விக்கிப்பீடியா பேச்சு:குறுந்தட்டு திட்டம்
திட்டத்தின் உரிமை
தொகுஅருண், ஆலமரத்தடி வேண்டுகோளை ஏற்று திட்டத்தை இங்கு ஒருங்கிணைப்பதற்கு நன்றி. நீங்கள் ஏற்கனவே திட்டத்தனை தனி வலைத்தளத்தில் ஒருங்கிணைக்க முயன்றதால் ஒரு ஐயம்: இத்திட்டம் தமிழ் விக்கிப்பீடியரின் கூட்டுத்திட்டமாக அறியப்படுமா? அல்லது, உங்கள் பெயரால் / விக்கிப்பீடியா அல்லாத ஒரு நிறுவனத்தின் பெயரால் அறியப்படுமா? கொள்கை அளவில் தனியொருவர் பெயர் / வெளி நிறுவனங்கள் இதில் ஈடுபடுவதில் தவறு இல்லை. ஆனால், திட்டத்தில் ஈடுபடும் முன் இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி--இரவி 20:24, 28 அக்டோபர் 2010 (UTC)
- இரவி, யார் பெயரில் திட்டம் இருந்தால் என்ன? :-) நல்ல காரியம் நடந்தால் சரி. நாம் இதை விக்கிபீடியா பெயரிலேயே வைத்துக் கொள்ளலாம். நான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் இந்த திட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த திட்டம் ஸ்ரீகாந் அவர்கள் ILUGC மடர்குழுவில் சொல்லி உருவானது. நன்றி. - அருண்
- இது ஒரு உண்மையான விக்கிமீடியா திட்டம். மலையாள குறுந்தட்டு செய்த சந்தோசை பைத்தான் மாநாட்டில் சந்தித்தேன். அதே சமயம் அருணும் ILUGC மடற்குழுவில் பெடோரா குழந்தைக்காக ஒரு இயங்கு தளம் செய்ய, தமிழில் கட்டற்ற கல்விசார் தொகுப்பு கேட்டார். ஓர் பதில் போட்டேன். அவ்வளவு தான். செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு, இப்பொழுதே ஏன் பெயர் பற்றி கவலை பட வேண்டும். மலையாள விக்கிகாக எழுதப்பட்ட திறந்த நிரல், தமிழ் விக்கியின் தகவல் தொகுப்பு, விக்கியர்கள் பங்களிப்பு :) அருண், நீங்கள் சாதாரண கையொப்பம் இடலாமே? ஒருவேளை அதனால் தான் என்னமோ ரவிக்கு ஐயம் எழுந்ததோ என்னமோ.. ஸ்ரீகாந்த் 18:10, 29 அக்டோபர் 2010 (UTC)
தவறாக எடுத்துக் கொள்ளாமல் தெளிவுபடுத்தியதற்கு நன்றி, அருண். நீங்கள் விக்கிக்குப் புதியவராக இருந்ததும் திட்டத்தை வேறு தளத்தில் தொடங்கியதும் இக்கேள்விகளை எழுப்பின. தமிழ் விக்கி இறுவட்டு ஒன்றை உருவாக்குவது நெடுநாளாக நாம் செய்ய விரும்பும் ஒரு திட்டம். இப்போது கூடுதல் உந்துதல் கிடைத்துள்ளது.
பொதுவாக சில குறிப்புகள்:
- தமிழ் விக்கித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதே சிலர் தான். எனவே, நமது வளத்தைச் சிதறடிக்காமல் புதிய திட்டம் / வெளி நிறுவனங்களுடன் உள்ள கூட்டுத் திட்டம் ஆகியவற்றில் சேரும் முன் அதன் தன்மை, உரிமம், தமிழ் விக்கிச் சமூகத்துக்கு உள்ள கட்டுப்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வது நல்லது. இது கூகுள், அரசுடனான திட்டங்களுக்கும் பொருந்தும்.
- தமிழ் விக்கியிலே திட்டத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அனைவரின் பங்களிப்பை ஆவணப்படுத்துவதுடன் சமூகத்துடன் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து இன்னும் பலரையும் ஈடுபடச் செய்ய முடியும். பணிப்பளு குறையும்.
