விக்கிப்பீடியா பேச்சு:இந்திய விக்கிமீடியப் பிரிவுக்கான முன்மொழிவுகள் 2013

இந்திய மொழி விக்கியூடகங்கள் வளர்ச்சிக்காக விக்கிமீடியா அறக்கட்டளை பெருமளவு நிதியை (தோராயமாக ஒரு கோடி அளவில்) இந்திய விக்கிமீடியா கிளைக்கு வழங்க இருக்கிறது. இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகள் http://wiki.wikimedia.in/FDC_Proposal_2013#Ideas_for_inclusion_in_calendar_year_2014_plan பக்கத்தில் வரவேற்கப்படுகின்றன. இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் கருதினால் கூர்மையான பரிந்துரைகளையும் விமரிசனங்களையும் முன்வைப்பது அவசியம். இரண்டாவது, தமிழ் விக்கியூடகங்களுக்கு என தனிப்பட்ட திட்டங்களை வகுத்து முன்வைத்து நிதி ஒதுக்கக் கோரலாம். இதனைச் செய்து முடிப்பதற்கு இன்னும் ஒரு வார காலமே 48 மணி சில மணி நேரமே உள்ளது. திங்கள் காலைக்குள் பரிந்துரைகள் இறுதி செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பி வைக்க வேண்டும் தமிழ் விக்கியூடகங்களில் இருந்து ஒருமித்த கருத்து வலுவாக ஒலிக்க, நாம் இங்கு முறையாக உரையாடி ஒரு முன்மொழிவை இட்டு வாக்களித்து அதன் பிறகு அங்கு தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும்.--இரவி (பேச்சு) 13:20, 20 செப்டம்பர் 2013 (UTC)

தென்காசியாரின் யோசனை தொகு

  1. கைப்பேசிக்கான தளத்தை பயனருக்கு ஏற்ற (User Friendly) முறையில் மாற்றுவதில் இத்தொகையை செலவிடலாம்.
  2. விக்கி நூல்களில் மற்ற தளங்களில் கிடைக்காத முக்கிய பழைய நூல்களை காப்புரிமம் பெற்று பதிவேற்றுவதற்கும் செலவிடலாம்.
  3. சிந்துசமவெளி எழுத்துக்களை படித்த மதிவாணன் தன்னிடம் உள்ள சில நூல்களை எங்கு வேண்டுமானாலும் தரவேற்றலாம் எனக்கூறியுள்ளார். அவரின் நூல்களை ஸ்கேன் செய்ய இப்பணத்தை பயன்படுத்தலாம். இதைப் போண்ற இன்னும் நிறைய ஆசிரியர்களின் நூல்களை தரவேற்றினால் சிறந்தது. இதனால் விக்கி மூலமும் பலம்பெறும் கட்டுரைகளுக்கான மூலங்களும் எளிதாக கிடைக்கும்.
  4. தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கூகுள் கட்டுரைஅகளை திருத்துவதில் சிலருக்கு 6 மாத அளவுக்கு சம்பளம் கொடுத்து அனைத்து கட்டுரைகளையும் திருத்த வைக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:21, 20 செப்டம்பர் 2013 (UTC)
எல்லா யோசனைகளும் அருமை! கூகுள் கட்டுரைக்கு சம்பளம் தருவது ஏற்புடையதாக தெரியவில்லை. அதை திருத்த மட்டும் பணம் தந்தால், புது கட்டுரை எழுதுபவர் ஏமாளியா?! மேலும், அதை திருத்துவதற்குப் பதில் புதிதாகவே எழுதலாம். அப்படி என்றால், கூகுள் கட்டுரையை திருத்துபவர் லாபம் அடைவது போலவும், புதுக் கட்டுரை எழுதுபவர்கள் ஏமாளி போலவும் தோற்றம் ஏற்படும். ஆறு மாத சம்பளமா? அதற்கு மாற்றாக, அடிக்கடி போட்டிகள் நடத்தலாம்.. கல்வி நிறுவனங்களில் பரப்புரை செய்து, தட்டச்சு கற்பித்து, போட்டி வைக்கலாம். மாணவரிடையே சேரும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:36, 20 செப்டம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்

