விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு56

குறுந்தொடுப்பு நீட்சி -- விக்கி சமூகத்தின் ஒப்புதல் *துவக்கம்*

தொகு

சில நாட்களுக்கு முன் விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு த.விக்கியில் இணைக்கப்பட்டது. இப்பொழுது யுவராஜ் பாண்டியன் இதனை நீட்சியாக நிரலாக்கியுள்ளார்.பிற வழங்கியில்லாமல்(tawp.in) இப்பொழுது விக்கியூடக வழங்கியிலேயே நிறுவ இயலும்.மேலும் விக்சனரி,விக்கிசெய்தி போன்ற பிற திட்டங்களுக்கும் இதை பயன்படுத்தலாம். இந்த நீட்சியை சூர்யபிரகாசு மொழி பெயர்த்துவிட்டார். விக்கியூடக நிற்வாகிகளுக்கு இந்த நீட்சியை தமிழ் விக்கித் திட்டங்களில் நிறுவ விக்கி சமூகத்தின் ஒப்புதல் தேவை. உங்களின் ஒப்புதலை இங்கே தாருங்கள் நன்றி. குறிப்பு:-குறுந்தொடுப்பு பற்றிய முந்திய உரையாடல் ஸ்ரீகாந்த் 09:04, 28 மே 2011 (UTC)[பதிலளி]

நல்லது சிரீகாந்து. இது மீடியாவிக்கி நீட்சியாக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். ஏற்கனவே தொடுப்புப் பெற்றுள்ள tawp.in இணைப்புகள் செயல்பாட்டில் இருக்கும் தானே? -- சுந்தர் \பேச்சு 10:39, 28 மே 2011 (UTC)[பதிலளி]
tawp.in இணைப்புகள் செயல்பாட்டில் இருக்கும், ஆகையால் தற்பொழுது வலைகளில் இருக்கும் தொடுப்புகள் உடையாது. ஆனால் காலப்பொக்கில் deprecate ஆகிவிடும். புதிய தொடுப்பு ta.wikipedia.org/r/<shortcode> என்பது போல் இருக்கும். இதனை மேலும் குறுக்க(கீச்சர்களுக்காக) tawp.in/x/<sameshortcode> "அலுவல் முறைசாரா" செயல்படும்.ஆனால் விக்கி தளத்தில் ta.wikipedia.org/r/<shortcode> என்றே இருக்கும்.இதைப் போல மேலும் சில நீட்சிகளை விரைவில் எதிர்பாருங்கள். ஸ்ரீகாந்த் 11:08, 28 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி, சிரீகாந்து. -- சுந்தர் \பேச்சு 11:29, 28 மே 2011 (UTC)[பதிலளி]

கட்டுரையை நகர்த்துதல்

தொகு

கட்டுரை ஒன்றை வேறொரு தலைப்புக்கு நகர்த்தும் போது முன்னருள்ள தலைப்புடன் இணைப்பு செய்யப்பட்ட தொடுப்புகளை இலகுவில் கண்டறிந்து திருத்த ஏதும் முறையுள்ளதா?--சஞ்சீவி சிவகுமார் 23:14, 28 மே 2011 (UTC)[பதிலளி]


ஆமாம். இடது பக்கக் கருவிப் பெட்டியில் இப்பக்கத்தை இணைத்தவை என்ற பொத்தானை அமுக்கினால், அந்த இணைப்பு உள்ளா எல்லாப் பக்களையும் காட்டி விடும். --Natkeeran 23:43, 28 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி நக்கீரன்.--சஞ்சீவி சிவகுமார் 23:53, 28 மே 2011 (UTC)[பதிலளி]

தொகுத்தல் முரண்பாடுகள்

தொகு

ஒரு கட்டுரையைத் தொகுக்கும் போது அதே நேரத்தில் பிறரும் அதனை தொகுத்து தொகுத்தல் முரண்பாடுகள் ஏற்படும் போது, நமது உள்ளடக்கத்தை மீட்டெடுக்க ஒரு வழி உருவாக்கப்பட்டுள்ளது. முரண்பாடு எனத் தோன்றும் பக்கத்தின் அடிப்பகுதியில் வேறுபாடுகளும், உள்ளடக்கங்களும் மீண்டும் தரப்படுகின்றன. அவற்றிலிருந்து நாம் படியெடுத்துக் கொள்ளலாம். முன்பு போல முழுமையான இழப்பு நேரிடுவதில்லை. சில மாதங்களாக இப்புதிய வழிமுறை ஏற்பட்டுள்ளது. சில பயனர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் இப்படியொரு வழியுள்ளதை அறியவில்லை என்பதை அறிந்தேன் (எனக்கும் தற்செயலாகத் தான் கண்ணில் பட்டது). எனவே இதனை ஒரு பொது அறிவிப்பாக இங்கு இடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:07, 29 மே 2011 (UTC)[பதிலளி]

நானும் இதனை அண்மையில் தான் கவனித்தேன். பக்கத்தின் அடிப்பகுதியில் இந்த வேறுபாடுகளைக் காணலாம். நன்றி சோடாபாட்டில்.--Kanags \உரையாடுக 05:24, 29 மே 2011 (UTC)[பதிலளி]

நோய்கள் பற்றிய கட்டுரைகள்

தொகு
பார்க்க: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்

பராமரிப்பாளர்கள்/நிர்வாகிகள் கவனத்திற்கு: Pywikipediabot/Scripts

தொகு

பல்வேறு தரப்பட்ட பணிகளை நாம் கையால் மீண்டும் மீண்டும் செய்யாமல் தானியங்கி மூலம் செய்வதற்கு Pywikipediabot/Scripts உதவுகின்றன. இதை விண்டோசிலோ லினிகசிலோ எளிமையாக நிறுவிக் கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில் நிறுவும் போது ஒருங்கிறிச் சிக்கல்கள் வரலாம். இந்த நிரல்கள் உதவியுடன் அட்டவணையில் இருந்து தரமான கட்டுரைகளை உருவாக்குவதோ, கட்டுரைப் பட்டியில் பகுப்புக்களை மாற்றுவதோ, மற்றும் பிற பரமாரிப்பு வேலைகளையோ எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உதவி தேவைப்படின் கேக்கவும். இயன்றவரை உதவுவோம். --Natkeeran 04:52, 31 மே 2011 (UTC)[பதிலளி]

