விக்கிப்பீடியா பேச்சு:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள்

மழலைகள் என்றால் மிகவும் சிறிய குழந்தைகள் என்று பொருள் வரும். “குழந்தைகளுக்கான” அல்லது “பள்ளிக்குழந்தைகளுக்கான” என்று மாற்றலாமா?--சோடாபாட்டில் 19:13, 28 அக்டோபர் 2010 (UTC)Reply

சிறுவர்களுக்கான, மாணவர்களுக்கான?--இரவி 20:21, 28 அக்டோபர் 2010 (UTC)Reply

இரவி, நீங்கள் சொல்வது சரிதான் மாணவர்களுக்கான என்பது பொருத்தமான தலைப்பு. - அருண்

This list is India centric.

yes partly because, indian tamil students are the target demographic--சோடாபாட்டில் 18:20, 25 நவம்பர் 2010 (UTC)Reply
Targeting Indian, Sri Lankan, and Malaysian students would be better. Otherwise we have to create three ore more separate projects, covering the same scope.

எல்லா நாட்டுத் தமிழ் மாணவர்களுக்கும் உகந்த, தேவைப்படும் உள்ளடக்கங்களைச் சேர்க்கலாம். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக வெளியிடத் தேவை இல்லை. --இரவி 10:24, 1 சூலை 2011 (UTC)Reply

  • மாணவர்களுக்கு என்பதால், எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் இருத்தல் கூடாது (திருத்தப்படவேண்டும்). கூடிய மட்டிலும் தமிழ் இலக்கண விதிகள் மீறாமல் இருக்க வேண்டும். மெய்யெழுத்தில் தொடங்கி இருக்கும் சொற்களில், தக்க உயிரொலி இட்டு எழுதுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தகவல்பிழைகள் இருக்கக்கூடாது. மொழி நடையும், கட்டுரை நடை என்றாலும், அலுப்புத்தட்டாமல் இருக்க வேண்டும். எ.கா. ஒரு கட்டுரையில் மிகப்பல முறை "--ஆகும்" என்று சொற்றொடர்கள் அமைந்தால், அவற்றை தக்கவாறு மாற்றி எழுத வேண்டும். பாட நூல்களில் அதிகம் இல்லாத தரவுகள் (படங்கள், அட்டவணைகள், சிறப்புக்குறிப்புகள்) உள்ளனவாக இருப்பது விரும்பத்தக்கது. சில கட்டுரைகள் அசைபடங்கள் உள்ளனவாக இருப்பதும் நல்லது (எ.கா:உள் எரி பொறி - இக்கட்டுரையை சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை..இதில் உள்ள அசைபடம் போல் உள்ள 2-3 கட்டுரைகள் சேர்க்கலாம்; உள் எரிபொறி கட்டுரையைச் சேர்ப்பதாயின், அது சரிவர திருத்தம் செய்யப்பெறல் வேண்டும்)--செல்வா 07:40, 3 சூலை 2011 (UTC)Reply

40 துறைகள் x 25 கட்டுரைகள் = 1000 கட்டுரைகள் அல்லது (50 x 20 = 1000) வரைவு 1

தொகு
  • தொழில்நுட்பம்

நற்கீரன் நீங்கள் தொகுத்தள்ளவை மிக அவசியமான கட்டுரைகள். அவற்றை முதற்பக்கதிலே தொகுக்கலாமே. மேலும் குறுங்கட்டுரைகளை இத்திட்டத்தில் சேர்க்கலாமா என்று ஆலோசிக்கவேண்டும். -- மாகிர் 06:59, 1 சூலை 2011 (UTC)Reply

நற்கீரன், ஆயிரம் கட்டுரை என்பது சற்று மலைக்க வைக்கிறது. என்னைப் பொறுத்தவரை, 500 இலக்கு. தாண்டினால் நன்று. விகடனின் பிரத்தானிக்கா தமிழ்க் கலைக்களஞ்சியம் முழுக்கவே குறுங்கட்டுரைகள் தாம். நன்கு வளர்ந்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை தரலாம். முக்கியமான கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாக இருந்தால் அவற்றையும் தேர்ந்தெடுத்துத் தரலாம். --இரவி 09:02, 1 சூலை 2011 (UTC)Reply

