விருதுநகர் மாவட்டக் கட்டுரைகள் துப்புரவு

தொகு

இவை தவிர துப்புரவு முடிந்த தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்ற முதன்மைப் பகுப்பினுள், துப்புரவு முடிந்த கட்டுரைகள் மாவட்டம் வாரியாக உள்ளன. விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளைப் பொறுத்தவரை பயனர் பூங்கோதை அவர்களும், நானும் ஓரளவு சரிபார்த்துள்ளோம். துப்புரவு சரிபார்ப்பது எளிதாகவே இருக்கும். TNSE Mahalingam VNR (பேச்சு) 16:10, 30 சூன் 2022 (UTC)Reply

ஆமாம். கவனித்திருந்தேன். அதனடிப்படையிலேயே அட்டவணையில் கடைசியாக column சேர்த்திருந்தேன். அட்டவணையை மீண்டும் பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:22, 30 சூன் 2022 (UTC)Reply

தானியக்க மாற்றம்

தொகு

கலம் (3) மற்றும் (4) ஆகியவற்றில் தானியக்க மாற்றம் நடக்கிறதா? ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கொரு முறை தான் நடக்குமா?--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:22, 7 சூலை 2022 (UTC)Reply

@Neechalkaran:--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:49, 7 சூலை 2022 (UTC)Reply
பகுப்பு எண்ணிக்கையை உடனே காட்டாது, குறிப்பிட்ட மணி நேரத்தில் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:04, 7 சூலை 2022 (UTC)Reply
@TNSE Mahalingam VNR: பிரச்சினை 90% தீர்ந்துவிட்டது. வேலையை நீங்கள் முடிக்கிறீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:30, 17 சூலை 2022 (UTC)Reply
ஆம், நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். முடித்து விடுகிறேன். நன்றி. TNSE Mahalingam VNR (பேச்சு) 16:34, 17 சூலை 2022 (UTC)Reply
@TNSE Mahalingam VNR: Editing conflict வந்தது! நீங்களே முடித்துவிடுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:37, 17 சூலை 2022 (UTC)Reply
ஆம், நீங்கள் சொன்னது சரிதான். புதுக்கோட்டையில் தான் பிரச்சனை. தற்போது சரியாகிவிட்டது. இடையூறுக்கு வருந்துகிறேன். இருவரும் ஒரே நேரத்தில் ஒரே வேலையைச் செய்து கொண்டிருந்துள்ளோம். TNSE Mahalingam VNR (பேச்சு) 17:17, 17 சூலை 2022 (UTC)Reply

துப்புரவு - உதவி

தொகு

வணக்கம், நாகப்பட்டினம் மாவட்ட கட்டுரைகள் துப்புரவு முடிந்து விட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 3 கட்டுரைகள் உள்ளன.அவற்றை துப்புரவு செய்து உதவவும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 14:36, 7 சூலை 2022 (UTC)Reply

@Sridhar G: வணக்கம். //நாமக்கல் மாவட்டத்தில் 3 கட்டுரைகள் உள்ளன.அவற்றை துப்புரவு செய்து உதவவும்// - என்னால் இயன்றதைச் செய்கிறேன். //நாகப்பட்டினம் மாவட்ட கட்டுரைகள் துப்புரவு முடிந்து விட்டது// - நாகப்பட்டினம் மாவட்டக் கட்டுரைகளில் எழுத்துப்பிழை திருத்தங்கள் செய்யவேண்டியிருக்கிறது. ஓரளவு சீராக்கம் முடிந்தபிறகு மீண்டும் ஒரு முறை இவற்றைப் பார்ப்போம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:07, 7 சூலை 2022 (UTC)Reply
//எழுத்துப்பிழை திருத்தங்கள் செய்யவேண்டியிருக்கிறது// சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தங்கள் செய்கிறேன். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 15:17, 7 சூலை 2022 (UTC)Reply

சமையல் குறிப்பு போன்ற கட்டுரைகள் நீக்கம் குறித்து பொதுக்கருத்து

தொகு

பெரும்பாலான உணவு தொடர்பான கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரைகள் போலல்லாது சமையற்குறிப்பு போன்றே உள்ளன. இவற்றை நீக்குவதில் பொதுக்கருத்து எட்டப்பட்டால் விரைந்து நீக்கலாம். அவ்வாறான கட்டுரைகளை ஒரு பொதுத்தொகுப்பிற்குக் கொண்டு வந்து ஒட்டுமொத்தமாக நீக்கிவிடலாம். நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:30, 8 சூலை 2022 (UTC)Reply

சமையற்குறிப்புக் கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு பொருந்தாதவை. உதாரணத்திற்கு களி என ஒரு கட்டுரை இருக்கலாம். அதிலேயே அனைத்து களி வகைகள் குறித்த தகவல் குறிப்புகள் சான்றுகளுடன் இருந்தால் கலைக்களஞ்சிய கட்டுரையாக கருதலாம். உளுந்தங்களி, வெந்தயக்களி என தனித்தனி கட்டுரைகள் தயாரிப்பு முறைகள் குறித்து சொல்லும்போது, அவற்றை நீக்கிவிடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:39, 8 சூலை 2022 (UTC)Reply