ஆம் , தங்கள் 'சம்பளம்' பரிந்துரைக்கு இணங்கவில்லை தென்காசியாரே! :). மற்றவை அருமை. தங்களை விடவல்ல :) :), அதற்குமாறாக போட்டிகள் வைக்கலாம், கூகிள் கட்டுரைகளை திருத்தும் போட்டி :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:43, 20 செப்டம்பர் 2013 (UTC)
அந்தப் பக்கத்தில் தரப்பட்டு இருக்கும் பல எண்ணங்களும் சரியாக நிறைவேற்றப்பட்டால் மிகவும் பயன் உடையவை. எ.கா இந்தியா/தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள், வெளியீடுகள் பற்றிய தகவல்களைத் திரட்டல். மொழிபெயர்ப்பு கருவிகளையும், செயலாக்கங்களையும் வலுப்படுத்தல், விருத்தி செய்தல், பரப்புரை போன்றவை. மேலும் எண்ணங்களை தமிழ் விக்கிக் கூடலில் உரையாடி, ஆவணப்படுத்தினால் மிகவும் நன்று. --Natkeeran (பேச்சு) 15:48, 20 செப்டம்பர் 2013 (UTC)

தென்காசி சுப்பிரமணியன், செல்பேசிப் பதிப்பு வலைத்தளத்தை மேம்படுத்துவது உலகாளாவிய விக்கி நுட்பக்குழுவின் கீழ் வரும். நாம் தமிழ் சார்ந்த திட்டங்களை மட்டும் முன்வைப்போம். பொதுவாக, பெரு நோக்கிலான (macroscopic) திட்டங்களை முன்வைப்பது நன்று. காசு கொடுத்து உள்ளடக்கத்தைச் சேர்ப்பது, திருத்துவது இரட்டை முனைக் கத்தி போன்றது. அதான் எல்லாவற்றையும் காசு கொடுத்துச் செய்யலாமே என்று தன்னார்வல உந்துதலைக் குறைக்க வல்லது. விக்கிமீடியா அறக்கட்டளையும் அதனை ஊக்குவிப்பது இல்லை. கூகுள் திட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகளில் பலவும் காசு கொடுத்துச் செய்வதால் வந்ததே. எனவே, முள்ளை முள்ளால் எடுக்கிறோம் என்று இறங்கி இன்னும் குத்திக் குதறி விட வேண்டாம் :) நேரடியாக உள்ளடக்கத்தைச் சேர்ப்பது தவிர்த்து, நமது கட்டமைப்பை உறுதி செய்வதை முன்னிட்டுச் சில திட்டங்களை உருவாக்கலாம். நாளை காலை விரிவாக என் பரிந்துரைகளை இடுகிறேன். --இரவி (பேச்சு) 18:44, 20 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ்குரிசில், ஆதவன் மற்றும் நக்கீரன் அவர்களுக்கு தென்காசியார் முன்மொழிந்த யோசனைகளுக்கு சாதக பாதகங்களை மட்டும் ஆராய்ந்து கூறிவிட்டு தங்களது யோசனைகளை முன்வைக்காமல் விட்டுவிட்டீர்களே!. தங்களது மேலான யோசனைகளையும் முன்வைத்தால்தானே கிடைக்கின்ற நிதியை சரியாக பயன்படுத்தி்க்கொள்ள வழிகிடைக்கும். விரைந்து முன்வையுங்கள். அனேகமாக இரவி அவர்கள் ஒரு கட்டுரையையே எழுதி தருவார் என்று நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:08, 20 செப்டம்பர் 2013 (UTC)

ஜெகதீஸ்வரன் யோசனை தொகு

கிடைத்தற்கரிய இந்நிதியில் தமிழ்விக்கியின் பரப்புரைக்கும், பயனர் உதவிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். அவற்றுக்காக சில பரிந்துரைகள்.
  1. புதிய பயனர்களை உருவாக்குதல் என்பது. தமிழ் விக்கிப்பீடியாவின் தற்போதைய சூழலில் அவசியமாகிறது. கணினி பற்றி அறிந்தவர்களை முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வழிவகை செய்யும் யுத்திகளை யோசிக்க வேண்டும். வலைப்பதிவர்கள், சமூக வளைதள பயனாளிகள் போன்றோர்களுக்கு விக்கிப்பீடியாவில் பங்காற்ற ஆர்வமும், தமிழ் தட்டச்சுப் பயிற்சியும் அளித்தல் அவசியம். இதற்கு ஒரு கனிசமான தொகை தேவையுரும்.
  2. புதிய பயனர்களை விக்கிப்பீடியாவில் தக்க வைக்கும் யுத்திகள் இரண்டாவது. இதற்கு பயனர் வழிகாட்டல் காணொளிகளை தயாரிப்பதும், புதுப்பயனர்களுக்கு வழிகாட்ட ஒரு குழுவொன்றை அமைப்பதும் அவசியம் என எண்ணுகிறேன். முன்பே சில இருந்தாலும் தற்போது சிறந்த முறையில் தொகுத்தல் முதல் விக்கியைப் எப்படி பயன்படுத்துவது என்பது வரை சிறந்த ஒளி ஒலி கட்டமைப்புடைய காணொளிகளை தயாரித்தல், புதுப் பயனர்களை வழிநடத்தி விக்கிப்பீடியாவை விட்டு செல்லாது இருக்கவும், அவர்களை ஒழுங்குபடுத்தும் வேலைகளை குறைக்கவும் உதவும்.
  3. விக்கிப்பீடியாவை கணினி பயன்படுத்தாத மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடுதல். இதற்கு பரந்த விளம்பர யுத்திகளும், முறையான பயிற்சிப் பட்டரைகளும் தேவையுரும். மிகுந்த சிரமமும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.இருப்பினும் கணினி குறித்தான எவ்வித அறிவும் இல்லாத பல சிறந்த பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வளர்கள் போன்றோரை பயன்படுத்திக் கொள்ள உதவும். (இதற்கே நிதி போதுமா என்று தெரியவில்லை, இன்னும் பெரிய அளவு விக்கி வளர்ந்த பின்பு கூட இதனைப் பற்றி யோசிக்கலாம்) நன்றி.-சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:01, 20 செப்டம்பர் 2013 (UTC)

