விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2024
வெற்று வயல்வெளிகளில் பச்சைப் புல் பாதையில் ஒரு தனிமையான பேரி மரம். இடம்: நியூடெனாவ், ஜெர்மனி. பேரி ஒரு தாவரப் பேரினமும் பழமும் ஆகும். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது. படம்: Roman Eisele |
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள பிரம்மாண்ட பட்டக ஊற்று. இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்துள்ள, உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும். இது கிட்டத்தட்ட 370 அடிகள் (110 m) விட்டமும் 121 அடிகள் (40 m) ஆழமும் கொண்டது. படம்: Carsten Steger |
உலகின் மிகப் பெரிய தேசியப் பூங்காவும் பாதுகாக்கப்பட்ட பகுதியுமான வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்காவிலுள்ள ஒரு பனிமலை. பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்ட அமைப்பாகும். இந்த பனிமலைகள் திறந்த நீர்நிலைகளில் தாமாக மிதந்தபடி இருக்கும். படம்: Rita Willaert |
செருமனியின் பவேரியா எனும் இடத்திலுள்ள வளைவுப் பாலம். கட்டிடக்கலையில் 'வளைவு' என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஓர் அமைப்பு ஆகும். இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறைமை ஆகும். படம்: Derzno |
கூனல் முதுகுத் திமிங்கிலம் பிற கூனல் முதுகுத் திமிங்கலங்களை தொடர்புகொள்வதற்கோ அல்லது உணவு தேடுவதற்கான வழிமுறையாகவோ வால் படகோட்டம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. படம்: Giles Laurent |
சப்தர்ஜங்கின் கல்லறை இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு மணற்கல் மற்றும் பளிங்கு கல்லறை ஆகும். இது 1754 ஆம் ஆண்டில் மறைந்த முகலாயக் கட்டிடக்கலை பாணியில் நவாப் சப்தர்ஜங்கிற்காக கட்டப்பட்டது. படம்: Arjunfotografer |
தாலின் எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகவுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920 கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் என அறியப்பட்டது. படம்: Hendrik Mändla |
செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் என்பது மரங்களை அண்டி வாழும், பூச்சிகளை உண்ணும் பஞ்சுருட்டான் பறவையாகும். இது இந்திய உபகண்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியா வரையான பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளது. படம்: JJ Harrison |