எனக்கும் இதுபற்றி அறிந்து, அதனைப் பயன்படுத்த விருப்பமே. அதிக கணினி அறிவின்மையால், ஒருங்குறிச் சிக்கலோ, வேறு சிக்கல்களோ வந்தால் எவ்வாறு அதனை கையாள்வது என்பது தெரியாது. எனக்கு உதவி தேவைப்படும் என நினைக்கின்றேன்.--கலை 14:56, 31 மே 2011 (UTC)[பதிலளி]
உங்கள் கணினியோடு Remote Connect செய்து நிறுவித் தர முடியும். --Natkeeran 22:34, 31 மே 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா - பொது அறிவிப்பு

தொகு

முதற்பக்கத்தில் உள்ள உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இடம்பெறும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும், அவற்றில் முக்கியப் பங்காற்றியவர்களின் பேச்சு பக்கத்திலும், முதற் பக்கத்தில் இடம் பெற்ற செய்தியினை இடத் தொடங்கியுள்ளோம். (நானும் சூர்யாவும்). எ.கா (பேச்சு:எண்டோசல்ஃபான்). இவ்வழக்கம் ஆங்கிலம் மற்றும் சில பெரிய விக்கிகளில் உள்ளது. இச்செய்திகளை பதக்கங்களைப் போன்றதொரு பங்களிப்பாளர் பாராட்டு/ஊக்குவிப்பு முயற்சியாகத் தொடங்கியுள்ளோம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:33, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆம் சோடாபாட்டில், இதுவொரு நல்ல ஊக்குவிப்பு, பங்களிக்க ஈர்ப்புவழி! பாராட்டுகள்! நானும் சில இட முன் வருகின்றேன்.--செல்வா 03:52, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]

உள்ளடகத்தை அதிகரிக்க சில யோசனைகள்

தொகு
  1. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தகவல்களைக் கொண்டு வார்ப்புரு ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். 32 மாவட்டங்களுக்கும் வார்ப்புருக்கள் உருவாக்கவேண்டும். பின்னர் அந்தந்த மாவட்ட தலைப்புகளில் பொருத்தினால் சில பைட்டுகள் அதிகரிக்கும். உதா. வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/மாவட்டம்/தஞ்சாவூர் இதுபோன்று தஞ்சாவூருக்கு பதில் மற்ற மாவட்டங்களுக்கு(உதா. வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/மாவட்டம்/நாமக்கல்) உருவாக்கி பின் {{தமிழ்நாடு சட்டமன்றம்/15|நாமக்கல்}} நாமக்கல் மாவட்டம் கட்டுரையில் பதிந்தால் தற்போதைய உறுப்பினர்களின் கட்சியும், தொகுதிகளும் கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் உதவலாமே.
மாகிர் நாமக்கல் மாவட்டத்துக்கு நீங்கள் கூறியபடி வார்ப்புரு உருவாக்கிவிட்டு {{தமிழ்நாடு சட்டமன்றம்/15|நாமக்கல்}} என்பதை நாமக்கல் மாவட்டம் கட்டுரையில் பதிந்த்தேன், ஆனால் அதில் இராசிபுரத்தின் வேட்பாளர் தவறு, தோற்ற திமுக வேட்பாளரின் பெயரை காட்டுக்கிறது. பரமத்தி-வேலூர் வேட்பாளர் யார் என்று காட்ட வில்லை. வெற்றி பெற்றவர்களின் விவரங்களை எப்பக்கத்திலிருந்து எடுக்கிறீர்கள். --குறும்பன் 19:19, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
குறும்பன், வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/15/தொகுதி/உறுப்பினர்,வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/15/தொகுதி/கட்சி,வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/மாவட்டம் இந்த மூன்று வார்ப்புருக்களில் முறையே உறுப்பினர், கட்சி, தொகுதிகளில் திருத்தங்கள் தேவைப்படுகிறதா என்று சரிபார்க்க வேண்டும். -- மாகிர் 04:22, 3 சூன் 2011 (UTC)[பதிலளி]
  1. அத்துடன் தமிழாக்க கருவியில் இருந்த வழுவை சரிசெய்திருக்கிறேன். (நினைவூட்டலுக்காக) இந்தக் கருவியின் மூலம் தொடுப்புகள் கொண்ட ஆங்கில விக்கி உள்ளடக்கங்களை தமிழாக்கம் செய்யலாம். உதா. New York, Germany இன்னும் சொற்களை/பத்திகளை நியூ யோர்க் மாநிலம், செருமனி என்று தமிழாக்கம் செய்து தரும். (step 1. paste english content in second textbox, step 2. click preview, step 3. click langlinks, in few seconds you can get translated content. (optional step) again you can click preview for tamil content.) சில நேரங்களில் குறிப்பிட்ட சொற்களை தட்டச்சுக்கொண்டிருக்காமல் இதனை உபயோகிக்கலாம். நன்றி -- மாகிர் 17:04, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி மாகிர்! பயனுடைய ஆக்கம்!--செல்வா 21:10, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

