விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 5

மயூரேசன் (ஆகத்து 10, 2010 - ஆகத்து 17, 2010) ஓட்டு (16|0|0) தொகு

மயூரேசன் 2006 முதல் தமிழ் விக்கியில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். பரவலான தமிழ் இணைய அறிமுகமும் நிருவாகப் பொறுப்புக்கு ஏற்ற முதிர்ச்சியும் உடையவர். மீண்டும் முனைப்புடன் பங்களிக்கத் தொடங்கி இருக்கும் மயூரேசனுக்கு நிருவாகப் பொறுப்பு வழங்குவது வளர்ந்து வரும் தமிழ் விக்கியின் பராமரிப்புக்கு மிகவும் உதவும். மயூரேசனை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். --இரவி 12:35, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

ரவி, என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி பல. தற்போது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி என்னிடம் இருப்பதாக உணர்வதினால், தமிழ் விக்கி சமூகம் சம்மதித்தால் நிருவாகப் பொறுப்பை ஏற்க சம்மதமே. --ஜெ.மயூரேசன் 12:50, 9 ஆகஸ்ட் 2010 (UTC)


ஆதரவு தொகு

எதிர்ப்பு தொகு

கருத்து தொகு

  • மயூரேசன் செப்டம்பர் 9, 2005 இல் தன்னுடைய முதல் தொகுப்பைச் செய்தார் (இங்குள்ள தகவலின் படி). நெடுநாள் விக்கியில் இருப்பவர். இதுகாறும் 107 கட்டுரைகளைத் தொடங்கி எழுதியுள்ளார். முதல் கட்டுரையாகிய திருகோணமலை கோட்டை (க் இருக்க வேண்டுமல்லவா?) என்னும் கட்டுரையை செப்டம்பர் 13, 2005 அன்று எழுதியுள்ளார். இதுகாறும் 1525 தொகுப்புகள் செய்துள்ளார். நெடுநாளையப் பயனராகிய இவர் செயலாட்சியரில் (நிருவாகிகளில்) ஒருவராகத் தேர்வு பெறுவதில் எனக்கும் ஆர்வம் உள்ளதெனினும், அதற்கு முன்சில கேள்விகளை அவரிடம் கேட்க விரும்புகின்றேன். --செல்வா 15:12, 9 ஆகஸ்ட் 2010 (UTC)
  1. பயனர் பொறுப்பிற்கு வேறாக, செயலாட்சியர் பொறுப்பில் இருப்பவர்கள் என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
  2. உரையாடல் பக்கங்களில் நீங்கள் பங்கு கொண்டு விக்கியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், சீரான விக்கிநடப்புக்கும், நீங்கள் அளித்த பங்களிப்புகளில் சிலவற்றைக் கூறுவிர்களா? நீங்கள் எழுதிய கட்டுரைகள் விக்கியின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்த கொடை, ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது இவை தவிர உள்ள உங்கள் பங்களிப்பைப் பற்றிக் கூற வேண்டுகிறேன் (3-4 வரிகளில்)
  3. இப்புதிய பொறுப்பில் தேர்வு பெற்றால் எத் துறைகளில் நீங்கள் அதிகம் செலுத்த இருக்கின்றீர்கள் ?

