத்தை நிறுத்துவதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளதாக இத்திட்டத்தின் கூகுள் ஒருங்கிணைப்பாளர் டிம்பிள் பத்ரா தெரிவித்துள்ளார் (இது தொடர்பான கூகுள் குழுமத்தில்). எனவே, இத்திட்டத்தில் இருக்கும் கட்டுரைகளைச் சீரமைப்பது குறித்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று உரையாட வேண்டும். கூடவே, இது தொடர்பாக நமது கருத்தையும் முறைப்படியாக கூகுளுக்கு அனுப்பி வைப்பது சரியாக இருக்கும்.--இரவி 08:24, 24 மே 2011 (UTC)[பதிலளி]

அவர்களது மொழிபெயர்ப்பு கருவியினைக் கைவிடுகிறார்கள் போலத் தெரிகிறது--சோடாபாட்டில்உரையாடுக 18:12, 27 மே 2011 (UTC)[பதிலளி]

Browser Problem

தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 தொகுதிவாரியாக முடிவுகள் பகுதியிலுள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்கு வித்தியாசத்தை Firefox 4 உலாவியில் நான் விரிவாக்கினேன், அங்கு தெரிகிறது. Chrome உலாவியில் நான் செய்த மாற்றங்கள் தெரியவில்லை, நிறைய தொகுதிகளின் வாக்கு வித்தியாசம் காலியாக உள்ளது. IE 7 உலாவியிலும் Chrome போலவே மாற்றங்கள் தெரியவில்லை --குறும்பன் 20:40, 24 மே 2011 (UTC)[பதிலளி]

ஆம் பழைய பதிப்பே தெரிகிறது. மேலும் ஒரு சாசி வழு ஒன்று ஐ ஈ. உலாவியில் தோன்றுகிறது. சரி செய்ய முயலுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:30, 25 மே 2011 (UTC)[பதிலளி]
சரியான போல உள்ளது சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 03:43, 25 மே 2011 (UTC)[பதிலளி]
சாசி =யாவாசிகிரிப்டு ? --மணியன் 04:57, 25 மே 2011 (UTC)[பதிலளி]
ஆம் :-). சாசி என்று குறுக்கியது யாரென்று தெரியவில்லையே--சோடாபாட்டில்உரையாடுக 06:20, 25 மே 2011 (UTC)[பதிலளி]

இன்னும் சரியாகவில்லை IE 7 உலாவியில் பழைய பதிப்பே தெரிகிறது. Chrome 10.0.648.205 பதிப்பு, இதிலும் பழைய பதிப்பே தெரிகிறது. --204.52.186.1 15:42, 25 மே 2011 (UTC)[பதிலளி]

இப்போது மீண்டும் சோதித்தேன், என் IE 7 இல் ஒழுங்காகத் தெரிகிறதே. பிற பயனர்கள் சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:52, 25 மே 2011 (UTC)[பதிலளி]
இன்னும் சரியாகவில்லை. பயர்பாக்சில் இற்றைப்படுத்தப்பட்ட பக்கம் தெரிகிறது; குரோமிலும் (10) ஐ.ஈ 8இலும் தெரியவில்லை. பழைய பதிப்பே தெரிகிறது. --மணியன் 07:39, 26 மே 2011 (UTC)[பதிலளி]
இந்தக் கட்டுரை (தேர்தல் 2011) மட்டுமா? பிற கட்டுரைகளிலும் சிக்கலென்றால், அவற்றையும் தாருங்கள். எங்கு முறிந்துள்ளது என சோதிக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:44, 26 மே 2011 (UTC)[பதிலளி]
எக்ஸ்புளோரர் 8.0 இல் ஒழுங்காகத் தெரிகிறதே. சோடாபாட்டிலின் திருத்தத்தை மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:24, 26 மே 2011 (UTC)[பதிலளி]
7.0 குறும்பன் சொல்லும் சிக்கல் எனக்கும் இப்போது தெரிகிறது. எங்கொ ஒரு யாவாஸ்கிரிப்ட் முறிகிறது. அது இருக்குமிடத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி வருகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 08:29, 26 மே 2011 (UTC)[பதிலளி]
எங்குள்ளது என்பது ஒருவாறு தெரிந்து விட்டது. {{reflist}} மூலம் ref களை வரிசைப்படுத்தும் இடத்தில் நிரல் முறிகிறது. ஏதோ ஒரு மேற்கோள் சுட்டில் பிழை உள்ளது. ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும். இரண்டொரு நாளில் சரி செய்யப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:48, 26 மே 2011 (UTC)[பதிலளி]
கூகுள் குரோமில் சோதித்துப் பார்த்தேன். நன்றாகவே தெரிகிறது. தொகுதி வாரியான முடிவுகளை மறைக்கக்கூடியவாறு வார்ப்புருவாக்கியிருக்கிறேன். பிடிக்கவில்லை என்றால் மீள்வித்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 09:14, 26 மே 2011 (UTC)[பதிலளி]