மாதங்களின் பெயர்களில் சீர்மை

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் மாதங்களின் பெயர்களை எல்லா இடங்களிலும் (செய்திகள், உங்களுக்குத் தெரியுமா போன்ற பகுதிகளிலும்) ஒரே சீராக சனவரி, சூன், சூலை, ஆகத்து, திசம்பர் என்று குறித்து வருதல் நல்லது. வார்ப்புரு:MonthsSourceபோன்றவற்றில் சனவரி என்று மாற்றியுள்ளேன்.மற்ற மாதங்களையும் சீராக திருத்தி எழுத உள்ளேன். இது பற்றி முன்னரே கருத்துக் கணிப்பு செய்துள்ளோம். எளிமையைப் பேணுவோம். பிரான்சியம் முதல் பற்பல ஐரோப்பிய மொழிகளிலும் அவ்வவ் மொழிக்கு ஏற்றவாறே மாதங்கள் குறிக்கப்பெறுகின்றன. --செல்வா 21:19, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

  • செல்வா, மாதங்களின் பெயர்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதில் ஒத்த கருத்து இல்லை என்பதால் தமிழ் விக்கியில் பயன்படுத்தற்குரிய ஒரு பட்டியல் உருவாக்கி அளித்தல் நலம் என்று கருதுகிறேன். நீங்கள் குறித்த மாதங்கள் தவிர பெப்ருவரி (பிப்ருவரி, பிப்ரவரி), மார்ச் (மார்ச்சு), ஏப்ரல் (ஏப்பிரல்), மே (மேய்), செப்டம்பர் (செப்டெம்பர்), அக்டோபர் (ஒக்டோபர், ஒக்தோபர்), நவம்பர் (நொவம்பர்) என்னும் வேறுபாடுகளைத் தவிர்த்து சீர்மை கொணர்வது பெரும் பயன் நல்கும். ஒரு பட்டியல் உருவாக்கலாமா?--பவுல்-Paul 23:44, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]
  • செய்யலாம் ஐயா. ஏற்கனவே ஒரு கருத்துக் கணிப்பு செய்தோம். அதன் அடிப்படையிலேயே மாற்றினோம். விருப்பம் இருந்தால் முழுவதுமாக சீர் செய்யலாம். கட்டாயம் சீராக எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக வழங்குவது மிகவும் நல்லது.--செல்வா 03:49, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
தயவு செய்து இத்திட்டத்தை தற்காலிமாக செயல் படுத்த வேண்டாம். அண்மையில் மீடியாவிக்கியில் யாரோ மாதங்களை சீர்மைப் படுத்தியிருக்கிறார்கள். விக்கிசெய்தியில் தற்போது பல இணைப்புகள் அறுந்து போயுள்ளன. விக்கிசெய்தியில் அனைத்துக் கட்டுரைகளும் மாதங்கள் நாட்கள் வாரியாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாதங்களின் பெயர்கள் அனைத்தும் மீடியாவிக்கியில் இருந்தே தானியங்கியாக எடுக்கப்படுகின்றன. இதனால் பகுப்புகள் அனைத்தும் இப்போது சிவப்பாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் மாற்றுவது பெரிய வேலை. முதற்பக்கத்திலும் இணைப்புகள் முறிந்துள்ளன. யாராவது விக்கித் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இதனைச் சரி செய்ய முயல வேண்டும். விக்கிசெய்தியில் மட்டும் மாதங்களின் பழைய பெயர்கள் தெரிய என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்கிசெய்தியில் எனது பங்களிப்புகள் அனைத்தும் வீனாகி விடும் வாய்ப்பு உள்ளது. விக்கிசெய்தியைக் கைவிட வேண்டியும் ஏற்படலாம். இது குறித்து சோடாபாட்டில், மாகிர், அல்லது சுந்தரின் உதவி தேவை. நன்றி.--Kanags \உரையாடுக 12:01, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
TranslateWiki-யில் செல்வா "தமிழ் விக்கிப்பீடியாவுடன் சீர்மை" எனும் காரணம்பற்றி மாதங்களின் பெயர்களைச் சீர்மைப் படுத்தியுள்ளார். அவற்றைத் தற்காலிகமாக மீளமைத்துள்ளேன். கனக்சு சொல்வது போல் இது பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே இத்திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடலாம். விக்கிசெய்தியில் உங்கள் பங்களிப்புகள் வீணாகும் வாய்ப்பு குறித்து அதிகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் உறுதியாக அம்மொழிபெயர்ப்புகள் ஏதேனும் விளைவினை ஏற்படுத்தும். இத்திட்டத்தைத் தற்போதைக்குக் கைவிடலாம். உரிய தீர்வு கண்டபின்பு இதைப் பற்றி எண்ணலாம். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:40, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சூர்யா. அந்த மாற்றம் அனைத்து திட்டங்களுக்கும் வர ஓரிரு நாட்கள் ஆகலாம்.
கனக்ஸ், முழுமையாக மாற்றுவதற்குத் தேவையான வழிமாற்றுகள் என்னென்ன என்று அடையாளப்படுத்தினால், நானும் சூர்யாவும் வழிமாற்று ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுகிறோம். அதை முடித்த பின்னால் மீண்டும் டிரான்சுலேட் விக்கியில் செல்வாவின் மாற்றங்களை மீண்டும் செய்யலாம்--சோடாபாட்டில்உரையாடுக 12:48, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
நானும் சூர்யாவும் வழிமாற்றுகள் செய்யும் வேலையைத் தொடங்கியுள்ளோம். சுமார் 500-1000 வரை வழிமாற்றுகள் உள்ளன. முடிய சில வாரங்கள் பிடிக்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 13:11, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
வழிமாற்றுகள் செய்யும் வேலையை சோடாபாட்டில் கணக்கு வழியாக விக்கித்தானுலவி பார்த்துக் கொண்டுள்ளது. அவற்றில் ஏதேனும் வழு இருப்பின் மட்டும் நானும் சோடாவும் நேரடியாகப் பார்ப்போம். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:34, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
ஜனவரி 2010-ஜூன் 2011 வரையிலான பக்கங்கள் / பகுப்புகளுக்கு தேவையான வழிமாற்றுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 630 வழிமாற்றுகள் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன. இவை போக முறியும் இணைப்புகள் எவை என்பதை சோதித்துப் பார்த்து சொன்னால் அவற்றுக்கும் உருவாக்கி விடலாம்--சோடாபாட்டில்உரையாடுக 15:53, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]
இவ்விடயத்தில் உடனடியாகக் களம் இறங்கி உதவியமைக்கு உங்கள் இருவருக்கும் நன்றி. மேலும், விக்கிசெய்திகளில் உள்ளடக்கங்களில் கடந்த சில மாதங்களாக நான் மாதப் பெயர்கள் சீர்மைப்படுத்தியே எழுதி வருகிறேன். ஆனால் பகுப்புகளில் மட்டுமே இப்படியான குழப்பம். விக்கிப்பீடியாவில் இக்குழப்பம் வருவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு. வழுக்கள் வந்தாலும் அவை உடனடியாகத் திருத்தக்கூடியதாக இருக்கும். நன்றி.--Kanags \உரையாடுக 21:11, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]