பத்து பெரும் பகுப்புகள், அவற்றுக்குள் தேவைப்பட்டால் 5க்கு குறைவான துணைப்பகுப்புகள் என்று இருந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு துணைப்பகுப்பிலும் ஒன்றிரண்டு கட்டுரைகளே இருந்தால் எல்லாவற்றையும் சொடுக்கிச் சொடுக்கிப் பார்க்க இலகுவாக இருக்காது. --இரவி 12:35, 3 சூலை 2011 (UTC)Reply

ஒரு ஐயம்

தொகு

இக்குறுவட்டில் முழுக்கட்டுரைகள் மட்டும் இடம் பெற வேண்டுமா?. கூட மேலதிகத் துணுக்கள் போன்று நமது உங்களுக்குத் தெரியுமா, மற்றும் சிறப்புப் படம் வரிசைகளை இணைக்கலாமா. அவற்றுக்கு பராம்பரிப்பு / தயாரிப்புப் பணிச்சுமை குறைவு, மேலதிகமாக இருந்தால் சற்றே வித்தியாசமாகவும் இருக்குமென எனக்குத் தோன்றுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 09:54, 1 சூலை 2011 (UTC)Reply

  • தொகுப்பில் இருக்கிற கட்டுரைகளுக்கே ஒரு "உங்களுக்குத் தெரியுமா" பட்டியல் இருந்தால் பொருத்தமாக இருக்கும். படங்களைச் சேர்க்கலாம். ஆனால், இதற்கு இறுவட்டு நிரலில் ஏதாவது சேர்க்க வேண்டுமா தெரியவில்லை. மலையாள விக்கிப்பீடியர் வெளியிட்ட விக்கி மூலம் இறுவட்டில் காமன்சில் இருந்து படங்களையும் சேர்த்து இருந்தார்கள்.--இரவி 10:23, 1 சூலை 2011 (UTC)Reply
  • இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளையும் உங்களுக்குத் தெரியுமா? எனும் தனித் தலைப்பில் கடைசியாக இணைத்து விடலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:08, 1 சூலை 2011 (UTC)Reply
@தேனி. இது நல்லா இருக்கு. படிப்பவர்களுக்கும் மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். நம்மிடம் சீராகக் காப்பகப்படுத்தப்பட்டப் பட்டியலும் உள்ளது. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:24, 1 சூலை 2011 (UTC)Reply
உங்களுக்குத் தெரியுமா பகுதியின் நோக்கமே சுவையான தகவல்களைச் சுட்டி அந்தந்த கட்டுரைகளுக்கு வாசகர்களைத் திருப்புவதே? கட்டுரைகளுக்கான இணைப்புகள் இல்லாமல் வெறும் துணுக்குகள் மட்டும் பயனுள்ளவையாக இருக்குமா என்று தெரியவில்லை. மற்றபடி எந்தத் தயக்கமும் இல்லை--இரவி 13:36, 1 சூலை 2011 (UTC)Reply
இது போன்ற சுவையான/பயனுள்ள/ஆர்வமூட்டக் கூடிய படைப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன என்பதைக் காட்டும் விதமாக இவை இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. எனவே இதனையும் வெளியிடலாம் என்பது என் + தேனி விருப்பம்.   --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:43, 1 சூலை 2011 (UTC)Reply
ரவி இதை ஒரு மேலதிக துண்டிணைப்பாகக் கொள்ளலாம், டிவிடியில் எக்ஸ்ட்ராஸ் போடுவது போல - மையக் கட்டுரைகளிலிருந்து கவனத்தை சிதறடிக்காமல் அதே வேளை இன்னும் ஏதோ கொஞ்சம் இருக்கின்றன என்பது போல.--சோடாபாட்டில்உரையாடுக 13:50, 1 சூலை 2011 (UTC)Reply

முதற்கட்டப் பகுப்புகள் (100 கட்டுரைகள் - 10 பகுப்புகள்)

தொகு
  • தமிழ்/தமிழர்
  • அறிவியல்
  • கணிதம்
  • புவியியல்
  • பண்பாடு/கலைகள்
  • வரலாறு
  • சமூகம்
  • தொழில்நுட்பம்
  • நபர்கள்
  • சமயங்கள்