மயூரநாதன் பரிந்துரைகள் தொகு

தமிழ் விக்கியூடகங்களில் பரந்த அளவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய திட்டங்களை உருவாக்குவது நல்லது. பொதுப்படையாக, தமிழ் மொழி மூல உள்ளடக்க உருவாக்கத்துக்கு உதவக்கூடிய வசதிகளை மேம்படுத்தல், உள்ளடக்க உருவாக்கம் தொடர்பில் பயனர்களின் திறமைகளை வளர்த்தல், பயனர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பு உண்டு என்று அவர்கள் உணர்வதற்கான வழிமுறைகளைச் செயற்படுத்தல் போன்றவை தொடர்பில் திட்டங்கள் அமையலாம். என்னுடைய பரிந்துரைகள் சில:

  • இணைப்புத் தந்துள்ள பக்கத்தில் இருப்பதற்கு இணங்க ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்குமான மொழிபெயர்ப்புகளுக்குத் தேவையான கருவிகளை உருவாக்குவது போன்ற செயற்பாடுகளுக்கு ஓரளவு பணத்தைச் செலவு செய்வது பயனுள்ளது. இது கட்டுரை உருவாக்கத்தில் கூடிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
  • அத்துடன் ஆர்வத்துடன் செயற்படும் பயனர்களுக்குப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் முறையான பயிற்சிகளை அளிப்பதும் பயன்தரும். எடுத்துக்காட்டாக, கணினி தொடர்பான பயிற்சிகளோடு, ஒளிப்படப் பயிற்சி, கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி, நல்ல தமிழ் எழுதுவதற்கான பயிற்சி, தகவல் திரட்டுவதற்கான பயிற்சி, காப்புரிமை தொடர்பான பயிற்சி, போன்ற பயிற்சிகளை ஒழுங்கு செய்யலாம். நேரடியான பயிற்சிகள் தவிர கூடிய பயனர்களை அடையக்கூடிய "வெபினார்"களை ஒழுங்குபடுத்துவதற்கும், பயிற்சி நிகழ்படங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கும் பணம் ஒதுக்கலாம்.
  • போட்டிகள் நடத்துவதும் ஓரளவு பயன் தருவதாகத் தெரிவதால், பயன்தரக்கூடிய போட்டிகளை நடத்திப் பயனர்களை ஊக்குவிக்கலாம். ஏற்கெனவே விக்கிப்பீடியா, பொதுவகம் போன்றவை பயன்பெறக்கூடிய வகையில் போட்டிகளை நடத்திய அனுபவம் நமக்கு உண்டு. விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கிச்செய்தி என்பவற்றுக்கும் போட்டிகளை விரிவாக்குவது நல்லது.
  • தமிழ் விக்கியூடகங்களின் மேம்பாட்டுக்காகச் சிறிய அளவில் முறையான திட்டங்களைத் தீட்டிச் செயற்பட விரும்பும் பயனர்களுக்கும், பயனர் குழுக்களுக்கும் இத்திட்டத்தோடு தொடர்புடைய செலவுகளுக்காக நிதியுதவி வழங்கலாம்.