இப்போது தெரிகிறது. வார்ப்புருவை எடுத்து விட்டு பார்க்கவேண்டும் --குறும்பன் 14:15, 27 மே 2011 (UTC)[பதிலளி]

User Info இணைப்பில் எதோ தவறு

தொகு

எனது பயனர் பக்கத்திலுள்ள User Info இணைப்பில் எதோ தவறு உள்ளது.திறக்கமுடியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் 06:53, 25 மே 2011 (UTC)[பதிலளி]

எந்த இணைப்பு சஞ்சீவி?. தொடங்கிய கட்டுரைகள் / தொகுப்பு எண்ணிக்கையைச் சொல்கிறீர்களா?. தமிழ் ஒருங்குறியில் பயனர் பெயர் உள்ள கணக்குகளில் இச்சிக்கல் உள்ளது (ஒரு நான்கைந்து மாதமாக உள்ளது). வழு பதிந்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 14:20, 25 மே 2011 (UTC)[பதிலளி]
பங்களிப்புப் புள்ளிவிவரம்‎ என்ற வார்ப்புருவில் உள்ள படிம இணைப்பில் தவறுள்ளதாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 21:23, 25 மே 2011 (UTC)[பதிலளி]
ஆம்,பங்களிப்புப் புள்ளிவிவரம்‎ என்ற வார்ப்புருவில் உள்ள படிம இணைப்பில் தான் தவறுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் 22:42, 25 மே 2011 (UTC)[பதிலளி]

விக்சனரி 2,00,000!!

தொகு

இன்று தமிழ் விக்சனரி 2,00,000 சொற்களை எட்டியுள்ளது. நமது விக்சனரி பங்களிப்பாளர்களுக்கு எனது பாராட்டுகள்--சோடாபாட்டில்உரையாடுக 14:23, 25 மே 2011 (UTC)[பதிலளி]

விக்சனரி பங்களிப்பாளர்களுக்கு பாராட்டுகள். --204.52.186.1 15:42, 25 மே 2011 (UTC)[பதிலளி]

விக்சனரியை அடிக்கடி பயன்படுத்துபவர்களில் நானும் ஒருவன். அதனை உலகின் முன்னணி விக்சனரிகளில் ஒன்றாக உயர்த்துவதற்கு உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். --- மயூரநாதன் 18:40, 25 மே 2011 (UTC)[பதிலளி]
பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 22:44, 25 மே 2011 (UTC)[பதிலளி]
விக்சனரி பங்களிப்பாளர்களின் சாதனைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!--மணியன் 05:40, 26 மே 2011 (UTC)[பதிலளி]
விக்சனரியில் அயராது உழைக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:00, 26 மே 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்சனரி இரண்டு லட்சம் சொற்களை எட்டிப்பிடித்திட உதவிய விக்சனரி பயனர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 06:45, 26 மே 2011 (UTC)[பதிலளி]
விகசனரியில் பங்களிக்கும் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.--கலை 08:27, 26 மே 2011 (UTC)[பதிலளி]
அருமையான மைல்கல்! விக்சனரி பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். உலகமொழி விக்சனரிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வர வேண்டும். ஒரு நாள் தமிழ் விக்கிப்பீடியாவும் கட்டுரைகளின் தொகையிலும் தரத்திலும் முதல் 25 இடங்களுக்குள் வர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 13:13, 26 மே 2011 (UTC)[பதிலளி]
  • தமிழ் விக்சனரி எட்டிய நிலை (200,000 சொற்கள்) மிகவும் போற்றத்தக்கது. உலக மொழிகள் வரிசையில் சிறிது காலமாகவே முதல் 10 இடத்திலே உள்ளது. முதல் 5-6 மொழிகளில் ஒன்றாக வரத்தக்க கூறுகள் உள்ளன. உண்மையிலேயே விக்கித்திட்டங்கள் யாவும் மிகமிகப் பயனுடையவை. பங்களித்த, பங்களிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!--செல்வா 01:53, 27 மே 2011 (UTC)[பதிலளி]