பத்து பெரும் பகுப்புகளுக்கு மேல் போவது, இறுவட்டின் எளிமையாகப் பயன்படுத்துவதற்குத் தடையாக இருக்கலாம். தமிழ் விக்கியின் தாய் பகுப்புகளையே பின்பற்றாமல் சற்று இளக்கம் காட்டலாம். தற்போது 9 பகுப்புகள் உள்ளன. இந்தியாவைப் போல் இலங்கைக்கு ஒரு பகுப்பு சேர்த்தால் பத்து பகுப்புகள் கிடைக்கும். வரலாறு, கணிதம் தொடர்பான கட்டுரைகள் சற்றுக் குறைவாக உள்ளன. அறிவியல் மிகையாக இருந்தாலும் பரவாயில்லை. அனைத்துப் பகுப்புகளிலும் உள்ள கட்டுரைகளையும் 40 முதல் 60க்குள் கொண்டு வந்தால் மொத்தம் 500 கட்டுரைகளுக்குள் அடக்கி விடலாம்.

365 நாட்களுக்கும் உள்ள கட்டுரைகளைத் தரலாமே என்று சிறீகாந்த், சோடாபாட்டில் கருத்து தெரிவித்திருந்தனர். இவை சேர்ப்பதற்கு எளிது. ஆனால், இந்த 365 கட்டுரைகளையும் சரிபார்ப்பதற்கான நேரம் கூடுதலாகத் தேவைப்படும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

இவை போக உங்களுக்குத் தெரியுமா, சிறப்புப் படங்கள் சேர்க்கப்படும் எனில் அவற்றுக்கான உழைப்பும் கருத்தில் கொள்ள வேண்டும்--இரவி 12:34, 3 சூலை 2011 (UTC)Reply


பல்துறைக் கட்டுரைகள் தெரிவு முக்கியம். சில துறைக் கட்டுரைகள் அதீமாக இருந்தால் அவை ஒரு பக்க வீக்கமாக இருக்கும். இந்தியா இலங்கை ஆகியவை தொடர்பாக கட்டுரைகள் சேர்க்கப்படுவதாயின், மலேசியா சிங்கப்பூர் ஆகியவையும் சேர்க்கப்படவேண்டும். --Natkeeran 13:23, 3 சூலை 2011 (UTC)Reply

நற்கீரன், தற்போது பொதுப் பிரிவில் கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. பல்துறைக் கட்டுரைகள், மலேசியா, சிங்கப்பூர் தொடர்பா கட்டுரைகள் இவற்றில் இடம்பெறலாம் என நினைக்கிறேன். மலேசியா, சிங்கப்பூருக்குத் தனிப்பகுப்பு இடும் அளவுக்கு கட்டுரைகள் இருக்கின்றனவா தெரியவில்லை. சில துறைகளில் கட்டுரைகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவற்றில் ஆகச் சிறந்தகட்டுரைகளுக்கு முன்னுரிமை தரலாம்--இரவி 16:28, 3 சூலை 2011 (UTC)Reply

தேவைகள்

தொகு

இந்தக் குறுவட்டு மாணவர்களுக்காகச் உருவாக்கப்படுவதால் கீழ்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • கட்டுரைகளை விக்கிப்பீடியாவின் முதன்மைத் தலைப்புகளான தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் என்பதன் கீழாக வகைப்படுத்த வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளில் கூடுதலாக எவ்வளவு தகவல் சேர்க்க முடியுமோ அவற்றை எல்லாம் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரைகள் தேர்வுக்குப் பிறகு அந்தக் கட்டுரைகளில் எழுத்துப் பிழை போன்று பிற பிழைகள் இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துப் பிழைகள் இருப்பின் அவை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டு ஊர்கள் என்கிற தலைப்பை எடுத்துவிட்டு தமிழ்நாடு மாவட்டங்கள் எனும் தலைப்பில் அனைத்து மாவட்டங்கள் குறித்த கட்டுரைகளையும் இடம் பெறச் செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் குறிப்பாக அவர்கள் இருக்கும்/படிக்கும் மாவட்டம் குறித்து அறிய வசதியாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:49, 3 சூலை 2011 (UTC)Reply


(வேறு தேவைகள் குறித்தும் குறிப்பிடலாம்)