- விக்கியின் பெயரால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இறுதி விளைவு சரியில்லை என்றால் அந்த விமர்சனம் தமிழ் விக்கிச் சமூகத்துக்குத் தான் வரும். எனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரால் நடைபெறும் திட்டங்களில் இயன்றளவு நாம் நேரடியாக ஈடுபடுவதும் தரத்தை உறுதி செய்வதும் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதும் நல்லது. --இரவி 18:36, 31 அக்டோபர் 2010 (UTC)
திட்டத்தின் பணிகள்
தொகு- கட்டுரை பட்டியல் உருவாக்குவது
- தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு முறை சரி பார்த்து பூட்டி வைப்பது.
- படிமங்களின் காப்புரிமைகளை சரி பார்த்து, முறையற்றவைகளை நீக்க வேண்டும்.
- நிரல் வைத்து குறுந்தட்டு செய்து சோதிப்பது.
- குறுந்தட்டு தமிழ் முகப்படம், சில தனிப்பட்ட மாற்றங்கள்.
- வெளியிடுவதற்கு முன் விக்கிமீடியாவின் முத்திரை பயன்படுத்துவதற்கு விக்கிமீடியா நிறுவனத்திடம் அனுமதி.
வேறு ஏதேனும் நான் விட்டு இருந்தால் சேர்க்கவும். ஸ்ரீகாந்த் 18:19, 29 அக்டோபர் 2010 (UTC)
- நல்ல வரைவு. கட்டுரைகளைப் பூட்டாமல், ஒரு குறிப்பிட்ட தேதி, நேரம் இட்ட பதிப்பை இறுவட்டுக்கு உகந்த பதிப்பாகக் கணக்கில் கொள்ள முடியுமா?--இரவி 18:36, 31 அக்டோபர் 2010 (UTC)
- பூட்டாமல் செய்யலாம்,ஆனால் சிறிது மேற்செலவு ஆகும்(ஒவ்வோர் கட்டுரைக்கும் சரி பார்த்த தேதி,நேரம் [மாற்ற எண் வேண்டும்,நிரலில் மாற்றம் தேவையா என பார்க்க வேண்டும்]. தரமான கட்டுரைகளின் பகுப்பு ஏதேனும் உள்ளதா? நான் பகுப்பு:முதற்பக்கக்_கட்டுரைகள் யும் பிற பகுப்புகளையும் catscan யில் போட்டு பட்டியல் எடுக்கலாம் என எண்ணியிருக்கிறேன். ஸ்ரீகாந்த் 08:12, 1 நவம்பர் 2010 (UTC)
வார்ப்புரு சேர்க்கலாமா?
தொகுபேச்சு:இந்தியா பக்கத்தில் உள்ளதுபோன்ற வார்ப்புருவை கட்டுரைகளில் சேர்க்கலாமா? {{V0.1}} இதனை இணைக்கவேண்டும். பதிப்பு 1.0 என்று மாற்றலாமா? சரி என்றால் தானியங்கியை ஓட்டி விடுகிறேன். -- மாகிர் 07:55, 6 மார்ச் 2011 (UTC)
Pending tasks
தொகுAs discussed in IRC chat. Very rough draft. To be refined.
CD Creation Tasks
தொகு- கட்டுரையில் சரி பார்ப்புப் பட்டியல் -- பிழைகள் (இலக்கணம், தகவல், எழுத்து) இருக்கக்கூடாது. Content Criteria to be discussed.
- விக்கி நடுநிலைமை,படிமங்கள் சரியான காப்புரிமம் கொண்டிருத்தல்,ஆதாரங்கள் சரியாக இருக்கின்றனவா எனப் பார்த்தல்
- ஆங்கில விக்கிப்பீடியாவைப் பார்த்து, தகவல் இற்றைப்படுத்த வேண்டும் என்றால் செய்வது
- external link spam control
- கட்டுரைகளில், npov, translate போன்ற சீராக்க வார்ப்புருக்கள் இருந்தால் அவற்றைக் கவனிக்க வேண்டும்
- adult control
- verification of content on daily pages
- About Pages on Wikipedia 101,Disclaimers,Copyrights,Grantha policy, International(Multicultural) vocabulary usage.