மூன்று வாக்கியங்களுக்கும் குறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் நீக்கம் குறித்து

தொகு

மிகக்குறைவான உள்ளடக்கம் கொண்ட அரசியல்வாதிகள் கட்டுரைகளைத் தக்கவைப்பதா? நீக்குவதா? தெளிவுபடுத்தவும்.(ஈடான ஆங்கிலக்கட்டுரைகளும் குறைவான உள்ளடக்கமே கொண்டிருக்கும் நேர்வில்)--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:51, 8 சூலை 2022 (UTC)Reply

3 முதல் 5 வாக்கியங்கள் இருந்தால் மட்டுமே ஒரு கட்டுரையாக கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்கமையுடன் இருக்கும் கட்டுரைகளை நீக்காமல் வளர்த்தெடுக்க முயற்சி செய்யலாம் என்பது எனது கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:48, 8 சூலை 2022 (UTC)Reply

கூடுதல் பகுப்புகள் நீக்கம்

தொகு

@கி.மூர்த்தி, Arularasan. G, TNSE Mahalingam VNR, சத்திரத்தான், and Sridhar G:: வணக்கம். தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் நாம் செய்துவரும் துப்புரவுப் பணிகள் குறித்தான உங்களின் கருத்துகளுக்கும், பரிந்துரைகளுக்கும் நன்றி. அதனடிப்படையில் கீழ்காணும் செயல்களை செய்துள்ளேன். மாற்றுக் கருத்து இருப்பின் தயங்காது தெரிவியுங்கள்; நன்றி!

  • பகுப்புகள் துப்புரவு சரிபார்க்க வேண்டிய புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் , துப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள், துப்புரவு சரிபார்க்க வேண்டிய கரூர் ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ஆகியவை நீக்கப்பட்டன. சரிபார்க்க வேண்டிய எனும் பகுப்புகள் இனி தேவையில்லை. துப்புரவு செய்தபிறகு, பங்களிப்பாளர்கள் துப்புரவு முடிந்த எனும் பகுப்பிற்கு கட்டுரைகளை நகர்த்திவிடலாம்.
  • பகுப்பு ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள் எனும் தேவையற்ற பகுப்புப் பக்கம் நீக்கப்பட்டது.
  • பகுப்புகள் ஒன்றிணைக்கப்பட வேண்டிய விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள், ஒன்றிணைக்கப்பட வேண்டிய தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ஆகியவை நீக்கப்பட்டன. முடிந்தளவு துப்புரவு செய்யும்போதே இணைத்துவிடலாம். இயலாவிட்டால் -- ஒன்றிணைப்பிற்குரிய வார்ப்புருவினை இட்டுவிட்டு, துப்புரவு செய்யப்படாத கட்டுரையாகவே கருதலாம். இறுதியில் ஒன்றிணைப்புப் பணியினை ஒட்டுமொத்தமாக செய்யலாம்.
  • @கி.மூர்த்தி: உங்களின் பரிந்துரையை ஆராய்ந்தேன். தரவுகளுக்காக இப்போதைய நடைமுறையை தொடருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதாவது -- துப்புரவு செய்தபிறகு, துப்புரவு முடிந்த எனும் பகுப்பிற்கு கட்டுரைகளை நகர்த்தி உதவவும். எனினும் இதற்கு தீர்வு காணவும் முயற்சி செய்கிறேன்; மிக்க நன்றி.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:11, 15 ஆகத்து 2022 (UTC)Reply

அடுத்தக் கட்டம்

தொகு

2017 ஆம் ஆண்டில் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம் ஒன்றின் வாயிலாக கட்டுரைகளை எழுதினார்கள். அக்கட்டுரைகளை திருத்தி, துப்புரவு செய்து, செம்மைப்படுத்தும் பணி அவ்வப்போது நடந்துவந்தது. 2022 ஆம் ஆண்டு, சூன் 30 அன்று இந்தாண்டுக்கென தனியாக திட்டப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டு கவனக்குவியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. துப்புரவு செய்யப்படாத கட்டுரைகளின் எண்ணிக்கையானது 4,752 இலிருந்து 3,717 ஆக குறைந்துள்ளது. 59 நாட்களில் ஒட்டுமொத்த செயல்திறன் 21.78% ஆகும்.