தலைப்புகள் தேவைப்படும் துறைகள்

தொகு

தற்போதைய நிலவரப்படி, 382 கட்டுரைகள் உள்ளன. 500க்கு இன்னும் 118 கட்டுரைகள் தேவை. இன்னும் 150 கட்டுரைத் தலைப்புகள் சேர்த்தால், பிறகு பொருத்தம் இல்லாத கட்டுரைகளை நீக்கி 500 கட்டுரை அளவை எட்ட முடியும். வரலாறு, இலங்கை, பொது, தமிழ் ஆகிய துறைகளில் தலைப்புகள் நிறைய தேவைப்படுகின்றன.

தலைப்புகளை நேரடியாகத் திட்டப்பக்கங்களிலேயே சேர்த்து விட்டு, அந்தந்த துணைத் தலைப்புகளுக்கு மேல் உள்ள எண்ணிக்கையை இற்றைப்படுத்தி விட வேண்டுகிறேன். நன்றி --இரவி 12:59, 3 சூலை 2011 (UTC)Reply

இணையம் குறித்த கட்டுரைகள்

தொகு

இந்தத் திட்டத்தில் இணையம் குறித்த வேறு சில கட்டுரைகளையும் சேர்க்கலாம். இது பள்ளி மாணவர்களுக்கு இணையம் குறித்த ஆவலை ஏற்படுத்தும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:03, 4 சூலை 2011 (UTC)Reply

இதற்குத் தகுந்த கட்டுரைகளை சேர்த்து உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி 20:54, 6 சூலை 2011 (UTC)Reply
நபர்கள் என்று இழுந்ததைச் சீர்மக்கள் எனத் திருத்தியுள்ளேன். மேன்மக்கள் என்றும் குறிப்பிடலாம். எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --Sengai Podhuvan 06:34, 6 சூலை 2011 (UTC)Reply
நபர்கள் என்பது நடுநிலையுடன் இருக்கும். சீர்மக்கள் / மேன்மக்களை மட்டும் தான் இப்பிரிவில் இணைக்க வேண்டும் என்றில்லை. வரலாற்றில் முக்கியத்துவம் உள்ள கொடுங்கோலர்கள் பற்றிய கட்டுரைகள் கூட இங்கு இடம்பெறலாமே?--இரவி 09:57, 6 சூலை 2011 (UTC)Reply
அன்புள்ள இரவி! கொடுங்கோலர்களும் ஆட்சிப் பெருமக்கள். எனவே பெருமக்கள் என அமையலாம். மக்கள், மாந்தர் என்னும் பொதுவான சொற்களையும் கருதிப்பாருங்கள். எவ்வாறேனும் நபர் என்னும் சொல்லை நீக்கப்பாருங்கள். --Sengai Podhuvan 19:38, 6 சூலை 2011 (UTC)Reply
இட்லர் / ராசபக்சே / வீரப்பன் போன்றோருக்கும் விக்கிப்பீடியா கட்டுரை உண்டு. ஆனால், இவர்களுக்கு மேன்மக்கள், பெருமக்கள் போன்ற சொற்கள் பொருந்தா. எனவே தான், ஆளுமைகள் குறித்த கட்டுரைகளில் நடுநிலையான ஒரு சொல் தேவைப்படுகிறது. மாந்தர் / மக்கள் ஆகிய இரு சொற்களில் உடன்பாடே.--இரவி 20:55, 6 சூலை 2011 (UTC)Reply
அன்புள்ள இரவி! மக்கள் என்றோ, தலைவர் என்றோ தாங்களே மாற்றிவிடுங்கள். தலைவர் என்றால் ஏதோ ஒரு சாராருக்குத் தலைவர். மிகவும் பொருத்தம். --Sengai Podhuvan 23:50, 7 சூலை 2011 (UTC)Reply