- Featured images
- Technical team tasks
- Logo, Graphics design
Other Tasks
தொகு- Fundraising / Sponsorship
- Permission to use wikimedia trademarks
ஆலமரத்தடி உரையாடல்
தொகுவணக்கம். மீண்டும் விக்கிப்பீடியா இறுவட்டுத் திட்டத்தை முடுக்கி விட்டு 2,3 மாதங்களில் விரைந்து முடிக்கலாம் என்று நினைக்கிறோம். 500 கட்டுரைகள் தேர்ந்தெடுப்பது, சீராக்குவதற்கு ஆகும் நேரம் நமது முனைப்பைக் குறைக்கக்கூடும் என்பதால், தற்போது இருக்கும் கட்டுரைகளையே சீராக்கி, முதற்கட்டச் சோதனை இறுவட்டை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். செயல்படக்கூடிய ஒரு சோதனை வட்டை உருவாக்கி விட்டால், தொடர்ந்து கூடுதல் கட்டுரைகளை முனைப்புடன் சேர்க்கலாம். இதன் மூலம், கட்டுரைச் சேர்ப்புக்காக மற்ற பணிகள் காத்திருக்குத் தேவை இல்லை. எனவே, கட்டுரைகளைச் சீராக்குவது, இறுவட்டு உருவாக்கத்துக்கான நிரலாக்கப் பணிகள், இறுவட்டு அட்டைப் பட வடிவமைப்பு, வெளியீட்டுக்கான பணிகள் ஆகியவற்றைத் தொடகத்தில் இருந்தே இணையாகச் செய்து பணியை விரைந்து முடிக்கலாம். லாசிக்விக்கி, ஏற்கனவே ஒரு சோதனை வடிவத்தை உருவாக்கி உள்ளார். விரைவில் இது குறித்த கூடுதல் விவரங்களை அளிப்பார்.--இரவி 06:13, 1 சூலை 2011 (UTC)
தற்போதைய கட்டுரைத் தேர்வு, துறைத் தேர்வில் குறைப்பாடுகள் உள்ளன. பல்துறைத் தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும். தற்போது இலங்கை மலேசியா பற்றியோ, சமயம் பற்றியோ, கலைகள் பற்றிய எந்தக் கட்டுரைகளும் இருக்கும் தெரிவுப் பட்டியலில் இல்லை. இம்முறை தொடங்கினால் முழு ஓட்டமும் ஓட வேண்டும். இது பல முறை வெளளோட்டம் ஓடப்பட்ட திட்டம் :0 --Natkeeran 06:32, 1 சூலை 2011 (UTC)
நற்கீரன், 1.0 Is the Loneliest Number என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகளில் ஒன்று. 500 முழுமையான கட்டுரைகள் என்று காத்திருந்ததும், அதைச் செயற்படுத்துவதற்கான உழைப்பின் அயர்ச்சியுமே இத்திட்டத்தைத் தள்ளிப்போட வைத்தன. எனவே, 100 கட்டுரைகள் ஆனாலும் சரி, ஒரு இறுவட்டு வெளியிடுவதற்கான அனைத்துப் பின்புலப் பணிகளைச் செய்தோம் ஆனால், அதனைக் கண்டு இன்னும் உற்சாகமடைந்து மேலும் மேலும் கட்டுரைகளைச் சேர்க்கலாம். இறுவட்டாக அடிக்கடி வெளியிட முடியாது. ஆனால், பதிவிறக்கக்கூடிய iso கோப்புகளாக அவ்வப்போது நாம் இற்றைப்படுத்தி வெளியிட முடியும்.
பின்வருமாறு கால வரையறை செய்யலாம்:
- முதல் (குறைந்தது) நூறு கட்டுரைகள் தேர்ந்தெடுப்பு: சூலை 7 வரை.
- கட்டுரைச் சீராக்கம்: சூலை 30 வரை.
- இறுவட்டு நிரலாக்கம், அட்டைப்படம் வடிவமைப்பு, நிதி ஏற்பாடுகள்: ஆகத்து 15க்குள்.
- கூடுதல் கட்டுரைகள் பரிந்துரைப்பு (500க்குள்): ஆகத்து 1 முதல் ஆகத்து 7 வரை.
- இரண்டாம் கட்டச் சீராக்கம்: ஆகத்து 1 முதல் செப்டம்பர் 14 வரை.
- இறுவட்டு வெளியீடு: செப்டம்பர் 15. (தமிழ் விக்கி எட்டு ஆண்டு நிறைவை ஒட்டி!)
மலையாள விக்கியர் ஒரே மாதத்துக்குள் விக்கி மூல இறுவட்டை வெளியிட்டுள்ளார்கள். அதற்கான புது நிரல் எழுதியது உட்பட !
