விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி
அறிமுகம்
தொகுகடந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் இரு போட்டிகளை நடாத்துவதற்கு நல்கை பெற்றிருந்தோம். அதில் ஒரு போட்டி நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பரிசு அடுத்த ஆண்டு நடாத்த எதிர்பார்க்கும் 15ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது வழங்கப்படும். மற்றைய போட்டியான புதுப்பயனர் போட்டியை அக்டோபர் 1 முதல் 2019 மார்ச் 31 வரை நடாத்த முன்மொழிகிறேன். இதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக என்னோடு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என சக விக்கிப்பீடியர்களை அழைக்கிறேன். உங்கள் கருத்துகளை இங்கு இட்டு இந்தப்போட்டியையும் வெற்றிபெறச் செய்யுங்கள் நண்பர்களே! --சிவகோசரன் (பேச்சு) 15:33, 30 ஆகத்து 2018 (UTC)
திட்டச் சுருக்கம்
தொகுஇது புதுப்பயனர்களுக்கான போட்டி என்பதால் எதிர்வரும் வாரங்களில் இது குறித்து சில பத்திரிகைகளிலும் (குறிப்பாக இலங்கையில்) இணையத்திலும் (விகடன், தினமலர் போன்ற தளங்களில்) போட்டி குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு பதிவு செய்வதுடன் மின்னஞ்சல் மூலம் தமது தொடர்பு வழிகளையும் குறிப்பிட வேண்டும். முன்வருபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இலங்கையில் ஒரு அறிமுக நிகழ்வை நடாத்த முயற்சிக்கிறேன். மேலும் இணைய வழி அறிமுகங்களையும் வழங்கலாம்.
தினமலர் போன்ற நாளிதழ் தவிர்த்து தினமணி போன்ற தமிழ் நாளிதழில் வெளியிடுவது சரியான முடிவாக அமையும்
மைக்கேல் ராஜ் (பேச்சு) 13:09, 22 சனவரி 2019 (UTC)
தவிரயும் இது அறிவியல் முதல் சமையம் வரை அனைத்து தகவல்களையும் தவராக தருவதுடன் வாசகர்களையும் நம்ப வைத்து அது உண்மை போன்ற மாயத்தோற்றத்தை கச்சிதமாக செய்து விடுகிறது எனவே அதிக எண்ணிக்கையா நல்ல தரமா என்பதை கருத்தில்கொண்டு நாளிதழ் விளம்பரத்தை தீர்மானிக்கவும்
மைக்கேல் ராஜ் (பேச்சு) 13:18, 22 சனவரி 2019 (UTC)
தலைப்புகள்
தொகுஇது புதுப்பயனர்கள் போட்டி என்பதால் விக்கிப்பீடியாவின் நடைமுறைகளைப் பின்பற்ற போதியளவு அவகாசம் தேவை. ஏற்கனவே உள்ள மற்றும் விக்கிக்கு உகந்தவை அல்லாத கட்டுரைகளைத் தவிர்ப்பதற்காக சுமார் 10,000 முதல் 25,000 வரையான தலைப்புகளை முன்மொழிவது, பராமரிப்பு மற்றும் நடுவர் பணிகளை இலகுபடுத்தும்.
- வேங்கைத் திட்டத்தில் அனுபவப் பயனர்களே எழுதச் சிரமப்பட்ட கட்டுரைகளை மட்டும் வைக்காமல் 20% இலகுவாக எழுதக் கூடிய கட்டுரைகளையும் பரிந்துரைக்கும் விதமாக, தமிழ் விக்கியில் ஏற்கத்தக்க\முக்கியத்துவம் கொண்ட தலைப்பிற்குப் பயனர் விருப்பதில் 5 கட்டுரைகள் வரை எழுதலாம் என்று சுதந்திரம் வழங்கலாம்.
- கடினமான கட்டுரைகளுக்குப் பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் பரிந்துரைக்கலாம். பரிசு பெறக் குறைந்தது 50000பைட் கொண்ட ஒரு கட்டுரையைச் சீரமைக்கவேண்டும் எனலாம் (புதுக் கட்டுரை என இதைக் கணக்கில் கொள்ளலாம்).