சில ஐயங்கள் அல்லது கருத்துக்கள்

தொகு
  • வாழும் நபர்களை முதற்கட்டத்தில் தவிர்க்கலாமோ ? முகனையாக அரசியல் நபர்கள்....
  • மாணவர்களுக்கான என்று குவியப்படுத்தி உருவாக்கினாலும் வெளியிடும்போது இதனைத் தவிர்ப்பது நல்லதாகப் படுகிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் உள்ளிணைப்புக் கட்டுரைகளும் இடம் பெறுமா ? அல்லது இணையத்திலிருந்து தொடுப்பு கொடுக்குமா ?
மிகச்சிறப்பான கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது. திட்டப்பணி வெற்றியடைய வாழ்த்துகள் !!--மணியன் 12:24, 6 சூலை 2011 (UTC)Reply
தேவையற்ற நடைமுறைக் குழப்பங்களைத் தவிர்க்க அரசியலாளர் குறித்த கட்டுரைகளைத் தவிர்க்கலாம் என்றே நானும் நினைக்கிறேன். வரும் சனிக்கிழமை IRC சந்திப்பில் இது போன்ற பிற விசயங்களையும் அலசலாம். வெளியிடும் போது தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைத் தொகுப்பு / தேர்ந்தெடுத்த கட்டுரைகள் என்பது போலவே பெயரிடுவோம். மாணவர்களுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம். உள்ளிணைப்புகளை முற்றிலும் தவிர்க்கலாம். அல்லது, சொடுக்கினால் இணையத்துக்குச் செல்லுமாறு வைக்கலாம். இது குறித்து சிறீக்காந்த் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்--இரவி 20:58, 6 சூலை 2011 (UTC)Reply
மலையாள விக்கி இறுவட்டுத் திட்டத்திலும் இடதுசாரிச் சாய்வு இருந்ததாக ஒரு சிக்கல் எழுந்தது என நினைக்கிறேன். அதனால் வாழும் மாந்தரைப் பற்றிய தலைப்புகளைத் தவிர்ப்பது நல்லதுதான். -- சுந்தர் \பேச்சு 16:03, 12 சூலை 2011 (UTC)Reply

கட்டுரைகளைப் பரிந்துரைக்க கடைசி நாள்

தொகு

முன்பே அறிவித்தபடி, இன்று: சூலை 7, முதற்கட்டமாக கட்டுரைகளைப் பரிந்துரைக்க கடைசி நாள் ஆகும். எனவே, அனைவரும் தவறாமல் கட்டுரைகளைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். நாளை முதல் இப்பக்கம் பூட்டப்பட்டு இரண்டாம் கட்ட கட்டுரைப் பரிந்துரைகளுக்குத் தனிப்பக்கம் திறக்கப்படும். தேவைப்பட்டால், பின்னர் அவற்றில் இருந்தும் கட்டுரைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போது இலங்கைக்கான கட்டுரைகள் குறைவாக உள்ளதைச் சரி செய்ய வேண்டும். பிற துறைகளில் ஒரே போல் உள்ள கட்டுரைகளைத் தவிர்த்து, பல்வேறு வகையான கட்டுரைகளைச் சேர்த்திட வேண்டும்--இரவி 21:01, 6 சூலை 2011 (UTC)Reply

  • நிழற்படங்களும், நிகழ்படங்களும், அசைப்படங்களும், ஒலிக்கோப்புகளும் இருப்பின், மாணவரின் கற்கும் எண்ணம் தூண்டப்படும். அதனால் அவர்களும் பங்கு கொள்ள, இங்கு வர நிறைய வாய்ப்புண்டு. அதிக எழுத்துக்கள் கொண்ட கட்டுரைகளைக் கற்பதில், ஆர்வமற்றே பள்ளி மாணவர்கள் இருக்கின்றனர்.கார்ட்டூன் படங்கள் குறித்தக் கட்டுரைகளும் இயற்றப் பட வேண்டும். என்பதனையும் கவனத்தில் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். எனது பரிந்துரை - தமிழ் எழுதும் முறைமை 07:30, 7 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

எனது பரிந்துரை வாஸ்கோ ட காமா. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:07, 7 சூலை 2011 (UTC)Reply

பரிந்துரை மீதான கருத்துகள்

தொகு

நல்ல பரிந்துரைகள் கிடைத்துள்ளன.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்துத் தலைப்புகளும் ஒரு இறுவட்டிலும் இடம்பெறத்தக்கவையே. எனினும், இறுவட்டு வடிவம், இலக்கு வாசகர்கள், பல துறைக் கட்டுரைகளுக்கான சமநிலை என்பதைக் கருத்தில் கொண்டு சில கருத்துகள் / நீக்கல் பரிந்துரைகள்:

  • ஒரே வகையான நிறைய கட்டுரைகளைத் தவிர்க்கலாம். அணி இலக்கணம் ஏகப்பட்ட கட்டுரைகள் உள்ளன. இவற்றில் ஒன்றிரண்டு சிறந்த கட்டுரைகள் மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கும். தமிழ், தமிழர், தமிழ்ச் சமூகப் பண்பாடு குறித்த மாறுபட்ட கட்டுரைகளுக்கு இடம் தரலாம். அதே போல் ஆன்மிகம் பிரிவில் ஒரே சமயம் சார்ந்த மூவர் உள்ளனர். இந்த எண்ணிக்கையையும் குறைக்கலாம். இன்னும் சில சமயங்களைச் சேர்க்க வேண்டும்.
  • விலங்குகள், பறவைகள் குறித்து நிறைய கட்டுரைகள் உள்ளன. வேண்டுமானால், இவற்றில் சிலவற்றைக் குறைத்து வேதியியல் குறித்த கட்டுரைகளுக்கு இடம்தரலாம். நிறைய தனிமங்கள் குறித்து செல்வா எழுதியதாக நினைவு.
  • முதலமைச்சர்கள் பட்டியல்களை நீக்கலாம். மனப்பாடமாகப் படிப்பது அன்றி வேறு பெரிய பயன் தெரியவில்லை.
  • வரலாறு பிரிவில் மிகக் குறைவான கட்டுரைகளே உள்ளன. 30-40 கட்டுரைகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
  • தேவையற்ற அரசியல் சர்ச்சைகள் எழுவதைத் தவிர்க்க அரசியல் தலைவர்கள், சம கால அரசியல் குறித்த கட்டுரைகளைத் தவிர்க்கலாம். ஆனால், இதுவே ஒரு கோழைத்தனமான, விக்கி பண்பாட்டுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம். எனவே, இது குறித்த கருத்துகளை வரவேற்கிறேன்.

இரவி, தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியலை மட்டும் வைத்துக்கொள்ளலாம். மற்றபடி பட்டியல் வகை வேறு சில கட்டுரைகளும் இடம்பெறலாம் என்பதுதான் எனது கருத்து. தஉழவன் சொன்னதுபோல் தனியாக சில பக்கங்களை உருவாக்கி பொதுவான புகழ்பெற்ற சில புகைப்படங்களை (காமன்சிலிருந்து) கேளரி+விளக்கம் என்று உருவாக்கி தரலாம். -- மாகிர் 12:07, 8 சூலை 2011 (UTC)Reply

பரிந்துரை- இம்முறைக்கு இல்லாவிடினும் அடுத்த முயற்சிக்கு

தொகு
  • 500 கட்டுரைகள் என்பதை 25 பிரிவுகளாகக் கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் 20 கட்டுரைகள் என்னும் வகையில் தொகுக்கலாம். சில தலைப்புகளில் கூடவும், சில தலைப்புகளின் குறைவாகவும் கட்டுரைகள் இருக்கலாம். ஏற்கனவே நடந்த உரையாடலில் இவற்றில் பலவும் இருக்கும். மிகச் சிறந்த ஒளிப்படங்கள், அசைபடங்கள் இருக்குமாறு உருவாக்குதல் நல்லது (ஆங்கில விக்கியில் உள்ள சிறப்புப்படங்கள் (featured pictures)). பாடநூல்களில் இல்லாத தகவல்கள் நிறைந்த கட்டுரைகளாக தேர்ந்தெடுக்கலாம். விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 என்னும் பட்டியலில் உள்ளவற்றையும் கருத்தில் கொள்ளலாம். குறுவட்டில் சேர்க்கும் முன் பல கட்டுரைகளையும் மேம்படுத்த வேண்டும். காலம் இருக்குமா என்பதே கேள்வி. செய்வன செவ்வனே செய் என்பதற்கு இணங்க சற்று நல்லபடியாகச் செய்ய முயலலாம் (அதே நேரத்தில் கடைசி 5% முன்னேற்றத்துக்காக பன்மடங்கு நேரம் செலவிட வேண்டாம்).
  1. கணிதம்
  2. இயற்பியல்
  3. வேதியியல்
  4. உயிரியல் (உயிரினங்கள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள்..)
  5. பொறியியல்
  6. மருத்துவம்
  7. மொழியியல்
  8. வேளாண்மை
  9. விளையாட்டுகள்
  10. திரையியல்
  11. இசை
  12. நடனம்
  13. ஓவியம், சிலை, (+ கலைஞர்கள்)
  14. மெய்யியல்
  15. சமயம்
  16. புவியியல் (நாடுகள், மலைகள், எரிமலைகள், ஆறுகள், ஏரிகள், குகைகள்...)
  17. வாழ்க்கை வரலாறுகள்
  18. வானியல்
  19. உளவியல்
  20. பொருளியல் (பொருளாதாரம்)
  21. வரலாறு
  22. சட்டம்
  23. இலக்கியம்
  24. போக்குவரத்து
  25. தமிழ், தமிழிலக்கணம்