இந்த முறை முழு ஓட்டம் விடுவோம். இல்லாவிட்டால், என்னை ஓட ஓட விரட்டலாம் :) --இரவி 08:57, 1 சூலை 2011 (UTC)
- 100 எனில் குறிப்பிட்ட முதல் கட்டத்தை காலக்கெடுகளுக்குள் செய்து முடிக்க முடியுமென நம்பிக்கை வருகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 09:01, 1 சூலை 2011 (UTC)
நல்ல முயற்சி! முதற்பக்கக் கட்டுரைகளும், பகுப்பு:விக்கிப்பீடியா தரம் கணிக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்னும் பகுப்பில் உள்ளவற்றை மீள்பார்வை இடலாம். சூலை 7 உக்குள் என்னால் எவ்வளவு பங்களிக்க இயலும் என்று தெரியாது (மிகப்பல கெடுக்கள் (deadlines) உள்ளன). எனினும், இயன்றவாறு முயல்கிறேன்.--செல்வா 12:55, 1 சூலை 2011 (UTC)
- வணக்கம், மலையாள விக்கியர்கள் உருவாக்கிய மென்பொருளை நிறுவி தமிழுக்கு விருப்பமைப்பு செய்துள்ளேன். பார்க்க படங்கள். சில அறிந்த வழுக்கள் உள்ளன, அவற்றை களைந்துவிட்ட பின்னர் விக்கி சமூகத்திற்கு வெளியிடுகிறேன். அனைவரின் கருத்துக்களுடன் முதல் வடிவத்தை இம்முறை முழுதாக முடிக்க என்னால் முயன்றவையை செய்கிறேன். இம்முறை முழு ஓட்டம் ஓடி விடுவோம். ஸ்ரீகாந்த் 16:53, 1 சூலை 2011 (UTC)
- விக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள்/முதற் கட்டம் - நற்கீரன் எனது பரிந்துரைகள் இவை. இவற்றுள் 10 வரையான கட்டுரைகள் விரிவாக்கப்பட வேண்டும். --Natkeeran 20:32, 1 சூலை 2011 (UTC)
- விக்கிப்பீடியா மாணவர்களுக்கான குறுவட்டு வெளியீட்டிற்கு தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறையின் உதவியை நாடலாம். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகச் சந்தித்துப் பேசினால் வெளியீட்டு உதவி கிடைக்கலாம். பள்ளி மாணவர்களுக்கு என்பதால் தற்போதைய நிலையில் இவ்வுதவி இலகுவாகக் கிடைக்கலாம் என கருதுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:46, 3 சூலை 2011 (UTC)
விக்கிமீடியா அலுவலர் தொடர்பு
தொகுவிக்கிப்பீடியா_பேச்சு:மாணவர்களுக்கான_விக்கிப்பீடியா_கட்டுரைகள்#விக்கிமீடியா அலுவல் தொடர்பு. -- சுந்தர் \பேச்சு 12:16, 16 சூலை 2011 (UTC)
எனது பரீட்சார்த்த முயற்ச்சி
தொகுநானும் இணையத்திலிருந்து குறுந்தட்டு திட்டத்தினுடைய மென்பொருளை பெற்று பரீட்சித்துப் பார்த்தேன் நன்றாகவே இருந்தது --மொஹமட் சமீர் 16:17, 20 ஆகத்து 2011 (UTC)
உரையைத் திருத்தும்போது இத்திட்டத்துக் கட்டுரைகளுக்கென தேவைகள் உள்ளனவா?
தொகுஅண்மையில் சோளப்பொரி கட்டுரையை பார்வதிசிரீ திருத்திச் செம்மைப் படுத்தியிருந்தார். அத்துடன், கட்டுரையில் இருந்த சில சிகப்பு இணைப்புப் பகுப்புகளை (இன்னும் உருவாக்காத பகுப்புகளை) நீக்கி இருந்தார். குறுவட்டுத் திட்டத்துக்காக இவ்வாறு செய்ய வேண்டுமா என அறிய விரும்புகிறேன். இப்போதுதான் இத்திட்டத்துக்கான உரைதிருத்தப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளேன். அதனால் இதைப்பற்றிய உரையாடலைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 17:31, 17 சனவரி 2012 (UTC)
தற்போதைய நிலை என்ன?
தொகுகுறுந்தட்டு திட்டம் என்னானது? ஆலமரத்தடியில் இலுத்துக்கொண்டு போவதாக இரவி கூறுகிறாறே? என்னாயிற்று?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:47, 15 ஆகத்து 2012 (UTC)