மயூரேசனின் பதிகள் தொகு

  1. முதலாவதாக நிருவாகியாக இருப்பவர் மற்றய பயனர்களை விடப் பெரியவர் அல்ல என்பதை உணர்ந்துகொள்கின்றேன். ஆயினும் சில பொறுப்புணர்வுடன் உணர்ச்சி வசப்படாமல் நடுவுநிலமையுடன் கூடிய கடமைகளைச் செய்ய வேண்டிய கடமைப்பாடு நிருவாகிக்கு உள்ளது. முக்கியமான கடமைகளாக விக்கி துப்பரவாக்கம் மற்றும் முகாமைத்துவம் செய்யும் பணிகள் இருக்கின்றன. அதாவது சிக்கலுக்குரிய பக்கங்களை பாதுகாத்தலும் பின்னர் பாதுகாப்பு நீக்கலும் அதே போல தேவையற்ற உள்ளடக்கம் அற்ற பக்கங்களை நீக்குதலும் அதேவேளை நாசவேலை செய்யும் பயனர்கள் மற்றும் ஐபி முகவரிகளை தற்காலிகமாகத் தடைசெய்தலும் பின்னர் தேவைப்பட்டால் (மற்ற பயனர்களின் ஆலோசனையின் பின்னர்) நிரந்தரமாகத் தடைசெய்தல் பற்றியும் யோசிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நிருவாகியாக எதேச்சையாக முடிவுகள் எடுக்காமல் விக்கி சமூகத்தில் சார்பாக நடவடிக்கை எடுப்பதையே நிருவாகி கடமையாக கொண்டிருக்கவேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
  2. இதுவரை என்ன செய்துள்ளீர்கள் விக்கிக்கு உங்களை நிருவாகியாக்க என்று கேட்டுள்ளீர்கள். 2005 தொடக்கம் விக்கிக்கு பங்களிப்பு செய்துள்ளேன் (இடைக்கிடை காணாமல் போய் மீள வந்து சேர்பவன் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்). இதைவிட ஆரம்ப காலங்களில் விக்கியின் எதிர் காலத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் கலந்துள்ளேன். இதை விக்கிப்பீடியாவில் ஆலமரத்தடியில் மற்றும் ஆண்டு அறிக்கைகளில் கண்டுகொள்ளலாம். கடைசி ஓராண்டு காலமளவில் விக்கியின் நோக்கு மற்றும் அதன் திட்டங்கள் நோக்கிய என்னுடைய பங்களிப்பு பூச்சியமே. ஆயினும் மீள விக்கி வந்ததுடன் தொடர்ந்து திட்டம் நோக்கிய ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் பங்கெடுக்க விழைகின்றேன். அத்துடன் நிருவாகி அணுக்கம் வழங்கப்பட்டால் பொறுப்புணர்வு மேலும் ஒரு படி கூடுவதைத் தடுக்க முடியாது. மேலும் புது பயனர்களுக்கு அவ்வப்போது விக்கி நுட்பங்கள் பற்றிய உதவிகளை வழங்கியதுடன் விக்கிப்பீடியாவற்கு வெளியே விக்கிபற்றிய பரப்புரையில் மனமார்த்தமாக ஈடுபடுகின்றேன். மேலும் புதிய திட்டங்களான விக்கி கூகிள் மொழிபெயர்ப்பு திட்டத்தை ஆர்வமாகக் கவனித்து வருகின்றேன். எதிர்காலத்தில் இந்த திட்டம் தொடருமானால் நிச்சயம் இந்த திட்டத்தில் ஆர்வமாக உத்வேகத்துடன் (Actively) பங்குபெற நினைக்கின்றேன்.
  3. நிருவாகி அணுக்கம் கிடைத்தால் எதிர்காலத்தில் என்ன திட்டம் என்று கேட்டுள்ளீர்கள். முக்கியமாக எனது பணி விக்கி துப்பரவாக்கத்தைச் சுற்றியே இருக்கும். விக்கியாக்கத்தில் இருக்கும் அனுபவத்தை இத்துறையில் பயன்படுத்திக் கொள்ளுவேன். இதைவிட புதிதாக ஆரம்பித்துள்ள பேச்சு விக்கி (அல்லது பேசும் விக்கி) பக்கங்களை மெல்ல மெல்ல மேம்படுத்தும் ஆர்வம் உண்டு. மேலும் கூகிள் விக்கிப்பீடியா தமிழாக்கத் திட்டத்தை கூர்ந்து கவனித்து வருகின்றேன் இதில் ஏற்கனவே ஆரம்பித்துள்ள பங்களிப்பை தொடரும் எண்ணம் உள்ளது. இவற்றைவிட கட்டுரையாக்கம், கட்டுரை விரிவாக்கம் தொடர்ந்தும் எனது பயனர் பக்கத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
மிக்க நன்றி மயூரேசன். உங்கள் பொறுப்பான மறுமொழிகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு தமிழ் விக்கிக்கு மிகவும் தேவை. வெற்றியடைய நல்வாழ்த்துகள் என் அடியூட்டை (ஆதரவை) தருவதில் மகிழ்கிறேன். --செல்வா 17:54, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