Assessing the vitality of languages

தொகு

A study of language death and revival with a particular focus on Manx Gaelic

Graded Intergenerational Disruption Scale (GIDS)

தொகு
Stage 1 – Xish is used in the higher levels of education, work, government and media.
Stage 2 – Xish is used to some extent in local and regional government and the media.
Stage 3 – Xish is used in the lower levels of work.
Stage 4 – Xish is used in the lower levels of education as a medium of instruction.
Stage 5 – There is literacy in Xish within the home, school and community. This facilities communication between Xish speakers, especially if they are not geographically concentrated.
Stage 6 – Xish is still transmitted from one generation to the next within families, is used as an everyday spoken family language, and as a community language, at least in informal situations. Fishman believes this stage is crucial in RLS efforts.
Stage 7 – Xish is still used as a community language, however intergenerational transmission of the language has largely ceased and the majority of speakers are beyond child-bearing age.
Stage 8 – Speakers of Xish are mainly elderly and socially isolated. They have few opportunities to use Xish and as a result their command of the language has diminished.

UNESCO's 9 Criterias

தொகு
  • the number of speakers;
  • the proportion of speakers within the population;
  • intergenerational transmission;
  • attitudes to the language within the community;
  • domains of use (வீடு, அரசு-சட்டம்-நிர்வாகம், ஊடகம், சமயம், கல்வி, மருத்துவம், வணிகம், அறிவியல், கலைகள், இலக்கியம்/மெய்யியல்);
  • offical attitudes and policies;
  • available documentation;
  • use in new domains and the media;
  • materials for teaching the language.

--Natkeeran 02:13, 26 மே 2011 (UTC)[பதிலளி]