கலைக்களஞ்சியக் கட்டுரைகளாக இல்லாதவை, தானியங்கித் தமிழாக்கம் எனும் வகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இதுகாறும் கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு செய்யவிருக்கும் பணி சற்றுக் கடினமாக இருக்கும் போலத் தெரிகிறது. மீதமிருக்கும் கட்டுரைகள் பெரும்பாலும் தேவைப்படுபவையாகவும், குறிப்பிடத்தக்கவையாகவும் உள்ளன. இப்பணியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்கள் பங்களிப்பதால், அவர்களுக்கு களைப்பும் சலிப்பும் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்தப் பணியை விரைவுபடுத்துவது எப்படி, ஆர்வம் ஏற்படுத்தி கூடுதலாக பயனர்களை ஈடுபடுத்துதல் எப்படி என்பன குறித்து கருத்துகளும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:01, 28 ஆகத்து 2022 (UTC)Reply

செல்வசிவகுருநாதன்

தொகு

சில மாவட்டங்களைச் சேர்ந்த சில ஆசிரியர்களின் கட்டுரைகள், விக்கிப்பீடியாவிற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளன. இதனைப் பரவலான செம்மைப்படுத்துதல் பணியின்போது உணர்ந்துள்ளேன். இந்த ஆசிரியர்களைக் கண்டறிந்து, மாவட்ட வாரியாக ஒரு நாள் சந்திப்பினை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவித்து, துப்புரவுப் பணிகளை செய்யலாம். இதன் மூலமாக அவர்களின் பங்களிப்பினை இனிவரும் நாட்களிலும் தொடரும்வகையில் செய்ய முடியும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:02, 31 ஆகத்து 2022 (UTC) எடுத்துக்காட்டு:Reply

  1. பயனர்:D Neethidoss

ஊராட்சி மற்றும் கிராமம் கட்டுரைகள் குறித்து

தொகு

ஒரு குறிப்பிட்ட கிராமம் பற்றியும் அதே கிராமத்தின் ஊராட்சி பற்றிய கட்டுரையும் தேவையா? பெரும்பாலும் ஆசிரியர் தொடங்கிய கட்டுரைகளில் அவரவர் மாவட்ட கிராமங்கைளப் பற்றிய கட்டுரைகள் தொடங்கியுள்ளார்கள். தமிழக ஊராட்சிக் கட்டுரைகளில் அந்த கிராமம் பற்றிய கட்டுரை இல்லாத போது அக்கட்டுரை இருக்கலாம். அவ்வாறின்றி ஒரே கிராமத்தைப் பற்றிய ஊராட்சிக் கட்டுரை ஒன்றும் பொதுவான ஒரு கட்டுரையும் அவசியமா? மேற்கோள்கள் எதுவும் தரப்படாமல், கூடுதல் தகவல்கள் ஏதும் இல்லாமல் ஊராட்சிக் கட்டுரையில் இருக்கும் அதே ஊரைப் பற்றிய பொதுவான கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கலாம் தானே?--TNSE Mahalingam VNR (பேச்சு) 11:04, 30 ஆகத்து 2022 (UTC)Reply

@TNSE Mahalingam VNR:மேற்கோள்கள் எதுவும் தரப்படாமல், கூடுதல் தகவல்கள் ஏதும் இல்லாமல் ஊராட்சிக் கட்டுரையில் இருக்கும் அதே ஊரைப் பற்றிய பொதுவான கட்டுரையை நீக்கலாம் என்பதுவே எனது பரிந்துரை. ஏதேனும் உதாரணம் காட்ட இயலுமா? அதையும் பார்த்துவிட்டு உறுதிபட கூற இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:22, 31 ஆகத்து 2022 (UTC)Reply


@Selvasivagurunathan m:, கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் கன்னியாகுமரி மாவட்ட கிராமங்கள் தொடர்பான பல கட்டுரைகள் இப்படித்தான் உள்ளன. உதாரணமாக சூழால் ஊராட்சி என்ற கட்டுரை உள்ளது. அப்படி இருக்க சூழால் கட்டுரையின் அவசியமென்ன? திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளிலும் இதர மாவட்ட ஆசிரியர் தொடங்கிய கட்டுரைகளிலும் இவ்வாறான கட்டுரைகள் உள்ளன.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:55, 31 ஆகத்து 2022 (UTC)Reply
ஊராட்சி கட்டுரைகள் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த கட்டுரையாகும். ஒரு ஊராட்சியில் பல ஊர்கள் அடங்கி இருக்கும். ஆனால் ஊர் குறித்த கட்டுரை இதில் இருந்து வேறுபட்டது. சூழால் சிற்றூர் குறித்த கட்டுரையானது போதிய உள்ளடக்கம் இல்லாமல் உள்ளது. அதே சிற்றூர் குறித்து ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரை கூடுதல் தகவல்களோடு உள்ளது. போதிய உள்ளடக்கம் இல்லாத சிற்றூர் கட்டுரை என்றால் அதை விரிவாக்கவேண்டும் அது முடியாவிட்டால் நீக்கவேண்டும். ஒரு ஊர் பெயரில் ஊராட்சி இருக்கிறது என்ற ஓரே காரணத்துக்காக மட்டும் அதை நீக்கவேண்டியதில்லை நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 15:14, 31 ஆகத்து 2022 (UTC)Reply
Return to the project page "தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2022".