- பரவலான தலைப்புகளுக்கு எனது சில பரிந்துரைகள் 1999களுக்கு(20 ஆண்டுக்கு) முன் வந்த தமிழ்த் திரைப்படங்கள்; இந்தியா/இலங்கை உட்பட எந்த நாட்டின் அரசு அமைப்புகள், அமைச்சகம், வாரியம் போன்றவை; ஐந்து ஆண்டுகள் கடந்த கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிலையங்கள்; -நீச்சல்காரன் (பேச்சு) 12:48, 18 திசம்பர் 2018 (UTC)
- @Neechalkaran:, விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதே சிரமமான பணி தான். எனவே, அதற்கு மேல் புதுப்பயனர்களுக்குச் சிரமத்தை அளிக்க வேண்டாமே? :) மேலும், கூடுதலாகச் சிக்கலான விதிகளை நடைமுறைப்படுத்துவது பங்கேற்பாளர்கள், நடுவர்கள் இருவருக்குமே சிரமத்தையே கூட்டும் என்பதே கடந்த காலப் படிப்பினை. மற்றபடி, தலைப்புகளின் எண்ணிக்கைக்கு எல்லை இல்லை. நீங்கள் பரிந்துரைத்த துறைகளும் நன்று. அவற்றைத் தலைப்புகளில் சேர்ப்போம். --இரவி (பேச்சு) 12:06, 21 திசம்பர் 2018 (UTC)
கருத்துகள்
தொகு- இதற்கென்று உருவாகும் பவுண்டைன் கருவி மூலம் தானே கட்டுரை சமர்ப்பிக்கவேண்டும்? போட்டி நான்கு மாதம் நடப்பதால் முன்பே வெற்றியாளரைக் கணிக்கமுடியாதவாறு ஏதேனும் செய்யவேண்டும். ஒரு பத்துக் கட்டுரை சமர்ப்பித்த பின் அடுத்த கட்டுரைகளைக் கடைசி வாரம்(ஏப்பிரல் 23க்குப் பின்) சமர்ப்பிக்கச் சொல்லிவிடலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 13:03, 18 திசம்பர் 2018 (UTC)
- @Neechalkaran: தற்போது ஒவ்வொரு மாதமும் மூன்று பரிசுகள் தருவது என்று விதிகளை மாற்றி இருக்கிறோம். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் பங்களிப்பாளர்கள் முனைப்புடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். --இரவி (பேச்சு) 12:04, 21 திசம்பர் 2018 (UTC)
விளம்பரத் திட்டம்
தொகுசமூகஊடகப் பரப்புரையின் பொருட்டு ஜனவரி மாதம் முழுவதும் இப்போட்டி தொடர்பாக வேறு எங்கும் பரப்புரை செய்யக்கூடாது. முழுக்க முழுக்க திட்டமிட்ட சமூக ஊடகப் பரப்புரைகள் மட்டுமே நிகழ்த்த வேண்டும். முன்னதாகப் புதுப் பயனர்களுக்கு உதவக்கூடிய தேவைப்படும் கட்டுரைகள், உதவிக் காணொளிகள், பங்களிப்பு வழிமுறைகள், இதர ஆக்கங்களைச் சேகரிப்போம்/உருவாக்குவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 07:55, 12 திசம்பர் 2018 (UTC)
- புதுப்பயனர் போட்டிக்கான பரப்புரை மட்டுமன்றி பொதுவான விக்கி அறிமுகங்களும் இக்காலப்பகுதியில் தவிர்க்கப்படுவதுதான் நல்லது. ஏனெனில் புதுப்பயனர்கள் பொதுவான பரப்புரைகளினூடாகவும் இணைவதற்கு வாய்ப்புள்ளது. இது சமூக ஊடகத்தால் வந்தது என்பதை மதிப்பிட தடையாகலாம். இலங்கை தொழில்கலைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள விக்கி அறிமுகத்தை பெப்ரவரியில் நடத்த எண்ணியுள்ளோம். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:14, 17 திசம்பர் 2018 (UTC)
- விளம்பரங்களுக்கான மாதிரிப் படங்கள் http://lab.neechalkaran.com/2018/12/memes.html விரைவாகக் கருத்திட்டால் அப்படங்களில் லச்சினையும் போட்டிப்பெயரும் சேர்த்து இறுதி செய்துவிடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 20:53, 17 திசம்பர் 2018 (UTC)