---மயூரநாதன் (பேச்சு) 20:49, 20 செப்டம்பர் 2013 (UTC)


இரவியின் பரிந்துரைகள் தொகு

பணம் இருந்தால் என்ன வகையில் பங்களிப்பாளர் பணிப்பளுவைக் குறைக்கலாம் என்று எண்ணுவது சரியான அணுகுமுறை அன்று. இன்னும் கொஞ்சம் நிதி இருந்தால் என்னென்ன வகையில் பங்களிப்பாளர்களின் திறன்களையும் தமிழ் விக்கிப்பீடியாவின் எல்லையையும் விரிவாக்கலாம் என்ற முறையில் இதனை அணுக விரும்புகிறேன். அதே வேளை, எவ்வளவு பணம் கிடைத்தாலும் நம்மிடம் போதிய பங்களிப்பாளர்கள் இல்லாவிட்டால் மாபெரும் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. எனவே, நம் பங்களிப்பாளர் வளத்துக்கு ஏற்ப திட்டங்களின் பரப்பைத் தீர்மானிக்க வேண்டும்.


  1. பங்களிப்பாளர் திறன் வளர்ப்புப் பயிற்சி - இது வரை நாம் நடத்தும் பயிற்சிகள், பட்டறைகள் எல்லாம் புதியவர்களுக்காக உள்ளது. அதில் ஒரு சில ஏற்கனவே உள்ளவர்களுக்காக செய்தாலும் போதிய நேரமோ பயிற்சியாளர்களோ இருப்பதில்லை. அனைவராலும் கலந்து கொள்ள இயல்வதில்லை. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு திறன் வளர்ப்புப் பயிற்சி நடத்தலாம். மூன்று அல்லது நான்கு நாட்கள் நகர வாழ்கையின் பரபரப்பு இல்லாத இடங்களில் இதனை நடத்தலாம். இதில் ஏற்கனவே முனைப்பாகச் செயல்பட்டு வரும் பங்களிப்பாளர்களே அழைக்கப்படுவார்கள். தோராயமாக, 25 பேர் என்று கொள்வோமே? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதையே உந்துதலாகக் கொண்டு ஆண்டு முழுதும் பங்களிப்பாளர்கள் தங்கள் பங்களிப்பை முனைப்பாகச் செய்யலாம். இந்தப் பயிற்சியில் என்னென்ன சொல்லித் தரலாம்? தமிழ் எழுத்து நடை, கலைக்களஞ்சிய நடை, மொழிபெயர்ப்புத் திறன்கள், விக்கிப்பீடியா கொள்கைகளைப் புரிந்து கொண்டு இயங்குதல், பரப்புரை திறன்கள், தலைமைத்துவப் பண்புகள், வரைகலை / நுட்பத் திறன்கள் என்று பொதுவான அறிமுகமும் ஒவ்வொருவரின் தனிச்சிறப்புக்கென சிறப்புப் பயிற்சிகளும் வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, நுட்பத்தில் ஆர்வமுள்ளவர் என்றால் நிரலாக்கல் மொழியில் வல்லுனர்களை அழைத்து ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில் பங்களிப்பாளரைப் பட்டை தீட்டலாம். மேற்கண்ட பயிற்சிகள் அனைத்துக்கும் தமிழ் விக்கிப்பீடியா, மற்ற விக்கிப்பீடியாக்களில் சிறந்தவர்களும் துறை சார் வல்லுனர்களும் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமான போக்குவரத்து, உணவு, தங்குமிடச் செலவுகளை ஏற்றுக் கொள்ளலாம். தொழில்முறைப் பயிற்சியாளர்களுக்கான கட்டணங்களையும் செலுத்த நிதி ஒதுக்கலாம். மொத்தத்தில், இருக்கும் பங்களிப்பாளர்களின் திறன்களை மெருகேற்றி தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த பாய்ச்சலுக்குப் புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும்.
  2. பங்களிப்பாளர் திறன் வளர்ப்பு வளங்கள் - மொழி நடைக் கையேடு போன்ற தேர்ந்தெடுத்த நல்ல அச்சு நூல்களை முனைப்பான பங்களிப்பாளர்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கலாம். நிரலாக்கம், வரைகலை போன்ற குறிப்பிட்ட துறைகளில் தங்கள் திறன்களை மேம்படுத்த விரும்புவோருக்கு அதற்கான பயிற்சிக் கட்டணங்களைச் செலுத்தலாம்.
  3. பங்களிப்பாளர் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி - பங்களிப்பாளர்கள் இன்னும் சிறப்பாகப் பங்களிக்க புதிய கருவிகளைப் பெற வேண்டி இருந்தால் அதற்கான நிதியை ஒதுக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, scanner, படம்பிடி கருவிகள், கணினிகள் முதலியன. மாணவர்களுக்கும் வருவாய் வாய்ப்பில்லாதவர்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்.