மிகவும் நல்ல பகிர்வு நற்கீரன். நன்றி! இவற்றை நாம் (தமிழர்களாகிய நாம்) கூர்ந்து நோக்க வேண்டும்! இவை ஏதோ பழங்குடி மொழிகளுக்கு மட்டும் அல்ல!! --செல்வா 01:44, 27 மே 2011 (UTC)[பதிலளி]
உண்மை செல்வா. தமிழ் ஒரு பெரிய மொழி என்று நினைத்துக்கொண்டு நாம் பாராமுகமாக இருக்கிறோம். ஆனால் உண்மையில் தமிழ் மொழியின் நிலையும் நாம் விரும்புவதுபோல் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மேலே நற்கீரன் தந்துள்ளவற்றின் அடிப்படையில் தமிழ் மொழியின் போக்குகள் குறித்து முறையானவையும் முழுமையானவையுமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா தெரியவில்லை. இல்லாவிட்டால் இவ்வாறான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். தமிழர் மத்தியில் இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய இயக்கங்கள் தேவை. -- மயூரநாதன் 06:08, 27 மே 2011 (UTC)[பதிலளி]
தலைமுறைகளுக்கிடையே பரவுதல் மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாக எனக்குப் படுகிறது. இளைய தலைமுறையினர் தொழில்சார் பாடங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதும் தமிழ் பேசத்தெரிந்த பெரும்பாலோர் தமிழில் எழுதவும் படிக்கவும் அறியாதிருப்பதும் வருத்தமான விடயங்கள். பிற பட்டியலிடப்பட்டுள்ள காரணிகளும் முன்னுரிமையுடன் ஆயப்பட்டு தேவையான தீர்வுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.--மணியன் 06:28, 27 மே 2011 (UTC)[பதிலளி]
பெரும்பான்மை மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ் மொழி ஒரு நல்ல நிலையில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் தமிழ் மொழியின் நிலை இறங்குமுகத்திலேயே உள்ளது. உங்கள் நெருங்கிய உறாவினர்களே வேற்று மொழிகளைப் உங்களோடு பேச முற்படும் போது, தாய் மொழியில் வாசிக்க எழுத தெரியாத போது இந்த அழிவு நிலையின் உக்கிரம் உறைக்கத் தொடங்கும். சுமார் 50-60 ஆண்களுக்கு முன்பு கொழும்பின் பல பகுதிகளில் வணிக மொழியாக தமிழ் இருந்தது. இன்று அந்த நிலைமை இல்லை. தமிழ்நாட்டில் பெரும்பான்மைப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியைப் போதிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டத்துறையிலோ, வணிகத் துறையிலோ தமிழ் இல்லை. தமிழ்நாட்டு ஊடக நிகழ்ச்சிகளின் பெயரில் இருந்து, உரையாடலில் இருந்து பிற பல வழிகளில் ஆங்கிலமே ஊடுருவி நிற்கிறது. தமிழியல் மாநாடுகளில் கூடத் தமிழ் இல்லை. தமிழ் மொழிப் பேணுதலில் தமிழ்நாட்டின் முன்மாதிரி மிகக் கேவலம். கனடாவில் பிரெஞ்சுக் காரர்கள் தமது மொழியை அழிவு நிலையில் இருந்து எப்படிப் பேணினார்கள் என்று பார்க்க வேண்டும். இசுரேலில் எபிரேய மொழியை யூதர்கள் எப்படி மீட்டார்கள் என்று பார்க்க வேண்டும். வங்காள மொழியை வங்காளிகள் எந்தளவு வீச்சுடன் பாதுகாக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். மலையாள இலக்கிய உலகின் பலத்தை நாம் பார்க்க வேண்டும். Joshua Fishman "Can Threatened Languages Be Saved" நூல்கள் ஊடாக மொழி அழிவு, மீட்பு, பாதுகாப்புக்கு பின்னால் உள்ள கோட்பாடுகளை, வியூகங்களை நாம் விளங்கிப் பயன்படுத்த வேண்டும். --Natkeeran 02:34, 28 மே 2011 (UTC)[பதிலளி]
ஆம் நற்கீரன். மெத்தனமாக இருக்கவே இயலாது. இன்றைய கட்டத்தில் வணிக அளவிலோ, அரசுகளின் முடிவினாலோ மொழிகளின் நிலையில் ஒரே தலைமுறையில் பெரும் மாற்றம் நிகழக்கூடும். அதனால், அத்தகைய மாற்றம் சரிவாக அமைந்துவிடக்கூடாது என்பதில் கருத்துடன் இருக்க வேண்டும். தவிர, தமிழின் நிலை இறங்குமுகமாக இருப்பது மிக மிகக் கவலைக்குரியது. பல கூறுகள் இங்கு உறவாடி இத்தகைய சரிவை ஏற்படுத்துகின்றன. முறையாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பின்னால் ஒன்றும் செய்ய முடியாது. முன்பு ஊடகங்கள் முதலாளிகளின் கையில் இருந்ததால் மக்கள் இயக்கங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இன்று இணையத்திலாவது நம்மால் இயக்கங்கள் நடத்தி ஓரளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். -- சுந்தர் \பேச்சு 02:57, 28 மே 2011 (UTC)[பதிலளி]

--Natkeeran 02:40, 28 மே 2011 (UTC)[பதிலளி]