Tove Skutnabb-Kangas : The Role of Mother Tongues: Educational Goals and Models, Linguistic Diversity and Language Rights.

தொகு

--Natkeeran 03:05, 3 சூன் 2011 (UTC)[பதிலளி]

எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மொழிமாற்றும் கருவி - toolserver ல் எனது கணக்கு

தொகு

தமிழ் மொழிமாற்றி கருவிக்குப் பின் அதனை எல்லா மொழிகளுக்கும் பொதுவான கருவியை உருவாக்க எண்ணி அப்பாடா மூன்று நான்கு மாதங்கள் ஓடி விட்டது. வெள்ளோட்டமாக தற்போது http://toolserver.org/~mahir/index.php தளத்தில் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும் மாற்றலாம். காட்டாக சென்னை -> चेन्नई (ta->hi) அல்லது (चेन्नई) -> (تشيناي) hi->ar என்று மாற்றிக்கொள்ளலாம். இந்தக்கருவியை விக்கியாக்கம் அல்லாத வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். svg வரைபடக் கோப்புகள் போன்றவை (start text >, end text <) உதாரணங்களில் சில. தொடுப்புகளுடன் கூடிய பட்டியல் வகை கட்டுரைகளை எளிதில் உருவாக்கலாம். இந்திய மொழி விக்கித் திட்டப் பங்களிப்பிற்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். உங்களுடைய மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன். நன்றி -- மாகிர் 17:35, 4 சூன் 2011 (UTC)[பதிலளி]

அடைப்புக்குறி இடுவது அவசியம் இல்லாமல் செய்யலாம் இல்லையா. --Natkeeran 18:30, 4 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிச்சயம் முயற்சிக்கிறேன். நன்றி -- மாகிர் 08:30, 5 சூன் 2011 (UTC)[பதிலளி]
கட்டுரையாக்கத்திற்கு உதவும் நன்கருவி. தஞ்சாவூர் என்பதனை தஞ்சை என்றும் பயன்படுத்துபவர் அதிகம். அதே போல, பாண்டிச்சேரி-பாண்டி, சைதாப்பேட்டை-சைதை, கோயமுத்தூர்-கோவை என பல ஊரின் பெயர்களும் பயன்படுத்தப்படுவதையும் கருத்தில் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். மற்றொன்று, உள்ளீடு செய்யும் ஆங்கில முதல் எழுத்து கட்டாயமாக, ஆங்கில பெரிய எழுத்தாக இருக்க வேண்டுமா? ஆங்கில மொழிக்கு மட்டும் சிறிய எழுத்து, பெரிய எழுத்து என எதில் கொடுத்தாலும் வர வழிவகை செய்ய இயலுமா?01:59, 15 சூன் 2011 (UTC)உழவன்+உரை..

தானியங்கி உதவி, தமிழக உயர் அதிகாரிகள் வார்ப்புரு

தொகு

வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள் வார்ப்புரு உருவாக்கியிருக்கிறேன். அதில் தற்போதைய முக்கிய அதிகாரிகளை அங்கு தொகுக்கலாம். மாவட்ட ஆட்சியர் அங்கிருந்தால், மாவட்டத்தைச் சேர்ந்த எல்லா ஊர்களின் கட்டுரைகளிலும் தானியக்கமாக ஆட்சியர் பெயர் தெரியவரும். ஆனால் (ஊர் கட்டுரைகளில்) ஒரு சிக்கலாக மாவட்டப் பெயர்கள் அடைப்புக்குறிகளில் இருப்பதை திருத்தவேண்டியுள்ளது (அதாவது மாவட்டம்=தஞ்சாவூர் என்றுதான் இருக்கவேண்டும், மாவட்டம்=தஞ்சாவூர் என்றல்ல). இதனை தானியங்கி உதவிகொண்டு செய்யவேண்டும். தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் உதவலாமே. -- மாகிர் 08:30, 5 சூன் 2011 (UTC)[பதிலளி]

தற்போதுள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] என்பதை வெறுமனே தஞ்சாவூர் என மாற்ற வேண்டும். தனியே மாவட்டப் பெயர் இருந்தால் போதும் அப்படித்தானே. இதனைத் தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் செய்வதே நல்லது. மாகிர், நீங்களே தானியங்கி அணுக்கத்துக்கு விண்ணப்பிக்கலாமே.--Kanags \உரையாடுக 08:47, 5 சூன் 2011 (UTC)[பதிலளி]
மாகிர் உங்கள் தானியங்கி - பயனர்:Mahirbot அணுக்கம் கொண்டுள்ளதே? வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா? --சோடாபாட்டில்உரையாடுக 08:36, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
எனக்கு ஏற்கெனவே அணுக்கம் உள்ளது. அநேகமாக எல்லா ஊர்களுக்கும் திருத்தம் வேண்டியிருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்தால் வேலை குறையும் என்பதால் எழுதினேன். முதலில் இந்தப் வார்ப்புருவில் தகவல்களை தொகுக்க வேண்டும். -- மாகிர் 08:45, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