  4. பரப்புரை நிதி - இன்று வரை பெரும்பாலும் தங்கள் சொந்தச் செலவிலேயே பரப்புரையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பரப்புரைகளைச் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு பின்வரும் வசதிகளைச் செய்து தரலாம்: 1. பரப்புரையாளரின் உணவு, போக்குவரத்து, தங்குவதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளலாம். பலரும் இதைப் பயன்படுத்தும் வகையில் ஆண்டுக்கு 12 முறை மட்டுமே ஒரு பங்களிப்பாளர் இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். 2. பரப்புரைகளில் வழங்குவதற்கான சிற்றேடுகள், விளம்பர ஒட்டிகள், சட்டைகள் போன்ற பொருட்களைத் தயாரித்து இருப்பு வைப்பதற்கு நிதி ஒதுக்கலாம்.
  5. பங்களிப்பாளர் வலைப்பின்னல் நிதி - தமிழ் விக்கிப்பீடியா வளர பல்வேறு மட்டங்களிலும் நமக்கு கூட்டாளிகள் தேவை. அதற்குத் தமிழ் விக்கிப்பீடியா தவிர்த்தும் பிற களங்களிலும் நாம் இயங்கி நட்புகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியர் ஒருவர் கட்டற்ற மென்பொருள் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புகிறார் என்றால் அதற்கான உணவு, போக்குவரத்து, தங்கும் செலவுகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு விக்கிப்பீடியர் ஆண்டுக்கு 4 முறை மட்டும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
  6. தொழில்நேர்த்தி மிக்க பயிற்சி நிகழ்படங்கள் - இது மேலே செகதீசுவரன் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ள சிறப்பான பரிந்துரை. நாமாகவே இதைச் செய்து முடிக்க காலம் ஆகும். தொழில்நேர்த்தியும் அவ்வளவாக இருக்காது. உள்ளடக்கத்தைச் சேர்க்கும் முதன்மை நோக்கத்தில் கவனம் செலுத்தி, எஞ்சிய இடங்களில் தொழில்முறை உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
  7. தமிழ் விக்கியூடகப் பதிப்பகம் - இது ஆண்டுக்கு நான்கு புத்தகங்களைப் பதிப்பிக்கும். ஒரு காலாண்டுக்கு ஒன்று. தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தமிழ் விக்கி நூல்கள், அச்சில் இல்லாத தமிழ் விக்கிமூல நூல்கள் முதலியன இவற்றுள் அடங்கும். உள்ளடக்கத்தைக் காசு கொடுத்துச் சேர்க்கத் தேவையில்லை. ஆனால், இருக்கிற உள்ளடக்கத்தை அச்சுக்கு ஏற்றவாறு கொண்டு வர தொழில்முறை தொகுப்பாசிரியர்களைப் பயன்படுத்தலாம். அச்சிடல், தொகுப்பு, வடிவமைப்பு, புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கும் செலவு, இவற்றைப் பொறுப்பெடுத்துச் செய்பவர்களுக்கான அப்போதைய நடைமுறைச் செலவுகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கலாம். இதில் முழு நேரப் பணியாளரோ நமக்கு என்று ஒரு அலுவலகமோ இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இணையத்துக்கு வெளியே உள்ள மக்களைச் சென்று சேர்தல், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களின் உள்ளடக்கத் தரத்தைக் கூட்டுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். நூல் விற்பனையில் கிடைக்கும் நிதி மீண்டும் இத்திட்டத்திலேயே சேர்க்கப்படும்.
  8. வெகுமக்கள் ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா: வானொலி, குழந்தைகள் /கல்வி அச்சிதழ்களில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வினாடி வினா, பொது அறிவுப் போட்டி நடத்தலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து தேவையான உள்ளடக்கத்தைப் பெற்றுக் கொள்வது ஊடகங்களின் பொறுப்பு. சிறு பரிசுகளை மட்டும் நாம் வழங்கலாம்.
  9. மாநிலம் தழுவிய தட்டச்சுப் பந்தயம் - தமிழ்த் தட்டச்சு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் தழுவிய மாபெரும் போட்டியை நடத்தலாம். வெளிநாடுகளில் ஆங்கிலத் தட்டச்சுக்கு இது போல் போட்டிகள் உண்டு. இதற்கென நிகழ்ச்சி நடத்தும் கூட்டாளிகளை இனங்கண்டு பொறுப்பைத் தரலாம். பரிசை மட்டும் நாம் வழங்கலாம்.
  10. கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டுத் திட்டங்கள்- தமிழ் விக்கிப்பீடியாவின் தொழில்நுட்பத் தேவைகளை இனங்கண்டு அவற்றில் பணி புரியும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கல். இவர்களுக்கு நாம் தொழில்நுட்ப வழிகாட்டல் மட்டும் தரலாம்.