வாழ்த்துகள் தொகு

மயூரேசனுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளோம். மயூரேசன் மேலும் சிறப்பாகப் பங்களிக்க என் வாழ்த்துகள்--இரவி 20:26, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆதரவு வழங்கிய அனைவரிற்கும் நன்றி. நிருவாகி அணுக்கம் வழங்கியமை மூலம் நான் மேலும் பொறுப்புடன் ஆழமாக விக்கியில் பங்களிக்க முடியுமாகவுள்ளது. --ஜெ.மயூரேசன் 03:56, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
வாழ்த்துக்கள் மயூரேசன். நிர்வாகப் பொறுப்பு உங்களுக்கு புது உத்வேகம் கொடுக்கும் என நம்புகிறேன்.--அராபத்* عرفات 05:16, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

அராப்பத் ரியாத் (ஆகத்து 8, 2010 - ஆகத்து 15, 2010) ஓட்டு (17|0|0) தொகு

அராப்பத் ரியாத் அவர்கள் 2008 தொட்டு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு சிறப்பாகப் பங்களித்து வருகிறார். இசுலாம், பொது அறிவு, புகழ்பெற்ற மாந்தர்கள், தொழில்நுட்பம், வரலாறு முதலிய துறைகளில் எழுதி வருகிறார். தீயணைப்பான், தீ எச்சரிக்கை அமைப்பு, இராச நாகம், சீன சோதிடம், சேரமான் பெருமாள், அக்கா மகாதேவி, சான் சல்லிவன் ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. மேலும் கூகிள் திட்டம், வலைவாசல்கள், பிற மொழி விக்கிப்பீடியாக்கள் பற்றிய கட்டுரைகள், வார்ப்புருக்கள், உரையாடல்கள் என விக்கிப்பீடியா சமூக செயற்பாட்டில், நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளார். இவரை நிர்வாகியாகப் பெறுவது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் வளம் சேர்க்கும். அரபாத்துக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகப் பொறுப்பு அளிக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி. --Natkeeran 02:57, 8 ஆகஸ்ட் 2010 (UTC)

நிர்வாகி பொறுப்புக்கு நீங்கள் என்னை முன்மொழிவதில் மகிழ்ச்சி நற்கீரன். மற்றவர்களுக்கும் இதில் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எனக்கும் சம்மதமே. நன்றி. --அராபத்* عرفات 06:27, 7 ஆகஸ்ட் 2010 (UTC)

ஆதரவு தொகு

எதிர்ப்பு தொகு

கருத்து தொகு

கேள்விகள் தொகு

அராப்பத், எனது ஆதரவைத் தெரிவிக்கும் முன் சில விசயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

1. நிருவாக அணுக்கம் கொண்டு கூடுதலாக என்னென்ன பணிகள் செய்யலாம் என்று எண்ணியுள்ளீர்கள்?

  • அராபத்:நிருவாக அனுக்கத்தினால் மட்டுமே என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய முடியும். குறிப்பாக விக்கி துப்பரவு பணிகளில் இன்னும் ஆழமாக இடுபட விருப்பம். மேலும் ஏற்கனவே இருக்கும் நிருவாகிகளின் அதிக சுமைகளையும் குறைக்க முடியும்.

2. ஒரு பயனரைத் தடுப்பதா வேண்டாமா, எத்தனை காலம் தடுப்பது என்று எப்படி முடிவு செய்வீர்கள்?