பக்கத் தொடுப்பிணைப்பி

தொகு

கட்டுரைகளில் நீக்கல் வார்ப்புரு, துப்புரவு வார்ப்புரு, விக்கியாக்க வார்ப்புரு போன்ற வார்ப்புருக்களை எளிதாக இணைப்பதற்கு தொடுப்பிணைப்பி எனும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக ஒரு பக்கத்தில் குறிப்பிட்ட வார்ப்புருவை இணைக்கலாம். பயன்படுத்திப் பார்க்கவும். :) கருவி குறித்த கருத்துகளை அத்திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலோ என் பேச்சுப் பக்கத்திலோ குறிப்பிடலாம். :) இக்கருவியைத் தனிப்பயனாக்க எனக்கு உதவிகரமாக இருந்தவர்கள் சிறீகாந்தும் சோடாபாட்டிலும் ஆவர். :)

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:15, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]
இந்தக் கருவி எனக்கு பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிகின்றது. பல சமயங்களில் எப்படியான வார்ப்புருவைச் செர்ப்பது என்று தடுமாறியிருக்கிறேன். மேலும் எனது நோர்வேஜிய keyboard இல் எப்படி {{ , }} எழுதுவது என்று தெரியாததால், ஒவ்வொரு தடவையும் வேறு எங்காவது இருந்து நகல் எடுத்து ஒட்டி வருகின்றேன். இனிமேல் அந்தப் பிரச்சனை இல்லை :).--கலை 09:13, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி கலை. :) தற்போதுதான் கருவியை வடிவமைத்ததன் திருப்தியை உணர்கிறேன். :) உங்கள் ஊரில் இருந்து பங்களிப்பவர்களுக்கு இக்கருவியைப் பற்றிக் கூறவும். அவர்களுக்கும் உதவிகரமாக இருக்குமே! :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:45, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]

நூலகம் பக்கத்தினை விக்கியில் சேர்த்தல்

தொகு

நான் வி.சீ.கந்தையா பற்றி கட்டுரையை ஆரம்பித்து அதில் அவரது நூலகம் இணையத்திலுள்ள அவரது புத்தகங்களின் பகுப்பினை சேர்த்தேன். ஆனால்அது சரியாக இணைக்கபடவில்லை. ஆனால் இதே போன்று திமிலைத்துமிலன் பக்கத்தில் இணைக்கபட்டுள்ளது. இதனை எவ்வாறு சீர் செய்வது. யாராவது இதனை சீர் செய்து விடவும். --Santharooban 07:40, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]

சரி செய்துள்ளேன். பெயரில் இடைவெளி (space) வருமிடத்து அடிக்கோடு (underscore) பயன்படுத்துங்கள் (எ. கா : கந்தையா,_வி._சீ)--சோடாபாட்டில்உரையாடுக 07:56, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]
IE உலாவில் பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை. சில வேளைகளில் தெரிகிறது. பயர்பொக்சில் இப்பிரச்சினை இல்லை.--Kanags \உரையாடுக 08:17, 8 சூன் 2011 (UTC)[பதிலளி]

பகுப்புகள்

தொகு

பகுப்புகள் பகுதியில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்றொடர் இவ்வாறு உள்ளது:

"இந்தப்பகுப்பின் கீழ் உள்ள (20) பக்கங்களில் பின்வரும் (20) பக்கங்களும் உள்ளன."
எ.கா: பகுப்பு:நுண்ணுயிரியல்

இது சரியா? "பின்வரும் (20) கட்டுரைகளும்" என்றல்லவா அமைதல் வேண்டும்?--செந்தி//உரையாடுக// 17:10, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]

பகுப்புகள் கட்டுரையில்லா பக்கங்களுக்கும் சேரக்கூடும் என்பதால் பொதுப்படையாக “பக்கம்” என்றே உள்ளது. (இந்த செய்தி அனைத்து பெயர்வெளிகளுக்கும் - கட்டுரை, பகுப்பு, விக்கிப்பீடியா, வார்ப்புரு - பொதுவானது)--சோடாபாட்டில்உரையாடுக 17:45, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]
நானும் குழம்பி இருக்கிறேன். -- 117.193.72.105 19:17, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி சோடாபாட்டில்.--செந்தி//உரையாடுக// 20:39, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்தல்

தொகு

இலங்கை ஊடகங்களில் தமிழ் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை நான் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றேன். இன்று 2011, சூன் 11ம் திகதி இலங்கை 'வசந்தம்' தொலைக்காட்சியில் இடம் பெற்ற எனது நேர்காணலொன்றில் சுருக்கமாக தமிழ்விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்தேன். விக்கிப்பீடியா பற்றி மாத்திரம் ஒரு தனி நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும். மேலும், தமிழ் விக்கிப்பீடியா பற்றி என்னால் எழுதப்பட்ட ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரை இலங்கையில் முன்னணி தமிழ் சஞ்சிகையான 'ஞானம்' சஞ்சிகையில் எதிர்வரும் 2011 சூலை மாத இதழிலும் கட்டுரைத் தொடர்ச்சி 2011 ஆகஸ்ட் மாத இதழிலும் வெளிவரவுள்ளது. ஏற்கனவே இலங்கை முன்னணி தேசிய இதழ்களில் ஒன்றான ஞாயிறு தினக்குரலில் விக்கிப்பீடியா குறித்து ஒரு பக்கக் கட்டுரையொன்றை எழுதியுள்ளேன். அதேநேரம், இலங்கையில் பல வலைப்பூக்களில் இது குறித்து கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