பொது வாசகர் மத்தியில் தமிழ் விக்கிப்பீடியாவை கொண்டு செல்லல்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், கட்டுரைகளின் தரத்தைப் பேணுவதற்கும், பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேநேரம், தமிழ் விக்கிப்பீடியாவில் வளர்ச்சிப் பக்கத்தை சிந்திக்கும்போது தமிழ் விக்கிப்பீடியா வாசகர்களை அதிகரிக்க வேண்டிய ஒரு நிலையும் உள்ளதை நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் நான் மலேசியா சென்றிருந்த நேரத்தில் பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி கதைத்த நேரங்களில், ஆங்கில விக்கிப்பீடியாவைத் தெரிந்த அளவிற்கு தமிழ் விக்கிப்பீடியா பற்றி தெரிந்திராமையை அறியமுடிந்தது. அதேநேரத்தில் இலங்கையைச் சேர்ந்த சில பேராசிரியர்கள் இது விடயமாக கதைத்தபோது அவர்களும் இக்கருத்தினை ஏற்றுக் கொண்டனர். இதற்குப் புறம்பாக மலேசியாவில் தமிழ் தெரிந்த சில பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்புகொண்டபோது அவர்கள் தமிழ் விக்கி பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, இந்த விடயத்தை தமிழ் விக்கிப்பீடியா அதிகாரிகள், நிர்வாகிகள் தரத்திலுள்ளவர்களும் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்துவரும் பயனர்களும் கவனத்திற் கொள்வது அவசியம் என்று கருதுகின்றேன். பொதுவாக ஒரு விடயத்தை தேட விரும்புபவர்களுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் போதுமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமாக இருப்பதும் கூகுளில் விக்கிப்பீடியா என்று தேடும்போது ஆங்கிலமே முதன்மையாக வெளிவருவதினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மேற்குறிப்பிட்ட நிலையைக் கருத்திற்கொண்டு தத்தமது நாடுகளில் ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கட்டுரைகளை வெளியிடுவதும் தத்தமது வசதிகளுக்கேற்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி அறிமுகம் செய்வதும் அவசியமானதொன்று என்றே நான் கருதுகின்றேன். தமிழ்விக்கிப்பீடியா அறிமுகத்தை பரவலான முறையில் பொது மக்களிடத்தில் கொண்டு செல்லுமிடத்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி வேகத்தை அதிகரிப்பது இலகுவாக அமையும். இவ்விடயத்தை நாங்கள் கருத்திற்கொண்டு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது என்ற கருத்தினை இங்கே முன்வைக்கின்றேன். --P.M.Puniyameen 04:11, 27 மே 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பற்றிப் பலருக்குத் தெரியாமல் இருப்பது உண்மைதான். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் தேடும்போது ஆங்கில விக்கிப்பீடியா கூகிளில் முதலில் வருவதுபோலத் தமிழில் தேடினால் தமிழ் விக்கிப்பீடியா முதலில் வரும். ஆனால், இணையத்தில் தகவல்களைத் தேடும் தமிழர்கள்கூட ஆங்கிலத்தில்தான் தேடுகிறார்கள். தமிழில் பல விடயங்கள் குறித்துப் போதுமான தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் என்று பலர் நம்புவதில்லை. இது ஓரளவுக்கு உண்மையும் கூட. கிடைக்கும் தகவல்கள் கூடக் கனமானவையாக இருப்பதில்லை. கணனியில் தமிழில் செயலாற்ற முடியும் என்பது கூடப் பல தமிழருக்கு இன்னும் தெரியாது. இதுபற்றி அறிந்திருந்தாலும், தமிழில் செயலாற்றுவதற்கான வசதிகளைக் கணனியில் நிறுவிக்கொள்வதற்கான வழிமுறைகள் பலருக்குத் தெரியாது. எனவே, தமிழ் விக்கிப்பீடியாவைப் பரந்த அளவில் அறிமுகப்படுத்துவது ஒருபுறம் இருக்க கணியியில் தமிழைப் பயன்படுத்துவது குறித்த பரவலான விழிப்புணர்வும் அவசியம். தமிழ் மொழி மூலம் இணையத்தில் செயல்படுபவர்களின் எண்ணிக்கை கூடும்போது தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறியும் வாய்ப்பும் பலருக்குக் கிட்டும். அதற்காக, தமிழ் விக்கிப்பீடியாவைப் பரவலாக அறிமுகப்படுத்துவது பயனற்றது என்பது கருத்தல்ல. கடந்த காலத்தில் நாம் செய்த பரப்புரைகள் பயனளித்துள்ளன. இந்த நடவடிக்கைகளை மேலும் முனைப்புடன் தொடரும் அதே வேளை இணையத்தில் தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்கக்கூடிய பிற நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதும் முக்கியம். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், கட்டுரைகளின் தரம், தகவல் செறிவு என்பவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். எத்தகையவர்களுக்குத் தமிழில் தகவல்கள் தேவை என்பதை உணர்ந்து கொண்டு அதற்கமைவாகப் பொருத்தமான துறைகளில் நல்ல கட்டுரைகளை இடம்பெறச் செய்ய வேண்டியதும் அவசியம்.-- மயூரநாதன் 06:41, 27 மே 2011 (UTC)[பதிலளி]
மயூரநாதன் கூறுவது உண்மையே. தமிழில் கணினியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வையும் தற்போதுள்ள வசதிகளையும் விக்கிஅறிமுகங்களுடன் சேர்த்து செயற்படுத்துடுவது அவசியமாகும்.--சஞ்சீவி சிவகுமார் 23:28, 27 மே 2011 (UTC)[பதிலளி]