அனைத்தும் அருமையாக உள்ளது குறிப்பாக மெட்ராஸ் இதில் எவ்வளவு பரிசு என்பதை சேர்க்க இயலுமா?ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 01:21, 18 திசம்பர் 2018 (UTC)
வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா சாப்பிடுவது போன்ற ஒரு போட்டி இருக்கும் அதேபோன்று விக்கிபீடியா பரிசுப்போட்டி அந்த சுவரில் இருப்பது போலவும் அதில் நானும் கலந்து கொள்ளலாமா என்று கேட்பது போலவும் உருவாக்கினால் சிறப்பாக இருக்குமா?ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 02:07, 18 திசம்பர் 2018 (UTC)
மொத்தம் எத்தனை பரிசுகள் உண்டு என்பதற்கு ஒரு மீம்சை உருவாக்கலாம். அதேபோல, மொத்தப் பரிசுக்காக ஒதுக்கப்படும் தொகையையும் முதல் பரிசின் தொகையையும் அதே மீம்சில் அறிவிக்கலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:14, 20 திசம்பர் 2018 (UTC)
பதாகைகள் வடிவமைப்பு ஒருங்கிணைப்புக்கு எனத் தனிப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உரையாடல்களை அங்குள்ள பேச்சுப் பக்கத்தில் தொடரலாம். --இரவி (பேச்சு) 12:02, 21 திசம்பர் 2018 (UTC)
பக்க வடிவமைப்பு மாற்றம்
தொகுசெல்பேசி வழி வரும் புதியவர்கள், முகநூல் விளம்பரங்களைக் கண்டு வருகிறவர்களுக்கு ஏற்ப பக்க வடிவமைப்பு சுருக்கமாக மாற்றப்பட்டுள்ளது. பறவைகள், விலங்குகள் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்களை இட்டு வருகிறோம். எனவே, அவர்களைக் கவரும் படங்களும் தொடர்ந்து தரப்படும். பக்கத்தின் வடிவமைப்பை மாற்ற விரும்பினால் இங்கு உரையாடி மாறுதல்களைச் செய்ய வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:18, 30 திசம்பர் 2018 (UTC)
பெயர் பதிவு இணைப்பு
தொகு@Neechalkaran: பெயர் பதிவதற்கான இணைப்பை மீண்டும் பழையபடி மாற்றியுள்ளேன். நாம் புதிய முறைக்கு மாறிய சனவரி 3க்குப் பிறகு பெயர் பதிவு குறைந்துவிட்டது. ஒரு வேளை புதிய முறை மக்களுக்குப் புரியவில்லையா இல்லை நாம் விளம்பரப்படுத்தும் துறைகள் ஈர்க்கவில்லையா என்று புரியவில்லை. எனவே, தற்காலிகமாக பழைய முறைக்கே மீண்டும் மாற்றியுள்ளேன். பதிவுகள் கூடுகிறதா என்று சோதித்துப் பார்ப்போம். --இரவி (பேச்சு) 10:13, 5 சனவரி 2019 (UTC)
வார்ப்புரு
தொகுபோட்டிக்கான கட்டுரைப்பக்கங்களில் இட வார்ப்புரு ஏதேனும் உள்ளதா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:41, 6 சனவரி 2019 (UTC)
- பயனர் அல்லது நடுவர் Fountain கருவியில் கட்டுரையைச் சேர்த்தால் தானாகவே இந்த வார்ப்பு சேர்ந்து விடும். --இரவி (பேச்சு) 12:09, 6 சனவரி 2019 (UTC)
விதிகள்
தொகுவணக்கம், புதுப்பயனர் போட்டியில் புதிய கட்டுரைகளை மட்டும் தான் எழுதலாம் என்ற விதியே தரப்பட்டுள்ளது. பழைய கட்டுரைகளை விரிவாக்க முடியுமா?--Kanags (பேச்சு) 05:00, 17 சனவரி 2019 (UTC)
- முதலில் இவ்வாறே இருந்தது பின்னர் கட்டுரைகளையும் விரிவு படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டதாம். விதிகளில் மாற்றிவிடுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:30, 17 சனவரி 2019 (UTC)
- ஒருங்கிணைப்பாளர்கள் @Ravidreams:, @Neechalkaran:, @Nandhinikandhasamy: கவனத்திற்கு...