இலங்கையில் இந்தியா தமிழ்நாட்டைவிட தமிழ்விக்கிப்பீடியாவை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாகவுள்ளது. காரணம் இலங்கையில் சுமார் 2650 பாடசாலைகள் தமிழ்மொழி மூல பாடசாலைகளாக உள்ளன. இங்கு தமிழ்மொழி மூலமாகவே அனைத்து கற்றல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதினால் ஆங்கில விக்கியில் தொடர்பு கொள்வதைவிட தமிழ் விக்கியில் தொடர்பு கொள்ளக்கூடிய நிகழ்தகவுகள் அதிகம். அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் தமிழ்மொழிப் பாடசாலைகளிலும் கணினி அறிவினை விருத்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதினால் தமிழ்விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்வது கடினமான காரியமாக அமையாது. இதனை அடிப்படையாகக் கொண்டே இலங்கைத் தமிழ் ஊடகங்களில் விக்கிப்பீடியா பற்றிய விரிவான அறிமுகங்களை செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். அதேநேரம், இலங்கையிலுள்ள 2650 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மாதங்களில் தமிழ்விக்கிப்பீடியா பற்றி அறிமுகக் குறிப்பேடொன்றை தபாலிடவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

இத்தகைய அறிமுக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது விக்கிப்பீடியா பற்றி சில கருத்துக் கணிப்புகளையும் மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். கருத்துக் கணிப்பீடு நடைபெறுமிடத்து விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தை எத்தகைய கோணத்தில் மேற்கொள்ளலாம் என்பதை எம்மால் இலகுவாகத் தீர்மானித்துக் கொள்ள முடியும். இதற்கு இலங்கையிலுள்ள விக்கிப்பீடியர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் பணியினை இலகுவாக மேற்கொள்ளக்கூடிதாக இருக்கலாம்.