குறிப்பு:

  • இந்திய விக்கிமீடியா கிளை ஒரு கோடி இந்திய ரூபாய் வரைக்கும் நிதி கோரினாலும் முழுத்தொகை அவர்களுக்கு அப்படியே கிடைக்கும் என்றில்லை. இதில் தமிழ் விக்கிமீடியா போல பலருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால், ஆகக் கடைசியில் நமக்குக் கிடைக்கும் தொகை குறைவாக கூட இருக்கலாம். எனினும், நாம் சரியான திட்டங்களைத் தீட்டினால், நேரடியாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்தும், CIS-A2K போன்ற அமைபுபகளிடம் இருந்தும் எஞ்சிய தொகையைப் பெறலாம்.
  • இந்திய விக்கிமீடியா கிளை மூலமாகவும் CIS-A2K போன்ற பிற இந்திய அடிப்படை அமைப்புகள் மூலமாகப் பெறும் நிதியை இந்தியாவுக்குள் தான் செலவு செய்ய முடியும். ஆனால், திறன் வளர்ப்புப் பயிற்சிகள், திறன் வளர்ப்பு ஆதாரங்கள் போன்றவற்றை இலங்கையில் இருந்து கலந்து கொள்ளும் பயனர்களுக்கும் அளிக்க முடியும் என்றே நினைக்கிறேன். நேரடியாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்து பெறும் தொகைக்கு இந்தச் சிக்கலில்லை. எப்படி இருந்தாலும் இலங்கையில் ஒரு விக்கிமீடியா கிளையைத் துவக்குவதற்கான முயற்சியை எடுத்தால் பெரும் பயன் அடைய முடியும். ஆனால், சட்டப்படி இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்க ஏகப்பட்ட உழைப்பு தேவைப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தலைவலி மருந்துகளுக்குச் சுந்தரையும் பாலாவையும் அணுகுங்கள் :)
  • மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயன் பெறுவோர் யாவரும் முனைப்பான பங்களிப்பாளர்களாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் அதற்கான அளவுகோல்களை வகுப்பதும் முதன்மைத் தேவை. இது திட்டங்களின் நம்பகத்தன்மையைக் கூட்டவும் நல்விளைவுகளை உறுதிப்படுத்தவும் முக்கியம்.

மற்றவர்களின் கருத்துகளை அறிந்து மறுமொழிகளைத் தருகிறேன். இப்போது நாம் ஒவ்வொரு திட்டத்துக்குமான தொகையைத் தர வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். குத்து மதிப்பாக ஒரு தொகையைக் குறிப்பிட்டு விட்டு, ஒவ்வொரு திட்டமாக இயன்ற அளவு செய்யலாம். இந்த அனுபவத்தைக் கொண்டு 2015ல் இன்னும் சிறப்பாகத் திட்டமிடலாம். பி. கு. நானும் மயூரநாதனும் ஒரே நேரத்தில் எழுதியதால் அவரது சில பரிந்துரைகளை நானும் இட்டுள்ளேன். என்றாலும், பொதுவான ஏற்புடைய திட்டங்களுக்கான புரிந்துணர்வு இருப்பது மகிழ்ச்சி. --இரவி (பேச்சு) 21:25, 20 செப்டம்பர் 2013 (UTC)

Goal postஐ நகர்த்துவது போல் இப்பரிந்துரைக்கான காலக்கெடுவை குறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள் :) எனவே, இன்றிரவு இது வரை வந்த பரிந்துரைகளின் சுருக்கத்தை அனுப்பி வைக்க வேண்டும். இப்போது ஏதாவது ஒரு பரிந்துரையையாவது அனுப்பி வைத்தால் தான் பிறகு அதனைச் சுட்டி நிதியுதவி பெற முடியும். எனவே, இந்த வாய்ப்பைத் தவற விட இயலாது. உடனடியாக ஏதேனும் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:38, 21 செப்டம்பர் 2013 (UTC)

குறும்பன் கருத்த தொகு

  1. பரப்புரை செய்யும் போது கணினிகளை வாடகைக்கு எடுக்க வேண்டி வரலாம். எல்லோரும் மடிக்கணினி வைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது, வைத்திருந்தாலும் பரப்புரை நடக்கும் இடத்திற்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. இதனையும் கவனத்தில் கொள்ளவும்.--குறும்பன் (பேச்சு) 14:18, 21 செப்டம்பர் 2013 (UTC)
  2. பரப்புரையாக சிறிய பிரசுரம் அடித்து தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு அனுப்பலாம். முதலில் முதல்வரின் அனுமதி பின் அவருக்கு தேவையான அளவு சிறிய பிரசுரம் அனுப்பலாம். இதற்கு ஆகும் பணத்தை கேட்கலாம் (பிரசுரம் அச்சடிப்பதற்கும் அஞ்சலுக்கும் பெரும் பணம் செலவாகும்).
  3. கட்டுரைப்\படிமப்\ போட்டி நடப்பதை பெரிய சுவரொட்டி மூலம் சென்னை, சேலம், கோவை, மற்ற விக்கியர் உள்ள நகரங்கள் போன்ற இடங்களில் விளம்பரப்படுத்தலாம்.