--செல்வா 23:43, 11 சூலை 2011 (UTC)Reply

விக்கிமீடியா அலுவல் தொடர்பு

தொகு

http://lists.wikimedia.org/pipermail/wikimediaindia-l/2011-July/003755.html - இந்த மடலைப் பார்க்கவும். செசி வைல்டு விக்கிமீடியா உள்ளடக்கங்களை இணையத்துக்கு அப்பாலும் (அச்சு, இறுவட்டு) கொண்டு செல்லும் திட்ட அலுவலர். ஏற்கனவே அரசு பள்ளியில் த.வி. பயன்பாடு பற்றி அறிந்து, ஆவல் கொண்டு, த.வி. இறுவட்டுத் திட்டத்துக்கு வேண்டிய உதவிகள் செய்வதாகச் சொல்லியிருந்தார். இது குறித்து த.வி. மடற்குழுவில் செய்திகள் உள்ளன. இப்போது தமிழக அரசின் மடிக்கணினித் திட்டத்தைப் பற்றி அறிந்து மீண்டும் ஆவல் கொண்டுள்ளார். அவரிடம் நமது திட்டத்தைப் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். இல்லையெனில் வேறு தனி முயற்சிகள் வந்து விட வாய்ப்புண்டு. -- சுந்தர் \பேச்சு 06:19, 14 சூலை 2011 (UTC) பி.கு. இது குறித்து ஏற்கனவே உரையாடி நான் கவனிக்கத் தவறியிருந்தால் மன்னிக்கவும்.Reply

மேலும் சில தலைப்புக்கள்

தொகு

இலங்கை தொடர்பான தலைப்புக்கள் குறைவாக இருப்பதாக இரவி குறிப்பிட்டிருந்தார். முடியுமானால் பின்வரும் தலைப்புக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

---மயூரநாதன் 18:10, 18 சூலை 2011 (UTC)Reply

விக்கிப்பீடியா பேச்சு:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள்/இரண்டாம் கட்டப் பரிந்துரைகள்

தொகு

முதற்கட்டப் பரிந்துரைகளைத் தாண்டி விக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் இறுவட்டுத் திட்டம் வளரவில்லை என்பதால் இந்த இரண்டாம் கட்டப் பரிந்துரையிலுள்ள தலைப்புக்களை அங்கே நகர்த்திவிட்டு இப்பக்கத்தை நீக்கிவிட முன்மொழிகிறேன். குறித்த திட்டம் பல இடங்களில் சிதறிக் காணப்படாமல் ஓரிடத்திலிருந்தால் எதிர்காலத்தில் சாத்தியப்படுத்துகையில் இலகுவாயிருக்கும். நன்றி. கோபி (பேச்சு) 14:43, 8 மார்ச் 2012 (UTC)

சரி கோபி. பரிந்துரைகளை நகர்த்தி விட்டுப் பக்கத்தை நீக்குவோம்.--இரவி (பேச்சு) 20:52, 9 மார்ச் 2012 (UTC)
இந்த உரையாடலின் அடிப்படையில் இரண்டாங்கட்டப் பரிந்துரைகளை இந்தக் கட்டுரைப் பக்கத்துக்கு நகர்த்துகிறேன். நன்றி. கோபி (பேச்சு) 12:23, 10 மார்ச் 2012 (UTC)
Return to the project page "மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள்".