இவ்விடத்தில் ஒரு சிறு விடயம் தொடர்பாக ஒரு ஆலோசனைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். அதாவது கருத்துக் கணிப்புகள் தொடர்பாக அறிமுகமில்லாத சில பாடசாலைகளுக்குச் செல்லும்போது விக்கி தொடர்பான எமது ஈடுபாட்டினை அறிமுகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே அப்படிப்பட்ட ஒரு நிலையேற்படும்போது எமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் விக்கி சார்பான ஒரு அடையாள அட்டை அல்லது எமது திட்டத்தை விளக்கக்கூடிய உத்தியோகபூர்வமான ஒரு கடிதம் இருப்பின் எமது பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படமாட்டதென கருதுகின்றேன். அதேநேரம், நான் அறிந்த வகையில் விக்கியில் இதுபோன்ற ஏற்பாடுகளும், நடைமுறைகளும் இல்லை. எனவே இத்தகைய நிலையில் எமது அடையாளத்தை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து நியாயபூர்வமான ஆலோசனைத் தருமிடத்து எமது ஆக்கபூர்வமான திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தக் கருத்தினை கவனத்திற் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். திட்டமிடலில் மாத்திரம் தங்கியிராது விக்கியின் அறிமுகத்தை நடைமுறையினூடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் என் திட்டத்திற்கு நடைமுறை சாத்தியப்படுமிக்க ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன். அதே நேரம் இது தேவையற்ற முயற்சியெனக் கருதுமிடத்து இம்முயற்சியைக் கைவிடவும் நான் ஆயத்தமாகவுள்ளேன்.--P.M.Puniyameen 06:37, 11 சூன் 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமீன், உங்கள் முயற்சி மிகவும் ஆக்கபூர்வமானது. இலங்கையில் தமிழ் மாணவர்களின் பள்ளிப்படிப்பு முழுவதும் தமிழ் மொழியிலேயே நடைபெறுவதால், வேறெந்த நாட்டையும் விட இலங்கையில் விக்கிப்பீடியாவின் பயன்பாடு அதிகரிக்க இடமுண்டு. எனவே உங்கள் முயற்சியைக் கைவிடாதீர்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்திருந்தீர்களா? அடையாள அட்டை அல்லது கடிதம் பெறுவது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இது பற்றி சோடாபாட்டில், சுந்தர் அல்லது இரவி கருத்துத் தெரிவிப்பார்கள் என நினைக்கிறேன். உங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:17, 11 சூன் 2011 (UTC)[பதிலளி]
மிக்கநன்றி Kanags. மலேசியா மின்னல் எப். எம். வானொலி பேட்டியின் சீடியும், வசந்தம் தொலைக்காட்சி ஒளிப்பதிவு சீடியும் கிடைக்கும். கிடைத்த பின் நிச்சயமாக தங்களுக்கு அனுப்பி வைப்பேன். --P.M.Puniyameen 05:26, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
புன்னியாமீன், உங்கள் நன்முயற்சிக்கு வாழ்த்துகள். பொதுவாக, விக்கிப்பீடியர்களுக்கான அடையாள அட்டை போன்று எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால், தேவைப்பட்டால் Outreach விக்கியின் பொறுப்பாளரோ இந்தியாவில் உள்ள விக்கிமீடியா நிறுவன அலுவலரோ கடிதம் தர வாய்ப்புண்டு. மேலும் தகவலுக்கு: |விக்கிப்பீடியா வட்டார தூதர்கள், விக்கிமீடியா நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ள கல்வி நிறுவனத் தொடர்புகள், http://maheinfo.blogspot.com/2011/04/wikipedia-pilot-campus-ambassador.html -- சுந்தர் \பேச்சு 09:09, 11 சூன் 2011 (UTC)[பதிலளி]
ஆலோசனைக்கு நன்றி சுந்தர். தங்களால் வசதிப்படுமிடத்து இது குறித்த ஏற்பாட்டை செய்து தந்தால் என் களப்பணிகளுக்கு இலகுவாக அமையலாம். அவசரமில்லை. பெரும்பாலும் கருத்துக்கணிப்பு பணியினை செப்டம்பர் மாதமளவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். எனது பிரதான எதிர்பார்ப்பு தமிழ் விக்கி தொடர்பான மாணவர்களின் அறிமுக நிலையை அறிதல். தமிழ் விக்கியை அறிமுகப்படுத்துவதிலுள்ள தடைகளை அறிதல். அதன் பின்பு தமிழ் விக்கியை மாணவர்களுக்கு விளக்கம் செய்யக்கூடிய நடைவடிக்கைகளை மேற்கொள்ளல். இப்பணியினை மேற்கொள்ளும்போது சில பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்ற அடிப்படையிலேயே அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு வழிமுறையினை எதிர்பார்க்கின்றேன். இந்த நோக்கம் குறித்து விக்கியில் மேல் மட்டத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ள முடியுமாக இருந்தால் சிறப்பாக இருக்கலாம். எவ்வாறாயினும் அறிமுகத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு ஆவணம் இல்லாவிட்டால் களப்பணியில் ஈடுபடுவது சிரமமாக இருக்கும். இந்நிலையை உணர்ந்துகொள்வீர்கள் என கருதுகின்றேன். அப்படி முடியாத நிலை ஒன்று இருக்குமாயின் எனது ஏனைய அறிமுகத் திட்டங்களை தொடரும் அதேநேரத்தில் களக் கணிப்பு விடயத்தை விட்டுவிடலாம். --P.M.Puniyameen 05:29, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
புன்னியாமீன், கணிணியில் மட்டுமின்றி களத்திலும் இறங்கி நீங்கள் ஆற்றும் பணிகள் போற்றுதற்குரியன. இலங்கைப் பள்ளிகளில் தமிழ் விக்கியை அறிமுகம் செய்யவிருக்கும் உங்கள் முயற்சி வெற்றியடைய இறைவன் அருள்வாராகுக! நன்றி! தமிழ் விக்கியில் குறிப்பிட்ட எண்ணிக்கை அல்லது நீடித்த காலம் இடைவிடாது தொகுக்கும் பயனர் அல்லது ஏதேனும் ஒரு திட்டவட்ட வரையறை அடிப்படையில் பயனர் அடையாள அட்டை தரப்படுமாயின் அது நல்லதே. இதை விக்கி மூத்தோர் முடிவுக்கு விடுவோம். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:56, 11 சூன் 2011 (UTC)[பதிலளி]
தங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திகேயன். தங்கள் கருத்தினை நானும் முழுமையாக வரவேற்கின்றேன். விக்கியில் இந்த நடைமுறையில்லாவிட்டாலும்கூட, நிர்வாகத்துடன் தொடர்புள்ள மூத்த விக்கிப்பீடியர்கள் மேல்மட்டத்துடன் தொடர்புகொண்டு இவ்விடயத்தை சிந்திப்பது எதிர்காலத்தில் அர்த்தமுள்ளதாக இருக்கலாம். தொடர்ந்தும் மரபு வழிகளிலே நம்பிக்கை வைத்திராமல் புதிய வழிமுறைகளை சிந்திப்பது தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமைய இடமுண்டு. --P.M.Puniyameen 05:38, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
புன்னியாமீன், விக்கிக்கு உள்ளே பங்களிப்பாளர்களிடையே ஒரு ஈடான நிலையையும், வெளிப்படைத்தன்மையையும் கொள்கைகளும் மீடியாவிக்கி மென்பொருட்களும் உறுதி செய்கின்றன. விக்கிக்கு வெளியே உலக அளவில் பல விக்கிகளிலும் இப்போதுதான் விக்கிப்பீடியர்கள் சற்றுக் கூடுதல் முனைப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளதால் முறைமைகள் இன்னும் எழவில்லை. அதனால், அடையாள அட்டை போன்ற தேவைகளை எப்படிக் கையாள்வது என்பதில் தெளிவில்லை. (ஏற்கனவே, தேனி. எம். சுப்பிரமணியும் இது போன்ற ஒரு பரிந்துரையை வைத்ததாக நினைவு.) ஆனால், இப்போதைக்கு தேவைக்கேற்ப ஒவ்வொரு கட்டத்திலும் ஏதும் ஆவணங்களைப் பெற்றுப் பயன்படுத்தலாம். (உங்களுக்குத் தேவைப்படும்போது தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.) முறைமைகள் தெளிவான பின்னர் அடையாள அட்டை போன்றவற்றை *கட்டாயம் தேவையிருந்தால்* செயல்படுத்தலாம் என்று கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:39, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர் --P.M.Puniyameen 17:07, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஒரு அன்பான வேண்டுகோள்