--குறும்பன் (பேச்சு) 14:35, 21 செப்டம்பர் 2013 (UTC)

பெரும்பாலும், பரப்புரை செய்பவர் தன் மடிக்கணினியைக் கொண்டு செல்வார். அல்லது, நிகழ்வு நடக்கும் இடத்தில் உள்ள கணினிகளைப் பயன்படுத்திக் கொள்வர். பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கணினி தேவைப்படுவதில்லை. கணினி வசதியுடைய கல்லூரிகள், பள்ளிகளில் பட்டறை நடத்துவதே வழமை. ஒன்றிரண்டு கணினிகள் இருந்தாலும் குழுக்களாகப் பயிற்சி அளிக்கலாம். ஆனால், கணினியும் இல்லாத இடத்தில் பரப்புரை செய்பவருக்கும் கணினி இல்லை என்றால் என்ன என்பது கேள்வி. இது வரை அப்படி ஒரு சூழல் இல்லை. இது மாதிரி நேரத்தில் வாடகைக்கு எடுப்பதை விட தமிழ் விக்கிப்பீடியாவின் பொறுப்பில் ஒரு மடிக்கணினி இருந்தால் சுழற்சி முறையில் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்குத் தகுந்த கூட்டாளிகளை நாம் பெற்றுக் கொள்வதன் மூலம் இப்பிரச்சினையை எதிர்கொள்ளலாம்.
தற்போது உருவாக்கத்தில் உள்ள விக்கியூடகக் கையேட்டை பொது நூலகங்கள், கல்லூரி நூலகங்கள் முதலியவற்றுக்கு அனுப்பி வைப்பது பயன் தரும். --இரவி (பேச்சு) 14:40, 21 செப்டம்பர் 2013 (UTC)

நற்கீரன் பரிந்துரைகள் (தமிழ் விக்கியூடகங்கள்) தொகு

ஆதரிக்கும் (ஏற்கனவே கூறப்பட்டவற்றில்) முன்மொழிவுகள் தொகு

  • Wiki Loves Indian Villages
  • Integrated and Universal Database and repository of All Indian Knowledge-ware
  • Provision of free/subsidized telephone channels to selected/active Wikimedia volunteers in each language community
  • Strategic partnership with Cultural Institutions for Content Donation
  • Staff resources are specifically allocated to the support and dvelopment of our volunteer community
  • A pool of equipment is easily accessible and available at a range of geographical location
  • Strengthening on physical resources for digitization, e.g. high quality scanner, etc

உள்ளடக்க விரிவாக்கம்/கட்டற்ற உள்ளடக்கம் தொகு

  • நாட்டுடைமையாக்கப்பட்ட, பொதுவில் இருக்கும் நூல்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து விக்கி மூலத்துக்கு கொண்டு வருதல்.
  • அரசுகள் வெளியிட்ட கலைக்களஞ்சிய, அகரதி உள்ளடக்கங்களை முறையே விக்கிப்பீடியா, விக்சனரியில் ஆகியவற்றில் சேர்த்தல், குறிப்பாக தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்). இது பெரும் தட்டச்சுப் பணி கொண்ட ஒரு திட்டம். எனவே இதற்கு தட்டச்சுப் பணிக்கு ஊழியர்களைப் பயன்படுத்தலாம்.
  • உசாத்துணைகளை இணையத்துக்கு கொண்டுவருதல்

பங்களிப்பை ஏதுவாக்கல்: இணைய அணுக்கம், பயிற்சிகள், வளங்கள் தொகு

  • Provision of free/subsidized telephone channels to selected/active Wikimedia volunteers in each language community ஆதரவு
  • இணைய வசதியை மிகவும் ஏழைகளுக்கு எடுத்துச் செல்லக் கூடிய திட்டங்களுடன் இணைந்து செயலாற்றுதல்
  • பயிற்சிகள்: தட்டச்சு, விக்கியில் தொகுத்தல், விக்கித் திட்டங்கள், ஒளிப்படக்கலை, நிரலாக்கம், வரைகலை*,
  • ஒளிப்படக்கருவி, மடிக்கணினி, வருடி etc
  • எ.கா http://meta.wikimedia.org/wiki/Research:Teahouse
  • http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Diversity_Conference
  • http://meta.wikimedia.org/wiki/WikiWomen's_Collaborative