நிறைய பேருக்கு தமிழ் தட்டச்சு தெரியாததும் தமிழில் தேடுவதற்கு பெரும்பாலோனோருக்கு தடைக்கல்லாக இருக்கிறது. தமிழக அரசு உயர் நிலைப் பள்ளிகளில் தமிழ் பாடத்தில் தமிழ் தட்டச்சை செய்முறை தேர்வாக வைத்து அதற்கு 20 மதிப்பெண்கள் வழங்கினால் நன்றாக இருக்கும். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச மடிக்கணினி திட்டத்திலும் மடிக்கணினிகளில் தமிழ் 99 தட்டச்சு பலகையை பொருத்திக் கொடுத்தால் மாணவர்களும் அதிகமாக பங்களிப்பார்கள். அடுத்த தலைமுறை தமிழிலேயே தகவல்களை தேடு்ம். :வின்சு 15:11, 28 மே 2011 (UTC)[பதிலளி]

  • பயனர் வின்சு கூறும் கருத்து மிகவும் வரவேற்கத் தக்கது. இது குறித்துப் பலநாட்களாய் நான் சிந்தித்து வருகிறேன். ஒரு முறை பயனர் சோடாபாட்டிலுடனான உரையாடலிலும் அவரிடம் இதைக் கூறியிருந்தேன். ஆனால் இது அரசியல் தொடர்புடைய ஒன்று என்று அப்படியே விட்டுவிட்டேன்.

பொதுவாக மாணவர்கள் தேர்வு என்றாலே விரும்ப மாட்டார்கள். அதுமட்டுமின்றி வயது கடந்தோரிடமும் அரிய பல தகவல்கள் உள்ளன. (ஆளவந்தார் கொலை வழக்கு, எம்டன் குண்டு, தாது வருடப் பஞ்சம்) தமிழ் விக்கிப்பீடியா ஆங்கில விக்கிப்பீடியாவின் மொழி பெயர்ப்பாக இல்லாதிருக்க வேண்டுமாயின் தமிழுக்கே உரிய பல கூறுகளை அறிந்தோர் பலர் பங்களிக்க வேண்டும். எனவே எவ்வளவோ இலவசங்களை வழங்கும் அரசு தமிழ்த் தட்டச்சையும் இலவசமாய்க் கற்றுத் தர முன்வருமாயின் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தட்டச்சு பயில அனுப்புவதோடு தாங்களும் கற்க முன்வரும் வாய்ப்பு உள்ளது. (இலவசங்களைப் பெறத் தவறக் கூடாது என்பது தற்போதைக்குத் தமிழ்நாட்டின் மனநிலையாகி விட்டது.) ஒட்டு மொத்த தமிழ் விக்கி சமூகமும் தமிழக மற்றும் இலங்கை அரசுகளை இது தொடர்பாக அணுகுவதோ அல்லது அரசுத் துறைகளில் செல்வாக்கு உடையோர் துணை நாடு‌வதோ நலம்! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 12:56, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]