  • அராபத்:ஓரு பயனரின் பங்களிப்பு குறித்த விடயம் இது. தொடர்ந்து பங்களிக்கும் பயனர், புதுப் பயனர் போன்றவற்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மட்டுமே திருத்த முயல்வேன். தொடர்ந்து விசமச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பேச்சுப் பக்க (ம) மின்னஞ்சல் உரையால்களை கவனத்தில் ஏற்றாதவர்கள் ஆகியோரின் பயனர் கனக்கை தற்காலிகமாக தடைசெய்வேன். எவ்வளவு காலம் என்பதற்கு முந்தைய தடை பதிகைகளையும் விக்கி கையேட்டின் உதவியையும் பெறுவேன். நிரந்தரமாக ஒரு பயனரை தடை செய்ய விரும்பினால், முதலில் தற்காலிகமாக அவரின் பயனர் கனக்கை தடைசெய்து விட்டு அவரின் விசமத்தொகுப்புகளை மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பின் அனைவரின் கருத்துகலுக்கும் ஏற்ப முடிவு செய்வேன்.

3. ஒரு குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கருத்து வேறுபாடுகள் ஓடிக் கொண்டுள்ளன. உங்களுடன் ஒத்த கருத்துள்ளவர்கள் ஒரு நிருவாகி என்ற முறையில் நடவடிக்கை எடுக்கக் கோரி உங்களிடம் முறையிட்டால் என்ன செய்வீர்கள்?--இரவி 13:41, 8 ஆகஸ்ட் 2010 (UTC)

  • அராபத்:ஒருவேளை நான் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப் பட்டால், கண்டிப்பாக இப்போது இருப்பதை விட அதிகம் பொருமையாகவே செயல்படுவேன். அதன் தேவயையும் நான் கண்டிப்பாக உனர்ந்திருக்கிறேன். எனவே எனது கருத்தை 'அந்த' பேச்சுப் பக்கத்தில் இன்னும் ஆழமாக பதிவேனே தவிர தடாலடி முடிவுகள் எதுவும் எடுக்க மாட்டேன். மற்றவர்களின் கருத்திற்கும் மதிப்பு கொடுத்து அனைவருக்கும் இனக்கமான முடிவையே எடுப்பேன். குறிப்பாக எனது அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் விக்கி 'வளர்ந்துவரும் விக்கி' என்பதை கவனத்தில் கொண்டு அனைவரையும் அரவனைத்து செல்வதையே விரும்புவேன்.--அராபத்* عرفات 16:49, 8 ஆகஸ்ட் 2010 (UTC)

நல்ல பதில்கள். நன்றி அராப்பத். இன்னும் முனைப்பாகவும் ஊக்கத்துடனும் நீங்கள் செயல்பட நிருவாக அணுக்கம் உதவும் என்று நம்புகிறேன். --இரவி 18:06, 8 ஆகஸ்ட் 2010 (UTC)

வாழ்த்துக்கள் தொகு

வாக்கெடுப்பு முடிவுகளை அடுத்து, அரபாத் நிர்வாகப் பொறுப்புப் பெற்றுள்ளார். அவரது பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறோம். --Natkeeran 23:20, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி நற்கீரன். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. --அராபத்* عرفات 03:34, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
வாழ்த்துக்கள் அரபாத். நிர்வாக அணுக்கம் உங்கள் பணிகளை இலகுவாக்க உதவும் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 12:36, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆம் கனகு. அதோடு பொறுப்புனர்ச்சியையும் அதிகப்படுத்தியுள்ளது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.--அராபத்* عرفات 15:58, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
அராபத் உங்களுக்கு நிர்வாகி அணுக்கம் கிடைத்ததையிட்டு வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்புக்கள் மேலும் சிறப்பாகத் தொடரட்டும். --மயூரநாதன் 16:22, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
உங்கள் வாழ்த்துமொழிகளுக்கு நன்றி மயூரநாதன் --அராபத்* عرفات 05:19, 18 ஆகஸ்ட் 2010 (UTC)