குமுகத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகள் தொகு

  • விக்கி கூடல்கள்
  • பயிற்சிகள்

பரப்புரை தொகு

  • ஒரு முழு நேர விக்கியூடக/சக தன்னார்வத் திட்ட Outreach ஊழியர். பணி ஊர் ஊராகச் சென்று தமிழ் இணையம், தட்டச்சு, தமிழ் விக்கியூடகங்கள், சக திட்டங்களை அறிமுகப்படுத்தல். நடமாடும் பரப்புரை வண்டி.
  • மாணவர்களை இலக்காக வைத்து பரப்புரை செய்தல், மாணவர் மன்றங்கள்
  • Google Summary of Code, இறுதி ஆண்டு செயற்திட்டங்களில் விக்கி செயற்திட்டங்களை முன்வைத்தல்

தமிழில் GLAM-Wiki initiative முன்னெடுத்தல் தொகு

The GLAM-Wiki initiative ("galleries, libraries, archives, and museums" with Wikipedia; also including botanic and zoological gardens) helps cultural institutions share their resources with the world through collaborative projects with experienced Wikipedia editors.

  • "Strategic partnership with Cultural Institutions for Content Donation" ஆதரவு
  • முக்கிய தமிழ் உள்ளடக்கங்களை ஒருங்குறியில் இணையத்துக்குக் கொண்டு வருதல், குறிப்பாக தேர்தெடுக்கப்படவை: எ.கா தமிழ்க் கலைக்களஞ்சியம், சிறுவர் கலைக்களஞ்சியம், அகராதிகள்

ஆவணப்படுத்தல்/விக்கித் தரவுகள் தொகு

  • Integrated and Universal Database and repository of All Indian Knowledge-ware - தமிழ் பகுதியை நிறைவேற்றல்
  • விக்கித் தரவுகள்: எ.கா பகுப்பு:2013 தமிழ் படைப்புகள் - சீரமைத்தல், தரவுத்தளங்கள் உருவாக்கல். (We need information about books, movies, events, conferences as structured, linked, open data so that we can use them in multiple platforms. This will eliminate work duplication.)

நுட்பம்/மொழிக் கருவிகள் தொகு

  • சொற்திருத்தி/இலக்கணத் திருத்தி ஆகியவற்றை நிறைவேற்றல்
  • நெருங்கிய உறவுடைய இந்திய மொழிகளுக்கு இடையேயான இயந்த மொழிபெயர்ப்புக் கருவிகள்
  • கைபேசித் தள பரிசோதனை, பயிற்சி, தமிழ் தட்டச்சு.

விக்கிக்கு வெளியே இருப்போரைச் சென்றடைதல் தொகு

(இணையம் இன்னும் பெரும்பான்மை இந்தியரை சென்றடையவில்லை)

  • குறுவட்டுக்களை வெளியிடுதல்
  • கையேடுகளை வெளியிடுதல்
  • சிறு நூல்களை வெளியிடுதல்

காலக்கெடு தொகு

இன்னும் ஒரு சில மணி நேரத்திலாவது http://wiki.wikimedia.in/FDC_Proposal_2013 பக்கத்தில் முன்மொழிவைச் சேர்க்க வேண்டும். முன்மொழிவுகளின் ஒரு வரி ஆங்கிலச் சுருக்கத்தை இட்டால் கூட போதுமானது. பிறகு விரிவுபடுத்திக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 02:36, 23 செப்டம்பர் 2013 (UTC)

நேரம் குறைவாக இருப்பதால் விக்கிமீடியா இந்தியப்பிரிவின் தளத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். மாற்றங்கள் தேவையெனில் செய்துவிடலாம். -- சுந்தர் \பேச்சு 14:10, 23 செப்டம்பர் 2013 (UTC)
professional photography -> professional video tutorials in Indian languages
support research projects involved in making futuristic tools like machine translation etc. -> Machine Translations Tools between Indian languages, beta versions already available ?
Wikidata for Tamil Wikipedia and otehr Indian Wikipedias -> Develop tools to extract data about books, movies, events, etc so the data will be structured and linked; this can be used in multiple platforms/projects and would eliminate redundant work
Under technology pls add: Spelling and Grammar Correction Tools for Indian languages
quarterly magazine or wiki printed books −முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஆச்சு நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 14:59, 23 செப்டம்பர் 2013 (UTC)
Return to the project page "இந்திய விக்கிமீடியப் பிரிவுக்கான முன்மொழிவுகள் 2013".