- சில பயனர்கள் ஏற்கனவே கட்டுரை இருப்பது அறியாமல் புதிதாக எழுதிவிடுகிறார்கள். தெரிவித்த பிறகு, ஏற்கனவே இருக்கும் கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது எனும் வார்ப்புரு இடுகின்றனர். உதாரணம்:- காட்டு ரோஜா, பேச்சு:காட்டு ரோஜா. இதற்கு மாற்றாக, இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது எனும் வார்ப்புரு இடுதலை பரிந்துரைக்கிறேன். பரிந்துரை ஏற்புடையது எனில், செயல்படுத்துவேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:00, 19 சனவரி 2019 (UTC)
- இது fountain கருவி மூலம் இடப்படுவதால், கருவி உருவாக்குநர் தலையீடு தேவைப்படும். சாத்தியமா எனக் கேட்டு @Ravidreams: ஆலோசனை தருக. இல்லாவிட்டால் போட்டி நிறைவு பெற்ற பின்னர் ஒரே முறையில் தானியங்கியால் மாற்ற வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:28, 20 சனவரி 2019 (UTC)
- கட்டுரை வார்ப்புரு மட்டும் தான் சேர்க்கும். ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளதா விரிவாக்கப்பட்டுளதா என்பதை நாம் தான் கவனித்து |create=yes என்பது போல் சேர்த்து மாற்ற வேண்டும். வார்ப்புரு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி பார்த்து அதே போல் வார்ப்புரு:புதுப்பயனர் போட்டி வார்ப்புருவை மாற்ற வேண்டும்.--இரவி (பேச்சு) 08:53, 21 சனவரி 2019 (UTC)
- இது fountain கருவி மூலம் இடப்படுவதால், கருவி உருவாக்குநர் தலையீடு தேவைப்படும். சாத்தியமா எனக் கேட்டு @Ravidreams: ஆலோசனை தருக. இல்லாவிட்டால் போட்டி நிறைவு பெற்ற பின்னர் ஒரே முறையில் தானியங்கியால் மாற்ற வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:28, 20 சனவரி 2019 (UTC)
சந்தேகம்
தொகு@Ravidreams: புதுப்பயனர் உருவாக்கும் கட்டுரைகளில் மற்றவர்கள் உரைதிருத்தம் செய்யும்போது மேலதிகமாக தகவற்பெட்டி, படிமம், தகவல்கள் இணைப்பதால் அவர்களுக்குக் கிடைக்ககூடிய மதிப்புப் புள்ளிகள் பாதிக்கப்படுமா?--Booradleyp1 (பேச்சு) 05:12, 18 சனவரி 2019 (UTC)
- @Booradleyp1: இல்லை, அவர்கள் 150 சொற்கள் எழுதியிருந்தால் போதும். கட்டுரை அவர்கள் கணக்கில் சேர்ந்து விடும். நீங்கள் எப்போதும் போல பங்களிக்கலாம். --இரவி (பேச்சு) 09:22, 18 சனவரி 2019 (UTC)
- தெளிவுபடுத்தியமைக்கு நன்றி @Ravidreams: .--Booradleyp1 (பேச்சு) 14:57, 18 சனவரி 2019 (UTC)
Can I translate Tamil?