தொகு

தமிழ் விக்கியின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்களே. இக்கருத்துகள் குறித்து மூத்த விக்கிப்பீடியர்கள் கருத்துக்களை தெரிவிப்பார்களாயின் எம்மை நெறிப்படுத்திக் கொண்டு முயற்சிகளை தொடரலாம். இதிலுள்ள பிரச்சினைகள் அல்லது தடையீடுகள் சுட்டிக்காட்டினால் அவற்றிற்கேற்ப எம்மை திருத்திக் கொள்ளலாம். எனவே புதிய விக்கிப்பீடியர்களின் எமது கருத்துக்களை மூத்த அனுபவமுள்ள விக்கிப்பீடியர்கள் ஆலோசனைகள் கூறி நெறிப்படுத்த வேண்டும் என்று அன்புடன் எதிர்பார்க்கின்றேன். ஏனெனில், புதிய விக்கிப்பீடியர்கள் தங்கள் ஆலோசனைகளை என்றும் வேண்டிநிற்கின்றனர். எச்சந்தர்ப்பத்திலும் தங்களால் வழங்கப்படும் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் நாம் மீற மாட்டோம். --P.M.Puniyameen 05:38, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமின் விக்கிபீடியாவை வெவ்வேறு ஊடகத் தளங்களில் அறிமுகப்படுத்துவது கண்டு மகிழ்ச்சி. நீக்கள் எழுப்பியுள்ள கேள்வி முக்கியமானது. சுந்தர் நிருவாகத் தளத்தில் நின்று உரிய பதிலைத் தந்துள்ளார். இப்போதைக்குள்ள அமைப்பில் சாத்தியமானதை கொண்டு கூட்டுமுயற்சியாக விக்கியுடன் முன்னேறுதல் எனற முடிவை அமுல்படுத்துவோம். காலம் வரும்போது வேறு வழிகளை சமைக்கலாம் என்ற நம்பிக்கையுடன்.--சஞ்சீவி சிவகுமார் 10:39, 13 சூன் 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமீன், உங்கள் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் தொடர்புகளைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் திட்டங்கள் மிகவும் பயனளிக்கக் கூடியவை. கைவிடாமல் தொடருங்கள். இலங்கையில் களத்தில் இறங்கி வேலைகள் செய்யும்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி நான் அறிவேன். இதற்கு ஒரு அடையாள அட்டை போன்ற ஏதாவது இருப்பது நல்லது. தற்போது இது போன்ற நடைமுறைகள் எதுவும் இல்லை என்றாலும், இது குறித்து விக்கிமீடியா பவுண்டேசனின் கவனத்துக்குக் கொண்டுவரலாம். உடனடியாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நல்ல தீர்வு ஏதாவது கிடைக்க இது வழி வகுக்கும். விக்கிமீடியா இந்தியப் பிரிவுடன் தொடர்பு கொண்டுள்ள சுந்தர் போன்றவர்கள் இவ்விடயத்தைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்வது பயன்தரும். புன்னியாமீன், உங்கள் கருத்துக் கணிப்பின் தன்மை, இலக்கு என்பது பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், இக்கருத்துக் கணிப்பை ஏதாவது நல்ல நடுநிலையான பத்திரிகை நிறுவனம் அல்லது பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங்களின் உதவியுடன் செய்ய முடிந்தால் ஒருவேளை இந்த அடையாளப் பிரச்சினையை ஓரளவு தவிர்க்க முடியும். ஒரு நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, இலங்கையில் விக்கிமீடியாவின் பிரிவு ஒன்றைத் தொடங்குவது பயன்தரும். அதன் மூலம் நமது நடவடிக்கைகளுக்கு இலங்கையில் சட்டரீதியான அந்தஸ்துக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இதைச் சிங்கள மொழி விக்கிப்பீடியர்களுடன் இணைந்து செய்யவேண்டியிருக்கும். இதன் சாதக பாதகங்களைத் தீர ஆலோசித்தே செய்ய வேண்டும்.--- மயூரநாதன் 07:49, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

தங்களது கருத்துக்களுக்கு என்மனமார்ந்த நன்றிகள் மயூரநாதன் ஜயா. தமிழ் விக்கியை உருவாக்கி வளர்த்தவர் என்ற அடிப்படையிலும், விக்கியின் வளர்ச்சிக்காக வேண்டி தொடர்ச்சியாகவும், மௌனமாகவும் உழைத்து வருபவர் என்ற அடிப்படையிலும் தங்கள் மீது எனக்கு உயர்ந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. தங்கள் கருத்துக்களும் ஆதரவு வார்த்தைகளும் என்னை மேலும் தெம்படையச் செய்தன. என் கருத்துக் கணிப்பீடு தொடர்பான விபரங்களை எதிர்வரும் ஓரிருவாரங்களில் தங்களுக்கு அனுப்பி தங்கள் திருத்தங்களும், சிபாரிசுகளும் கிடைத்தபின்பே அச்சிடக் கொடுப்பேன். (இது குறித்து மேலும் சில மூத்த விக்கியர்கள் உடன் தொடர்பு கொள்வேன்). ஐயா, மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்பதிகாரியாக நான் பணியாற்றிய காலகட்டங்களில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனேக பாடசாலைகளுடன் எனக்குத் தொடர்புண்டு. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வழிகாட்டி நூல்களையும், மாதிரி வினாத்தாள்களையும் கடந்த 16 ஆண்டுகளாக வழங்கி வருவதினால் அகில இலங்கை ரீதியில் 680க்கும் மேற்பட்ட பாடசாலைகளுடன் நேரடித் தொடர்புண்டு. மேலும் 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போதும், 2009ம் ஆண்டு வடக்கு யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு மாணவர்கள் வவுனியா அகதி முகாம்களில் இருந்த போதும் பல மில்லியன் செலவில் தரம் 5 மற்றும் க.பொ.த (சா.த). மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஏற்பாடுகளை செய்ததனூடாகவும், தொடர்ந்தும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதினாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல பாடசாலைகளுடனும் நேரடி தொடர்பு உண்டு. இதனைப்பயன் படுத்தி தமிழ் விக்கியை இலங்கைப் பாடசாலைகள் மத்தியில் அறிமுகம் செய்வதில் எனக்கு இலகுவாக அமையும் எனக்கருதுகின்றேன். 2012ம் ஆண்டில் இதனைத்திட்டமிட்டு முன்னெடுக்கு முகமாகவே தமிழ் விக்கி பற்றிய கருத்துக்கணிப்பை மேற்கொள்ள விளைகின்றேன். மேலும் இதுதொடர்பான ஏற்பாடுகளை தங்களுக்கு மின்அஞ்கல்மூலம் அறியத்தருவேன். --P.M.Puniyameen 13:36, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]