Mahesh967787 (பேச்சு) 11:45, 22 பெப்ரவரி 2019 (UTC)
இரண்டு கட்டுரைகள்
தொகுபோட்டிக்கான ஒரே கட்டுரையை இரண்டு பயனர்கள் எழுதியிருப்பின் , புதுப்பயனர் எழுதிய கட்டுரைக்கு தற்பொழுது புள்ளிகள் இடலாமா? கட்டுரைகளை ஒன்றிணைத்த பிறகு புள்ளிகள் இட வேண்டுமா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:35, 21 சனவரி 2019 (UTC)
- கட்டுரையை ஒன்றிணைத்து விட்டு, முதலில் 150 சொற்களுக்கு மேல் பங்களித்தவருக்குப் போட்டியில் புள்ளிகள் தரலாம். --இரவி (பேச்சு) 08:51, 21 சனவரி 2019 (UTC)
150 சொற்கள்
தொகுகட்டுரையில் குண்டு குறியிட்ட, எண்களிட்ட வரிகளை ஒரு சொல்லாக மட்டுமே fountain கருவி எடுத்துக்கொள்கிறது. குண்டுக் குறிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் அதிக சொற்களாக இருக்கிறது ஆனால் பைட் அளவில் 6000 பைட்டுக்கு மேலுள்ளதாகக் கட்டுரைப் பக்கம் காட்டுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:51, 21 சனவரி 2019 (UTC)
- விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/கட்டுரைகள் பார்க்கவும். இது போல் ஒரு துணைப்பக்கத்தை இந்தப் போட்டிக்கும் உருவாக்கி, Fountain கருவியில் சேர்ப்பதில் சிக்கல் உள்ள கட்டுரைகளை இங்கே சேர்க்கச் சொல்லி மதிப்பெண்கள் தரலாம். --இரவி (பேச்சு) 13:24, 22 சனவரி 2019 (UTC)
புதிய போட்டிக்கட்டுரைகள்
தொகுநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாகியிருப்பதால் நடுவர்கள் கட்டுரைகளை மதிப்பிட வேண்டுகிறேன். ஒட்டுமொத்தமாக மாத இறுதியில் செய்வது சுமை போலத் தோன்றக்கூடும். இப்பொழுதே கவனித்து தக்க மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:02, 22 சனவரி 2019 (UTC)
குவார்ட்டர் கட்டிங்
தொகுஇத்திரைப்படம் வ குவாட்டர் கட்டிங் (திரைப்படம்) என பெயர் மாற்றப்பட்டபின் பட்டியலில் நீக்கம் செய்து திரும்பவும் சேர்க்க முயன்றேன். ஆனால் வேறொரு பயனர் சேர்த்துவிட்டதாக காட்டுகிறது. ஆனால் fountain -இல் பாலசுப்ரமணியன் எண்ணிக்கையில் காட்டவில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:50, 26 சனவரி 2019 (UTC)
கட்டுரைகளைச் சேர்ப்பதில் சிக்கல்
தொகுகட்டுரைகளை fountain கருவியில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படின் இங்கு சேர்க்க வேண்டுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:31, 26 சனவரி 2019 (UTC)
முதலிடம்
தொகுமுதலிடம் என்பதை எப்படித் திர்மானிப்பது? பெறும் புள்ளிகள் வைத்தா? எண்ணிக்கை அடிப்படையிலா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:00, 1 பெப்ரவரி 2019 (UTC)
கவிதா திரைப்படம்
தொகுகவிதா (திரைப் படம்) ஜனவரி 20 ஆம் தேதியும்,,கவிதா (1962 திரைப்படம்) ஜனவரி 19 அன்றும் போட்டிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இருவருமே 150 சொற்களுக்கு மேல் உருவக்கியுள்ளனர். எனவே 19 அன்று உருவாக்கிய கட்டுரைகளை கனக்கில் எடுத்துக்கொள்ளலாமா? மேலும் கவிதா (திரைப்படம்) 2007 இல் இரண்டு வரிகள் கொண்ட குறுங்கட்டுரையாக உருவக்கப்பட்டுள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:54, 5 பெப்ரவரி 2019 (UTC)
சந்தேகம்
தொகுகட்டுரை எழுதுவதற்கு ஆவல் உள்ளது எவ்வாறு எழுத வேண்டும் AMLAK MOHAMED (பேச்சு) 12:15, 18 பெப்ரவரி 2019 (UTC)
இயந்திர மொழிபெயர்ப்பு
தொகுFathima nusra என்ற பயனர் பதிவேற்றியிருந்த காரைதீவு (யாழ்ப்பாணம்) என்ற கட்டுரையைப் பார்த்தேன். முழுவதுமாகத் திருத்த வேண்டியிருந்தது. கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரையைப் பார்த்தது போலவே இருந்தது. இது சிறிய கட்டுரையாக இருந்தமையால், ஓரளவு இலகுவாக இருந்தது. இவ்வாறு உருவாகும் கட்டுரைகளுக்கு என்ன செய்யலாம்? இயந்திர மொழிபெயர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?--கலை (பேச்சு) 14:29, 23 பெப்ரவரி 2019 (UTC)
ஆம் விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/உதவி பக்கத்தில் இணையவழி மொழிபெயர்ப்புக் கருவிகள் பயன்படுத்தலாகாது. என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான கட்டுரைகளை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. போட்டிகாலம் முடிந்தபிறகும் அவை மேம்படுத்தப்படவில்லை என்றால் அவற்றை நீக்கவேண்டும். இவற்றை பின்னர் எளிதாக அடையாளம் காண மறைந்திருக்கும் பகுப்பு போல பொதுப்பார்வைக்கு தெரியாத ஏதாவது ஏற்பாடு செய்வது நல்லது. இல்லையென்றால் மாவட்ட ஆசிரியர்களில் சிலரால் எழுதப்பட்ட தானியங்கி மொழிபெயர்ப்பு கட்டுரைகள் இன்னும் உள்ளதுபோல தேக்கிவடக்கூடும். --அருளரசன் (பேச்சு) 14:35, 23 பெப்ரவரி 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி நிறைவு
தொகு@Arularasan. G, Balajijagadesh, Parvathisri, Neechalkaran, Ravidreams, and Sivakosaran: தங்களின் பல பணிகளுக்கு இடையில் புதுப்பயனர் போட்டியில் தாங்கள் செய்த அனைத்து உதவிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஸ்ரீ (talk) 13:28, 1 ஏப்ரல் 2019 (UTC)
சத்ய திலகா என்ற பயனரின் எண்ணிக்கையில் சோனியா(நடிகை) என்ற கட்டுரை சேர்க்கப்பட வேண்டும். அவரது கட்டுரை எண்ணிக்கை 18 எனக் கணக்கில் கொள்க.
நன்றி
தொகுபுதுப்பயனர் போட்டியைச் சிறப்பாக நடாத்திமுடிக்க உதவிய நடுவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மிக்க நன்றி. பரிசு பெற்றோர் விபரம் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 09:28, 7 ஏப்ரல் 2019 (UTC)
- தொடர் பங்களிப்பாளர் போட்டி, புதுப்பயனர் போட்டி ஆகிய இரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப்பெற்றோரை இலங்கையில் நடைபெறும் கூடலில் பங்கேற்கத் தெரிவுசெய்யப் பரிந்துரைக்கிறேன். ஏனையோருக்கான பரிசுகளும் கூடலின்போதும், பங்கேற்காதவர்களுக்குக் கூடலின் பின்பும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். --சிவகோசரன் (பேச்சு) 15:28, 7 ஏப்ரல் 2019 (UTC)
மேலும் புள்ளிவிவரங்கள்
தொகுஇப்போட்டியின் புள்ளிவிவரங்களை இங்கு பார்க்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:24, 9 ஏப்ரல் 2019 (UTC)
பரிசுகள் அனுப்புதல்
தொகுநடந்து முடிந்த 16 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, கலந்து கொண்ட வெற்றியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மற்றவர்களை அவரவர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறோம். விக்கிப்பீடியாவில் மின்னஞ்சல் வழங்காதவர்கள் விரைவில் மின்னஞ்சலைப் பதிவுசெய்தோ அல்லது எனக்குத் தெரியபடுத்தியோ பரிசு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவவும். -நீச்சல்காரன் (பேச்சு) 20:55, 21 அக்டோபர் 2019 (UTC)